Saturday 31 January 2015

கரும்புலி மேஜர் குமுதன்

உளப்பலத்தால் உழைத்தவன் கரும்புலி மேஜர் குமுதன்

Bt Maj-Kumuthan
கரும்புலி ஆவதற்குமுன் : ஆகாய கடல்வெளிப் பெருஞ்சமர் , மின்னல் இராணுவ நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதல் , ஓயாத அலைகள் 01 இல் அலம்பில் பகுதியில் தரையிறங்கிய விசேட அதிரடிப்படையினர் மீதான் தாக்குதல் , சத்ஜெய 1 – 2 போன்ற இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர் நடவடிக்கைகளும்….
கரும்புலி ஆகியபின் :தாண்டிகுள இராணுவத்தளம் மீதான தாக்குதல் , மணவாளன் பட்ட முறிப்பில் உலங்குவானூர்த்தி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்.
இவர் பெற்ற சிறப்புப் பயிற்சிகள் : 50 கலிபர் கனரக ஆயுதப்பயிற்சி , 203 பயிற்சி மெய்ப்பாதுகாவலர் பயிற்சி , கரும்புலி அணிக்குரிய சிறப்புப்பயிற்சி.
அந்த நிகழ்வுகளில் இருந்து குமுதனின் நினைவுகளை பிரிக்க முடியாததாய் இருந்தது….
இப்போதெல்லாம் அவனது சுபாவம் அந்த நினைவுகாளைத் தழுவியதாகவே வந்து போனது. அதே நினைவுகள் தான் குமுதனின் கண்களையும் நெஞ்சையும் நினைத்துக் கொண்டிருந்தன.
வெட்டையும் திட்டுத்திட்டாக வளர்த்திருக்கும் சிறு பற்றைகளும் நிறைந்து பறந்து விரிந்த அந்தப் பிரதேசத்தின் நெஞ்சைக் கிழிப்பதைப்போல கிளிநொச்சி நகரினை நோக்கி இராணுவம் முன்னேறிக்கொண்டிருந்தது.
பெரிய இராணுவ நகர்வை எதிர்த்து நேருக்குநேர் சமரிட்டுக் கொண்டிருந்த எமது தாக்குதல் அணியின் ஒரு பிளட்டூன் அணித்தலைவனாக குமுதனும் நின்று சமரிட்டுக் கொண்டிருந்தான்.
ஒவ்வொரு அங்குல நிலத்தையும் இராணுவ பாதங்கள் மிதக்கின்றபோதும் அவனிற்குள்ளேயே எரிந்த ஆவேச நெருப்பால் கண்ணிலும் குரலிலும் இடையிடையே பொறி பறிந்தது.
இதே தாக்குல் அணியுடன் சற்று நாட்ட்களுக்கு முன் அலம்பில் பகுதியில் தரையிறங்கிய சிறப்புப் படையினரை எதிர்த்து சண்டையிட்டு இராணுவம் நினைத்து வந்த இலக்கி எட்டவிடாது தடுத்ததில் பங்கெடுத்தவன் குமுதன்.
தாக்குதல் அணியின் பிளட்டூன் உதவி அணித்தலைவராக நின்றாலும் சண்டை உக்கிரம் அடைந்து சென்றபோது ஒரு பகுதி முழுவதற்குமான கட்டளைகளை அவனே வழங்கவேண்டியிருன்தது.
அதிகப்பேர் விழுப்புண்பட்டு வீரச்சாவடைந்து போனமையாலும் அணியின் ஆட்தொகையில் பெரும் சரிவு ஏற்ப்பட்டிருந்தது. அந்த இறுக்கம் நிறைந்த சூழலிலும் இருக்கும் உறுப்பினர்களை ஒழுங்குபடுத்தி எதிரி முன்னேறாதவாறு மறிப்புப் போட்டு விட்டு காயக்காரரையும் – வீரச்சாவு அடைந்தவர்களையும் பின்னுக்கு அனுப்பினான்.
இதுவரைக்கும் தன தோள்பட்டையில் , பாய்ந்திருக்கும் குண்டைப்பற்றியோ அல்லது அவனின் மேல்ச்சட்டையையும் மீறிப் பாய்கின்ற குருதியைப் பற்றியோ கவனிக்கவில்லை. அவனது சிந்தனையும் செயல்களும் இராணுவத்தின் நோக்கத்தையும் எப்படியும் முறியடித்துவிட வேண்டுமே என்று துடித்துக் கொண்டிருந்தன.
அதுபோன்றதொரு துடிப்பு நெஞ்சில் கனன்று கொண்டிருக்கவே தத்ஜய எதிர்ச்சமர்க் களத்திலும் அவன் சுழன்றுகொண்டிருந்தான்.
” அண்ணா என்ங்களிற்கு கிட்டவா ராஞ்கி வந்திட்டுது “ குமுதனுக்கு பக்கவாட்டாக இருந்த காவலரணில் இருந்தவன் நிலமையி குமுதனிற்குத் தெரியப்படுத்தினான்.
மரஞ்செடிகளைப் போல உருமாற்றம் செய்து நகர்ந்துகொண்டிருந்த கவசவாகனங்கள் சிறுபற்றைகளை நெரித்து பெரிய புகைமண்டலங்க்களை உருவாக்கியபடி காவலரணிற்கு மிக அண்மையாக வந்து நின்றது. ” அங்காலப் பக்கத்தால் டாங்கிகள் வந்து முட்டினானாம். நீங்கள் அங்க பொய் அதை மறியுங்கோ , கவனம் மறைப்பெடுத்துப்போங்கோ. ”
குமுதன் சொல்லி முடிக்கின்ற போது அவனது கட்டளைக்ளுக்காகவே காத்திருந்த இரண்டு ராங்கி எதிர்ப்பு வீரர்களின் கண்களிலும் வேகம் பிறப்பெடுத்தது. சண்டை எல்லா இடங்களிலும் பெரும் முழக்கமிட்டு தொடர்ந்துகொண்டிருந்தார்கள்.
ஆனாலும் எதிரியின் சூட்டு வலுவினால் அந்தப் பிரதேசம் முழுவதும் வலைகளாக ரவைகள் பொழியப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த வலைபின்னளுக்குள்ளேயே இரண்டு கவச எதிர்ப்புப் போராளிகளும் சிக்கிக்கொண்டனர்.
குமுதன் இறுதியாகப் பார்த்து விடைகொடுத்தனுப்பிய இரண்டு இளைய வீரர்களுமே வித்துடல்களைக்கூட பார்க்கமுடியாதளவு உடல் சிதைந்துபோய் இருந்தார்கள்.
அந்த நிகழ்வைக் கண்டபின்னர் குமுதனது கண்கள் அதையே சொந்தமாகக் கொண்டன. கண்களால் கண்டு பதிந்துகொண்ட அந்த நிகழ்வுகளை எண்ணுகின்ற போதெல்லாம் நெஞ்சு பெரிதாக வலிக்கிறது.
மற்றவர்களின் துன்பத்தைக்கண்டு தாங்கிக்கொள்ள முடியாத அவனிற்கு அவனது நெஞ்சில் ஆழமாக பதிந்த நிகழ்வுகள் ஆறாத தழும்புகளாய் இருந்தன.
அந்தப் பெருஞ்சமர் ஓய்ந்தபோதும் குமுதனின் மனம் ஓயவில்லை. தனியொரு நெஞ்சிற்குள் மட்டும் எத்தனயோ சமர் அரங்குகள் திறக்கபட்டன.
முடிவில்லாது குமுறிக்கொண்டிருந்த குமுதனின் கண்களில் புதியதான வடிவம் ஒன்றின் வாசல் முளைத்துவிட்டது. குமுதன் தனக்குள்ளேயே எரிந்துகொண்டிருக்கும் பெரிய இலட்சிய நெருப்போடுதான் ” கரும்புலிகள் “ அணியிற்குள் தன்னை இணைத்துக் கொண்டான்.
அங்கு அவனை எதிர்கொள்ளவிருந்த சவால்களோ ஏராளம்.
” இனியென்னன்று குமுதன் அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கப்போகின்றான். சாதாரண மனித வலுவுடையவர்களே செய்ய சிரமப்படும் அந்த கரும்புலிகள் அணிப்பயிற்சியை குமுதன் செய்து முடிபானா…? ”
ஆச்சரியத்தால் உயர்ந்த புருவங்களை உயர வைத்தபடியே அதிசயிக்க வைத்தான்.
ஒருபோராளி தன்னைக் கரும்புலி அணியில் சேர்த்துக் கொள்ளப்போகிறான் என்றால் அவனைப்பற்றிய அடிப்படையான சில தகுதிகளைப் பரிசோதிப்பதுண்டு. அது போலவே குமுதனும் தன்னைக் கரும்புலிகள் அணியில் சேர்த்துக்கொண்டபோது அவனைப்பற்றிய தகுதிகள் பார்க்கப்பட்டன.
ஒரு போராளி கரும்புலிகள் அணியில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டுமாயின் அவர் இரண்டு வருடங்கள் இயக்கம் வழங்கிய பணிகளைச் சரிவரச் செய்து முடித்திருக்க வேண்டும்.
குமுதனைப் பொருத்தவரை ஐந்து வருடங்களுக்கு மேலாக இயக்கம் வழங்கிய கடமைகளை இயக்கம் எதிர்பார்ப்பது போல செய்து முடித்தவன். எனவே அதில் அவனிற்கு தடையிருக்கவில்லை.
குறிப்பிட்ட நேரத்திற்குள் குறித்த சில பயிற்சிகளை செய்து முடிக்கும் உடற்தகுதி பெற்றவரா என்றார் அகேல்விக்கும் அவன் இதுவரை பெற்ற பயிற்சிகள் விடைபகிர்ந்ததன. குமுதன் இயக்கத்திற்கு வந்ததிலிருந்து எந்தப் பயிற்சியிலும் விட்டுக்கொடுத்ததில்லை. எப்படியான பயிற்சி என்றாலும் செய்து முடிக்கக்கூடியவன்., இதுவரை 50 கலிபர் பயிற்சி , சிறப்பு அதிரடிப்படை பயிற்சி போன்றன பெற்றிருக்கிறான். எனவே அதிலும் சிக்கல் இருக்கவில்லை. ஆனால் அடுத்து வந்த மருத்துவ பரிசோதனைதான் நிறையப்பேரிற்கு அதிர்ச்சி தருவதாக இருந்தது. இதுவரை தனக்குள்ளே மறைத்து வைத்திருந்த நோய் அப்போதுதான் வெளித்தெரிய வந்தது. ஆனால் இதுவரை எந்தச் சர்ந்தப்பத்திலும் அவன் தன நோயினை வெளிக்காட்ட்யதே இல்லை.
குமுதனிற்கு இருக்கும் இதய நோயையும் தொய்வுநோயையும் மருத்துவ பரிசோதனை மூலம் அறிந்துகொண்டபோது , அவனைக் கரும்புலிகள் அணியில் செர்த்துக்கொல்வதர்க்கான அனுமதி மறுக்கப்பட்டது.
குமுதனோ விடுகின்றபாடில்லை. ஒரேபிடியாகத் தன்னைக் கரும்புலிகள் அணியில் இணைத்துக்கொள்ளுமாறு வேண்டினான்.
” அண்ணை தேர்வுப் பயிற்சி வரைக்கும் எண்டாலும் விடுங்கோ , நான் அதில என்னால முடியுமென்று நிருபித்துக்காட்டிறன். “ என்று கேஞ்சுதலான குரலில் உறுதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனது இலட்சிய தாகம் முழுவதையும் தனது குரலில் பரவவிட்டான்.
அவனின் உருதிகுளையாத தன்மை வீனாகவில்ல்லை. தேர்வுப் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டது. அதில் குமுதணும் ஒருவனாக இருந்தான்.
