Wednesday, 11 March 2026

இன்றைய எங்கள் வீதி ஒவ்வொன்றும் ...

எங்கள் நிலத்துக்கு எருத்தேவை -ஏனென்றால்,
இங்கே எருக்கலை, ஈஞ்சு, குருவிச்சை எங்கும் பரவி இருப்பிருந்த சத்தையெல்லாம் தங்களது பாட்டில் சவட்டிக் குடித்தமையால் எங்கள் நிலத்துக்கெருத்தேவை.

என்றபடி காளைகளை விரட்டி வண்டிலை விட்டபடி காளை ஒருவன் கதைத்தபடியே செல்வான், 
வீரன் ஒருத்தனே மாவீரன் ஆனான். காளைகளை முன்விட்டுக்
கயிற்றைப் பிடித்துத் தன் தோளில் கலப்பை நுகத்தைச் சுமந்தபடி "நாளையும்கூட உழுதுழுது வைச்சாத்தான், வேளை வரும்போது விளைச்சல் கிடைக்கும்" எனக் காளை நடப்பான்! 
தன் மண்ணையே காதலித்து வேளை தவறாமல்; வேர்த்துழைப்போன் வேகமுடன்.

தோளிலே துப்பாக்கி தொங்கச்
சிலர் விரைவர்.
வானில் விமானம் ஹெலி இரையும் பேரிரைச்சல், பதுங்கு குழிகள் மனிதரை அங்கே வதவதென விழுங்க.
வாய் திறந்தவாறு செண்பகம் ஒன்று. குறுக்கே நடக்கும்.-
வீரன் ஒருத்தனே மாவீரன் ஆனான்?.

தென்னங்குருத்துத் தெருவெல்லாம் தோரணமாய் பின்னல் முறையால் பிரிவின் பொருள் உணர்த்திச் சொல்லும் சில சேதி துக்கம்.

 -அதனாலே கல்லுக்குள் ஈரம் போல் மெல்லக் கசியும் ஒரு சின்னப் பெடியன், மழலை மொழி - கொன்னை அவன் “தம்பியின் காலத்தில் தான் தமிழ் ஈழம் கிடைக்கும்.

நம்புங்கள் நம்புங்கள்" என்று உரக்கப்பாடி,,
தன்னுள் ரசித்துத் தலையாட்டி,

தாளமிட்டு
கூச்சமில்லாமல்
வலு “கூலா” கப் போவான்.
மூச்சிரைக்கும் மூத்த திரை விழுந்த
ஆச்சியோ
படிடா ஒருக்கால் அதைதிருப்பி மோனை”
என்றோர் வேண்டுகோளை விட்டபடி
வேலியிடை நிற்பாள்;
இடுப்பைப் பிடித்திருந்த
கையை எடுத்துப்
பொடிப்பிள்ளை கிட்டப் போய் -
-பொக்கை வாய்
உச்சி தடவி உவந்து.

-கல்வயல் வே குமாரசாமி
-வெளிச்சம்

No comments:

Post a Comment