Monday 20 June 2022

பத்மநாபா. தோழர் பாலன்

பத்மநாபா !  

பத்மநாபா எளிமையானவர் , பத்மநாபா நல்லவர் என்றெல்லாம் எழுதி நாபாவை தெரிய வைப்பதில் எந்த பயனும் இல்லை. 

மாறாக, நாபாவை தமிழ் மக்கள் எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்பதையே எழுத வேண்டும். 

பத்மநாபா விடுதலையை விரும்பினார் பத்மநாபா புரட்சியை விரும்பினார் பத்மநாபா ஈழத்தை விரும்பினார் 

ஆதனால்தான் அவர் “ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி”யை நிறுவி போராடினார். 

ஆனால், நாபா முன்வைத்த விடுதலையை கைவிட்டவர்கள் நாபா முன்னெடுத்த புரட்சியை கைவிட்டவர்கள் நாபா முன்வைத்த ஈழத்தை கைவிட்டவர்கள் இன்று அவருக்கு நினைவு தினம் கொண்டாடுகிறார்கள். 

இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. ஏனெனில் நாபாவே தன் இறுதிக் காலத்தில் தான் உச்சரித்த புரட்சியை கைவிட்டார். 

தான் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தை கைவிட்டார் 

இந்திய உளவு நிறுவனங்களின் வழிகாட்டலில் தேர்தல் பாதையில் பயணித்தார். 

தமிழ் மக்களுக்கு எதிரான இந்திய அரசை ஆதரித்தார். அதன் மூலம் அவரை நம்பிய தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்தார். 

இந்திய அமைதிப்படையின் அக்கிரமங்களுக்கு துணை போனார். அதனால் தமிழர் போராட்ட வரலாற்றில் ஒரு துரோகியானார். 

பத்மநாபா புதைக்கப்பட்டார். அவருடைய எலும்புகளை தோண்டியெடுத்து சிலர் ரத்தம் பாய்ச்சுகிறார்கள் அவர் உயிர்த்தெழுவார் என்று 

ஆனால் அவர்கள் கனவு ஒருபோதும் நிறைவேறப் போவதில்லை. 

எனினும் பத்மநாபா தன் இறுதிக் காலத்தில் கூறிய ஒரு வரியை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

 “இந்தியாவை பயன்படுத்த நாம் நினைத்தோம். ஆனால் இந்தியா எங்களை பயன்படுத்திவிட்டது”என்று அவர் கூறினார். 

எனவே தயவு செய்து இனியாவது இந்திய அரசுக்கு துணை போவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

தோழர் பாலன்

பூஜ்ஜியத்தை கண்டறிந்தது யார்? தேவன்

பூச்சியத்தைக் கண்டறிந்தது யார் ? 

பூச்சியத்தைக் கண்டுபிடித்தவர் ஆரியப்பட்டர் என வரலாறாக எழுதப்பட்டுவிட்டது. ஆனால் அது முழுப்பொய். இது ஓர் இட்டுக்கட்டப்பட்ட கதை.  ஆரியப்பட்டருக்கு முன்பே ஐந்திரம்  எனும் தமிழிலக்கண நூலில்  இன்று பூச்சியம் என அழைக்கப்படும் இலக்கம்  குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அது "பாழ்" என்ற பெயரில் இருக்கிறது. ( பாழாய்ப்போச்சு, பாழாகிவிட்டது என்ற சொற்களின்  வினையடியே பாழ் என்பதிலிருந்து வந்ததுதான்) .

 “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றி” என்று தொல்காப்பியம் எழுத்ததிகாரப் பாயிரத்தில் பனம்பாரனார் குறிப்பிட்டுள்ளதனை வைத்து சிலபல (???) வந்தேறி ‘அறிஞர்களும்’, அவர்தம் அடிவருடிக் கிடக்கும் நம்மினக் கோடரிக் காம்புகளும் என்னவோ ஐந்திரம் என்பது தொல்காப்பியத்திற்கு மிகமிக முற்காலத்திலேயே வடிக்கப்பட்ட ‘சமற்கிருத’ இலக்கண நூல் என்றும், அதில் கற்றுத்  தேர்ந்தபின்னரே  தொல்காப்பியரால் தமிழிலக்கணம்  எழுத முடிந்தது என்றும் பிதற்றித்  திரிகின்றனர். இது ஆரியரின் முழு உருட்டு. 

உண்மையில் இந்த ஐந்திரம் என்பது யாது ?
 தொல்காப்பியத்திற்கு முந்துநூலாக  இருந்து, பின்னர் காலப்போக்கில் மறைந்துபோன ஒரு பண்டைத்தமிழ் இலக்கண நூல்.  உண்மையில் இந்திய மொழிகளுக்கு இலக்கணம் வகுக்க எடுத்துக்காட்டாக விளங்கியதும், பாணினி என்பவரால் எழுதப்பட்ட  வடமொழியிலக்கணத்திற்குக் காலத்தால் மிகவும் தொன்மையானதுமாகிய முந்துதமிழ்  இலக்கணப் பொது நூலே அதுவாகும். பாணினியைப் பின்பற்றி வந்தவரே ஆரியப்பட்டர். 

சரி, இந்த ‘ஐந்திரன்’ எனும் சொற்பிறப்பு பற்றி ஆராயுங்கால் என்ன தெரிகிறது?

‘ஐ’ என்பது மேன்மை, உயர்வு, அரசன் போன்றவற்றைக் குறிப்பதாகும். இந்த ஐ என்பதிலிருந்தே ஐயன்,  ஐந்தன், ஐந்திரன் எனும் சொற்களும் பிணைந்துள்ளன. ஐந்திரன் எனும் சொல்லிலிருந்தே ஐந்திரம் எனும் சொல்லும் பிறந்துள்ளது. இதனை, புலம் எனும் சொல் புலத்தன் என்றும், புலந்தன் என்றும், பின்னர் அஃதே புலந்திரன் என்றும் திரிந்தமையையும், மாந்தன் எனுஞ் சொல் மாந்தரன் என்று திரிந்துள்ளமையையும் ஒப்புநோக்கி அறியலாம்.

இப்படி ஐந்திரன் என்பானால் இயற்றப்பட்ட தமிழிலக்கண நூலே ஐந்திரம் எனப்பட்டது. 

 அதேபோல் பெண்பாற்பெயராக ஐந்தக்க, ஐந்தம்மா, ஐத்தை (இன்றைய அத்தை) என வழங்கிவருதளையும் ஒப்புநோக்கினால், அனைத்தும் விளங்கும். இந்த ஐந்தரம் எனுஞ் சொல், ஒருவகைப் பனைமரத்தைக் குறிக்கிறது. இச்சொல் யாழ்ப்பாண வழக்கில் உள்ளதாகும். தொல்காப்பியர் தமக்கு முன்பே படிக்கப்பட்ட ஐந்திரம் என்னும் தமிழிலக்கணத்தை நன்கு கற்றவராதலால், முந்துநூல் மரபினைப் பேணிக் காத்துள்ளார். தொன்நெடுங் களத்தில் முதுநாரை, முதுமுருகு, களரியாவிரை, இசைநுணுக்கம் போன்ற பல்வேறு இலக்கண நூல்களும், அகத்தியர் இயற்றியதாகக் கூறப்பட்ட அகத்தியம் எனும் இயற்றமிழ் இலக்கணமும் காலப்போக்கில் மறைந்துபோனது.

 இந்நிலையில், வரலாற்றுக்கெட்டியவரை ஐந்திரமே மிகத் தொன்மையான தமிழ் நூலாக நாவலந்தீவு நெடுக, அதாவது இன்றைய இந்தியா முழுக்க அறியப்பட்டுள்ளது. ஆரியர் இங்கே நுழையும் முன்னர், இன்றைய இந்தியப் பெருநிலம் முழுக்கத் தமிழே நிலவி வந்தமைக்கான சான்றுகளைப் பல்வேறு அறிஞர் பெருமானார் நிறுவியுள்ளனர்.
 புத்தர்கூடத் தமது இளமைக்காலத்தில் தமிழைக் கற்றுள்ளார் என்று லலிதவிசுத்தாரம் என்னும் நூல் கூறுகிறது. புத்தர் தமது பதினாறாம் அகவையில் ஐந்திரவிலக்கணம் கற்றுள்ளதாக புத்த சாதகக் கதைகள் கூறுகின்றன. இந்த ஐந்திரவிலக்கணத்தைக் கற்றுத்தேர்ந்த பல அறிஞர்கள் கி. மு. ஆறாம் நூற்றாண்டுவரை பரந்து  இருந்துள்ளனர். அதேவேளை, பாணினியின் காலத்தில்கூட கங்கைச் சமவெளிப்பகுதியில் ஐந்திரம் கற்பிக்கப்பட்டுள்ளது என்பதும் தெளிபு.

தமிழர்கள் எண்கணிதத்தை பாழ்,  கால், அரை, ஒன்று என்றே ஆரம்பித்தார்கள். ஐந்திரம் என்ற நூலைக் கற்ற தொல்காப்பியர் அங்கிருந்தே பாழ் என்ற சொல்லை எடுத்து தொல்காப்பியத்தில் பயன்படுத்தியுள்ளார்.

"பாழென் கிளவி மெல் லெழுத் துறழ்வே" (தொல்.387)

உண்மையில் ஐந்திரம் என்ற தமிழிலக்கண நூலிலிருந்து எடுக்கப்பட்ட "பாழ்" என்ற சொல்லையே பாணினி என்ற ஆரியர் உபயோகிக்க,   அவரைத்தொடர்ந்த ஆரியப்பட்டர் பாழ் என்ற சொல்லை பூச்சியம் என்ற சொல்லாக மாற்றினார். 

ஆதலால் பாழ் என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழரால் உபயோகிக்கப்பட்ட இலக்க மற்றும் இலக்கணச் சொல்.  

நேற்று வந்த ஆரியப்பட்டரையும் பூச்சியத்தையும் இன்றுடன் கைவிடுக தமிழரே. 

-தேவன்

Saturday 18 June 2022

தவிபு தொடர்பில் பொய்யை அவிழ்த்துவிட்ட மணியும் டுபாக்கூர் சங்கரும். க.ஜெயகாந்த்

தவிபு தொடர்பில் வன்மத்துடன் பொய்களை அவிழ்த்துவிட்ட பத்திரிகையாளர் மணியும் டுபாக்கூர்
சங்கரும்

அண்மையில் விடுதலை புலிகள் செய்த
மாபெரும் தவறுகள் என்ற தலைப்பில்
சவுக்கு சங்கர் மூத்த பத்திரிகையாளர்
மணியை நேர்காணல் செய்திருந்தார்.

மூத்த? பத்திரிகையாளர் மணி ‘உண்மையிலேயே இவர் பத்திரிகையாளர்தானா என’ சந்தேகப்படும் வகையில் ஏகப்பட்ட பொய்களை தெளித்திருக்கிறார். இல்லை. இல்லை. வாளி வாளியாக கொட்டியிருக்கிறார்.

மறுதரப்பில் இருந்த சவுக்கு சங்கரை நான் சட்டை செய்யவில்லை. புலனாய்வு எலி என தன்னைத்தானே பிரபலப்படுத்திக்கொண்டு அலைகிற நபர். ‘நானும் ரௌடிதான்’ என்பது போல ‘நானும் பத்திரிகையாளர்தான்’ வகையறா.

வழமையாக திராவிடம் , கருணாநிதி, ஸ்டாலின் , போலிஸ் ஐ.ஜி, டி.ஐ.ஜி என பினாத்திக்கொண்டு இருக்கும் டுபாக்கூர் சங்கர் அவருக்கு தொடர்பேயில்லாத புவிசார் நலன் அரசியல், போரியல் என்ற ஏரியாவுக்குள் நுழைந்தது சிரிப்பை வரவழைத்தது.

இது ஒருவகையில் பத்திரிகையாளர் மணிக்கும் பொருந்தும்.

அவரது பத்திரிகையாளர் ஆளுமை என்பது இந்திய தேர்தல் அரசியலை சார்ந்தது. அவரது புவிசார் நலன் அரசியல், போரியல் தொடர்பான அறிவு என்பது பூஜ்ஜியம்.

ஆனால் இந்த பூஜ்ஜியத்தினால் மட்டுமே மணி புலிகள் தொடர்பான பொய்களை வாரி இறைக்கவில்லை. அதையும் மீறி விடுதலை புலிகளின் மீது அவருக்கு காழ்ப்புணர்ச்சி,வன்மம் இருப்பது இந்த நேர்காணலில் பட்டவர்த்தனமாக தெரிந்தது.

பொதுவாக புலிகள் தொடர்பாக வன்மத்துடன், காழ்ப்புணர்ச்சியுடன் பொய்களை அள்ளி வீசுபவர்களை கடந்தே நான் போகிறேன். ஏனெனில் ஒவ்வொரு முறையும் இவர்களின் பொய்களை நிருபிக்க பதிவுகள் எழுதிக்கொண்டிருப்பது என்பது நடைமுறை வாழ்க்கையில் இயலாத காரியம்.

ஆனால் சவுக்கு சங்கர்- மணி நேர்காணலில் உள்ள பொய்களை தோலுரித்து உண்மை தகவல்களை தருமாறு சில முகநூல் நண்பர்கள் தகவல் அனுப்பியிருந்தார்கள்.

அதனால் சங்கர்- மணி நேர்காணலில் உள்ள பொய்களை வெளிக்கொணரும் வண்ணம் இந்த பதிவு.

#உண்மையில் இந்த பதிவை எழுதுவதற்கு சிரமமாக இருந்தது. காரணம் ஒவ்வொரு பொய்யையும் அடையாளம் காட்டி உண்மைகளை எழுதவேண்டும். ஆங்காங்கே பொய்கள் இருந்தால் பதிவை உடனே எழுதி முடித்துவிடலாம். ஆனால் 1:16 மணித்தியாலம் நெடுக பொய்கள் இருப்பதால் அவ்வளவு பொய்களையும் மறுக்க பல பக்கங்கள் எழுதவேண்டும்.

அதனால் முக்கியமான பொய்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவற்றை தோலுரித்து இந்த பதிவை எழுதியிருக்கிறேன்.

அவைகளை நேர்காணலில் உள்ள வரிசைப்படியே (timeline) தந்திருக்கிறேன். உங்களுக்கும் அந்த பொய்களை timeline இல் உள்ள நேரத்தை கொண்டு உடனடியாக காணலாம்.

எனது முகநூலை ஒரு மாதத்திற்கு முடக்கியி்ருப்பதால் எனது முகநூல் நண்பர்கள் ஊடாக இந்த பதிவை பதிவிடுகிறேன்.

#சரி இனி மணியின் பொய்களை வரிசையாக பார்ப்போம்.

7:24 - “யாழ் கோட்டை அதை ஆங்கிலத்தில் elephant pass என்று சொல்வார்கள். “ - திருவாளர் மணி

எனது பதில் : யாழ் கோட்டை என்பது யாழ்ப்பாண நகரில் 1618 இல் போர்த்துகேயரால் கட்டப்பட்ட கோட்டை. அது ஆங்கிலத்தில் Jaffna Fort என அழைக்கப்படுகிறது.

The Jaffna Fort is a pentagon-shaped fortress occupying fifty-five acres of land in the Jaffna city facing the Jaffna lagoon.

இது ஒரு கோட்டை. ஐங்கோண வடிவில் இருக்கும் கோட்டை. ஒரு பிராந்தியம் அல்ல.

இந்த யாழ்கோட்டையை விடுதலை புலிகள் 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே கைப்பற்றியாகிவிட்டது.

பின்னர் 1995 இல் இலங்கை இராணுவம் ‘ரிவிரெச’ இராணுவ ஆபரேசன் மூலம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றினார்கள்.

ஆனையிறவு பெருந்தளத்தைத்தான் Elephant Pass என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

#இதை மணி சொன்ன ‘பொய்’ என கூறமுடியாது. ஆனால் போரியல் பற்றிய அறிவில் பூஜ்ஜியமாக இருப்பவர்களின் பார்வை என கூறலாம்.