தேர்வுப்பயிற்சி நிறைவேறும்போது அனைத்துப் பயிற்சிகளும் சித்தி பெற்று தனது இலட்சியத்திற்கு நோய் இடையூறு இல்லை என நிரூபித்தான்.
இப்படி தேசத்திர்க்காகத் தான் வரித்துக்கொண்ட கொள்கையில் உறுதியான குமுத்ஹன் தான் இப்போ ஆணையிரவுப்பெருந்தளத்தினுள் நூலைந்த கரும்புலிகள் அணியிற்கு தலைமைதாங்கி இலக்கை நெருங்கிக்கொண்டிருந்தான். இன்னும் சில் வினாடிகளைக் காலம் வேகமாக விழுங்கிக்கொள்ளுமாயின் அங்கே இருளாய் , அமைதியாய் நிலைத்திருக்கும் சூழ்நிலை மாறி புதிய சமர்க்களம் உருவாகும்.
அந்த ஓரிரு கண நேரத்திற்க்காகவே காலமும் , கரும்புலியணி வீரர்களின் கால்களும் முன்னோக்கி வேகமாக நிதானமுடன் நகர்ந்துகொண்டிருந்ததன. நினைவுகள் மட்டும் பின்னோக்கி விரையத்தொடங்கின.
கரும்புலிகள் பயிற்சி முடிய தாண்டிக்குளம் சண்டைக்குச் சென்று , அங்கு விழுப்புண்பட்டமையால் தாக்குதலில் பங்குபெறாது பின்னிற்கு வந்ததும் பின் விழுப்புண் குணமடைய மணவாளன்பட்டமுறிப்புச் சண்டையிர்க்குச் சென்றது என்று எல்லா நிகழ்வுகளும் நினைவுகள் தடம் பதிக்கத் தொடங்கியது.
அதிலும் மணவாளன்பட்டமுறிப்புத் தாக்குதல் வந்ததும் நினைவுகள் அதைவிட்டு நகரவேயில்லை.
எதிரி கைப்பற்றிவைத்திருக்கும் இராணுவப் பிரதேசத்திற்குள் தான் அவர்களிற்கான இலக்கு. அதுவும் அதியுயர் பாதுகாப்புவலையம் எனக் கருதி அங்கேயே அந்த உலங்குவானூர்த்தி தரையிறங்கி ஏறியது. அந்த உலங்குவானூர்த்தியைத் தாக்கி அழிப்பதே தாக்குதல் அணியின் நோக்கமாகவிருந்தது.
கொமாண்டோப்பாணியில் சென்று இலக்கைத் தாக்குவது , அடு சாத்தியப்படாவிட்டால் கரும்புலித்தாக்குதல் மூலமாவது அந்த இலக்கை அழித்துவிட வேண்டும் என்பதற்காகவே கரும்புலி வீரர்கள் அந்தத் தாக்குதலுக்குத் தெரிவு செய்யப்பட்டு இருந்தார்கள்.
அதுவோ மிகவும் வித்தியாசமான இலக்கு. முந்திட்டமிடலோ மாதிரிப் பயிற்சியோ இல்லாது இலக்கைச் சென்றடைந்து அதைப்பார்ந்து அங்கு நிலவும் களச் சூழ்நிலைக்கேற்ப அணித் தலைவரே முடிவெடுத்துச் செயற்ப்படவேண்டும். அதனால் அந்தக் கரும்புலிகள் அணியிற்கு குமுதனே தலைமைதாங்கிச் சென்றிருந்தான்.
தலைவரிற்கு குமுதனின் வழிநடத்தலில் அதிக நம்பிக்கையிருந்தது. ஏனென்றால் குமுதன் மெய்ப்பாதுகாப்புப் பணியேற்று தலைவருடன் நெருங்கி நின்ற நாட்களில் எல்லாம் அவனது ஒவ்வொரு அசைவையும் தலைவர் நேரே கவனித்தார்.
அப்போது அவனிற்குள் இருக்கும் வழி நடத்தும் ஆர்ராலை தலைவர் நன்கு அறிந்திருந்தார். எனவேதான் இத்தாக்குதல் அணியை அவன் தலைமையிலேயே அனுப்பிவைத்தார். இலக்கினை நோக்கி கரும்புலிகள் அணி நகர ஆரம்பித்த கொஞ்ச நேரத்திற்குள் எல்லாம் வானம் பிரிந்து விட்டதைப்போல மழை வாரி பொழிந்துகொண்டிருந்தது.
உடையோடு சேர்ந்து நனைந்து போயிருக்கும் உடலுக்குள்ளால் ஊசிபோல உள்நுழையும் குளிர் உடலின் ஒவ்வொரு காலத்தையும் நடுங்கவைத்தது.
தறியில் சாய்ந்துகொள்ளவோ , இருக்கவோ முடியாது. ஒரே சேரும் தண்ணீரும் நிறைந்திருந்தன. பெநிகளிலும் பைகளிலும் அடைக்கப்பட்ட உணவுகளைத் தவிர வேறொரு சூடான , உணவுவகைகளும் இல்லை. இவ்வாறு சிக்கல் நிறைந்த சூழலில் தான் குமுதநிர்க்குள் மறைந்திருந்த அந்த நோய் வரத்தொடங்கியது.
குமுதனால் ஒரு மூச்சுக்கூட சிரமம் இன்றி விட முடியவில்லை. ஒவ்வொரு மூச்சையும் உ இழுத்து வெளிவிடுவதற்க்கு ஒரு போராட்டமே நடத்தவேண்டியிருந்தது. குந்தியிருந்தான். குனிந்து நின்றான். கைகளை தலைக்கு மேல் உயர்த்தினான். இப்படி ஒவ்வொரு மூச்சிற்கும் சிரமப்பட்டாலும் தனக்கு இந்த நேரம் வந்த நோய் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்று பெரும் சிரமத்தின் மத்தியிலும் அதைத் தனக்குள்ளேயே மறக்கமுயன்றான்.
இந்த நேரத்தில் தன்னைப்பற்றியோ தனது வருத்தத்தைப் பற்றியோ சிந்திப்பவனாக இல்லை. அவனது நெஞ்சிற்குள் கதைத்ததெல்லாம் அந்த இலக்கை எப்படியும் அழித்துவிட வேண்டும் என்பதே.
இத்தனை சிரமங்களையும் பொருட்படுத்தாது இலக்கை அழித்த்விட வேண்டும் என்பதை மட்டுமே சுமந்து அந்த இலக்கை ழித்துவிட்டு வரும்வரையும் தனது நோயினைப்பற்றி யாருடனும் கதைக்கவேயில்லை. பின் மெல்ல மெல்ல கதை. தெரியவந்தபோது அவனது உறுதியும் தாயகப்பற்றும் பளிச்சென்று வெளித்தெரிந்தது.
ஆனையிறவு தளத்திற்குள் தாக்குதல் ஆரம்பிக்கும் நேரம்வரை காத்திருந்த கரும்புலிகளை அதற்க்கான நேரம் அண்மிக்கக் குமுதனின் கட்டளையோடு தாக்குதல் ஆரம்பமானது.
இடியும் – மின்னலும் தரையிலிருந்து பிரப்பெடுப்பதைப்போல சத்தமும் தீச்சுவாலைக்களும் மண்ணில் எல்லா முனைகளிலும் இருந்தும் எழுந்தது.
அமைதியும் இருளும் கருக்கலைய ஆனையிறவுப்படைத்தளத்தின் மையத்தளம் புதிய சமரரங்காய் கருவூற்றிருந்தது.
கண்ணில் தெரியும் கறுப்பு உருவங்கள் எல்லாம் தங்கள் எதிரிகள் என்று இருட்டில் எல்லா இடங்களிலும் இராணுவம் சுட்டுக்கொண்டிருந்தது.
தாக்குதல் ஆரம்பித்த சில கணங்களுக்குள் கரும்புலிகள் அணி அவர்களிற்கு வழங்கப்பட்ட இலக்குகளை அழித்துவிட்டு திட்டத்தின்படி பின்வாங்கிக்கொண்டிருந்தார்கள்.
இந்த வேளையில்த்தான் குமுதன் விழுப்புண் அடைகின்றான். அவன் விழுப்புண் அடைந்தாலும் நிதானத்தை இன்னும் இழந்துவிடவில்லை. களநிலைமைகளுக்கு ஏற்றதுபோல் கட்டளைகளை வழங்கிக்கொண்டிருந்தான்.
இப்போதெல்லாம் குமுதன் இன்னும் ஒரு தோழனின் கைத்தாங்குதலிலேயே பின்னிற்கு நகர்ந்துகொண்டிருந்தான். சிறிது நேரத்தில் குமுதனைக் கைத்தாங்குதலாகத் வந்த தோழனும் விழுப்புண் அடைந்துவிடுகின்றான்.
குமுதனிற்குத்தெரியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் நினைவிழந்துவிடப்போகின்றேன் என்று. இறுதியாய் கழிகின்ற ஒவ்வொரு கணத்திலும் தனது சிறிய அசைவைக்கூட தேசத்திற்குப் பயனூள்ளதாய் செய்துவிட்ட வேண்ருமெனத் துடித்துக் கொண்டிருந்தான்.
இறுதியாய் அவனைப் பிரிந்துவிடத் துடிக்கும் மூச்சுக்காற்றையும் நினைவுகளையும் தக்கவைத்தபடி அவனிற்க்கான பணியையும் செய்துமுடித்தான்.
அணிகள் அனைத்தையும் பின்வாங்குவதற்கேற்ப ஒழுங்குகளை செய்துவிட்டு விழுப்புண்பட்டாலும் பின்னிற்கு குமுதனையும் தூக்கிச் செல்வதற்காக நின்ற தோழனைப் பார்த்து ” மச்சான் இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் சஜ்யரை இழுக்கப்போறேன். நீ கட்டாயம் வெளியில போய். இங்க நடந்ததைச் சொல்ல வென்று. எத்தின இலக்கை அழித்தனாங்கள். இன்னும் எத்தின இலக்கு இருக்குதென்று சொல்லு. அது இன்னுமொரு சண்டைக்கு உதவும். ”
அடுத்த சில மணித்துளிகளில் தனது சாவைத் தானே தீர்மானிக்கப்போகும் அந்த வீரன் சொல்லிய சேதி இது. எப்படி அவனால் முடிந்தது. அதிரிகளின் இடைவிடாதாத தாக்குதலுக்கு மத்தியிலும் தன் களமாடிய தோழர்களை இழந்துவிட்ட நிலையிலும் ஏகனவே பலவீனமான அவனது உடல் விழுப்புண் அடைந்த வேதனையால் சொர்ந்துவிட்ட போதும் எதைப்பற்றியுமே சிந்திக்காது அந்த இறுதிக்கனத்திலும் தனது அணியைப் பற்றியும் , தனக்கு வழங்கப்பட்ட கடமைகளை பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்கும் அவன்.
இதுவரை காலமும் இயக்க வாழ்வில் ஒவ்வொரு மணித்துளியையும் எவ்வளவு பயனுடையதாக செலவு செய்திருப்பான் என்பதை எடுத்துக்காட்டியது. எவ்வளவு தூரம் எமது தாயகத்தில் பற்றுவைத்து உழைத்திருப்பான். குமுதன் கூரியனுப்பிய சேதிகளைச் சொல்லிவிடவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே முகாமைவிட்டு பல சிரமங்களையும் பொருட்படுத்தாது வெளியேறிய தோழன். குமுதன் சொல்லிவிட்ட சேதிகளைச் சொல்லியபோது குமுதன் காவியமாகிவிட்டான்.
அவன் சொல்லிவிட்ட செய்திகளே இன்னுமொரு தாக்குதலுக்கு பக்கபலமாக அமைந்துவிட்டது. என்று எண்ணுகிறபோதேல்லாம் அந்த இளைய வீரனின் முகமே கண்ணுக்குள் தெரியும்.
அவன் என்றைக்கும் வாழுகின்ற வரலாறு.
– துளசிச்செல்வன்.
விடுதலைப்புலிகள் இதழ் ( ஆனி – ஆடி : 1999 )

கரும்புலி லெப் கேணல் சுபேசன்

விழுதெறிந்த விருட்சத்தின் வெளித்தெரியா வேர்கள் …

Bt Lt Col Subesan
இவனின் குடும்ப விருட்சம் – ஒரு அண்ணனும் மூன்று அக்காவும் , நான்கு தம்பியும் , ஒரு தங்கையும் .
நேரம் நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்தது. அந்த இரவின் அமைதி குலைந்து நீண்ட நேரமாகிவிட்டது. கருமை பூசியிருந்த இருளினை இடையிடை முழங்கிய துப்பாக்கி , குண்டுகளின் வெளிச்சம் சீர்குலைத்துக்கொண்டிருந்தது.
எதிரியின் பலமான தடைகளை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த எமது கரும்புலி அணிகள் தாக்குதல்களை வேகப்படுத்தின. நாங்கள் தேடிச்சென்ற இலக்குகள் குறித்த நேரத்திற்குள் தகர்த்தெறியப்பட்டன. இலக்குகளை அழித்தும் கரும்புலி மேஜர் குமுதனிடம் இருந்து பின்வாங்கும்படி கட்டளை கிடைத்தது.
நாங்கள் பின்வாங்குவதர்க்கான வியூகங்களை ஏற்படுத்தி வேகமாகப் பின்வாங்கத் தயாரானோம். ஆனால் எங்கள் அணியினைப் பொறுப்பேற்று வந்திருந்த சுபேசனிற்க்கு காலிலும் , நெஞ்சிலும் குண்டு பாய்ந்திருந்தது. எங்களுடன் சேர்ந்து சுபேசனால் பின்வாங்க முடியவில்லை. தூக்கிக்கொண்டு வந்தாவது அவனைக் காப்பாற்றுவோம் என முயற்சித்தோம். அந்த நிலையில் அது சாத்தியப்படாத காரியம்.
” என்னைப் பார்த்து நிற்காதீர்கள். என்னைத் தூக்கிக்கொண்டு பின் வாங்க இயலாது. நீங்கள் போங்கோ ”
சுபேசன் எங்கள் எல்லோரையும் , பார்த்து எதுவித கலக்கமும் இல்லாது உறுதியாக இறுதி விடை தந்தான்.
எப்படி அவனைப் பிரிந்து போவது , எங்களுக்கு அது கஸ்ரமாக இருந்தது.
” நீங்கள் நிறையச் சாதிக்க வேண்டியனீங்கள். என்னைப் பார்த்து நின்று வீணாய் காயப்படாதீர்கள் தயவுசெய்து போங்கோ ….. நான் சாஜ்சரை இழுக்கப்போறேன்….. ”
இப்பொழுது நாங்கள் அவனைப் பிரிந்து போனால் இன்னும் ஒருசில வினாடிகளுக்குள் அங்கே சம்பவிக்கப்போகும் அந்த நிகழ்வு நினைத்துப்பார்க்கவே உயிரைப் பிளிந்தது. இனி என்றுமே , எப்பவுமே அவனைப் பார்க்கவோ அவனோடு பேசவோ முடியாது.
அப்படி ஒரு நிகழ்வு இங்கே நடக்குமானால்….. எண்ணிக்கொள்ளவே நெஞ்சு கனத்தது. “ சுபேசன் வீரச்சாவடைந்துவிட்டான் ” என்று எப்படி அவன் தங்கையிடம் போய்ச்சொல்வது. அதை அவள் எப்படித் தாங்கிக்கொள்ளப்போகிறாள்….?
” சுபேசன் தங்கை மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தான். என்னமாதிரி எல்லாம் நேசித்தான். சின்ன வயதில் இருந்து ஒருவர்மேல் ஒருவர் அளவில்லாத பாசம் வைத்து வளர்ந்தவர்கள். தாய் – தந்தையிலோ , மற்ற சகோதரர்களிலோ வைத்த பாசத்தை விட சுபேசன் மீது அதிக பாசம் வைத்திருந்தாள் அவள்.
நாங்கள் சீனன்குடாத் தாக்குதலுக்காக பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த வேளை….
சுபேசனின் தங்கையை யாரோ ஒருவன் கடத்திச் சென்றான். சுபேசன் துடித்துப்போய் ஓடிச்சென்று தங்கையைக் காப்பாற்றுகின்றான். இருந்தாலும் தலையில் பலமாக அடிபட்டு மயங்க்கிவிடுகிறாள். மயங்கிய தங்கையை கைகளில் சுமந்து , பின் ஓரிடத்தில் தண்ணீர் தெளிக்கவே அவள் மயக்கம் தெளிந்தாள். ”
இப்படி ஒரு கனவினைக் கண்டுவிட்டு அவன் நிஜமாகவே துடித்துப்போய் விட்டான். நித்திரையில் திடுக்கிட்டு விழித்தவனுக்கு மறுபடியும் தூக்கம் வரவில்லை. தங்கையின் நினைவுகளே சுற்றி சுற்றி அவன் கண்களுக்குள் நுழைந்தன.
விடிந்ததும் தங்கையிடம் சென்று அவளைப் பார்த்து தான் கண்ட கனவினை அவளோடு கதைத்த பின்னர்தான் அவனின் மனம் ஆறுதலானது. இரவு கனவு கண்டுவிட்டு எழுந்து போராளிகளிடம் கூறும்போது எவ்வளது துடித்தான். கனவிலேயே தங்கை படும் கஸ்ரத்தைக் கண்டுவிட்டு தங்கைக்கு என்னவோ – ஏதுவோ என ஏங்கிய அவனது உணர்வுகள் தங்கையை இறுதியாய் பிரிகின்றவேளை எப்படி இருந்திருக்கும் , அவனின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்….!
ஆனையிறவுப் படைத்தளமே எமது இலக்கிற்கான இடம். எமது முகாமில் இருந்து நாங்கள் புறப்பட்ட அந்த இறுதி நேரம்…..
நாங்கள் எல்லோரும் வாகனத்தில் ஏறி அமர்ந்து விட்டோம். இன்னும் சில வினாடிகளில் வாகனம் புறப்பட்டுவிடும். இறுதியாய்ப் பிரிகின்ற அந்தக்கணம் – எல்லோரும் மாறி மாறி விடைகொடுத்துக்கொள்கின்றோம். இந்த இருதியான் விடைகொடுப்பு யார்யாருக்கு நிரந்தரமாய் போகும் சர்ந்தப்பம் கிடைக்குமோ தெரியாது. என்றுமே , எப்பவுமே இனிக்கான முடியாத அந்தப் பிரிவு நிகழ்ந்த வேளை……
சுபெசனை விட்டு பிரிந்திருக்க முடியாது இயக்கத்திற்கு வந்த அவனது பாசத்தங்க்கையும் அங்கே நிற்கின்றாள். இன்னும் ஒன்றோ – இரண்டோ வினாடிகளில் அவன் புறப்படப்போகின்றான். அந்த ஒரு சில வினாடிகளைக் கூட தங்கையுடனேயே பேசிக்கழித்தான்.
இரண்டு பெருநதிகள் ஓடிவந்து கலக்குமே ஓர் இடம்… அங்கு எழுகின்ற ஆர்பரிப்பினைப் போன்று இரண்டுபேர் மனதிற்குள்ளும் எத்தனையோ மனக்குமுறல்கள் , என்னால் சொல்ல முடியவில்லை.
போராளிகளுடன் சிறிதுகாலம் பழகிப் பிரியும்போது கூட தாங்கிக்கொள்ள முடியாத சுபேசன் , நினைவு வந்த நாளில் இருந்து உயிராய் நேசித்த தங்கையின் பிரிவை எப்படித்தான் தாங்கிக்கொள்ளப்போகின்றான்.
தங்கைக்கு தெரியும் அண்ணன் கருபுலி என்று. இப்பவும் கரும்புலித் தாக்குதல் ஒன்றிற்குத்தான் போகின்றான்…. போனான்….
சீனன்குடாவில் இலக்குகளை அழித்துவிட்டு வந்தமாதிரி இந்தச்சண்டையிலும் இலக்கு அழித்துவிட்டு அன்னான் திரும்பி வரமாட்டானா…?….! அவளது மனம் பிராத்தித்தது.
உயிரோடு ஒட்டிய உறவல்லோ. சுபேசனிற்க்கும் வேதனையாகத்தான் இருந்தது. தங்கையின் கண்ணீரத்துடைத்து ” அழக்கூடாது ” தலைவர் இருக்கிறார். கவலைபடக்கூடாது “ தங்கையிற்கு அறிவுரை சொல்லி , ஆறுதல் வார்த்தைகள் கூறி எவ்வளவோ மனப்போராட்டத்தின் மத்தியில் பிரிக்க முடியாத பின்னிப்போன உறவைப் பிரித்துக்கொண்டு வாகனத்தில் ஏறி அமர்ந்துகொள்கிறான்.
அவன் அண்ணனுக்கு கையசைத்தாள். அவனும் கையசைத்தான். வினாடியாகளிக் காலம் மிக வேகமாக விழுங்கிக்கொண்டது. தங்கையின் விசும்பல் காதில் கேட்கிறது. தங்கையின் சிறு கலக்கத்தைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாத சுபேசனிற்கு எப்படி இருந்ததோ.
வாகனம் மெல்ல மெல்ல நகரத்தொடங்குகின்றது. மீண்டும் ஒரு தடவை தங்கையைப் பார்த்துவிட வேண்டுமென ரோச்சடித்துத் தங்கையைப் பார்க்கிறான். தங்கையின் முகம் தெரிகின்றது. அவளின் வாட்டத்தைக் கண்டது , அவளிற்கு ஆறுதல் சொல்லவேண்டும் போல துடித்தது அவன் மனம். வாகனம் மெல்ல மெல்ல வேகம் கூடியது. பிரிவைத் தாங்க முடியாத சுபேசன் தலைகவிழ்ந்துகொள்கிறான்.
இந்த இறுதி நேரம் அவன் உணர்வுகள் எத்தனை தடவை சிலிர்த்திருக்கும் இவ்வளவு பாசமான் உறவினைவிட இந்தத் தேசத்தின் மீதும் மக்களின் மீதும் எவ்வளவு உன்னதமான பற்று வைத்திருக்கின்றான். அவனது இலட்சியம் எவ்வளவு புனிதமானது. அவன் தன் தேசத்தில் எல்லோரையும் ஆழமாக நேசித்தான். அதனால்த்தான் அவர்களின் துயரத்தைக்கண்டு தாங்கிக்கொள்ள முடியாமல் கரும்புலியானான். அடுத்தவர் துயரத்திற்கு தோள்கொடுக்கவும் , மற்றவர்களின் வேதனைக்காக கண்ணீர் சிந்தவும் பழகிய இதயம் அவனது இதயம். தலைவர் ஒரு போராளியை எப்படியெல்லாம் எதிர்பார்த்த்தாரோ அத்தனியும் பிரதிபலிப்பதாகத் திகழ்ந்தான்.