இது வெறுமனே இரண்டு இராணுவ தளங்களை தவறுதலாக பெயரைத்தானே மாற்றி சொன்னார் என அணுகமுடியாது.

காரணம் இந்த இரண்டு இராணுவ தளங்களினதும் strategic importance வேறு வேறு பரிமாணத்தை கொண்டவை.

யாழ் கோட்டையை விடுதலை புலிகள் கைப்பற்றிய போது ஏற்படுத்திய அதிர்வலைகளை விட ஆனையிறவு பெருந்தளத்தை கைப்பற்றிய போது அது ஏற்படுத்திய அதிர்வலைகள் பல மடங்கு கனதியானது.

ஆனையிறவு பெருந்தளத்தை கைப்பற்றியபோது அது உலக ஒழுங்கின் பார்வையில் ஏற்படுத்திய தாக்கம், போர் களத்தில் ஏற்படுத்திய தாக்கம் என பல பரிமாணங்களை கொண்டது.

யாழ் கோட்டை என்பது ஒரு இராணுவ தளம். அந்த தளத்தை விடுதலை புலிகள் 1990 இல் மூன்று மாத காலமாக முற்றுகையிட்டு கைப்பற்றினார்கள்.

ஆனால் ஆனையிறவு பெருந்தளம் என்பது ஒரே ஒரு இராணுவ தளமல்ல. அது ஆனையிறவை போல பல இராணுவ தளங்களை உள்ளடக்கிய பெருந்தளங்களின் கூட்டுத்தொகுப்பு.

•#முதலில் இதை ஏன் இராணுவ பெருந்தளங்களின் தொகுப்பு என அழைக்கிறேன்?

#இயக்கச்சி, #ஆனையிறவு எனும் இரு பெரும் தளங்களின் காவலரண் நீளம் மட்டுமே 76கிமீ. அதனது பரப்பளவு சதுர கிமீ 259.

இவைகளோடு பெரும் எண்ணிக்கையான ஆட்டிலறிகளை கொண்ட தளமான #பளை இராணுவ தளம், அமெரிக்க சிறப்பு பயிற்சி பெற்ற கமாண்டோ அணியான 53வது டிவிசனின் #தாளையடி இராணுவ பெருந்தளம், இராணுவ,கடற்படை தளமான #வெற்றிலைக்கேணி பெருந்தளம், தெற்கு பகுதியில் #பரந்தன், #உமையாள்புரம் எனும் இரு பெருந்தளங்கள், அதற்கு அடுத்த அடுக்கில் இவைகளின் பின்பலமாக பல இராணுவ முகாம்கள், பின் அதற்கு அடுத்த அடுக்கில் இவைகளுக்கெல்லாம் பாதுகாப்பு அரணாக இருந்த நூற்றுக்கணக்கான மினி இராணுவ முகாம்கள் என மிகப் பலமான இராணுவ தளங்களின் தொகுப்புதான் அது.

இத்தகைய அதி உச்ச பாதுகாப்பு அரண்களை கொண்டிருந்ததால்தான், தாக்குதலுக்கு சிலமாதங்கள் முன்பு கூட அமெரிக்க தளபதி ஒருவர் ஆனையிறவு கூட்டுப்படை பெருந்தள இராணுவ வலயத்தை பார்வையிட்டு, இது யாராலும் வீழ்த்த முடியாத தளம் ( impregnable) என கூறினார். அது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல.அது போரியல் யதார்த்தத்துடன் சொல்லப்பட்ட கூற்று.

•#இங்கு இன்னொரு விடயத்தை குறிப்பிட்டேயாகவேண்டும்.

யாழ்குடா நாட்டை இலங்கை இராணுவம் அதனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு யாழ்குடாவின் கழுத்துப்பகுதியான ஆனையிறவு தளம் இன்றியமையாதது. அந்த கழுத்துப்பகுதி strategically important.

தமிழ்நாட்டில் உள்ள பலரும், 2000 ஆண்டில் விடுதலை புலிகள் 40000 இலங்கை இராணுவத்தை யாழ் கோட்டையில் முடக்கினார்கள் என உளறி கொண்டிருக்கிறார்கள். அது உண்மையல்ல.

அது யாழ் கோட்டையல்ல. யாழ் குடா எனும் பரந்த பிராந்தியம்.

விடுதலை புலிகள் இந்த கழுத்துப்பகுதியில் இருந்த ஆனையிறவு பெருந்தளம் மற்றும் இயக்கச்சி, வெற்றிலைக்கேணி, தாளையடி, பளை போன்ற பெருந்தளங்கள் மற்றும் பல நூற்றுக்கணக்கான இராணுவ முகாம்கள் எல்லாவற்றையும் கைப்பற்றி ‘யாழ் குடா எனும் பிராந்தியத்தில் இருந்த 40000 இலங்கை இராணுவத்தின் மீதான முற்றுகையைத்தான் இறுக்கினார்கள். யாழ் கோட்டை எனும் 55 ஏக்கர் அளவுள்ள சிறிய கோட்டையை அல்ல.

•#ஆனையிறவு பெருந்தளத்தை கைப்பற்றியதோடு மட்டுமே இதனது தாக்கம் முடிவடைந்துவிடவில்லை. இன்னும் பல விடயங்கள் உண்டு.

யாழ்குடா மீதான புலிகளின் முற்றுகை அகற்றப்படவேண்டுமாயின் ஆனையிறவு தளத்தை கைப்பற்றியே ஆகவேண்டும் என்ற போரியல் நிர்ப்பந்தம் இலங்கை இராணுவத்திற்கு இருந்தது.

இதற்கு மத்தியில் 2000 ஆண்டு டிசம்பர் 24ம் திகதியிலிருந்து ‘சமாதானத்திற்கான சூழலை உருவாக்கும்’ முயற்சியாக ஒருதலைப்பட்சமான ஒரு மாத போர்நிறுத்தத்தை (month-long unilateral ceasefire) புலிகள் அறிவித்தனர்.அவ்வாறு ஒவ்வொரு மாதமும் நீட்டிப்பு செய்தனர். இது ஏப்ரல் 24 ம் திகதிவரை நீடித்தது. சரியாக நான்கு மாதங்கள்.

இந்த நான்கு மாதங்களில் விடுதலை புலிகள் தரப்பிலிருந்து ஒரு தாக்குதலும்(counter-offensive operations) நடத்தப்படவில்லை.
அவர்கள் தற்காப்பு போர்முறையையே (self-restrained defensive tactics) கடைபிடித்தார்கள். ஆனால் இராணுவம் வழமைபோல தாக்குதலை தொடுத்து கொண்டிருந்தது.

இந்த நான்கு மாத கால விடுதலை புலிகளின் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்த காலத்தில், புலிகள் எந்தவிதமான counter-offensive operations ஐயும் நடத்தமீட்டார்கள் என்ற போரியல்ரீதியான அனுகூலம் இலங்கை இராணுவத்திற்கு கிடைத்தது.

இந்த அனுகூலத்தை வைத்துக்கொண்டு இலங்கை இராணுவம் தனது சகல வளங்களையும் ஆனையிறவு பகுதியை கைப்பற்ற ஒன்று குவித்தது.

•#விடுதலை புலிகள் ஒருதலை பட்சமான தங்களது போர்நிறுத்தத்தை செய்திருக்காவிடில் என்ன நடந்திருக்கும்?

புலிகள், ஆனையிறவை கைப்பற்றுவதற்கான இலங்கை இராணுவத்தின் வள குவிப்பை தடுக்க மற்றைய strategic position மீது offensive தாக்குதல்களை தொடுத்து கொண்டே இருந்திருப்பார்கள்.

இது இலங்கை இராணுவத்திற்கு அந்த strategic position களில் படையணிகளை தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கும் (distracting force deployments).

இது எதிரிகளை பரவலாக கால்பரப்ப வைத்து அவர்களது நிலையை thin ஆகவே வைத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் போரியல் உத்தி. அதேபோல் இலங்கை இராணுவத்திற்கு கால அவகாசமும் கிடைத்திருக்க போவதில்லை.

•#ஆனையிறவு பகுதியை கைப்பற்ற இலங்கை இராணுவம் நடத்திய ‘அக்னி கீல’ ( தீச்சுவாலை) operation

சரியாக 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் திகதி இலங்கை இராணுவம் ஆனையிறவு தளத்தை கைப்பற்றும் முயற்சியாக புலிகளின் முன்னரங்கு பகுதிகளின் மீது அக்னி கீல ( தீச்சுவாலை) எனும் இராணுவ நடவடிக்கையை (operation) ஆரம்பித்தது.

இந்த சமர் நடந்த நிலப்பகுதி குறுகலான முன்னர் குறிப்பிட்ட கழுத்துபகுதியில்.

இந்த இராணுவ நடவடிக்கையில் இலங்கை தனது போர் திறன் அதிகமுள்ள 52,53,55 படையணிகளை ( division) , நான்கு மாத போர்நிறுத்தத்தில் கிடைத்த அவகாசத்தில் சிறப்பு பயிற்சி, தயார்படுத்தல்களுடன் களமிறக்கியிருந்தது.

அத்துடன் அதனது சகல இராணுவ வளங்களையும் ஒன்று குவித்திருந்தது.

•#இனி சமரில் நடந்தவை.

ஏப்ரல் 24ம் திகதி , சுமார் 15000 இலங்கை இராணுவத்தினர் , இதுவரை நடத்திராத அளவிற்கான சூட்டு ஆதரவுடன் (supported by heavy artillery, multi-barrel rocket fire and aerial and naval bombardment) அந்த குறுகலான கழுத்துபகுதியினுள் முன்னேற தொடங்கினர். கிளாலி , எழுதுமட்டுவாள், நாகர்கோவில் முனைகளில் உள்ள புலிகளின் முன்னரங்க நிலைகளை நோக்கியே தாக்குதல் தொடங்கியது.

மூன்று நாட்களுக்கு பின்னர் 400 ற்கும் மேற்பட்ட இலங்கை படையினர் உயிரிழந்து, 2000 ற்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்து தங்களது தீச்சுவாலை நடவடிக்கையை கைவிட்டு பின்வாங்கினர்.

•#இலங்கை இராணுவம் இந்த நான்கு மாத போர்நிறுத்த காலத்தில் புதிய ஆயுதங்களை வாங்கி, சகல இராணுவ வளங்களை ஒன்று குவித்தும் அந்த ‘கழுத்துபகுதியை’ கைப்பற்ற முடியாமல் போனது உலக ஒழுங்கிற்கு ஒன்றை உணர்த்தியது.

•#எதை உணர்த்தியது?

இலங்கை எனும் Sovereign State இனது இராணுவத்திற்கும் non state actor விடுதலை புலிகளின் படையணிகளிற்கும் இடையே #படை வலு சமநிலை ஏற்பட்டுவிட்டது என்பதை உலக ஒழுங்கிற்கு உணர்த்தியது.

அதனோடு தொடங்கியதுதான் மேற்குலகின் போர்நிறுத்தத்தோடு கூடிய சமாதான பேச்சுவார்த்தை எனும் பொறி.

இதுவரை இந்த பந்தியை வாசித்தவர்கள் ஒன்றை புரிந்துகொள்ளலாம் . இது யாழ் கோட்டை , ஆனையிறவு பெருந்தளம் என்ற பெயரை தெரியாமல் மாற்றி சொல்லிவிட்டார் என கடந்து போக கூடியதல்ல. இதற்கு பின்னே புவிசார் நலன் அரசியல்,போரியல் சார்ந்த கனமான விடயங்கள் இருக்கின்றன.

மேலேயுள்ள பந்தியை உள்வாங்கி புரிந்து கொள்வது கூட திருவாளர் மணிக்கு கடினமாகத்தான் இருக்கும். ஏனெனில் அவர் தேர்தல் அரசியலையே காலா காலத்திற்கும் அவரது ஊடகவியலாளர் வாழ்க்கையில் பார்த்து வந்தவர். டுபாக்கூர் சங்கரிற்கு சொல்லவே தேவையில்லை.

#திருவாளர் மணியின் அடுத்த பொய்:

17:45 - “பிரபாகரகன் எல்லாவற்றிற்கும் இராணுவ தீர்வு சாத்தியம் என நினைத்தார். இது தொடர்பாக சமீபத்தில் எரிக் சொல்ஹெய்ம் கொடுத்த பேட்டிதான் முக்கியமானது”.

18:46 - “பிரபாகரனின் இராணுவ தீர்வே சரியானது என்ற பார்வை அபத்தமானது என்று அன்டன் பாலசிங்கமே உணர்ந்து கொண்டார்”.

20:00 - “9/11 தாக்குதலிற்கு பிறகு உலக அரசியல் மாறியது. ஆனால் இது பற்றிய புரிதல் பிரபாகரனிற்கு இருக்கவில்லை”.

எனது பதில் : 2001 இற்கு பிறகான உலக அரசியலை புலிகள் புரிந்து கொள்ளவில்லை என்பது சரியா? இதற்கான பதிலை வெறும் ஒற்றை வரியில் கூறுவது கடினம்.

இந்த போரின் பின்னே போரியல் நகர்வுகள், ராஜதந்திர நகர்வுகள், உலக ஒழுங்கின் நகர்வுகள் என பல பரிமாணங்கள் உண்டு.

•#போரின் இலக்கு என்ன?

போர் என்பது அரசியல் இலக்கை நோக்கி நகர்வதற்கான ஒரு வழி. போர் ஒன்றினூடாக இந்த அரசியல் இலக்கை அடையவே எல்லா தரப்பும் முயல்கின்றன.

தலைவர் பிரபாகரனும் இந்த அரசியல் இலக்கை நோக்கியே இந்த போரை நடத்தினார்.

•#அவரின் இலக்கு எதுவாக இருந்தது?

உலக ஒழுங்கில் இறையாண்மையுள்ள தமிழீழ அரசு.

•#உண்மையில் 9/11 இற்கு பிறகான சூழ்நிலை மட்டும்தான் விடுதலை புலிகள் சமாதான பேச்சுவார்த்தையில் இறங்க காரணமா?

இல்லை.

9/11 என்ற தாக்குதல் நடந்தது 11-Sep-2001.

இதற்கு ஒன்பது மாதங்களிற்கு முன்னரேயே விடுதலை புலிகள் தங்களது பேச்சுவார்த்தைக்கான ராஜதந்திர நகர்வுகளை தொடங்கிவிட்டார்கள்.

24/12/2000 இலிருந்து ஒரு மாதத்திற்கு ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தம் செய்வதாக விடுதலை புலிகள் அறிவித்தார்கள்.

பிறகு அதன் முடிவில் மேலும் ஒரு மாதம் போர் நிறுத்தம் நீடிக்கப்பட்டது.

இவ்வாறு 24/4/2001 வரையில் 4 மாதங்கள் விடுதலை புலிகள் ஒருதலைபட்சமான போர்நிறுத்தத்தை கடைப்பிடித்தார்கள். (இதற்கான இணைப்பு, படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன)

•#அது என்ன ஒருதலைப்பட்சமான போர்நிறுத்தம் (unilateral ceasefire) ?

காரணம் இலங்கை விடுதலை புலிகளின் இந்த போர் நிறுத்தத்தை ஏற்க விரும்பவில்லை.

ஆக விடுதலை புலிகள் 4 மாதங்கள் போர் நிறுத்தத்தை ஒரு தலைப்பட்சமாக கடைப்பிடித்தார்கள். எந்தவிதமான offensive இராணுவ நகர்வுகளையும் செய்யவில்லை.

மறுபுறத்தில் இலங்கை இராணுவம் வழமைபோல தாக்குதல்களை நடத்தியது.

•#ஏன் விடுதலைப்புலிகள் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தை அறிவித்தார்கள்?

நான் மேலே சொன்ன அதே அரசியல் இலக்கு.

அவர்களின் டிசம்பர் மாத போர் நிறுத்தத்திற்கான உத்தியோக அறிவிப்பில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்கள்.

“If Sri Lanka responds positively by ceasing armed hostilities against our forces and takes steps to implement the Norwegian proposal of mutual confidence building measures, the LTTE will be prepared to extend the period of peace to create cordial conditions for a stable cease-fire and direct negotiations”.

•#ஏன் விடுதலை புலிகள் கடைசி வரை போரிட்டே தமிழீழத்தை அடைந்திருக்க முடியாதா?

இதற்கு போரின் உள்ளா்ந்த தன்மையே காரணம்.

விடுதலை புலிகள் ஒரு Non State Military Power.

#ஒரு Non state military power இற்கு என்றே போரியல் போதாமைகள் இருக்கின்றன.

இது தொடர்பான விரிவான பதிவொன்றை முன்பே எழுதியிருக்கிறேன்.

அது உலக ஒழுங்கில் இறையாண்மையுள்ள அரசை
உருவாக்குவதில் இருக்கும் சிக்கலான பக்கங்களை எளிமையாக விவரித்திருக்கிறேன்.

அதற்கான இணைப்பு கீழே.

சரி.

திருவாளர் மணி திரும்ப திரும்ப ஏன் தலைவர் பிரபாகரன் இராணுவ தீர்வையே விரும்பினார் என கூறவேண்டும்?

அதுதான் விடுதலை புலிகள் தொடர்பாக தமிழ்நாட்டு மக்களிடேயே அவர் உருவாக்க விரும்பும் சித்திரம்.

•#அதன் மறைமுக பொருள் என்ன?
இலங்கையில் அரசியல் தீர்வு என்ற ஒன்று இருந்தது. அதை தலைவர் பிரபாகரன் புறக்கணித்து இராணுவ தீர்விலேயே நாட்டம் செலுத்தியதால்தான் இந்த ஆயுத போராட்டம் முடிந்தது என்று தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு செய்தியை கடத்த முயல்கிறார்.

#திருவாளர் மணியின் அடுத்த பொய்கள்

20:25 - “சமாதான பேச்சுவார்த்தையை நடத்துவதற்காக அன்டன் பாலசிங்கம் seaplane இல் வந்திறங்குவதற்கு சந்திரிகா அம்மா அனுமதிக்கிறார். சந்திரிகா அம்மா இது ஒரு political problem என்பதை புரிஞ்சுகிட்டாங்க.”

24:03 - “2002 இல் சந்திரிகா அரசாங்கம் அரசியல் தீர்வுக்காக இறங்கி வருகிறது. சந்திரிகா அம்மா விடுதலை புலிகளின் தாக்குதலில் கண்ணை இழந்த பிறகும், அன்டன் பாலசிங்கம் சமாதான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள இலங்கை வருவதற்கு அனுமதித்தது.

எனது பதில்: இதற்கு சீரியஸாக பதில் சொல்வதற்கு முன்பு ஒரு விடயம்.

திருவாளர் மணி இதை சொன்னவுடன் வடிவேலின் பழைய காமெடி ஒன்றுதான் என் நினைவுக்கு வந்தது.

வடிவேல் ஒரு முழி முழித்துகொண்டு என்னை இவ்வளவு தூரம் நம்புறீயேடா என கட்டி அணைப்பாரே அதே சீன்தான்.

அந்த சந்திரிகா அம்மா அப்புடியே திருவாளர் மணியை அணைத்து ‘இவ்வளவு அப்பாவியா இருக்குறியே மணி’ என கூறியிருப்பார்.

சரி. இனி சீரியஸான பதில்.

2002 இல் நடந்த சமாதான பேச்சுவார்த்தை என்பது விடுதலை புலிகள் அடித்த சம்மட்டி அடியினால் உருவானது.

2001 ஏப்ரல் மாதம் நடந்த தீச்சுவாலை முறியடிப்பு சமரோடு இலங்கையில் படைவலு சமநிலை ஏற்பட்டது.

அதன் பின் 24/07/2001 அன்றுதான் உலக போரியல் சாதனையான கட்டுநாயக்க விமான படை தளம் மீதான விடுதலை புலிகளின் கமாண்டோ தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 15 விமானப்படை போர் விமானங்களும்,ஹெலிகாப்டர்களும் முற்றாக அழிக்கப்பட்டன. அத்துடன் 3 பயணிகள் விமானங்களும் அழிக்கப்பட்டன.

கட்டுநாயக்க விமான தளம் மீதான தாக்குதலோடு படைவலு சமநிலை புலிகள் பக்கம் சாய தொடங்கியது.

இந்த படைவலு சமநிலையை இலங்கை இராணுவம் பக்கம் சாய வைப்பதற்கான கால அவகாசத்தை எடுத்துகொள்ளும் பொருட்டு உலக ஒழுங்கால் வரையப்பட்ட திட்டம்தான் போர்நிறுத்த ஒப்பந்தம்.

அன்றைய காலகட்டத்தில் ஜனாதிபதியாக இருந்த சந்திரிகாவிற்கும் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் தேர்தல் அரசியல் முரண்பாடுகள் இருந்ததுதான். அதனால் ஒருவர் செய்வதை மற்றைய தரப்பு குறை சொல்வது என்பது கட்சி அரசியலில் சாதாரண விடயம்.

ஆனால் இந்த கட்சி தலைவர்களை எல்லாம் தாண்டி இலங்கை அரசுக்கு என குணவியல்பு உண்டு.

அது தனது இலங்கை இராணுவத்தின் முதுகெழும்பு புலிகளால் முறிக்கப்பட்டிருந்ததால், அதை சீர்படுத்த ஒரு கால அவகாசத்தை எடுத்து கொண்டது.

அந்த கால அவகாசத்தை தந்ததுதான் உலக ஒழுங்கின் அனுசரனையுடன் நடத்தப்பட்ட 2001 ஆம் ஆண்டு CFA ஒப்பந்தம்( CeaseFire Agreement).

அதனால் சந்திரிகா அம்மா தனது கண் போனால் கூட பரவாயில்லை. அரசியல் தீர்வே முக்கியம் என நினைத்து அன்டன் பாலசிங்கத்தை வரவழைக்கவில்லை.

கால அவகாசத்தை உருவாக்கும் பொருட்டு இலங்கை அரசுக்கு வரவழைக்க வேண்டிய தேவை இருந்தது.

இந்த உலக ஒழுங்கு எப்படி CeaseFire Agreement ஐ விடுதலை புலிகளுக்கான பொறியாக மாற்ற தனது காய்களை நகர்த்தியது என்பது பற்றி முன்னரேயே விளக்கி பதிவொன்றை இட்டிருக்கிறேன்.

“ எல்லா சமாதான பேச்சுவார்த்தைகளும்
சமாதானத்தை நோக்கியது அல்ல
.
அவை ராஜதந்திர / போரியல் நகர்வுகளின் ஒரு பகுதியாகவும் இருக்கும் “

என பகுதி -1, பகுதி -2 என இரு கட்டுரைகளை எழுதியிருக்கிறேன்.

திருவாளர் மணி இந்த கட்டுரையை படித்து புவிசார் நலன் அரசியல், போரியலின் அரிச்சுவடிகளை கற்றுக்கொள்ளலாம்.

#திருவாளர் மணியின் அடுத்த பொய்கள்

26:25 - “விடுதலை புலிகளுக்கு உலக நாடுகளில் இருக்கும் acceptance வீழ்த்த மகிந்த ராஜபக்ச வெளிநாட்டு அமைச்சராக லக்‌ஷ்மன் கதிர்காமரை நியமிக்கிறார்.”

27:54- “விடுதலை புலிகளை தடை செய்யவேண்டும் என உலக நாடுகள் முழுக்க லக்‌ஷ்மன் கதிர்காமர் ராஜதந்திர சுற்று பயணங்களை மேற்கொண்டு இருந்தார். அந்த லக்‌ஷ்மன் கதிர்காமரை புலிகள் கொலை செய்ததன் பின்னர் , உலக நாடுகள் விழித்து கொண்டன. ஆமாம் கதிர்காமர் சொன்னது போல புலிகள் பயங்கரவாதிகள்தான் என உலக நாடுகள் அறிந்து கொண்டன”.

28:53 - “இரண்டாவதா என்ன பண்ணுனானுங்க ( விடுதலை புலிகளை குறிப்பிடுகிறார்). நீலன் திருச்செல்வம்னு ஒருத்தர். அவர் international intellectual. அவர் உலக நாடுகளிடம் “ புலிகள் பயங்கரவாதிகள். அவர்களுக்கு நீங்கள் ஆயுத உதவி வழங்குவது என்பது post 9/11 உலகில் அபாயகரமான விடயம்” என கூறுகிறார்.இவர போட்ட பிறகு (கதிர்காமர்) அவரையும் (நீலன் திருச்செல்வம்) போட்டுறாங்க.

29:31 - “ இந்த ரெண்டு death இனால் , இதுனால இதுக்கு முன்னால அவுங்களுக்கு (புலிகள்) இருந்த சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக கிடைத்த international support வெறும் support இல்ல. International இடம் இருந்து கிடைத்த arms, medicine என என்பவையாக இருந்த உதவிகள்”

எனது பதில்: லக்‌ஷ்மன் கதிர்காமர் முதன் முதலில் வெளியிறவு துறை அமைச்சராக பதவியேற்றது 1994 இல். சந்திரிகா 1994 இல் பதவியேற்றவுடன், அவர்தான் லக்‌ஷ்மன் கதிர்காமரை Minister of Foreign Affairs இற்கு நியமித்தார்.

அன்றிலிருந்து 1994-2001, 2004- 2005 இல் இறக்கும் வரை வெளியுறவுதுறை அமைச்சராக இருந்தார்.

அடுத்தது “விடுதலை புலிகளை தடை செய்யவேண்டும் என உலக நாடுகள் முழுக்க லக்‌ஷ்மன் கதிர்காமர் ராஜதந்திர சுற்று பயணங்களை மேற்கொண்டு இருந்தார். அந்த லக்‌ஷ்மன் கதிர்காமரை புலிகள் கொலை செய்ததன் பின்னர் , உலக நாடுகள் விழித்து கொண்டன. ஆமாம் கதிர்காமர் சொன்னது போல புலிகள் பயங்கரவாதிகள்தான் என உலக நாடுகள் அறிந்து கொண்டன” என்ற வடையை சுடுகிறார்.

லக்‌ஷ்மன் கதிர்காமரை கொன்ற பிறகுதான் விடுதலை புலிகள் அரசியல் கொலை எல்லாம் செய்பவர்கள் என உலக ஒழுங்கிற்கு தெரிய வருகிறது. அதற்கு முன்பு தெரியாது.

நம்மை போன்ற சாமானியர்களுக்கு கூட புலிகளின் எல்லா அரசியல் கொலைகளும் தெரிந்திருக்கிறது. ஆனால் விடுதலை புலிகள் செய்த அரசியல் கொலைகளை எல்லாம் இலங்கை அரசு உலகுக்கு சொல்லாமல் இரகசியமாக வைத்திருந்திருக்கிறது பாருங்களேன்.

சரி. விடயத்திற்கு வருகிறேன்.

அரசியல் கொலையை எப்படி உலக ஒழுங்கு அணுகுகின்றது?

முதலில் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். இது உங்களின் நாளாந்த வாழ்க்கையின் புரிதலில் சொல்லப்படும்
‘ கொலை ‘ அல்ல.

இது அரசியல் கொலை (political assassination) .

#இது நாடுகளுக்கிடையான ராஜதந்திர உறவு, நாடுகளின் தேசிய நலன், விடுதலை போராட்டம் , அதற்கான போர், புவிசார் அரசியல் போன்ற எல்லாவற்றையும் உள்ளடக்கிய தளத்தில் நடக்கும் ஆட்டம். இதற்கான ஆட்டவிதிகளே வேறு. அதை உங்களின் நாளாந்த வாழ்க்கை புரிதலில் அணுகாதீர்கள்.

#சரி . ராஜீவ் காந்தி அரசியல்கொலை மட்டும்தான் நவீன அரசியல் வரலாற்றில் நடந்த ஒரே கொலையா?

கீழே சில உதாரணங்கள் தருகிறேன். இவை உலகத்திற்கே தெரிந்தவைதான். ஆனால் உங்களுக்கு ஞாபகமூட்ட இதை தருகிறேன்.

•#முதலாவது இணைப்பு அமெரிக்காவின் CIA உலகின் பல பாகங்களில் நடத்திய political assassination களை பற்றியது. guardian பத்திரிகையில் வந்த சிறு கட்டுரை. கூகிளில் தேடினால் இதை போன்ற நூற்றுகணக்கான கட்டுரைகள், தகவல்கள் வரும். அதிலும் கியூபாவின் பிடல் காஸ்ட்ரோவை அரசியல்கொலை செய்ய CIA செய்த முயற்சிகள் உலகபிரசித்தமானவை.

https://www.google.co.uk/amp/s/amp.theguardian.com/us-news/2017/may/05/cia-long-history-kill-leaders-around-the-world-north-korea 

•#அடுத்தது CIA வின் ‘ அளவுக்கு மீறிய ‘ அரசியல் படுகொலைகளுக்கு எதிராக உருவான விமர்சனத்தை தொடர்ந்து, அதை கட்டுப்படுத்துவதற்காக அன்றைய ஜனாதிபதி Gerald R. Ford இனால் கொண்டுவரப்பட்ட நேரடி சட்டம் Executive Order 11905 பற்றிய இணைப்பு கீழே .

https://en.m.wikipedia.org/wiki/Executive_Order_11905

•#அடுத்தது இஸ்ரேல் இன்றுவரை செய்துமுடித்த அரசியல்கொலைகளின் பட்டியல் இணைப்பு கீழே.

https://en.m.wikipedia.org/wiki/List_of_Israeli_assassinations

•#இவ்வளவு ஏன் 2001 இல் நேபாளத்தின் அரச குடும்பத்தை முற்றாக கொலை செய்தது இந்தியாவின் RAW தான் என நேபாளத்தின் முன்னாள் பிரதமர் Pushpa Kamal Dahal பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

#இன்று மேற்குநாடுகள் political assassination என்ற சொல்லாடலை தவிர்த்துவிட்டு targeted killing என்ற சொல்லாடலை சமயோசிதமாக பயன்படுத்துகின்றன.

Targeted killing is defined as a form of assassination carried by governments against their perceived enemies. Analysts believe it to be a modern euphemism for the assassination (prominent premeditated killing) of an individual by a state organization or institution outside a judicial procedure or a battlefield.

வல்லாதிக்க நாடுகள் political assassination ஐ பல பல வகைகளில் அதிஉயர் தொழில்நுட்பத்துடன் செய்கிறார்கள்.

உதாரணம் radioactive substance and nano poisonous substance . முன்னாள் வெனிசூலா நாட்டின் தலைவர் Hugo Chavez மரணத்திலும் அமெரிக்காவின் பங்கு உண்டு என இன்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இதெல்லாம் ஒரு சின்ன சாம்பிள் மட்டுமே.

இந்த நிமிடம் வரை நாடுகளுகிடையிலான ராஜதந்திர உறவுகளை, போரியல் மேலாண்மையை அடிப்படையாக வைத்து பல அரசியல்கொலைகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை. காரணம் நீங்கள் அது துப்பாக்கி சூடு அல்லது குண்டுவெடிப்பாக மட்டும்தான் நடக்கும் என கற்காலம் போல் நினைத்துகொண்டுருக்கிறீர்கள். Update ஆக வேண்டியது தமிழ்மக்கள்தான்.

•#சரி. திருவாளர் மணி சொல்வது போல லக்‌ஷ்மன் கதிர்காமரை கொன்றதால்தான் உலக ஒழுங்கு விடுதலை புலிகளை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்ததா?

ராஜீவ் காந்தி அரசியல் கொலை செய்யப்பட்ட ஆண்டு 1991.

இலங்கை ஜனாதிபதி பிரேமதாச அரசியல் கொலை செய்யப்பட்ட ஆண்டு 1993.

இதற்கு பின்பும் விடுதலை புலிகள் தமது இலக்கிற்கு தடையாக இருந்த பலரை அரசியல் கொலைகள் மூலம் அப்புறப்படுத்தியிருக்கிறார்கள்.