1993ம் ஆண்டு தன்னைக் கரும்புலிகள் அணியில் இணைத்துக் கொண்டவன் சுபேசன். இன்றுவரை எத்தனை ஆண்டுகள் மனம் சலிக்காது கொள்கை ஒன்றையே நெஞ்சில் சுமந்து எவ்வளவு கடுமையான பயிற்சிகளை எல்லாம் எடுத்திருப்பான். இறுதி மூச்சிலே பகை எரிக்க அந்த இலக்கு கிடைக்கும்வரை இத்தனை வருடங்கள் காத்திருந்தானே….! அவனது இலட்சியம் எத்தனை பெரியது.
அவனிற்கு உடம்பில் ஏராளமான காயங்கள். 1994ம் ஆண்டு காலப்பகுதியில் ஆனையிறவுப்படைத்தளம் மீதான் கரும்புலித் தாக்குதல் ஒன்று செய்வதற்கான இறுதி வேவிற்கு சுபேசன் சென்றிருந்தான். அன்று எதிரியுடன் மோத நேர்ந்தது. சுபேசனிற்கு கையில் பெரிய காயம். அன்று ஏற்ப்பட்ட காயத்தினால் இன்றும் பெரிய வேலைகள் செய்தால் கைமூட்டுக்கள் கழன்றுவிடும். பின் அவன் தானே கைமூட்டைக்கொழுவி தன் பணிகளை செய்துகொள்வான். எல்லா ஆயுதங்களையும் சிறப்புற இயக்கம் தேர்ச்சி பெற்றதோடு சிறந்த சூட்டு வல்லமையும் கொண்டவன். எந்த ஒரு இருக்கானாம சூழ்நிலையிலும் நன்கு திட்டமிட்டு அணிகளை சிறந்தமுறையில் வழிநடத்தக் கூடியவன். சீனன்குடாவில் எதிரி வானூர்திகளையும் , கனரக ஆயுதங்களையும் அழித்த கரும்புலி அணிகளுக்கு சுபேசனே தலைமையேற்றுச் சென்றிருந்தான்.
அன்றொருநாள் ஆகாயக் கடல்வெளித் தாக்குதலை முறியடிப்பதற்காக வெற்றிலைக்கேணியிலிருந்து ஆனையிறவுக்கு சிங்கள இராணுவம் பெரிய நகர்வு ஒன்றினை மேற்கொண்டது. அதற்க்கு ஊடறுப்புத்தாக்குதல் மேற்கொள்ள நின்ற எமது அணிகளுடன் ஒன்றாக சுபேசனும் 05 பேர் கொண்ட வேவு அணியுடன் நின்றான். முதல் நாள் சுபேசனும் சென்று வேவு பார்த்துவிட்டு வந்திருந்தான். அடுத்தநாள் ஊடறுப்புத் தாக்குதலுக்குத் திட்டமிடும் வேலை இருந்தமையால் சுபேசன் வேவுக்குச் செல்லாது முகாமில் தங்கிக்கொள்கிறான். சண்டைச் சூழ்நிலை காரணமாக உணவு விநியோகம் பெரிது சீர்குலைந்திருந்தது. எப்போதாவது வரும் சாப்பாட்டை சாப்பிடுவது , சாப்பாடு வராவிட்டால் சாப்பாட்டை எதிர்பார்க்காது தத்தமது கடமைகளை செய்யவேண்டிய ஒரு சூழ்நிலையே இருந்தது. அன்று சாப்பாடு வந்திருந்தது ஆனால் , அங்கே நின்ற ஆட்களை விட வந்திருந்த சாப்பாடுப் பொட்டலங்கள் குறைவானதாக இருந்தது. 05 பேர் கொண்ட சுபேசனின் அணிக்கு இரண்டு சாப்படுப் பொட்டலங்கள் கிடைத்தன.
தனது தோழர்கள் வேவு பார்த்துவிட்டு களைத்துப்போய் வருவார்களே அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவோம் என எண்ணியவன் அந்த உணவுப்பொட்டலங்களை துணி ஒன்றினால் சுற்றி கவனமாக வைத்துவிட்டு படுத்துவிடுகின்றான்.. அவன் முதல்நாள் சாப்பிட்ட சாப்பாடுதான்….. அன்று மதியம் கழிந்துகொண்டிருந்தது. இந்தளவு நேர இடையிர்க்குள் ஒன்றோ இரண்டு இளநீர் குடித்துவிட்டான். படுத்திருந்த சுபேசனிற்கு வேவு பார்க்கச் சென்ற தோழர்கள் வருகின்றார்கள் என்ற செய்தி காதில் எட்ட , நித்திரை விட்டு எழுகின்றான். எழுந்திருந்தவன் உடனே தான் எடுத்துவைத்திருந்த சாப்பாட்டுப் பொட்டலங்களைப் பார்க்கின்றான். பொட்டலங்களைக் காணவில்லை…. யாரோ அந்தச் சாப்பாட்டுப் பொட்டலங்களை எடுத்து சாப்பிட்டுவிட்டார்கள் பொங்கி வந்த அழுகையினை சுபேசனால் அடக்கிக்கொள்ள முடியவில்லை. உணவு யுக்கும் என்ற நம்பிக்கையோடு வருவார்களே தன் தோழர்கள் அவர்களுக்கு எவ்ன்னவேன்று சாப்பாடு இல்லைஎனச்சொல்வது ….. அவன் துடித்துப் போனான்.
முதல் நாள் மதியம் சாப்பிட்ட சாப்பாட்டுடன் சென்று களைத்துப்போய் வருகிறார்களே எப்படி பசியைத் தாங்கிக்கொள்ளப் போகிறார்கள். அவர்களிற்கு ஒருவேளை உணவு கூட கொடுக்கமுடியவில்லையே என கலங்கினான். அவனது மனவேதனை கண்களால் வெளியேறிக்கொண்டிருந்தது. பெற்ற பிள்ளைகள் பசியில் துடிப்பதைப் பார்த்து ஒரு தாள் அழுவாளே அதே மாதிரி அழுதான் எங்கள் சுபேசன். அவன் தோழர்கள் எவ்வளவு சமாதானப் படுத்தியும் சுபேசனின் அழுகை தீருவதாக இல்லை. நின்ற வேறு தோழர்கள் அங்கு தேடி , இளநீர்களைப் பிடுங்கிக்கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுத்து சுபேசனிற்கு கொடுத்தபோதும் அவன் குடிப்பதாக இல்லை.
“ என்ற பெடியள் சரியான பசியாய் இருப்பாங்கள் அவர்களுகுக் கொடுங்கோ எனக்கு வேண்டாம் ” அவன் மறுத்தே விட்டான். இப்படித்தான் என்றும் தன்னைவிட பிறரை நேசிக்கும் மனம் அவனிற்கு….
நான் கடைசியாகச் சிரித்து அவனோடு பேசிய அந்த இறுதியான அந்த நேரமே இவனது உணர்வுகள் எவ்வளவு புனிதமாக இருந்தது.
ஆனையிறவு படைத்தளத்திற்குள் ஊடுருவி முதலாவது தடை தாண்டியாகிவிட்டது. தாக்குதல் ஆரம்பிக்க இன்னும் ஒரு சில மணித்தியாலங்கள் இருந்தது. இறுதியாக நாங்கள் பழரின்களையும் , உளர் உணவுகளையும் சிரித்து கலகலப்பாகச் சாப்பிட்ட்டுக்கொண்டிருந்தோம். சுபேசன் மட்டும் ஒவ்வொரு போராளியின் மனத்தையும் பாசமாய்ப் பார்த்தான். அவனது முகத்தில் லேசாக சோகம் படர்ந்திருந்தது. இன்னும் ஒரு சில மணித்தியாலத்திற்குள் வெடிக்கப்போகும் அந்த சுபேசன் என்ன சொன்னான் தெரியுமா……?
” பார் மச்சான் எவ்வளவு சிரிப்பு கலகலப்பாக இருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில்….. …. ” அவனால் அதற்குமேல் எதுவும் பேசமுடியவில்லை. தீயிர்க்குள் இருந்து நீர் வடியும் உணர்வு அவனுக்கு. அவன் தனியாக இலக்கை அழிக்க சென்றிருந்தால் கவலைப்படட்டிருகக்மாட்டான். தன்னுடன் சேர்ந்து கூடிக் கும்மாளம் போட்டுப்பழகிய இந்த வீரர்கள் இன்னும் சில மணி நேரத்தில் காவியங்களாகப் போகின்றார்களே…! என்ற ஏக்கம்தான் அவனுக்கு. தன்னை அழிக்கத் துணிந்த அந்த வீரன் இறுதி நேரத்தில் இப்படி ஏங்கினான் என்றால் , அவன் மற்றவர்களின் வாழ்வை , மற்றவர்களை எப்படி உன்னதமாக நேசிக்கின்றான். இப்படி எல்லோரிலும் பாசம் வைக்கும் சுபேசன் இயக்கத்திற்கு வந்ததும் , அண்ணனைப் பிரிந்து வாழமுடியாது என்று அண்ணனுடன் கூட இருப்பதற்காக இயக்கத்திற்கு வந்தாலே அவன் தங்கை. அவள் மீது எவ்வளவு பாசம் வைத்திருப்பான்.
தன் தங்கை மீதும் , எம் தேசம் மீதும் ஒவ்வொரு மக்கள் மீதும் , எங்கள் தலைவன் மீதும் எவ்வளவு பாசம் வைத்திருந்தானோ அதுதான் அவனை ஒரு உன்னத கரும்புலி வீரனாக்கியது.
சண்டைகளின் சீறல் இன்னும் அடங்கியதாய் இல்லை. தொடர்ந்து வெடிமுழக்கம்.
” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ” சுபேசன் அழுத்தமாக உரைத்தது வானில் எதிரொலித்தது. எப்போதுமே மற்றவர்களிற்க்காக சுவாசித்துப் பழகிப்போன அவனது மூச்சு நிட்சயம் எம் தேசத்தை வாழவைக்கும்.
கரும்புலியாய் இணைந்து கொள்ள முன் பங்குபற்றிய தாக்குதல்கள்…
* ஆகாய கடல்வெளிப் பெருஞ்சமர்.
* மின்னல் இராணுவ நடவடிக்கைக்கு எதிரான சண்டை, கொக்குத்தொடுவாயில் மேற்கொள்ளப்பட்ட பதுங்கித் தாக்குதல்.
* சின்னமண்டலாய்ப் பகுதியில் மேற்கொண்ட காவலரண் அழிப்புச்சண்டை.
* கட்டுப்பத்தை இராணுவ முகாம் தாக்குதல்
– விடுதலைபுலிகள் இதழ் ( சித்திரை – வைகாசி : 1999 )