அது ஒரு பட்டியலே இருக்கிறது.

ஆனால் இந்தியா மட்டுமே 1992 இல் விடுதலை புலிகளை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்தது.

ஆனால் ஏன் உலக ஒழுங்கின் Great powers எதுவும் புலிகளை தடைசெய்யவில்லை?

சரி. இனி அடுத்து.

அமெரிக்கா புலிகளை தடை செய்த ஆண்டு 1997.
பிரித்தானியா தடை செய்த ஆண்டு 2001.

அமெரிக்காவும், பிரித்தானியாவும் புலிகளை தடை செய்த பின்புதான், 2002 இல் இதே மேற்குலகின் அனுசரனையுடன் CFA ( CeaseFire Agreement) நடந்தது.

அப்பொழுதெல்லாம் அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்கும் விடுதலை புலிகள் பல அரசியல் கொலைகளை நடத்தியிருக்கிறார்கள் என்பது தெரியாதா?

அடுத்து ஐரோப்பிய யூனியன் தடை செய்த ஆண்டு 2006.

ஏன் மேலே குறிப்பிட்ட இந்த உலக ஒழுங்கு புலிகளை தடை செய்ய இத்தனை ஆண்டுகாலம் எடுத்தது?

ஏன் அவர்கள் யாருக்கும் இது ‘மனித கொலை’ என தெரியாதா?

ஏன் சாமானியர் உங்களை போன்று ‘ மனித கொலை’ என்ற பார்வையில் அணுகவில்லை?
ஏனென்றால் ராஜதந்திர/போரியல்/புவிசார் அரசியல் ஆட்டம் இப்படித்தான் ஆடப்படும்.

•#இதன் பின்னே ஒளிந்துள்ள உண்மை என்ன?

உலக ஒழுங்கு அதனது நலனுக்கு ஏற்ப இந்த ராஜதந்திர/ போரியல் ஆட்டத்தை ஆடும். ஆட்டவிதிகளை மாற்றும்.

அவைகளின் நலனுக்கு ஒத்திசைவாக இருக்கும்போது ‘சுதந்திர போராட்டமாகவும்’, எதிர் நிலைக்கு போகும்போது ‘ பயங்கரவாதமாகவும்’ அது கட்டமைத்து காய் நகர்த்தும்.

#ஆக விடுதலை புலிகளுக்கு எதிரான காய் நகர்த்தலின் ஒரு பகுதியாக ஐரோப்பிய யூனியன் 2006 இல் தடைசெய்தது என்பது லக்ஸ்மன் கதிர்காமர் அரசியல் கொலையின் எதிர்வினை அல்ல.
அந்தநேரத்தில் உலக ஒழுங்கின் நலன் விடுதலை புலிகளின் நலனுடன் முரண்பட்டிருக்கிறது. அதாவது விடுதலை புலிகள் உறுதியாக தமிழீழம் மட்டுமே ஒரே இலக்கு என்று இருந்தது உலக ஒழுங்கின் புவிசார் அரசியல் நலனுடன் முரண்பட்டிருக்கிறது.

அது எப்படி முரண்பட்டது என்பதை ஆசிய பிராந்தியத்தில் சீன-அமெரிக்க போட்டி என்பதன் பின்னணியில் முன்னரே விரிவாக பதிவிட்டிருக்கிறேன்.

#திருவாளர் மணியின் அடுத்த பொய்களை மீண்டும் தருகிறேன்.

28:53 - “இரண்டாவதா என்ன பண்ணுனானுங்க ( விடுதலை புலிகளை குறிப்பிடுகிறார்). நீலன் திருச்செல்வம்னு ஒருத்தர். அவர் international intellectual. அவர் உலக நாடுகளிடம் “ புலிகள் பயங்கரவாதிகள். அவர்களுக்கு நீங்கள் ஆயுத உதவி வழங்குவது என்பது post 9/11 உலகில் அபாயகரமான விடயம்” என கூறுகிறார்.இவர போட்ட பிறகு (கதிர்காமர்) அவரையும் (நீலன் திருச்செல்வம்) போட்டுறாங்க.

29:31 - “ இந்த ரெண்டு death இனால் , இதுனால இதுக்கு முன்னால அவுங்களுக்கு (புலிகள்) இருந்த சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக கிடைத்த international support வெறும் support இல்ல. International இடம் இருந்து கிடைத்த arms, medicine என என்பவையாக இருந்த உதவிகள்”

எனது பதில்: அவர் கூறியதை திரும்பவும் தருகிறேன்.

“அவர் உலக நாடுகளிடம் “ புலிகள் பயங்கரவாதிகள். அவர்களுக்கு நீங்கள் ஆயுத உதவி வழங்குவது என்பது post 9/11 உலகில் அபாயகரமான விடயம்” என கூறுகிறார்.இவர போட்ட பிறகு (கதிர்காமர்) அவரையும் (நீலன் திருச்செல்வம்) போட்டுறாங்க.”

நீலன் திருச்செல்வத்தை விடுதலை புலிகள் அரசியல் கொலை செய்த திகதி 29-7-1999.

ஆனால் திருவாளர் மணி புலிகள் கதிர்காமரை கொன்ற பிறகு நீலன் திருச்செல்வத்தை கொன்றதாக கூறுகிறார்.

அதில் வேறு ‘நீலன் திருச்செல்வம் post 9/11 பிறகு புலிகளுக்கு நீங்கள் ஆயுத உதவி வழங்குவது அபாயகரமானது’ என கூறினாராம்.

திருவாளர் மணியின் இந்த அண்ட புழுகு கலாய்ப்பதற்கு கூட தகுதியில்லாதது.

“இந்த ரெண்டு death இனால் , இதுனால இதுக்கு முன்னால அவுங்களுக்கு (புலிகள்) இருந்த சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக கிடைத்த international support வெறும் support இல்ல. International இடம் இருந்து கிடைத்த arms, medicine என என்பவையாக இருந்த உதவிகள்” என மணி கூறுகிறார்.

உலக வரலாற்றிலேயே விடுதலை புலிகள் இயக்கம் மட்டுமே 1987- 2009 வரை எந்த இறையாண்மை அரசின் உதவியும் இன்றி போராடிய விடுதலை அமைப்பு.

அவர்களின் ஆயுத கொள்வனவு உலகின் கள்ள சந்தைகளினூடாக பெற்றுக்கொண்டது.

ஆனால் மணி international புலிகளுக்கு ஆயுத உதவி வழங்கியதாக கூறுகிறார்.

மணியும் டுபாக்கூர் சங்கரும் எந்தெந்த உலக நாடுகளின் அரசுகள் புலிகளுக்கு உதவியை வழங்கின என்பதை கூறினால் என்னை போன்றவர்கள் அறிந்து கொள்வோம்.

இவ்வளவு நீநீநீண்ட பதிவு முதல் 30 நிமிடங்களுக்காக எழுதப்பட்டதுதான்.

இன்னும் முக்கால் மணித்தியால காணொளி இருக்கிறது.

அதை அடுத்த பதிவில் தருகிறேன்.


க.ஜெயகாந்த்

உலக ஒழுங்கின் நகர்வுகளை போரியல் ரீதியான பார்வையிலும் காண பழகுங்கள். க.ஜெயகாந்த்

• பொதுவாக என்னுடைய பதிவுகளில், நான் உலக ஒழுங்கின் நகர்வுகளை போரியல்ரீதியான பார்வையில் அணுகுவதை நீங்கள் அவதானித்திருக்கலாம்.

• #இதன் பொருள் என்ன?

மனித உயிர்கள் பந்தாடப்படும் போரை நான் விரும்புகிறேன் என்று பொருளா? 

நிச்சயம் இல்லை.

மனித செயற்பாடுகளிலேயே மிகவும் கொடியது போர் என்பதை மனப்பூர்வமாக அறிவேன். அன்றாட வாழ்வில் நாம் வெறுக்கும் சகல கொடியவைகளும் ஒருங்கே நிகழ்வதற்கான கள வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பவை போர் என்பதில் சந்தேகமில்லை.

• #பிறகு ஏன் போரியல் பார்வையிலேயே அணுகுகிறேன்?

war is a necessary evil என்பதுதான் குரூரமான யதார்த்தம்.

இதை இன்னும் மிதமாக சொல்வதாக இருந்தால் 
War may sometimes be a necessary evil என சொல்லாம்.

போர் எனும் கொடிய மிருகம் சிலவேளைகளில் தவிர்க்க முடியாததாகிறது என்பதுதான் கள யதார்த்தம்.

காரணம் மனித மனங்கள் சிக்கலானவை. மனிதன் எப்படியாவது தான் வெல்லவேண்டும் என்ற உந்துதலில் கடைசி ஆயுதமாக தனது பலத்தை கொண்டு வன்முறையை உபயோகிப்பான். இது அவனது ஆதார உணர்ச்சி. 

அதனால் மனிதர்களை கொண்ட உலகில் வன்முறை என்பது தொடர்ந்து கொண்டேயிருக்கும். ஆனால் காலத்திற்கு ஏற்ப வேறு வேறு வடிவங்களில்.

• #இன்றைய உலகில் அது எத்தகைய வடிவத்தை கொண்டிருக்கிறது?

இன்றைய உலகு இறையாண்மை அரசுகளால் ஆளப்படுவது. இன்றைய உலக நிலப்பரப்பு சுருக்கமாக சொன்னால் சுமார் 190 இறையாண்மை அரசுகளால் ஆளப்படுவது.

இந்த இறையாண்மை அரசுகள் அதனது ஆளுகைக்கு உட்பட்ட நிலத்தில் தனது  குடிமக்கள் வன்முறையின்றி வாழ்வதை நீதி,சட்டம்,ஒழுங்கு என்பவற்றை வைத்து உறுதிபடுத்தி கொள்கின்றன.

ஆனால் மற்றைய இறையாண்மை அரசுகளிடம் இருந்து தன்னை தற்காத்து கொள்ள வன்முறையை நாடியே ஆகவேண்டும். அதாவது தன்னை தற்காத்து கொள்ள தனக்கான இராணுவ வலிமையை தக்கவைத்து கொள்ளவேண்டும்.

காரணம் உலக ஒழுங்கு ஒரு  ANARCHIC SYSTEM. இதைப்பற்றி முன்னைய பதிவுகளில் விளக்கியிருக்கிறேன்.

• #போரியல்ரீதியில் பலமான நிலையை தக்கவைத்து கொள்ளுதல்

ஆக ஒரு இறையாண்மை அரசு தன்னை தற்காத்து கொள்ள இராணுவ வலிமையை தக்கவைத்து கொள்ளவேண்டும் என்பதுதான் கள யதார்த்தம் எனும்போது, அதனது சகல நகர்வுகளுமே தனது இராணுவ வலிமையை போரியல்ரீதியில் பலமான நிலையில் வைத்திருக்கவேண்டும் என்பதை உறுதிபடுத்துவதை சார்ந்ததாகவே இருக்கும்.

இந்த போரியல்ரீதியில் பலமான நிலையை தக்கவைத்து கொள்ளுதல் என்பதை மிக எளிமையாக Militarily Advantageous Position என புரிந்து கொள்ளலாம். 

ஆனால் இது முழுமையான விளக்கம் அல்ல. அமெரிக்கா போன்ற super power போரியல்ரீதியில் பலமான நிலை என்பதை military superiority என்பதாகவே தக்கவைத்து கொள்ள விரும்புகிறது.

ஒரு இறையாண்மை அரசின் தேசிய நலனில் (National Interest) இந்த போரியல்ரீதியில் பலமான நிலையை தக்கவைத்து கொள்ளுதல் என்பது மிக முக்கியமான இலக்கு.அதில் ஒரு இறையாண்மை அரசு சமரசம் செய்து கொள்ளாது.

• #போரியல்ரீதியான பார்வையின்றி அல்லது அறிவின்றி உலக ஒழுங்கின் நகர்வுகளை அணுகினால் எப்படியிருக்கும்?

உங்களால் உலக ஒழுங்கு ஆடும் சதுரங்க ஆட்டத்தை புரிந்துகொள்ள முடியாது. 

குருடர்கள் யானையின் ஒவ்வொரு பாகத்தை தொட்டு உணர்ந்து புரிந்து கொண்டது போல இருக்கும்.

நீங்களாகவே அறம், ஏகாதிபத்தியம், முதலாளித்துவம், வெள்ளை நிற வெறியர்கள், துரோகம்,வஞ்சகம் என குண்டு சட்டியிற்குள்ளேயே இந்த சதுரங்க ஆட்டத்தை புரிந்து கொள்ள முயற்சிப்பீர்கள்.

• #நீங்கள் இந்த புவிசார் நலன் அரசியல்,போரியல் என்பவற்றின் புரிதல் இல்லாமல்  இந்த சதுரங்க ஆட்டத்தை ஆடினால் என்ன நடக்கும்?

பரிதாபமாக தமிழ் இனம் தோல்வியடையும்.

சரி. உதாரணத்திற்கு சில கேள்விகளை உங்களிடம் கேட்கிறேன்.

• ஏன் சீனா ஆசிய பசுபிக் பிராந்தியத்திலிருந்து அமெரிக்காவை அப்புறப்படுத்த முயல்கிறது? 

உங்களின் அகராதியில் சீனா ஆக்கிரமிப்பாளராக மாறி அண்டை நாடுகளை அச்சுறுத்துகிறது என  
பொருள் தருவீர்கள். இது சரியான காரணமா?

• அமெரிக்கா ஏன் Western Hemisphere இல் இன்னொரு நாடு இராணுவ வலிமையோடு வளர்வதை அனுமதிப்பதில்லை?

• ஏன் ஈரான் அணு ஆயுத வல்லமை பெறுவதை இஸ்ரேல் எப்பாடுபட்டாவது  தடுக்க முயல்கிறது?

• சரி. ஈரான் ஏன் அணு ஆயுத வல்லமையை பெற முயல்கிறது? அணு ஆயுத வல்லமையை பெற்ற பிறகு இஸ்ரேலுடன் போர் புரியவா? நிச்சயம் இல்லை. பிறகு ஏன்? 

இரு நாடுகள் அணு ஆயுத வல்லமை பெற்றால் போரியல் சமன்பாடுகள் மாறும். அங்கு Mutual Assured Destruction(MAD), Second Strike Capability போன்ற அணு ஆயுத சமன்பாடுகள் முக்கிய காரணிகளாக மாறும். இவைகளை புரிந்து கொள்ளாமல் எப்படி ஈரான்,இஸ்ரேல் நகர்வுகளை புரிந்து கொள்வது?

• #இந்த போரியல்ரீதியான நகர்வுகள் உலக ஒழுங்கின் எல்லாவற்றிலும் அதனது தாக்கத்தை செலுத்துகின்றன:

• விடுதலை புலிகளின் இறுதிப்போரில் இந்தியாவின் தாக்கம் ஏன் பெரியதாக இருந்தது? 

• ஏன் அமெரிக்கா இந்தியாவின் விருப்பப்படி இறுதிப்போர் முடிவடைய அனுமதித்தது? 

நேட்டோ உறுப்பினரான துருக்கி S-400 (SAM) ஐ ரஷ்யாவிடமிருந்து வாங்கியபோது,  அமெரிக்கா துருக்கி மீது Countering America’s Adversaries Through Sanctions Act (CAATSA) தடை விதித்தது.

ஆனால் இந்தியாவும் அண்மையில் S-400 ஐ ரஷ்யாவிடம் கொள்வனவு செய்தது. ஆனால் இந்தியா மீது இத்தகைய தடைகளை அமெரிக்கா விதிக்காது.

இதை புரிந்து கொள்ள அடுத்த நூறு வருடங்களுக்கு ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் இறுக்கமடையப்போகும் சீன-அமெரிக்க Great Game பற்றிய புரிதல் இருக்கவேண்டும்.

இந்த சீன-அமெரிக்க Great Game பற்றிய புரிதல் உங்களுக்கு இருந்தால், இந்தியாவின் விருப்பப்படி அமெரிக்கா ஏன் விடுதலை புலிகளின் போராட்டத்தை அழிக்க உதவியது என்பதற்கான விடை கிடைக்கும்.

• #தமிழ் இனத்தின் அப்பாவித்தனமான உளவியல்

“தமிழர்கள் நாங்கள் உயிர்மை நேயவாதிகள். நாங்கள் எத்தகைய நகர்வையும் அறத்தின் அடிப்படையிலேயே மதிப்பீடு செய்வோம்” என்று தமிழர்கள் தங்களுக்கு தானே சொல்லிக்கொள்வது பாராட்டுக்குரியதுதான்.

ஆனால் தமிழ் இனத்தின் இத்தகைய உயர் விழுமியங்கள் உலக ஒழுங்கின் சதுரங்க ஆட்டத்தின் போக்கில் கால் தூசியளவு கூட பாதிப்பை ஏற்படுத்தாது.

போரியல்ரீதியில் பலமான நிலையை தக்கவைத்து கொள்ளுதல் என்பதை பிரதான இலக்காக வைத்து 
நகர்வுகளை மேற்கொள்வது என்பது பல நூற்றாண்டுகளாக அரசுகள் ஆடி வரும் சதுரங்க ஆட்டம்.

இந்த சதுரங்க ஆட்டத்தின் அடிப்படை மாறாது. காரணம் மீண்டும் மேலே கூறியதுதான். வன்முறை என்பது மனிதனின் ஆதார உணர்ச்சி. இந்த உலகம் என்பது ANARCHIC SYSTEM.

இதில் இன்னொரு மேலதிக விடயமும் உண்டு. தமிழ் இனம் இறையாண்மை அரசு அற்ற ஒரு இனம். அதற்கு குரல் இல்லை. அது எந்தெந்த நாடுகளில் வாழ்கிறதோ அந்தந்த நாடுகள்தான் அதன் முதலாளி. இதுதான் கசப்பான கள யதார்த்தம்.

• #விடுதலை புலிகளின் போரியல் நகர்வுகளை புரிந்துகொள்ள திணறும் தமிழ் இனம்

விடுதலை புலிகளின் பல நகர்வுகளை புரிந்து கொள்ளமுடியாமல் தமிழ் இனம் முக்கி திணறியதற்கான காரணமும் தமிழ் இனத்தின் போரியல்ரீதியான அறிவு குறைபாடே.

அதனாலேயே உலக ஒழுங்கு ராஜதந்திரத்துடன் விளையாடிய சில சொல்லாடல்களை எதிர்கொள்ள 
தமிழ் இனம் திணறியது.

விடுதலை புலிகள் தன்னந்தனியாக இறையாண்மை அரசுகளுடன் 26 வருடங்கள் போரிட்டார்கள்.

இறையாண்மை அரசுகள் நான் மேலே கூறிய சதுரங்க ஆட்டத்தை எந்த முறையில் ஆடினார்களோ அதே முறையில்தான் விடுதலை புலிகளும் ஆடவேண்டும். ஆடினார்கள்.

• #இன்னொரு காரணமும் உண்டு 

விடுதலை புலிகளின் ஆயுத போராட்டத்தை போரியல் பார்வையில் அணுகி அதை அடுத்த தலைமுறைக்கு கடத்தவேண்டும் என்பதும் என்னுடைய முக்கியமான நோக்கம். 

போரியல் பார்வையில் விடுதலை புலிகளின் போராட்டத்தை அணுகாவிடில், விடுதலை புலிகளின் போராட்டத்தை உலக ஒழுங்கு மிக எளிதாக பயங்கரவாதமாக கட்டமைத்துவிடும்.

அதற்கேற்றாற்போல நமது தமிழ் இனத்திலேயே சில கூமுட்டைகள் ‘ராஜீவ் காந்தியை அரசியல் கொலை செய்ததாலேயே இந்தியா தமிழீழத்தை அனுமதிக்கவில்லை’ என்பது போன்ற கம்பி கட்டும் கதையெல்லாம் விடுவார்கள்.

ராஜீவ் காந்தி அரசியல் கொலை நடந்திருக்காவிட்டாலும் இந்தியா தமிழீழத்தை ஆதரிக்காது. ஏன் என்பதை தமிழ்நாட்டு தமிழ் மக்கள் சிந்தித்திருந்தால் பல சூட்சுமங்கள் புரிந்திருக்கும். அதை தனி பதிவாக எழுதுகிறேன்.

• #தமிழ் இனம் கற்று கொள்ளவேண்டியது

உலக ஒழுங்கின் நகர்வுகளை போரியல்ரீதியான பார்வையிலும் அணுக பயிலுங்கள்.இந்த சதுரங்க ஆட்டம் உங்களுக்கு புரிய தொடங்கும்.

க.ஜெயகாந்த்

(மீள்பதிவு 2021)

விடுதலைப்புலிகளின் போர் ஆயுதங்களுக்கான வருடாந்திர செலவினம். க.ஜெயகாந்த்

விடுதலை புலிகளின் போர் ஆயுதங்களுக்கான வருடாந்தர செலவினம்

விடுதலை புலிகள் தமது இயக்கத்தின் வருடாந்தர வருமானம் , செலவினம் பற்றிய உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிட்டதில்லை. வெளியிடவும் முடியாது. இது இரகசியமாக வைத்திருக்கப்படவேண்டிய தகவல்.

• #அதனால் 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாத Jane’s Defence Intelligence Review கூறிய தகவலை தரவுகளுக்காக எடுத்துகொள்ளலாம்.

உலகிலேயே அதிக வருமானத்தை கொண்ட இரண்டாவது  போராட்ட இயக்கம் விடுதலை புலிகள்தான் என அதில் கூறியிருந்தது.

அதனது 2008 ஆம் ஆண்டு கணிப்பின்படி, விடுதலை புலிகளின் வருடாந்தர வருமானம் $200-300 million என Jane’s Defence Intelligence Review கூறியிருந்தது.

The August issue of the Jane's Intelligence Report said the annual income of the banned terrorist group Liberation Tigers of Tamil Eelam(LTTE) is between US $ 200-300 million making it the rebel group generating the second biggest income both by legal and illegal business.

2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சுமார் 45 ரூபாய்.

அதன்படி விடுதலை புலிகளின் ஆண்டு வருமானம் இந்திய ரூபாயில் 900 கோடி - 1350 கோடி.

“According to the report, though the estimated annual income of the LTTE is between USD 200 to 300 million its costs are only USD 8 million.”

• #விடுதலை புலிகள் தங்களது நிதியை திரட்ட, பரிமாற்ற எத்தகைய அதி நுட்பமான வலை பின்னல்களை வைத்திருந்தார்கள் என்பதையும் Jane’s Defence Intelligence Review பின்வருமாறு கூறுகிறது.

In a press release on Thursday (July 19) the magazine says that the terror outfit has become “one of the most sophisticated insurgencies in the world” mainly because of its “complex global network of financial resources and weapons”, that are being used to strengthen its campaign against Sri Lanka.

• #விடுதலை புலிகளின் இந்த வருடாந்தர வருமானம் பற்றிய Jane’s Defence Intelligence Review இன் தரவினை அன்றைய காலகட்டத்தில் ஊடகங்கள்  பதிவிட்டிருக்கின்றன.

அந்த ஊடகங்களின் இணைய தளங்களை இன்றும் நீங்கள் கூகிளில் தேடி வாசிக்கலாம்.

அத்தகைய சில இணையதளங்களின் இணைப்புகளை பின்னூட்டத்தில் தந்திருக்கிறேன்.

• #இந்த Jane’s Defence Intelligence Review கூறிய புலிகளின் வருடாந்தர வருமானம் US $ 200-300 million என்ற தரவிற்கு ஒத்ததான இன்னொரு தரவினை இலங்கையின்  Prof. Rohan Gunaratna உம் கூறியிருந்தார்.

Rohan Gunaratna is an international terrorism expert and Head of the International Centre for Political Violence and Terrorism Research (ICPVTR) at Nanyang Technological University in Singapore.

இலங்கையரான இந்த Prof. Rohan Gunaratna தொடர்ந்து விடுதலை புலிகளுக்கு எதிரான ஆய்வு கட்டுரைகளை எழுதி வந்தவர். விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசாங்கத்தோடு நெருக்கமாக இணைந்து செயலாற்றியவர்.

சரி. Prof. Rohan Gunaratna விடுதலை புலிகளின் ஆண்டு வருமானத்தை பற்றி என்ன கூறியிருக்கிறார் என பார்ப்போம்.

“Based on debriefing of LTTE activists detained or cooperating, and LTTE financial reports recovered by governments worldwide, the LTTE was a very wealthy terrorist and insurgent group. 

#The LTTE raised USD 25 million to 50 million per year from 1987 to 1993, USD 50 to 75 million per year from 1993 to 2002 and USD 200 million per year from 2002 to 2008.”

இதை ஒவ்வொரு காலகட்டங்களாக உடைத்தே தருகிறேன்.

1987- 1993 :  USD 25 million to 50 million 
1993- 2002 : USD 50 to 75 million
2002-2008 :  USD 200 million

இது லக்பிம எனும் சிங்கள தினசரி பத்திரிகைக்கு Prof. Rohan Gunaratna அளித்த நேர்காணலின் ஒரு பகுதி.

• #அதே நேர்காணலில், பின்னர் எப்படி உலக நாடுகளின் intelligence services ஒன்றாக இணைந்து செயலாற்றி புலிகளின் இந்த நிதி கட்டமைப்பை உடைத்தன என்பதையும் பதிவு செய்திருப்பார்.

அதையும் தருகிறேன்.

“The LTTE’s premier front Tamil Rehabilitation Organization raised millions of dollars that went into procuring arms, ammunition and explosives from North Korea, the principal supplier of weapons to the LTTE since 1997. 

#Unfortunately, it took several years for governments worldwide to work together to dismantle the LTTE international network. 

#Largely due to the good work of the western security and intelligence services in the West, the LTTE international network was rendered almost bankrupt by early 2009. 

Although unacknowledged, the LTTE cells were disrupted globally starting with the US. 

The disruption of the three LTTE fundraising and procurement cells in the US monitored by the FBI even before 9/11 created the impetus for Canada, Europe and Australia to share information and intelligence on the LTTE. 

This spate of operations led the US, India and a few other countries to share intelligence on the LTTE ships transporting weapons from North Korea to the LTTE leading to their destruction.”

• #விடுதலை புலிகளின் வருடாந்தர ஆயுத செலவினமே கிட்டத்தட்ட இந்திய ரூபாய் மதிப்பில் 1000 கோடிக்கு மேல் வருகிறது.

இலங்கை ரூபாய் மதிப்பில் இன்னும் அதிகமாக வரும்.

2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்க டாலருக்கான இலங்கை ரூபாய் மதிப்பு சுமார் 110 ரூபாய்.

விடுதலை புலிகளின் வருட வருமானம் அமெரிக்க டாலரில் $200-300 million. அதன் இலங்கை மதிப்பு ரூபாய் 2200 கோடி- 3300 கோடி.

இந்த வருமானத்தில் எவ்வளவு பகுதி புலிகள் இயக்கத்தின் மற்றைய கட்டமைப்புகளுக்காக செலவழிக்கப்பட்டது என்ற தகவல்கள் இல்லைதான்.

ஆனால் இந்த வருடாந்தர வருமானத்தின் பெரும் பகுதியை விடுதலை புலிகள் தங்களின் ஆயுத கொள்வனவுகளுக்காக பயன்படுத்தியிருப்பார்கள் என கருதமுடியும்.

இதன்படி விடுதலை புலிகளின் வருடாந்தர ஆயுத செலவினம் குறைந்தது 2000 கோடி-3000 கோடி இலங்கை ரூபாய்.

ஆக விடுதலை புலிகளின் வருட வருமானம் உயர உயர அதற்கேற்றால் போல அவர்களின் ஆயுத கொள்வனவும் அதிகரிக்கும். அதற்கேற்ப புலிகளின் போரியல் ஆற்றலும் உயரும்.

இதை தடுத்து நிறுத்த இலங்கை இராணுவமும் செலவுகளை வருடா வருடம் அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

க.ஜெயகாந்த்

• #கொண்ட கொள்கையில் உறுதியையும், நேர்மையையும் அளவிடுவதற்கு ஒரு வரலாற்றை உதாரணமாக தருகிறேன்.

முந்தைய பதிவில் விடுதலை புலிகளின் ஆண்டு வருமானம் US $ 200-300 million என கூறியிருந்தேன்.

அது பற்றி Jane’s Defence Intelligence Review கூறிய தரவுகளையும், இலங்கையின்  Prof. Rohan Gunaratna கூறியிருந்ததையும் ஆதாரங்களுடன் தந்திருந்தேன். அந்த விடயங்களை திரும்பவும் நீங்கள் போய் வாசிக்கலாம்.

• #சரி. இனி விசயத்திற்கு வருகிறேன்.

2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சுமார் 45 ரூபாய்.

அதன்படி விடுதலை புலிகளின் ஆண்டு வருமானம் இந்திய ரூபாயில் 900 கோடி - 1350 கோடி.

இலங்கை ரூபாய் மதிப்பில் இன்னும் அதிகமாக வரும்.

2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அமெரிக்க டாலருக்கான இலங்கை ரூபாய் மதிப்பு சுமார் 110 ரூபாய்.

விடுதலை புலிகளின் வருட வருமானம் அமெரிக்க டாலரில் $200-300 million. அதன் இலங்கை மதிப்பு ரூபாய் 2200 கோடி- 3300 கோடி.

• #ஆனால் 2009 மே18 இன் அந்த இறுதி துளி வரை, தலைவர் பிரபாகரனிற்கு என்று சொந்தமாக ஒரு பைசா சொத்து இருந்ததில்லை. சொந்தமாக அவர் பெயரில் ஒரு பிடி நிலம் இருந்ததில்லை. இது அவரது குடும்பத்திற்கும் பொருந்தும். 

அது போல களத்தில் களமாடி வீரமரணம் அடைந்த அத்தனை விடுதலை புலி போராளிகளுக்கும் இது பொருந்தும்.

இத்தனை ஆயிரம் கோடி வருட வருமானம் இருந்தும், போர் களத்தில் இருந்த விடுதலை புலி போராளிகள் பைசா கையாடல் செய்ததில்லை. செய்யவும் முடியாது. 

• #கடுமையான தண்டனை

நிதி கையாடல் என்பதற்கு கடுமையான தண்டனை உண்டு. புலிகளின் பல ஒழுக்காற்று நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.

• எப்பொழுது மே 18 இறுதி கணத்தில் அந்த தலைவரோடு விடுதலை புலிகள் இயக்கம் முடிவுக்கு வந்ததோ, அதன் பின்னர்தான் புலம் பெயர்ந்த நாடுகளில் நிதி திரட்டலில் ஈடுபட்டிருந்த உறுப்பினர்கள் தங்களின் வசமிருந்த சொத்துக்களை பதுக்க ஆரம்பித்தது எல்லாம் நடந்தது.

• #தலைவர் பிரபாகரன் இருந்தவரை, நிதி கையாடலில் ஈடுபட்டால்  மேற்குலக நாடுகளில் இருந்தால் கூட ஒருவர் தப்பிக்க முடியாது.

ஒரு நிகழ்வு ஒன்றை உதாரணமாக தருகிறேன்.

1990 களில், LTTE international spokesmen ஆக பணியாற்றியவர் லாரன்ஸ் திலகர். இவர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்தார்.அவர் அந்த காலங்களில் மிக பிரபலம். அடிக்கடி பல ஊடகங்களில் அவரது பெயரை காணலாம்.

2000 களிற்கு பிறகு திடீரென அவரை காணவில்லை. அவரது பெயர் எங்குமே வருவதில்லை.

என்ன நடந்தது?

விடுதலை புலிகளின் சர்வதேச ஊடக பேச்சாளராக இருந்த லாரன்ஸ் திலகர் நிதி கையாடல் செய்திருப்பதாக உறுதிசெய்யப்பட்டது.