கரும்புலிகள் ஆஷா, ஜெயராணி, மங்கை, நளாயினி, உமையாள், தனா, இந்து வீரவணக்க நாள்

ஓயாத அலைகள் – 02 படை நடவடிக்கை மூலம் கிளிநொச்சி பிரதேசம் மீட்டெடுப்பதற்கான தேசியத் தலைவர் அவர்களின் திட்டத்திற்கு அமைவாக ஆனையிறவு பின்தளத்தில் ஆட்லறிகளின் செயற்பாடுகளை தடுக்கும் நோக்குடன் 01.02.1998 அன்று பரந்தன் ஆனையிறவு சிறிலங்கா இராணுவக் கூட்டுப்படைத் தளம் (இயக்கக்கச்சிப் பகுதியில்) மீதான கரும்புலித் தாக்குதலில் காவியமான
கருவேங்கைகளின் 17 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்
இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில் கடலிலும் – தரையிலும் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!




கரும்புலி லெப்.கேணல் சுபேன் உட்பட நான்கு கரும்புலிகள் வீரவணக்க நாள்..

வீர வணக்கம் !

ஓயாத அலைகள் – 02 படை நடவடிக்கை மூலம் கிளிநொச்சி பிரதேசம் மீட்டெடுப்பதற்கான தேசியத் தலைவர் அவர்களின் திட்டத்திற்கு அமைவாக ஆனையிறவு பின்தளத்தில் ஆட்லறிகளின் செயற்பாடுகளை தடுக்கும் நோக்குடன் 01.02.1998 அன்று பரந்தன் ஆனையிறவு சிறிலங்கா இராணுவக் கூட்டுப்படைத் தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் காவியமான கரும்புலிகள் லெப்.கேணல் சுபேன்,மற்றும் நான்கு கரும்புலிகளின் வீரவணக்க நாள் இன்றாகும்.

புலிகளின் தாகம் ! தமிழீழத் தாயகம் !

கரும்புலிகள் கப்டன் நெடியோன், கப்டன் அருண் வீரவணக்க நாள்

01.02.1998 வீரச்சாவைத் தழுவிய கரும்புலிகள் வீரவணக்க நாள் 


ஓயாத அலைகள் – 02 படை நடவடிக்கையின் போது கிளிநொச்சி சிறிலங்கா படைத் தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் செல்லும் இடையில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் காவியமான கரும்புலிகள் கப்டன் நெடியோன், கப்டன் அருண் ஆகிய கருவேங்கைகளின் வீர வணக்க  நாள்  இன்றாகும் ,,,,,,

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் .



https://www.youtube.com/watch?v=EPuBOn091DA

Friday 30 January 2015

இராபர்ட் பயஸ் என் அண்ணன் !

அண்ணா !  என் அன்பு அண்ணா  !
உடன் பிறந்தான் இல்லையென்ற
குறையை  தீர்க்க  நீ வந்தாய் !
என் உடல் நரம்பு ஒவ்வொன்றிலும்
இனப்பற்றை நீ தந்தாய் !

கடந்த கால  வேதனைகளை
காட்ட மாட்டாய் உன் முகத்தில் ,
கடந்து போகும் என உறுதியுடன் .
பலம் தருவாய் என் மனதில்!

இழிவும் அழிவும் சேர்ந்துப் போன
இனத்தில் பிறந்த காரணத்தால் .
வலிகள் மிக கோடிக்கோடி
அனுபவித்தாய் என் தாயக மடியில் .

இருண்டு போன வரலாற்றில்
வெளிச்சமாவாய் என் அண்ணா !
இளைஞர் படை தம்பிகள்
ஆயிரமுண்டு உன் அன்பால் !

வரும் காலம்
நமதாகும்  வரலாறு ,
தமிழர் ஆட்சியில் எல்லாம்
ஒரு நாள் முடிவாகும் .
பிணைக்கப்பட்ட கைவிலங்கு ,
நொறுக்கி எறியும் அந்நேரம் ,

உவகை கொண்ட நெஞ்சத்துடன்,
வரவேற்பேன் நீர் வடியும் என் கண்ணோடு !

@ தமிழரசன்அப்துல்காதர்

Thursday 29 January 2015

பாலச்சந்திரா ! பழிவாங்குவோம் !

வாராமல் வந்த வரமாக
வந்தவன் எங்கள் அண்ணன்.
அவன் வாழ்வின் திவ்விய பயனாக
வந்துதித்தான் பாலசந்திரன் .
இனம் தமிழர் வாழ்வில் .
ஒளி ஏற்றிவைத்தான் அப்பன் .
அவன் இதயம் நொறுங்க .
வாழ்வை முடித்தான் - எங்கள் மனதில் வாழும் தங்கம் .
பச்சை பசுந்தளிரென பார்க்காமால் .
பாய்ந்து குதறிய சிங்களமே !
பச்சை இரத்தத் தாகத்துடன்
மீண்டும் வருவோம் விரைவினிலே !

@தமிழரசன் அப்துல் காதர்  

Sunday 25 January 2015

ஜார்ஜ் ஹப்பாஸ் , சுதந்திரத்தின் பாதுகாவலன்

பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் என்பது முஸ்லிம்களின் பிரச்சினை என்று உலகம் நினைக்கும் வகையில் ,,பாலஸ்தீன மக்களின் தேசிய இன விடுதலைப்போரை மடை மாற்றி விட்டதில் ஏகாதிபத்திய அமெரிக்காவிற்கு முழு பங்கு உண்டு ...அந்த பொய் பிரசாரத்தை முறியடித்து உண்மையை மக்களுக்கு சொல்லவேண்டியது நம் பொறுப்பாகும் ...