அவர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது.

லாரன்ஸ் திலகரிற்கும் தெரியும். தான் நிதி கையாடலில் ஈடுபட்டது விடுதலை புலிகளின் தலைமைக்கு தெரிந்து விட்டது என்று. அதனால் தமிழீழத்திற்கு சென்றால் தண்டணை உறுதி என்பதும் தெரியும்.

ஆனால் அவரை பிரான்ஸ் நாட்டிலிருந்து தமிழீழத்திற்கு கொண்டுவந்து தண்டனை வழங்கப்பட்டது.

• #இன்னொரு கோணத்தில் அணுகி பாருங்கள்

விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் உலகின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படாதவை. அவர்களை யாரும் தொடமுடியாது. 

ஆக மிஞ்சிப்போனால் இன்டர்போலின் தேடுவோர் பட்டியலிலும், அமெரிக்க அரசின் தடைசெய்யப்பட்ட அமைப்புகள் பட்டியலிலும் அவர்களின் பெயரை சேர்க்க மட்டும்தான் முடியும்.  

எந்தவொரு சட்ட திட்டங்களுக்கு உட்படாதவராக இருந்தும் , ஆயுதமுனையாலேயே எதையும் சாதிக்கும் அதிகாரம் இருந்தும் தலைவர் பிரபாகரன் தனக்கெனவோ தன் குடும்பத்திற்கெனவோ ஒரு குண்டுமணியை கூட சேர்த்ததில்லை. 

தனது முழு கட்டுப்பாட்டில் இயங்கும் இயக்கத்தின் வசம் இத்தனை ஆயிரம் கோடிகள் இருந்தும், தலைவர் பிரபாகரனுக்கோ , அவரது  குடும்பத்திற்கோ சொந்தமாக ஒரு சதுர அடி நிலம் கூட இருந்ததில்லை. அவரின் போராட்ட வாழ்வு முழுவதும் சக போராளிகளுக்கு எது அமைந்ததோ அதுதான் அவருக்கும் கிடைத்தது.

#இந்த புள்ளிதான் நேர்மையின் வீச்சை, கொண்ட கொள்கையில் இருந்த உறுதியை அளக்கக்கூடிய இடம்.

• #ஒரு சுவாரசியத்திற்காக, தமிழ்நாட்டின் பொது வாழ்க்கையில் இருந்த,இருக்கும், உங்களால் புரட்சி, முத்தமிழ், தளபதி, இத்யாதி என பல பல ‘மயிர் சிலிர்க்க வைக்கும் அடைமொழிகளால்’ அழைக்கப்படும் தலைவர்களை இந்த நேர்மை,கொள்கை உறுதி அளவுகோலை வைத்து பரிசோதனைக்கு உட்படுத்தி பாருங்கள்.

ஒரிருவரை தவிர அனேகமானோர் தேறமாட்டார்கள் என்பதே கள யதார்த்தம்.

க.ஜெயகாந்த்

• #விடுதலை புலிகளின் வருடாந்தர போர் ஆயுதங்களுக்கான செலவினம்

https://m.facebook.com/story.php?story_fbid=159720576561291&id=100075700470337&m_entstream_source=timeline

தமிழீழம் அமைவதை இந்தியா ஏன் விரும்புவதில்லை? க.ஜெயகாந்த்

• #தமிழீழம் அமைவதை இந்தியா ஏன் விரும்புவதில்லை? - ஆய்வு கட்டுரை

தமிழீழம் என்ற இறையாண்மை அரசு உருவாக இந்தியா ஏன் விரும்புவதில்லை? என்ற கேள்வியோடு எனது முன்னைய பதிவை முடித்திருந்தேன். 

அந்த கேள்விக்கான பதிலை ஆய்வு பார்வையில் சொல்ல முனைவதே இந்த பதிவு.

• #தமிழீழம் என்ற இறையாண்மை அரசு உருவாவதை அனுமதிக்கக்கூடாது என்ற கொள்கை முடிவு இந்திய கொள்கை வகுப்பாளர்களால் எடுக்கப்பட்டது. அதை இந்திய அரசு செயல்படுத்துகிறது. 

ஏன் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் இந்த கொள்கை முடிவிற்கு வந்தார்கள் என்பதை இந்த பதிவின் பிற்பகுதியில் விளக்குகிறேன்.

அதற்கு முன்பு இதில் சம்பந்தப்பட்டுள்ள இலங்கையினது வரலாறு பற்றிய ஆழமான புரிதல் இருக்கவேண்டியது கட்டாயமானது.

• #இலங்கையின் வரலாறு

ஒரு இறையாண்மை அரசின் வெளியுறவு கொள்கை (Foreign Policy) என்பது முழுக்க முழுக்க அதனது இருப்பை உறுதிப்படுத்துவதையே ( Survival) அதனது மிக முக்கிய குறிக்கோளாக கொண்டிருக்கும். மற்றையவை எல்லாம் அதன் பின்னேதான்.

•#இலங்கை மீதான ஆக்கிரமிப்பு படையெடுப்புகள்

இலங்கையின் சுமார் 3000 வருட வரலாற்றை எடுத்துகொண்டால் ஒரு விடயத்தை தெளிவாக காணமுடியும். 

ஐரோப்பிய நாடுகளின் காலனியாதிக்க காலத்தை தவிர்த்து பார்த்தால், அதனது வரலாறு நெடுக சிங்கள மன்னர்களது இராச்சியங்களின் மீது படையெடுப்பை நிகழ்த்தியது ஒரே ஒரு தேசம்தான். அந்த தேசம் தமிழ்நாடுதான். குறிப்பாக தமிழ்நாட்டின் சோழ சாம்ராஜ்யமும், பாண்டியர்களும்தான். 

சோழர்களினதும், பாண்டியர்களினதும் இலங்கை மீதான படையெடுப்புகள் சிங்கள மக்களினது வரலாற்றில் அழுத்தமான தடங்களை விட்டுசென்றிருக்கிறது. 

சில வரலாற்று நிகழ்வுகளை தருகிறேன்.

“காலத்துக்குக் காலம் தென்னிந்திய படையெடுப்புகள் இலங்கையின் மீது நிகழ்ந்தன.

அதனால் தென் இலங்கையில் படை வீரர்களும் அவர்கள் குடும்பத்தினரும் தங்கி வாழும் சூழல் ஏற்பட்டது.

கி.மு 177 இல் சேனன்,குத்திகன் என்ற இரு தமிழ்க் குதிரை வியாபாரிகள் தமிழ்ச்சேனையுடன் வந்து இலங்கையை கைப்பற்றி 20 ஆண்டுகள் ஆண்டனர்.

கி.மு 145 இல் எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கையை கைப்பற்றி 44 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளான்.

கி.மு 43 தொட்டு கி.மு 29 வரை ஐந்து தமிழ் மன்னர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆண்டுள்ளனர்.

ஶ்ரீமாறஶ்ரீவல்லபன் கி்.பி 815 அளவில் இலங்கை மீது படையெடுத்துள்ளான்.

சுந்தர சோழன் எனும் பராந்தகன், ராஜராஜசோழன் 
ஆகியோரின் ஆட்சியின் கீழ் இலங்கை இருந்துள்ளது.

கி.பி 1215 இல் கலிங்கத்து மாகன் என்பதன் 22 ஆண்டுகள் இலங்கையை தன்னாட்சியின் கீழ் வைத்திருந்தான்.”

(கலாநிதி கந்தையா குணராசா, கமலா குணராசா எழுதிய இலங்கை சுருக்க வரலாறு எனும் நூலிலிருந்து, பக்கம் 20)

•#இந்த தமிழ்நாட்டு மன்னர்களின் படையெடுப்புகளை பற்றி இலங்கையின் வரலாற்று இலக்கியங்கள் என்ன கூறுகின்றன?

“சோழப்படை இலங்கையில் இறங்கி, எதிர்ப்பட்ட கிராமங்களை அடக்கி, உருகுணை நோக்கி நகர்ந்தது. 

அங்கு கரைந்துறைந்த மகிந்தனையும், மகராணியை அவளது அனைத்து தங்க ஆபரணங்களுடனும், மகுடம், விலை மதிப்பில்லா வைரங்கள், அரச வாள், பதக்கங்கள் என்பவற்றையும் கவர்ந்து கொண்டனர். 

நாட்டிற்குள் மறைந்திருந்த மன்னனையும் சமாதான உடன்படிக்கை செய்வதாக ஏமாற்றி சிறைப்படுத்தி கொண்டனர். சிறைப்பட்ட அரசனையும் கவர்ந்த திரவியங்களையும் சோழ நாட்டிற்கு அனுப்பி வைத்தனர்” என்கிறது சூளவம்சம்”.

(கலாநிதி கந்தையா குணராசா, கமலா குணராசா எழுதிய இலங்கை சுருக்க வரலாறு எனும் நூலிலிருந்து, பக்கம் 149)

•#இலங்கையின் வரலாற்று இலக்கியங்கள் என்பது யாவை?

“இலங்கை வரலாற்றின் பனுவல்களாக #தீபவம்சம், #மகாவம்சம், #சூளவம்சம் என்பன விளங்குகின்றன. 

பாளி மொழியில் இலங்கை தீவின் அரச வம்சாவழியை முதன் முதல் விபரிக்கின்ற நூலாக தீபவம்சம் விளங்குகின்றது. 

இதனைப்பின்பற்றி கிபி 6 ஆம் நூற்றாண்டில் மகாநாமதேரர் பாளி மொழியில் மகாவம்சத்தை எழுதினார். இலங்கை வரலாற்றில் மிக முக்கியமான ஆவணமாக இப்பனுவல் கொள்ளப்படுகின்றது. விஜயனின் வருகையிலிருந்து மகாசேன மன்னனின் காலம் வரை (கிபி 303) மகாவம்சம் விபரிக்கின்றது.

37 அத்தியாயங்களை கொண்ட இந்த நூல் காவிய மரபினை தழுவியதாகவுள்ளது. அதனால் துட்டகாமினி மன்னனை பாட்டுடைத் தலைவனாக கொண்டுள்ளது. இவ்விரு நூல்களும் பௌத்த மதத்தையும் அதன் பெருமைகளையும் எடுத்தியம்புவனவாக அமைந்துள்ளன.

முக்கியமாக மகாவம்சம் இலங்கை தேரவாத பௌத்தமதம் மட்டும் சிறப்புற்றிருக்கும் ஒரு நாடு என்கின்றது.

மகாவம்சத்தின் தொடர்ச்சியாக சூளவம்சம் எழுதப்பட்டுள்ளது. இதனை தர்மகீர்த்தி தேரர் என்பவர் தொகுத்தார். இந்நூலும் பௌத்தமதத்தின் மேன்மையையும் பௌத்த மத மன்னர்களின் பெருமைகளையும் சிறப்பாக கூறுகிறது. சூளவம்சத்தின் பாட்டுடைத் தலைவனாக மகா பராக்கிரம்பாகு அமைந்தான்.

இவற்றோடு பௌத்த சாசன வரலாற்றினை விபரிக்கும் நிகாயசங்கிரஹ, ராஜாவளி , பூஜாவளி முதலியனவும் இலங்கை வரலாற்றினை தொட்டு சென்றுள்ளன்.”

(கலாநிதி கந்தையா குணராசா, கமலா குணராசா எழுதிய இலங்கை சுருக்க வரலாறு எனும் நூலிலிருந்து, பக்கம் 3)

மேலே விவரித்தவை சிங்கள மக்களின் மிக முக்கியமான வரலாற்று இலக்கியங்கள் தமிழ்நாட்டின் படையெடுப்புகள் பற்றி எத்தகைய சித்திரத்தை சிங்கள மக்களிடம் வரைந்திருக்கிறது என்பதை உங்களுக்கு காட்டும்.

தலைவர் பிரபாகரன் தனது பல மாவீரர் தின உரைகளில் ‘இலங்கை அரசின் மகாவம்ச மனநிலை’ என்ற சொல்லாடலை பயன்படுத்தியிருப்பார்.

இன்றும் ‘மகாவம்ச மனநிலை’ என்ற வார்த்தை பிரயோகத்தை பல கட்டுரைகளில் காணமுடியும்.

•#சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையின் அணுகுமுறை

பின்னாட்களில் 1948 இல், இலங்கை சுதந்திரம் பெற்றபொழுது, சிங்கள ஆட்சியாளர்களுக்கு தமிழ்நாட்டின் மீதான அச்சவுணர்வு என்பது இந்தியா மீதாக மாறியது. 

அன்றைய காலங்களில் ஆரியர்கள் வேறு தென்னிந்தியர்கள் வேறு என்ற பார்வையோ, இந்தியா என்பது பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட தமக்கிடேயே பல முரண்களை கொண்ட பல தேசிய இனங்களின் கூட்டுதொகுப்பு என்ற பார்வையோ இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்களுக்கு இருக்கவில்லை. 

இலங்கையில் சிங்கள மக்களினது வரலாற்றில் சோழர்களும்,பாண்டியர்களும் விட்டு சென்ற ஆழமான தடங்களை இந்தியாவின் தடங்களாக கருதியது. 

இதை மனதில் வைத்தே இலங்கை தனக்கான வெளியுறவு கொள்கை திட்டத்தை வகுத்தது. 

இந்தியா எனும் பெரும் நிலப்பரப்பின் செல்வாக்கிற்கு உட்பட்ட பிராந்தியத்தில் இருப்பதால், இந்தியாவை தனது இருப்புக்கான (survival ) அச்சுறுத்தலாக கருதியே இலங்கை அதனது முழு வெளியுறவு கொள்கையையும் வடிவமைத்தது.

•#இதை பல வரலாற்று நிகழ்வுகளினூடாக புரிந்து கொள்ளலாம்.

இதற்கான உதாரணம் ஒன்றை போரியல் அறிஞரான தராகி சிவராம் கட்டுரையொன்றிலிருந்து தருகிறேன்.

“Why did the Soviet Union consistently veto Ceylon's application for membership in the United Nations as a sovereign state until 1955? 

Every time Colombo made an application for membership, the Soviet Union wanted to know 'how sovereign was Ceylon'. 

Why? Independent Ceylon had handed over its sovereign right over all its "naval and air bases and ports and military establishments and the use of telecommunications facilities" to the United Kingdom in terms of a defence treaty that D. S Senanayake had signed with Britain at independence. 

It should be noted here that the treaty was first proposed by D. S Senanayake in his discussions with the Colonial Office in London in 1945. The treaty gave Britain a say over Sri Lanka's external affairs too. “

( ‘Is Sri Lanka Truly Sovereign? ‘ எனும் தலைப்பிட்ட கட்டுரையிலிருந்து - தராகி சிவராம் 04/02/2004)

தராகி சிவராமின் இந்த பந்தியை மொழிபெயர்த்தால் பின்வருமாறு வரும்.
 
ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக சேர இலங்கை முயற்சி செய்தபோது , அந்த முயற்சியை 1955 ஆம் ஆண்டுவரை சோவியத் யூனியன் அதனது ‘வீட்டோ’ வினுடாக நிராகரித்து வந்தது.

ஒவ்வொரு முறையும் இலங்கை முயலும்போது, சோவியத் யூனியன் ‘இலங்கை ஒரு இறையாண்மை அரசு அல்ல’ என்று தனது வாதத்தை முன்வைத்தது.

காரணம் இலங்கை பிரிட்டனோடு செய்து கொண்டிருந்த பாதுகாப்பு ஒப்பந்தமே (defence treaty). அந்த ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையின் கடற்படை,விமானப்படை தளங்கள்,துறைமுகங்கள் மற்றும் தொலைதொடர்பு என்பவற்றை பிரிட்டன் தனக்கு தேவையானபோது உபயோகிக்கும் அனுமதியை வழங்கியிருந்தது. இது ‘இறையாண்மை அரசு’ என்பதை கேள்விக்கு உள்ளாக்குவதாக சோவியத் யூனியன் தெரிவித்தது.

#இதில் கவனிக்கப்படவேண்டிய மிக முக்கியமான அம்சமே,இந்த பிரிட்டனுடனான இந்த Defense Treaty ஐ செய்யவேண்டும் என முன்மொழிந்ததே அன்றைய ஆட்சியாளரான D.S. சேனாநாயக்க தான்.

இந்த திட்டத்தை 1945 ஆம் ஆண்டிலேயே ( சுதந்திரத்திற்கு முன்பு) அவர் பிரிட்டனுக்கு முன்மொழிந்திருக்கிறார்.

#பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெறப்போகும் இலங்கை , அதே பிரிட்டனிடம் தமது இராணுவ தளங்களை உபயோகிக்கும் அனுமதியை தானாக ஏன் முன்வந்து வழங்கவேண்டும்?

காரணம் இந்தியாவை தனக்கான அச்சுறுத்தலாக கருதியதே.

1970 களிற்கு முன்பான இலங்கையின் இராணுவம் என்பது  இந்தியாவின் இராணுவ படையெடுப்பை எதிர்கொள்ளும் விதமாகவே வடிவமைக்கப்பட்டது.

•#இதனை தராகி சிவராம் அவர்களின் வரிகளிலேயே தருகிறேன்.

“இந்தியாவினாலேயே சுதந்திர சிறிலங்காவிற்கு இராணுவ அச்சுறுத்தல் ஏற்படுமென முதலாவது பிரதமரான டி.எஸ்.சேனாநாயக்கா அப்போது திடமாக நம்பினார். இப்படிப் பயப்படத் தேவையில்லை என இந்தியப் பிரதமர் நேரு கூறியதைக்கூட அவர் நம்பத் தயாராக இருக்கவில்லை. 

இந்தியா இலங்கைமீது படையெடுத்து அதைத் தன்னுடைய இன்னொரு மாகாணமாக இணைத்துவிடுமோ என்ற பயம் அவருக்கு. இதன் காரணமாகவே அவர் பிரித்தானியாவுடன் கூட்டுப்பாதுகாப்பு ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்டார். இதன்படி வெளிநாட்டுப் படையச்சுறுத்தல் சிறிலங்காவிற்கு ஏற்படும் பட்சத்தில் பிரித்தானியப் படைகள் அதன் உதவிக்கு வருமென உடன்பாடானது.

எனவே வெளிநாட்டுப் படையெடுப்பொன்றை எதிர்கொள்வது என்பதே புதிதாக உருவாக்கப்பட்ட சிறிலங்காப் படைகளின் செயல் நோக்கமாக வரையறுக்கப்பட்டது. 

அதாவது பிரித்தானியப் படையுதவி வந்து சேரும் வரை இந்தியப்படையெடுப்பொன்றை வரையறுக்கப்பட்ட வழிகளிலேனும் எதிர்கொள்வதெப்படி என்பதனடிப்படையில் சிறிலங்கா படையின் திட்டமிடல் அப்போது அமைந்திருந்தது.”

(“முப்படைகளுக்கும் மரபு வழி போர்த்தகைமை உண்டா?” எனும் தலைப்பிட்ட கட்டுரையிலிருந்து- தராகி சிவராம் 27/03/2005)

•#இலங்கையின் மலையக பகுதிகளில் வாழ்ந்து வந்த இந்திய தமிழர்களின் குடியுரிமையை பறித்த நிகழ்வில் கூட,  ‘இந்தியாவின் அச்சுறுத்தல்’ என்ற இலங்கை ஆட்சியாளர்களின் இந்த பார்வை பெரும் பங்கு வகித்தது எனலாம்.

“However, perceived socio-cultural links of the Estate Tamils to India gave rise to national security fears on the part of the Sri Lankan government. 

Prime Minister Kotelawala described the Indian Tamil problem as a matter of “life and death for the Sinhalese.” 

An apprehension of being swallowed up by the bigger and powerful India across the Palk Straits also underwrote the Sinhala Administration’s decision to disenfranchise the Estate Tamils. 

With the central administration of India pursuing its own monolithic nationalist ideology and curtailing minority rights, the Sinhalese feared that future Indian leaders might use the Indian Tamils as a fifth column in the island if estate workers were granted citizenship.”

(“Citizenship and statelessness in South Asia” எனும் ஆய்வு கட்டுரையிலிருந்து - Gerrard Khan)

மேலே தந்திருக்கும் வரலாற்று நிகழ்வுகள், சுதந்திரத்திற்கு பின்னரான காலங்களில் இலங்கை அதனது இருப்புக்கான அச்சுறுத்தலாக இந்தியாவை கருதியது என்பதை தெளிவாக காட்டுகின்றன.

•#பிற்காலங்களிலாவது  இலங்கையின் இந்தியா மீதான ஐயம் மாறியதா?

இல்லை என்பதே பதில். 

இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னரான உலக ஒழுங்கு அமெரிக்கா, சோவியத் யூனியன் என இரண்டாக பிரிந்தது (Bipolar World). 

70,80 களில் இந்தியா சோவியத் யூனியனுடனான உறவை வலுப்படுத்திய அதேநேரத்தில் இலங்கை அமெரிக்காவுடனான அதனது உறவை வலுப்படுத்தியது. 

அதன் ஒரு பகுதிதான் இலங்கையில் அமெரிக்காவின் Voice Of America எனும் சேவையினை அமைக்க அனுமதி தந்தது என்பவையெல்லாம். 

இதுவும் ‘இந்தியாவின் அச்சுறுத்தலை’ neutralize செய்வதற்காக இலங்கை கையாண்ட வழிமுறையே.

•1990 இற்கு #பின்னரான காலகட்டங்களில் இலங்கையின் இறையாண்மைக்கு பெரும் சவாலாக இருந்தவர்கள் விடுதலை புலிகள்.உலக ஒழுங்கின் உதவியின்றி விடுதலை புலிகளை வீழ்த்தமுடியாது என்ற போரியல் ஆற்றலை விடுதலை புலிகள் அடைந்தார்கள். 

விடுதலை புலிகளை வீழ்த்துவதற்கு இந்தியாவின் ராஜதந்திர/இராணுவ உதவிகள் கட்டாயம் தேவை என்ற நிலை இலங்கைக்கு ஏற்பட்டது. 

உலக ஒழுங்கை தமக்கு சாதகமான போக்கை கடைபிடிக்க வைப்பதற்கு இந்திய பிராந்திய வல்லரசின் பெரும் உதவி இலங்கைக்கு தேவைப்பட்டது. 

அதற்கேற்ப இலங்கை அதனது வெளியுறவு கொள்கையை நெகிழ்த்தி இந்தியாவை உள்வாங்கியது.

2009 இல் விடுதலை புலிகளின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டது. 

அதன் பின்னர் இலங்கை மீண்டும் இந்தியாவின் செல்வாக்கிலிருந்து விடுபடும் வகையில் சீனாவை உள்ளிழுத்தது. மீண்டும் இந்தியாவை neutralize செய்வதற்கான அணுகுமுறையே இலங்கையின்  சீனாவுடனான உறுதியான நெருக்கம்.

•#இந்த புள்ளியில் ஒரு கேள்வி எழும். 

இலங்கை சுதந்திரம் அடைந்த போது, இந்தியாவை தனக்கான அச்சுறுத்தலாக கருதியதற்கான  காரணங்கள் ஏற்புடையதாக இருந்தன.ஆனால் இன்றைய உலக ஒழுங்கிலும் இலங்கை இந்தியாவை தனக்கான அச்சுறுத்தலாக கருதவேண்டுமா என்ற கேள்வி எழுவது தவிர்க்கமுடியாதது.

#ஆனால் இன்றைய உலக ஒழுங்கிலும் இலங்கை, இந்தியாவை தனக்கான எதிர்நிலையில் வைத்தே அதனது வெளியுறவு கொள்கையை வடிவமைக்கிறது என்பதே யதார்த்தம்.

காரணம் நான் முன்பே கூறியதுபோல வெளியுறவு கொள்கையின் முதல் முன்னுரிமை ‘இருத்தலை’ ( survival) அல்லது தன்னுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே.

#இன்னும் எதிர்காலத்தில் தனக்கு அச்சுறுத்தலை தரக்கூடிய சாத்தியம் உள்ள நாடாக ‘இந்தியாவை மட்டுமே’ இலங்கை கருதமுடியும். 

•#அதற்கான காரணங்களை மூன்றாக வகைப்படுத்தலாம்.

1. #இலங்கையின் நிலப்பரப்பை இரு தேசிய இனங்கள் தமது வரலாற்று தாயக நிலமாக கொண்டிருக்கின்றன. ஒன்று தமிழர்கள் மற்றையது சிங்களவர்கள். 

இந்த பூர்வீக தமிழர்கள் தமிழ்நாட்டுடன் சங்ககாலத்திற்கு முன்பிருந்தே வலுவான தொடர்பை தொடர்ந்து பேணி வந்தவர்கள். 

இலங்கையில் சிங்கள மக்களின் இறையாண்மை மீதான ஏகபோக உரிமையை தமிழர்கள் இன்றுவரை கேள்விக்குட்படுத்தி வருகிறார்கள்.

இலங்கையில் தமிழர்கள் நடத்தும் எந்தவொரு போராட்டமும் தமிழகத்தில் கணிசமான உணர்வலைகளை உருவாக்குவதும் தவிர்க்கமுடியாதது.

#ஆக இரண்டு தரப்பு தமிழர்களுக்குமான இந்த உணர்வுபூர்வமான பிணைப்பை இலங்கை ஒருவித எச்சரிக்கையுடனேயே அணுகுகிறது.

இலங்கையில் தனது சிங்கள பௌத்த மேலாண்மையை கேள்விக்கு உட்படுத்தும் பூர்வீக தமிழர்களின் உறவுகள் கடலுக்கு அப்பால் வெறும் 40கிமீ தொலைவில் 8 கோடி மக்களுடன் இருப்பதை இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் ஒருவித அச்சுறுத்தலுடனேயே அணுகுகிறார்கள். 

காரணம் எதிர்காலங்களில் இந்தியா எவ்வளவு தூரம் அதனது பூர்வீக தேசிய இனங்களின் எழுச்சியை கட்டுப்படுத்தி வெற்றி காணப்போகிறது என்பதிலேயே இது பெரும்பாலும் தங்கியிருக்கின்றது. 

#ஒருவேளை இந்தியாவில் உள்ள பூர்வீக தேசிய இனங்கள் இந்திய ஒன்றியத்தை விட பலமான அதிகார மையங்களாக மாறினால் அது இலங்கைக்கு அச்சுறுத்தலாக மாறும். 

உதாரணத்திற்கு தமிழ்நாட்டு தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இந்திய ஒன்றிய அரசு அடிபணிய நேரிடலாம். 

(ஆனால் இன்னும் நூறு ஆண்டுகளில் இந்திய ஒன்றிய அரசு தனது assimilation திட்டங்களின் மூலம் சகல பூர்வீக தேசிய இனங்களினது அடையாளங்களையும் நீர்த்துபோக வைத்துவிடும் என்றே நான் கணிப்பிடுகிறேன். இது எனது தனிப்பட்ட அனுமானம். இந்த assimilation எவ்வாறு இயங்கும் என்பது தொடர்பான விரிவான பதிவொன்றை எழுதியிருக்கிறேன்)

அவ்வாறு இந்திய ஒன்றிய அரசு வெற்றிகரமாக பூர்வீக தேசிய இனங்களை நீர்த்து போகவைத்தாலும் இன்னொரு சிக்கல் இருக்கிறது. 

ஏதோ ஒரு காலத்தில் இலங்கை தனது செல்வாக்கை விட்டு மீறி போகும் பட்சத்தில், இலங்கையில் வாழும் பூர்வீக தமிழர்கள் தமிழ்நாட்டு தமிழர்களின் தொப்புள் கொடி உறவு என்பதால் இந்தியாவிற்கு அவர்களின் நலன் குறித்து அக்கறை கொள்ள தார்மீக உரிமை உள்ளது என்று காரணத்தை கற்பித்து மூக்கை நுழைத்து கொண்டே இருக்கும். 

உண்மையிலேயே இந்த காரணத்தை முன்வைத்துதான் 1980 களில் இந்தியா இலங்கையில் நுழைந்தது. இலங்கை சீன உறவு பலமடையும்போதும் இந்தியா இதே காரணத்தை முன்வைத்துதான் உள்நுழையும்.

ஆக இந்த இருவேறு பரிமாணங்களிலும் இந்தியா என்பது இலங்கைக்கு அச்சுறுத்தலாகவே இருக்கும் என்பதாகவே இதை இலங்கை கொள்கை வகுப்பாளர்கள் அணுகுகிறார்கள்.

2. #சிங்கள மக்களின் உளவியல். 

தமிழர்களின் சோழர்கள்,பாண்டியர்களின் அரசுகள் இலங்கையில் எவ்வாறு ஆதிக்கத்தை செலுத்தின என்பதை காலங்காலமாக சிங்களவர்களின் வரலாறு, அவர்களின் இதிகாசங்கள் தெளிவாக பதிவு செய்து வைத்திருக்கின்றன. 

இது சிங்களவர்களின் மனத்தில் இந்திய எதிர்ப்பு மனப்பான்மை, சந்தேகம் என்பவற்றை இயல்பாகவே விதைத்து வைத்திருக்கிறது. இந்த வரலாற்று தாக்கம் கொண்ட உளவியலில் இருந்து சிங்களவர்கள் வெளியே வரமுடியாது.

3. #மேலே சொன்ன இரண்டு வகை காரணங்களையும் நியாயபடுத்தும் வகையில் இருக்கும் புவியியல்ரீதியான இந்திய நிலப்பரப்பின் அருகாமை. 

ஆக இலங்கையின் கொள்கை வகுப்பாளர்களின் பார்வையில் வரலாற்றுரீதியாக எந்தவொரு நாடும் இலங்கைக்கு அச்சுறுத்தலாக இருந்ததில்லை இந்திய நிலப்பரப்பை தவிர.

அதனால் இலங்கை எப்பொழுதுமே இந்தியாவை தனக்கு எதிர்நிலையில் நிறுத்திதான் அதனது வெளியுறவு கொள்கையை வடிவமைக்கும். இது தவிர்க்கமுடியாதது. இதுதான் தொலைநோக்கு பார்வையில் சரியான அணுகுமுறையும் கூட.

இனி இந்த சதுரங்க ஆட்டத்தின் அடுத்த முக்கிய ஆட்டக்காரரான இந்தியா.

• #இந்தியா

இலங்கை அதனது வெளியுறவு கொள்கையை திட்டமிடும்போது இந்தியாவை எதிர்நிலையில் வைத்துத்தான் வடிவமைக்கும் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த இரகசியமல்ல. 

இது இந்தியாவின் வெளியுறவு கொள்கை வகுப்பாளர்களுக்கும் தெரிந்ததுதான்.

•#இப்பொழுது நீங்கள் உங்களை இந்தியாவின் கொள்கை வகுப்பாளராக கற்பனை செய்துகொள்ளுங்கள்.

நீங்கள் இந்திய நாட்டின் வெளியுறவு கொள்கையை வடிவமைக்கும்போதும், உங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலேயே வடிவமைப்பீர்கள். உங்களின் நலன்களை காப்பதற்கான அணுகுமுறைகளைதான் அவை கொண்டிருக்கும்.

இதைத்தான் சகல இறையாண்மை அரசுகளும் செய்கின்றன.

there are no permanent friends or enemies but permanent interests in international relations என்பதுதான் நாடுகளின் வெளியுறவு கொள்கையின் உள்ளார்ந்த தன்மை.

இந்த யதார்த்தத்தின்படி அணுகினால், இலங்கையில் நடந்த விடுதலை புலிகளின் ஆயுதப்போராட்டத்தை எடுத்துகொண்டாலும், இந்தியா அதை ஆதரிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.

இந்த ஆயுதபோராட்டத்தை ஒட்டுமொத்த தமிழ்நாட்டு தமிழர்கள் ஆதரித்தாலும், இந்திய ஒன்றிய அரசு அதனது நலனை ( National Interest) மட்டுமே கருத்தில் கொண்டுதான் செயல்படமுடியும். 