"ஜார்ஜ் ஹப்பாஸ் " பாலஸ்தீன விடுதலைப் போராளி ஆவார் . பழமைவாத கிறிஸ்தவரான இவர் பாலஸ்தீன விடுதலைக்கான பிரபல முன்னணி (Popular Front for the Liberation of Palestine, PFLP) என்ற பெயரில் ஓர் இயக்கத்தை ஆரம்பித்து 2000-ம் ஆண்டு வரையில் அதன் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். இஸ்ரேலின் எதிரியாக, மேற்குலக நாடுகளின் பயங்கரவாதத் திருத்தந்தையாக கணிக்கப்பட்ட ஹப்பாஸ் , அதே நேரம் பாலஸ்தீன மக்கள் அனைத்து பிரிவினரும் மதிக்கும் ஒருவராக, சர்வதேச விடுதலை இயக்கங்களின் தோழனாக கருதப்பட்டார்.

1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் என்ற நாடு, பாலஸ்தீன பூமியில் அமைக்கப்பட்ட பின்னர், ஹப்பாசின் போராட்ட வாழ்க்கை ஆரம்பமாகியது. கிறிஸ்தவ மதப்பிரிவை சேர்ந்த, ஒரு செல்வந்த குடும்பத்தில் பிறந்த ஹப்பாஸ் , பின்னர் லெபனானில் அகதியாக இருந்த போது, பெய்ரூட் அமெரிக்க பல்கலைகழகத்தில் மருத்துவராக பட்டம் பெற்றாலும், பாலஸ்தீன விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஆரம்ப காலத்தில் எகிப்தியத் தலைவர் நாசரின் வழியில், அரபு தேசியவாத இயக்கத்தை உருவாக்கிய ஹப்பாசும் தோழர்களும், பின்னர் மார்க்சிய-லெனினியத் தத்துவங்களால் கவரப்பட்டு, PFLP என்று மாற்றிக்கொண்டனர். அன்றிலிருந்து ஹப்பாசின் தனித்துவ போராட்டம் உலகம் முழுக்க பிரபலமானது.


ஹப்பாஸ் ஆரம்பத்தில் அரபு (சர்வ)தேசியம், பின்னர் மார்க்சிய சர்வதேசியம் போன்றவத்தின் ஓர் அங்கமாக தனது இயக்கத்தை நிறுவினார். இதற்கு அவரது தனிப்பட்ட வரலாறு காரணமாக இருக்கலாம். பலஸ்தீனியர்களில் கணிசமான அளவு தொகையில் உள்ள கிறிஸ்தவர்கள், இஸ்ரேல் என்ற தேசம் ஸ்தாபிக்கப்பட்ட போது, யூதர்கள் வன்முறையைப் பிரயோகித்து இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டனர். அவர்கள் பாலஸ்தீனத்தின் பூர்வீககுடிகள் அனைவரையும், இஸ்லாமியர், கிறிஸ்தவர் பேதம் பார்க்காமல் வெளியேற்றினர். ஆகவே அரபு தேசியவாத இயக்கமாக இருந்தாலும், PFLP யாக இருந்தாலும் மதச்சார்பற்ற பாலஸ்தீனம் என்ற நாட்டை உருவாக்க முயன்றது.



அரபு சர்வதேசிய ஒற்றுமையின் முதற்படியாக, எகிப்தும், சிரியாவும் ஒன்று சேர்ந்த போது வரவேற்ற ஹப்பாஸ் , பின்னர் அந்த "அரபு ஒன்றியம்" சுயநல அரசியலால் சீர்குலைந்த போது விரக்தியுற்று இருந்த வேளையில், அவர் ஸ்தாபித்த PFLP முற்றிலும் வேறுவிதமான நிலைப்பாட்டை எடுத்தது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் விமானங்களை வெற்றிகரமாக கடத்தி, பின்னர் பிரயாணிகளை விடுவித்து விட்டு, குண்டு வைத்து தகர்த்தத்தின் மூலம், பலஸ்தீன பிரச்சினையை சர்வதேச அரங்கிற்கு எடுத்து சென்றனர். அப்படியான நடவடிக்கை ஒன்றில் பங்கு பெற்ற உலகப்புகழ் பெற்ற இளம் பெண் போராளி லைலா காலித், இன்று PFLP யின் தலைவர்களில் ஒருவராக ஜோர்தானில் வசிக்கிறார்.

PFLP யின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பன்னாட்டு ஆர்வலர்களின் உதவி கிடைத்தது. இலத்தீன் அமெரிக்கத் தோழர்கள் சிலர் விமானக்கடத்தல்களின் போது பங்குபற்றி இருக்கின்றனர். திட்டம் தோல்வியடையும் பட்சத்தில் சிறை சென்றுள்ளனர். இஸ்ரேல், டெல் அவிவ் விமான நிலையத்தில் துப்பாக்கிப்பிரயோகத்தில் ஈடுபட்ட ஜப்பானியர்கள், பலஸ்தீன போராட்டத்தில் தமதுயிரையும் கொடுக்க தயாராக இருந்தனர். எழுபதுகளில் இடம்பெற்ற இது போன்ற தாக்குதல்கள் சர்வதேச ஒற்றுமைக்கு செயல் வடிவம் கொடுத்தன.

அன்று எதிரணியில் இருந்த சோவியத் ஒன்றியம், பாலஸ்தீன போராட்டத்தை அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு போராக கணித்திருந்தது. அன்றைய சோவியத் ஒன்றியத்திலும், சோசலிச கிழக்கு ஐரோப்பாவிலும் கல்வி கற்ற பாலஸ்தீன மாணவர்கள், வீதிகளில் பிரச்சாரம் செய்யவும், போராட்டத்திற்கு பணம் சேர்க்கவும் அனுமதிக்கப்பட்டனர். அதன்போது அங்கு படித்த சில பிற நாட்டு மாணவர்களும் பலஸ்தீன பிரச்சினை பற்றி தெரிந்து கொண்டு, ஆதரவளிக்க முன்வந்தனர். அப்படி வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர், வெனிசுவேலாவை சேர்ந்த கார்லோஸ் என்ற இளைஞர் பின்னர் உலகப்புகழ் பெற்ற "சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு , தற்போது பிரெஞ்சு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இத்தகைய பிறநாட்டு ஆர்வலர்கள், PFLP இனால் தெரிவு செய்யப்பட்டு, ஆயுதப்பயிற்சிக்காக ஜோர்தான் அனுப்பப்பட்டனர். பயிற்சி முடிந்த பின்னர் ஐரோப்பிய நாடுகளில் தாக்குதல்களுக்கான உத்தரவு வரும் வரை தங்கவைக்கப்பட்டனர்.இந்த காலகட்டத்தில் தான் தமிழீழ விடுதலையை மையமாக கொண்டு செயல்பட்ட விடுதலைப் போராளி அமைப்புகளுக்கு லெபனானில் வைத்து ஆயுதப் பயிற்ச்சிஅளித்தனர் PFLP போராளிகள் ..

1967 ம் ஆண்டு, PLFP ஸ்தாபிக்கபட்ட அதே ஆண்டு, ஐரோப்பாவில் மாணவர்கள் கிளர்ச்சி செய்தனர். பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் மாணவர்கள் புரட்சியை முன்னெடுத்து, ஆட்சியை கைப்பற்றும் சாத்தியக்கூறுகள் இருந்தன. இருப்பினும் சமயோசிதமாக நடந்து கொண்ட அரசாங்கங்கள், திரிபுவாத கம்யூனிஸ்ட் கட்சிகளின் துணையுடன், கிளர்ச்சிகளை அடக்கின. இதனால் சில மாணவர்கள் ஆயுதப்போராட்ட வழியை நாடினர். ஜெர்மனியில் RAF, இத்தாலியில் Red Birigade, பிரான்சில் Action Directe போன்றன அரசியல் படுகொலைகள், குண்டு வைப்புகள் மூலம் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். இவர்களுக்கு தேவையான ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் PFLP விநியோகித்தது. அத்தோடு நிற்காது, அந்த அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்தது. சோவியத் ஒன்றியம் வேண்டிய அளவு நிதி உதவி செய்ததால், உலகின் எந்த நாட்டில் இருந்தும்

போவோருக்கெல்லாம், இராணுவப்பயிற்சி தாராளமாக கிடைத்தது.