•#ஆனால் இங்கு மிக முக்கிய கேள்வி எழுகிறது.

இந்திய நலன்களை குறிக்கோளாக வைத்து வடிவமைக்கப்பட்ட இந்திய வெளியுறவு கொள்கையின் பார்வையில் இலங்கையுடன் அது நட்பாக அணுகவேண்டுமா அல்லது இலங்கையை எதிர்திலையில் வைத்து அணுகவேண்டுமா என்பதுதான் அந்த கேள்வி.

•#மேலே கூறியபடி நீங்கள் இந்தியாவின் கொள்கை வகுப்பாளராக இருந்தால் இலங்கையை எவ்வாறு அணுகுவீர்கள்?

இலங்கை எனும் நாடு அதனது வரலாற்று பார்வையில் இந்தியாவை சந்தேகத்துடனேயே அணுகுகிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரிகிறது. 

நீங்கள் என்னதான் நல்லெண்ண முயற்சிகளை எடுத்தாலும், இந்திய நாட்டின் செல்வாக்கை neutralize செய்வதற்கான அணுகுமுறையையே கையாளுகிறது என்பதை சுதந்திரத்திற்கு பின்னரான அதனது ராஜதந்திர நகர்வுகள் தெளிவாக காட்டுகின்றன.

அதேநேரம் மறுமுனையில் இலங்கையின் நிலப்பரப்பில் தமக்கென ஒரு தேசம் அமைக்க தமிழர்கள் ஆயுதப்போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் தமிழர்களுக்கென ஒரு இறையாண்மை அரசை நிறுவ முயற்சிக்கிறார்கள்.

#எந்த வரலாற்று காரணம் சிங்கள மக்களுக்கு, இந்தியாவை எதிர்நிலையில் வைத்து சந்தேகத்துடன் பார்க்கும் உளவியலை தந்ததோ அதேபோல் இன்னொரு வரலாற்று காரணம் ஈழத்தமிழர்களுக்கு இந்தியாவை நட்புடன் பார்க்கும் உளவியலை தந்திருக்கிறது.

அந்த வரலாற்று காரணம்தான் சங்ககாலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கும் ஈழத்திற்கும் இருக்கும் மொழி,இன,வாழ்வியல் பண்பாடுகள், வணிகம் என்பவையோடு தொடர்புடைய மிக நெருக்கமான பிணைப்பு.

இத்தகைய பின்புலத்தில் வைத்து பார்க்கும்போது, இலங்கையில் உங்களுக்கு நட்பான தமிழர் இறையாண்மையுள்ள தேசம் உருவாகுவதற்கான நகர்வுகளையே நீங்கள் செய்யவேண்டும். அதுதான் உங்களின் தொலைநோக்கு பார்வையில் சரியான ராஜதந்திர நகர்வாக இருக்கமுடியும்.

இலங்கை விடயத்தில் இந்தியாவிற்கு அந்த சிரமம் கூட இருக்கவில்லை. விடுதலைபுலிகள் தமது ஆயுத போராட்டத்தின் ஊடாக தமக்கான தமிழர் இறையாண்மை தேசத்தை அமைப்பதில் வெற்றிக்கு மிக அருகில் வந்திருந்தார்கள். அவர்களுக்கு தேவையாக இருந்தது உலக ஒழுங்கின் அங்கீகாரம் மட்டுமே.

• #சரி. இலங்கை எப்பொழுதும் அதனது வெளியுறவு கொள்கையை இந்தியாவை எதிர்நிலையில் வைத்துதான் வடிவமைக்கும் என்பது இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கும் தெரியும் என மேலே குறிப்பிட்டிருந்தேன்.

இது தெரிந்தும் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் ஏன் “தமிழீழத்திற்கு எதிரான” அணுகுமுறையை மேற்கொள்கிறார்கள் என்ற அடுத்த கேள்வி எழுகிறது.

•#பொதுவாக இந்திய ராஜதந்திர வட்டத்தில் “தமிழீழத்திற்கு எதிரான” அணுகுமுறைக்கு சில காரணங்கள் சொல்லப்படுகின்றன.

1.முதலாவது இந்திய பெருங்கடலில் உள்ள அண்டைய நாடுகளை இந்தியா தனது sphere of influence இல் வைத்திருக்க விரும்புகிறது.

ஆனால் இந்த நாடுகளில் பிரிவினைவாதத்தை இந்தியா ஆதரித்தால், அவைகள் இந்திய எதிர்ப்பு மனநிலையிலேயே இருக்கும். அப்படி இருந்தால் இந்தியாவினால் தனது செல்வாக்கை பிரயோகிக்க முடியாமல் போகும்.

2.அண்டைய நாடுகளில் தனிநாட்டுக்காக போராடும் இயக்கங்களை ஆதரித்தால், இந்தியாவில் தனிநாடு கேட்டு போராடும் கோரிக்கைகள் வலுப்பெறும்.

இந்த இரண்டு காரணங்களுமே புவிசார் நலன் அரசியல் பார்வையில் சரியானவையே.

ஆனால் இந்தியா முன்வைக்கும் இந்த இரண்டு காரணங்களுடன் , இந்தியாவே முரண்படுகின்றது.

• #எப்படி இந்தியா இந்த இரண்டு காரணங்களுடன் முரண்படுகின்றது?

மூன்று உதாரணங்களை சுருக்கமாக தருகிறேன்.

1. 1971 இல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போர் கிழக்கு பாகிஸ்தான் எனும் பகுதி பங்களாதேசம் எனும் புதிய இறையாண்மை உள்ள நாடாக உருவாவதற்கு வழிவகுத்தது.

2. பாகிஸ்தானில் பலுசிஸ்தான் (Balochistan) தனிநாட்டுக்காக போராடும் போராளிகளை இந்தியா இன்றுவரை ஆதரித்து கொண்டிருக்கிறது.

இந்தியா எப்படி பாகிஸ்தானில் ‘பலுசிஸ்தான்’ எனும் தனிநாடு கேட்டு போராடும் போராளிகளுக்கு ஆயுதங்கள்,பயிற்சி என்பவற்றை வழங்குகின்றது என்பதை Ashok Swain எழுதிய “India must remember that Balochistan is not Bangladesh” எனும் கட்டுரை பின்வருமாறு விவரிக்கின்றது.

“It is no secret that India has been supporting the separatists in Balochistan in their fight again Pakistani military without openly admitting it. 

Baloch activists have repeatedly admitted of receiving India’s ‘moral’ support and a representative of Balochistan Liberation Organization (BLO) has been living in New Delhi since 2009 . 

Pakistan has been regularly accusing India for using its consulates in Jalalabad and Kandahar to fund, train and arm Baloch militants. 

A decade back, senior officials of Pakistan had even alleged that 600 Baloch tribals were being trained by India’s Research and Analysis Wing (RAW) in Afghanistan to handle explosives, engineer bomb blasts, and use sophisticated weapons.

(Ashok Swain is Professor of Peace and Conflict Research at Uppsala University, Sweden.)

• சீனாவின் திபெத்

2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில்தான் இந்தியா ‘திபெத்தினை’ சீனாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்தது. அதற்கு பதிலாக சீனாவும் சிக்கிமை இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்தது.

After Prime Minister Atal Bihari Vajpayee visit to China in June 2003, a joint declaration was signed in which India recognised that "the Tibet Autonomous Region is part of the territory of the People's Republic of China".

In Chinese view, this meant that India had, for "the first time", officially recognised Tibet as "part of China".

Some Indian and western commentators interpret it to mean that India had recognised China's "sovereignty" over Tibet.

In return China, over a period of time, incrementally took steps to acknowledge India's sovereignty over Sikkim.”

• இதன் பொருள் என்ன?

இந்தியா தமிழீழத்திற்கு எதிரான அதனது அணுகுமுறைக்கு சொல்லிய இரண்டு காரணங்களுடன் இந்தியாவே மேலே நான் கூறிய பங்களாதேசம், பலுசிஸ்தான், திபெத் விடயங்களில் முரண்பட்டிருக்கிறது.

• ஆக தமிழீழம் உருவாவதில் இதை தாண்டிய வேறொரு சிக்கல் இருக்கிறது.

இலங்கை தனது வெளியுறவு கொள்கையை இந்தியாவை எதிர்நிலையாக நிறுத்தித்தான் வடிவமைக்கும் என உறுதியாக தெரிந்தும் தமிழீழத்தை இந்தியா எதிர்ப்பதன் காரணம்  என்ன?

 அந்த காரணம் தமிழ்நாடு.

இதற்கான விடை இந்திய  நிலப்பரப்பின் வரலாற்றில் இருக்கிறது.

இந்திய நிலப்பரப்பின் மிக மூத்த குடிகள் தமிழர்கள். 

அதை நிருபிக்கும் வகையில் சிந்து சமவெளி நாகரீகம் தமிழர்களோடுதான் பெரும்பாலும் பொருந்தி போகிறது  என்பது போன்ற வரலாற்று உண்மைகளை இந்திய ஒன்றிய அரசு மனதிற்குள் ரசிக்கவில்லை என்பதை எம்மால் தெளிவாக உணரமுடிகிறது. அல்லது வட இந்தியர்கள் ரசிக்கவில்லை அல்லது மற்றைய தென்னிந்திய திராவிட மாநிலங்களும் சேர்ந்து ரசிக்கவில்லை என்பதாக கூட பொருள் கொள்ளலாம்.

ஏதோ ஒரு வகையில் தமிழர்களின் வரலாறு இந்திய தேசியத்தின் assimilation முயற்சிக்கு ஒவ்வாததாக இருக்கிறது. 

அதனாலேயே தமிழர் இனத்திற்கு என ஒரு தனி இறையாண்மையுள்ள தேசம் அமைந்துவிடக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்கிறது.

• வாயால் வடை சுட்ட திராவிட தலைவர்கள் திராவிட நாடு கோரிக்கை வைத்த கதை நமக்கு தெரியும். அவர்கள் திராவிட நாடு கோரிக்கை முன்வைத்தது 50,60 களில்.

ஆனால் 1971 இல் பங்களாதேசம் உருவாவதற்கு இந்தியா போர் நடத்தியபோது, தமிழ்நாட்டில் பிரிவினைவாத உணர்வு தலைதூக்கும் என இந்தியா கருதவில்லை.

ஆனால் தமிழீழம் உருவாகும்போது தமிழ்நாட்டில் பிரிவினைவாத உணர்வு தலைதூக்கும் என இந்தியா கருதுகிறது.

• #போரியல்ரீதியாக இதை விளக்கலாம்

தமிழ்நாடு, தமிழீழம் என்ற இரண்டு வரலாற்றுரீதியான தாயக நிலப்பரப்பில் எது முதலில் தனி இறையாண்மையுள்ள அரசாக மாறினாலும் மற்றையது இறையாண்மையுள்ள அரசாக மாறுவதற்கான சாத்தியம் அதிகரிக்கும்.

உதாரணத்திற்கு தமிழ்நாடு முதலில் தனி நாடாக மாறினால் தமிழீழம் தனிநாடாக மாறுவதற்கான போரியல்ரீதியான அனுகூலம் கிடைக்கும். காரணம் தமிழ்நாடு எனும் இறையாண்மையுள்ள அரசின் ஆதரவு.

அதேபோல தமிழீழம் முதலில் தனிநாடாக மாறினாலும் தமிழ்நாடு தனிநாடாக மாறுவதற்கான போரியல்ரீதியான அனுகூலம் உருவாகும். காரணம் தமிழீழம் எனும் இறையாண்மையுள்ள அரசின் ஆதரவு.

• #ஆக மேலேயுள்ள பந்தியை இதுவரை வாசித்து வந்தீர்களேயானால் இந்தியா ஏன் தமிழீழத்தை  ஆதரிக்காது என்பதற்கான புவிசார் நலன் அரசியல், போரியல், வரலாற்று பார்வையிலான காரணங்களை வலுவாக வைத்திருக்கிறேன்.

இனிவரும் காலங்களில் சீன-அமெரிக்க மோதல் இறுக்கமடையும்போது மட்டுமே தமிழீழம் உருவாவதற்கான ஒரு ‘சிறு’ வாய்ப்பு உருவாகும். இதைப்பற்றி ‘சீன-அமெரிக்க மோதலும் தமிழீழத்திற்கான திறவுகோலும்’ என்ற தலைப்பில் முன்னர் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறேன்.

இதை தவிர்த்து இந்தியா தமிழீழம் உருவாவவதை விரும்பாது.

• #இந்தியா தமிழீழம் உருவாவதை ஏன் விரும்பாது என்று தமிழ் மக்கள் ஆழமாக புரிந்து வைத்திருப்பது அவசியம்.

இல்லாவிடில் பலவிதமான கட்டு கதைகள் நம்மிலே புழக்கத்திலே இருந்து கொண்டிருக்கும்.

• அதில் ஒன்றுதான் இந்திய கொள்கை வகுப்பாளர்களில் மலையாளிகளின் ஆதிக்கம் அதிகம் என்பது போன்ற சதிக்கோட்பாடு. அதை நிருபிக்கும் வகையில் 80 களிலிருந்து இன்றுவரை இருந்த மலையாளிகளின் பெயர்களை முன்வைக்கிறார்கள்.

ஆனால் இதை வெறுமனே மலையாளிகளின் ஆதிக்கத்தினால் நிகழ்ந்த தவறான அணுகுமுறையாக என்னால் கருதமுடியவில்லை. 

இந்திய கொள்கை வகுப்பாளர்களில் மற்றைய தேசிய இனங்கள் இருந்தபோதும் இந்தியா இதே ‘தமிழீழத்திற்கு எதிரான’ அணுகுமுறையைதான் கொண்டிருந்தது.

• அதேபோல் இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் தமிழீழம் உருவாக அனுமதித்திருப்பார் என்பது போன்ற அபத்தமான வாதங்களும் அவ்வப்போது எழுவதுண்டு. இதுவும் தவறான வாதமே.

• அடுத்த பிரபலமான கட்டுக்கதை ராஜீவ்காந்தி அரசியல் கொலை. ராஜீவ்காந்தி அரசியல் கொலை நிகழ்ந்திராவிட்டாலும், தமிழீழத்தை இந்தியா ஆதரித்திருக்க போவதில்லை.

#அடுத்தது 26 வருடங்களாக இந்த சதுரங்க ஆட்டத்தின் போக்கை தீர்மானித்த மிக முக்கிய ஆட்டக்காரர்களான விடுதலைபுலிகள்

• #விடுதலை புலிகள்

எவ்வாறு இறையாண்மையுள்ள அரசுகள் there are no permanent friends or enemies but permanent interests in international relations  என்ற விதியின்படி இயங்குகின்றனவோ, அதே விதியின் படிதான் விடுதலை புலிகளும் தங்கள் போராட்டத்தை நடத்தினார்கள்.

#இந்திய நாடு அதனது நலனை முன்னிறுத்தி தமிழீழம் அமையக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தால், தமிழர்களுக்கு என்று இறையாண்மையுள்ள அரசு வேண்டும் என்பதில் தலைவர் பிரபாகரன் உறுதியாக இருந்தார்.

தமிழர்களுக்கு என தனித்த இறையாண்மையுள்ள அரசு தேவை என்பதை தலைவர் பிரபாகரன் உறுதியாக நம்பினார்.

#தேவையா அல்லது தேவையில்லையா என்பதுதான் கேள்வி. 

தேவை என்று முடிவாகிய பின் இலக்கை நோக்கி நகர்வதுதான் அடுத்த வேலை.

அதைத்தான் தலைவர் பிரபாகரன் செய்தார்.

தமது போராட்டத்தின் இலக்கை அடைவதற்கு புவிசார் நலன் அரசியல்/ராஜதந்திர/போரியல் ரீதியில் எந்த நகர்வுகளை செய்யவேண்டுமோ அதை தலைவர் பிரபாகரன் செய்தார்.

க.ஜெயகாந்த்