ஈழ விடுதலை போராளிகளும் இந்த சந்தர்ப்பத்தை தாராளமாக பயன்படுத்திக் கொண்டனர். வெளிநாட்டு பயிற்சி பெறுவதற்காக என்று, இலங்கையில் இருந்து தெரிவான பல தமிழ் இளைஞர்கள், லெபனானில் இருந்த PLFP முகாம்களில் வந்து குவிந்தனர். அப்போது நடந்து கொண்டிருந்த லெபனான் உள்நாட்டுப் போர், அந்த நாட்டில் பன்முகத்தன்மையிலான அரசியல்/இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களை ஏற்படுத்தியிருந்தது. தெற்கு லெபனான் இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது போல, மேற்கு லெபனான் சிரியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. பேகா பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் அந்தப்பகுதியில், PFLP உட்பட அனைத்து பலஸ்தீன அமைப்புகளும் சுதந்திரமாக இயங்கின. இதனால் உலகின் எல்லாப்பகுதிகளில் இருந்தும் வந்த விடுதலைபோராட்ட சிந்தனை பெற்ற இளைஞர்கள் அங்கே புகலிடம் பெற முடிந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு, லெபனான் அரசியல் களத்தில் ஏற்பட்ட மாற்றங்களினால், சிரியா பின்வாங்கிய பின்னர் தான், அந்த புகலிடம் பறிபோனது.
அந்த சமயம் தான் யாசர் அரபாத்தின் தேசியவாத பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO), இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பலஸ்தீன அதிகார சபை என்ற சமரசத்திற்கு இணங்கியது. ஹப்பாஸ் , இந்த சமரசத்திற்கு கடைசி வரை உடன்படாமல், தனது தோழர்களுடன் சிரியாவில் தஞ்சமடைந்தார். அவரது விட்டுக்கொடுக்காத தன்மை மக்களிடம் பேரு மதிப்பை பெற்றுக் கொடுத்தது . ஹப்பாசின் இறுதிக்காலத்தில் PFLP மார்க்சிய-லெனினிசத்தை நடைமுறையில் கைவிட்டு விட்டு, இடதுசாரி தேசியவாத அமைப்பாக தன்னை மாற்றிக்கொண்டது. ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் போன்ற மத அடிப்படையினாலான அமைப்புகளுடன், பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றிணைந்தது. மதச்சார்பற்ற PFLP யும், மத சார்பான ஹமாசும் ஒன்றாக வேலைசெய்வது, பலருக்கு நம்பமுடியாமல் இருந்தாலும், நிகழ்கால பலஸ்தீன யதார்த்தம் அத்தகைய கூட்டணிக்கு நிர்ப்பந்தித்து உள்ளது. அண்மையில் கூட PFLP யும், இஸ்லாமிய ஜிஹாத்தும் சேர்ந்து இஸ்ரேலிய எண்ணைக்கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. முற்றுகையின் கீழ் உள்ள காசா பகுதிக்கு எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் இடைநிறுத்திய நேரத்தில் நடந்த தாக்குதல் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தில் திட்டமிட்டு மறைக்கப் படும் ஒரு உருவம் ஜார்ஜ் ஹப்பாஸ் என்றால் அது மிகையல்ல ,,,,.இன்றும் பாலஸ்தீன விடுதலைக்காக PFLP போராடி வருகிறது மேற்குலக ஊடகங்கள் அதை ஒரு முஸ்லிம் பிரச்சினையாக திரித்து கூறி வரும் நிலையில் அதை பாலஸ்தீன வெகு ஜன மக்களின் தேசிய போராட்டமாக முன்னெடுத்து கட்டமைத்ததில் ஹப்பாசின் பங்கு அளப்பரியது ....
ஆகஸ்ட் 2 . 1925 பிறந்த ஜார்ஜ் ஹப்பாஸ் தனது 81வது அகவையில்ஜனவரி 26 / 2008 ல் ஜோர்தான் தலைநகர் அம்மானில் வைத்து மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார் ......

புரட்சி ஓங்கட்டும் ......விடுதலை வெல்லட்டும் .....

மாவீரர் மறைவதில்லை என்றும் மக்களின் மனதில் ...

Friday 23 January 2015

Thoughts Of Talaivar


We are not warmongers who love violence. In actual fact, spiritually, we love peace. We
want a permanent, stable and honourable peace. It is because of this reason that in spite
of this bloody war, we are keeping the doors of peace open. 

-Our National Leader Hon V Prabhakaran

Thursday 22 January 2015

தேசியத் தலைவரின் சிந்தனைகள்

இழப்புகளும் அழிவுகளும் ஒரு விடுதலைப் போராட்டத்தில் சர்வ சாதாரண நிகழ்வுகள். நாம் எத்தனையோ இழப்புக்களையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம். சந்தித்தும் வருகின்றோம். ஆனால் இந்த இழப்புகளும் அழிவுகளும் எமது ஆன்ம உறுதிக்கு உரமாக அமைந்துவிட்டால் உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அடக்கிவிட முடியாது.

-மேதகு தேசியத் தலைவர் வே .பிரபாகரன் 

எழுதிக் கிழித்தவை

எங்கோ ஒரு மூலையில்  அழும் குழந்தையின் குரல் ,,

ஏதோ  ஒரு  பறவையின்  இணையை பிரிந்த கூக்குரல்  ..`

பக்கத்து வீட்டில் குடிகார கணவனை திட்டும் மனைவி ...

குளிர்ந்து சில்லிட்ட புற்களின் புதர்களில் தவளைகளின்  மாக் மாக் ''''

தாயில்லா  ஆட்டுக்குட்டிகளின் முனகல் ....

அநாதரவான இந்த இறுக்கமான  இரவுகளில் பங்கு போடுகின்றன என் தனிமையை ...

#தமிழரசன்அப்துல்காதர் 

Sunday 11 January 2015

அவலங்களின் அத்தியாயங்கள்- 9

புலிகளுடன் சண்டைகள் மூளும் பட்சத்தில் இலகுவாக நகர்ந்து யாழ் தலைநகரையும் அங்கு நிலைகொண்டிருந்த விடுதலைப் புலிகளின் தலைமையையும் கைப்பற்றும் திட்டத்துடனேயே இந்தியப் படையினர் யாழ் கோட்டையில் நிலை கொண்டிருந்தனர்.
ஒக்டோபர் 11ம் திகதி நள்ளிரவு இந்தியப் படையினர் மேற்கொண்டிருந்த பரசூட் தரையிறக்கத் தாக்குதல் நடவடிக்கை மட்டும் இந்தியப் படையினர் நினைத்தபடி வெற்றிகரமாக நடைபெற்றிருந்தால், அவர்களது எண்ணம் நிச்சயம் ஈடேறியிருக்கும். ஆனால் புலிகளின் எதிர்த்தாக்குதலும் அதில் புலிகள் அடைந்திருந்த வெற்றியும் இந்தியப் படையினருக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது.

அதனைத் தொடர்ந்து இந்தியப் படையினர் தமது யாழ் முற்றுகையின் இரண்டாம் கட்டத்திற்கு செல்வதற்கு முற்பட்ட போதிலும், அதுவும் அவர்களுக்கு ஈடேறவில்லை. யாழ் கோட்டையில் இருந்து நகர்வினை மேற்கொண்டு யாழ் நகரைக் கைப்பற்றுவதும் அவர்களுக்கு முடியாது போயிருந்தது. யாழ் கோட்டை வாயில்களை அடுத்து புலிகள் அமைத்திருந்த பலமான கட்அவுட் நிலைகள் இந்தியப் படையினரின் எந்தவொரு நகர்வினைவும் சாத்தியமற்றதாக்கியிருந்தது.

யாழ் கோடைக்குள்ளிருந்த இந்தியப் படையினர் வெளியே நகரமுடியாது தவித்ததானது அவர்கள் ஒரு முற்றுகைக்குள் உள்ளானது போன்ற ஒரு பீதியை அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்தது. யாழ் கோட்டைக்குள் அடைபட்ட நிலையில் இருந்த இந்தியப் படையினரைப் பொறுத்தவரையில் இதுபோன்ற ஒரு அனுபவம் அவர்களுகளுக்கு முன்னெப்போதுமே ஏற்பட்டதில்லை.

முகாமொன்று பூரண முற்றுகைக்கு உள்ளாகி, அந்த முகாமிற்குள் அடைபட்டிருந்த அனுபவம் இந்தியப் படையினருக்கு முன்னெப்போதும் ஏற்பட்டதேயில்லை. அதுவும் வேற்று நாடொன்றில் இவ்வாறு அநாதரவாக விடப்பட்டது போன்றதொரு நிலை அவர்களைக் கதிகலங்க வைத்தது.

போதாததற்கு கோட்டையில் தங்கியிருந்த ஸ்ரீலங்காப் படையினரும் புலிகள் பற்றியும் தமிழ் மக்கள் பற்றியும் இந்தியப் படையினரின் பயத்தை அதிகரிப்பது போன்ற கதைகளை அவிழ்த்துவிட்டிருந்தார்கள்.

என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த இந்தியப் படையினர் யாழ் கோட்டையில் இருந்து ஒரு காரியத்தை மட்டும் ஒழுங்காகச் செய்தார்கள். யாழ் நகரிலுள்ள மக்கள் குடியிருப்புக்களை நோக்கி சகட்டுமேனிக்கு செல் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். அங்கிருந்த ஸ்ரீலங்காப் படையினரும் அதற்கு உற்சாகம் வழங்கினார்கள்.

விளைவு- பல தமிழ் மக்கள் உயிரிழந்தார்கள். பலர் காயமடைந்தார்கள். நூற்றுக்கணக்கான வீடுகள், கட்டிடங்கள் சேதமாக்கப்பட்டன. தமிழ் மக்கள் மறுபடியும் ஒரு அகதி வாழ்க்கையை நோக்கிச் செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

படுகொலைகளின் அத்தியாயங்கள்:

யாழ் குடாவைக் கைப்பற்றுவதற்கும், யாழ் கோட்டையினுள் அடைபட்ட நிலையில் புலிகளின் முற்றுகைக்கு உள்ளாகியிருந்த இந்தியப் படையினரை மீட்பதற்கும், புலிகளை ஒழிப்பதற்கும் என்று இந்தியப் படையினர் பலாலியில் இருந்து பல முனைகளிலும் நகர்வுகளை ஆரம்பித்திருந்தார்கள்.

உரும்பிராய் வடக்கு பிரதேசத்தினுடான இந்தியப் படையின் யுத்த தாங்கிகள் முன்நகர அதன் மறைவில் காலாட் படைப்பிரிவு ஒன்று முன்னேறிக்கொண்டிருந்தது. இந்தியப் படையின் பிரிகேடியர்களான சாமேராமும் ஜே.எஸ்.டிலானும் அந்தப் படைப்பிரிவை தலைமை தாங்கி வழி நடாத்திக் கொண்டிருந்தார்கள். இந்தப் படைப்பிரிவு உரும்பிராய் பிரதேசத்தை வந்தடைந்தபோது மற்றொரு அனர்த்தம் நிகழ்ந்தது.

பாதையூடாக நகர்வினை மேற்கொண்டிருந்த இந்தியப் படையினர் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்கானார்கள். அதனைத் தொடர்ந்து அப்பிரதேசத்தில் படுகொலைகளின் அத்தியாயமொன்று தமிழ் மக்களின் இரத்தத்தினால் எழுதப்பட்டது.

கண்ணிவெடிச் சம்பவத்தை அடுத்து இந்திய இராணுவத்தினர் கண்களில் பட்டவர்களையெல்லாம் சுட்டுக் கொன்றார்கள். பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பலவும் அங்கு இடம்பெற்றதாகக் கூறப்படுகின்றது. அச்சத்தின் காரணமாக வீடுகளைப் பூட்டிவிட்டு வீட்டினுள்ளேயே மறைந்திருந்தவர்களை கதவுகளை உடைத்துக்கொண்டு உட்சென்ற இந்தியப்படையினர் சுட்டுக்கொன்றார்கள்.

உரும்பிராய் பிரதேசத்தில் 93 வயது மூதாட்டி உட்பட நான்கு பெண்கள் தங்கியிருந்த ஒரு வீட்டினுள் புகுந்த இந்தியப் படையினர் அங்கிருந்த நான்கு பெண்களையும் கொடூரமாகச் சுட்டுக் கொன்றார்கள். நோய் காரணமாக படுக்கையில் இருந்த மூதாட்டி கட்டிலில் வைத்தே சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். மற்றயை இளம் பெண்களின் சடலங்கள் வீட்டின் பின்பகுதியில் இருந்து பின்னர் கண்டெடுக்கப்பட்டன.

உரும்பிராய் சந்திக்கு வடக்கே ஐம்பது யார் தொலைவில் இலங்கை திருச்சபைக்கு எதிரே இருந்த பொன்னம்பலம் என்பவருக்குச் சொந்தமான வீடொன்றினுள் அயலில் வசித்த சிலர் அடைக்கலம் தேடிச் சென்றிருந்தார்கள். ஆசிரியரான பஞ்சாட்சரம் என்பவருடைய குடும்பம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவியான பிரேமா, அவரது தாயான திருமதி சின்னத்துரை போன்றவர்களும் அந்த வீட்டில் தஞ்சமடைந்திருந்திருந்தார்கள்.

பொன்னம்பலத்தின் குடும்பத்தினர். மற்றும் அடைக்கலம் தேடி வந்தவர்கள் என்று மொத்தம் 11 பேர் அங்கு தங்கியிருந்தார்கள். அந்த வீட்டை சூழ்ந்துகொண்ட இந்தியப் படையினர், வீட்டில் தங்கியிருந்த அனைவரும் உடனடியாக வெளியே வரவேண்டும் என்று ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் உத்தரவு பிறப்பித்தார்கள். வெளியே வராவிட்டால் வீட்டையே குண்டுவீசித் தகர்த்துவிடப் போவதாகவும் எச்சரித்தார்கள்.

வேஷ்டி ஒன்றைக் கிழித்து வெள்ளைக் கொடி தயார் செய்த பொன்னம்பலம், அந்தக் கொடியை கையில் ஏந்தியபடி வீட்டை விட்டு வெளியே வந்தார். அவரைத் தொடர்ந்து வீட்டிலிருந்த மற்றவர்களும் வெளியே வந்தார்கள்.

“பையா“| என்ற ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வீட்டை விட்டு வெளியில் வந்தவர்களை நோக்கி துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. திருமதி சின்னத்துரை, பொன்னம்பலம் தவிர மற்றவர்கள் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார்கள்.

திருமதி சின்னத்துரையின் கணவர் தனது மனைவியையும், மகள் பிரேமாவையும் பாதுகாப்பாக பொன்னம்பலத்தின் வீட்டிற்கு அனுப்பிவிட்டு உரும்பிராய் சந்தியிலிருந்த தனது வீட்டியேயே தங்கியிருந்தார். “கவலைப்படாதேயும் அவையள் சண்டை பிடிக்கவந்த இராணுவத்தினர் இல்லை. அவையள் அமைதிகாக்கும் இராணுவத்தினர். நான் அவர்களுக்கு விளங்கப்படுத்துவேன்“ என்று மனைவியிடம் கூறிவிட்டு வீட்டிலேயே தங்கிவிட்டார். அவரும் இந்தியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

வயது முதிந்தவர்களும், பெண்களும், குழந்தைகளுமே இப்பிரதேசத்தில் அனேமாகக் கொல்லப்பட்டிருந்தார்கள். இளைஞர்கள் ஏற்கனவே அப்பிரதேசத்தை விட்டு வெளியேறி இருந்ததால் இளைஞர்கள் கொல்லப்பட்ட சந்தர்ப்பங்கள் குறைவு என்றே கூறவேண்டும்.

தொடர்ந்த கொலைகள்:

அப்பிரதேசத்தில் இருந்த வீடொன்றில், யாழ் பல்கலைக்கழக மாணவியான அம்பிகா என்ற பெண்ணின் தாயாரும், பாட்டியும் மலையகத்தைச் சேர்ந்த வயதான வேலைக்காரர் ஒருவரும், மற்றொரு முதியவரும் வசித்து வந்தார்கள். அப்பிரதேசத்தில் சண்டைகள் ஆரம்பமானதைத் தொடர்ந்து, வீட்டைப் பூட்டிவிட்டு கட்டில்களின் கீழேயும் மேசைகளின் கீழேயும் மறைந்திருந்த அந்த முதியவர்கள் தங்களது வீட்டைக் கடந்து யுத்த தாங்கியும் இந்தியப் படையினரும் செல்வதை இரைச்சலின் மூலமும் பேச்சொலிகள் மூலமும் அறிந்துகொண்டார்கள். இந்த அரவங்கள் ஓய்ந்து சிறிது நேரத்தின் பின்னர், அந்த வீட்டில் இருந்த முதியவர் மெதுவாக எழுந்து வீட்டின் கதவைத் திறந்துகொண்டு வெளியில் சென்று நிலமையை அவதானிப்பதற்கு எத்தனித்தார்.

அங்கிருந்த எவருமே இந்தியப் படையினருக்கு கொஞ்சமும் பயப்படவில்லை. சண்டைகளின் இடைநடுவில் சிக்குண்டுவிடுவோம் என்ற பயம் அவர்களுக்கு இருந்ததே தவிர, ஸ்ரீலங்கா இராணுவம் போன்று இந்தியப் படையினர் அப்பாவி மக்களை கொலைசெய்துவிடுவார்கள் என்ற அச்சம் அங்கிருந்த முதியவர்களுக்குச் சிறிதும் கிடையாது.

வீட்டின் கதவைத் திறந்துகொண்டு வெளியில் எட்டிப் பார்த்த முதியவரை நோக்கி ஒரு துப்பாக்கிச் சன்னம் சீறிக்கொண்டு புறப்பட்டது. இந்திய யுத்த தாங்கியின் பின்னால் மறைந்தபடி வந்திருந்த படை வீரர்களில் சிலர் அப்பிரதேசத்தில் ஏற்கனவே பதுங்கி நிலையெடுத்திருந்தார்கள். அவர்களில் ஒருவனே முதியவர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டிருந்தான். எந்தவித சத்தமும் இடாது அந்த முதியவர் சரிந்து கீழே வீழ்ந்தார்.

அதனைத் தொடர்ந்து மேலும் சில இந்தியப் படை வீரர்கள் அந்த வீட்டினுள் நுழைந்தார்கள். அங்கிருந்த அம்பிகாவின் தாயாரையும், பாட்டியையும் சுட்டுக்கொன்றார்கள். முதலாவது வெடிச் சத்தம் கேட்டதுமே நிலமையைப் புரிந்துகொண்டு மறைவிடம் ஒன்றினுள் பதுங்கிக்கொண்ட அந்த மலையக வேலையாள் மட்டும் உயிர் தப்பியிருந்தார்.

இந்தியக் கொலைகாரர்கள்:

இந்தியப் படையினர் அப்பிரதேசத்தில் அந்த இரண்டு நாட்களிலும் மேற்கொண்ட கொலைகள் எண்ணில் அடங்காதவை. பல படுகொலைச் சம்பவங்கள் அங்கு இந்தியப் படையினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அனேகமான சம்பவங்கள் பற்றிய செய்தியை வெளியே தெரிவிப்பதற்குக் கூட எவருமே மிஞ்சாத வகையில் பல குடும்பங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் அங்கு இடம்பெற்றிருந்தன. அப்பிரதேச மக்கள் என்றுமே கண்டும், கேட்டும் அறிந்திராத அவலங்களை அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்கள் அனுபவிக்க நேர்ந்தது.

அப்பிரதேசத்தில் வசித்து வந்த சிவப்பிரகாசம் என்ற நபர் முறிந்த பனை என்ற நூலின் ஆசிரியர்களிடம் கூறும்போது “எனது வீடு அமைந்திருந்த அரை மைல் சுற்று வட்டாரத்திற்குள் மாத்திரம் 18 பொதுமக்கள் இந்தியப் படையினரால் கொல்லப்பட்டார்கள். இவர்களில் ஏழு பேர் மட்டுமே ஆண்கள், அவர்களும் 60 வயதைக் கடந்திருந்தவர்கள்” என்று தெரிவித்திருந்தார்.

நாற்பத்தேழு வயது வர்த்தகரான இலகுப்பிள்ளை ஏகாம்பரம், முப்பது வயதான அவரது மனைவி டொரத்தி, மூன்று வயது மகள் ஷெரின் ஒரு வீட்டில் தங்கியிருந்தார்கள். அப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக வந்து விழுந்து வெடித்த ஷெல்களால் அதிர்ச்சியுற்ற அவர்கள் ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான கட்டிடம் ஒன்றில் தங்குவது நல்லது என்று நினைத்து வீட்டை விட்டு பின் வாசல் வழியாக வெளியே வந்தார்கள். அங்கு பதுங்கியிருந்த இந்தியப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

ஏகாம்பரத்தின் வீட்டுக்கு அடுத்ததாக டொரத்தியின் மைத்துனி திருமதி சீனித்தம்பியின் வீடு இருந்தது. திருமதி சீனித்தம்பி, அவரது தாயார், அவரது சகோதரன், ஏழு வயதுக் குழந்தை ஒன்று என்று பலர் அங்கு தங்கியிருந்தார்கள். அவர்களது வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த இந்தியப்படையினர் வீட்டில் இருந்த அனைவரையும் சுட்டுக்கொன்றார்கள். அவர்களது உடல்களையும் ஏற்கனவே கொல்லப்பட்டிருந்த ஏகாம்பரம் தம்பதிகளின் உடல்களையும் அருகில் காணப்பட்ட குழி ஒன்றினுள் போட்டு கிரவல் கற்களினால் மூடியிருந்தார்கள்.

சிறிது காலத்தின் பின்னர் அந்த குழியைத் தோண்டிய போது, ஏகாம்பரம் தனது குழந்தையை அணைத்தபடி எலும்புக்கூடாக காட்சியளித்ததாக ஊர்மக்கள் தெரிவித்தார்கள்.

இதேபோன்று அப்பிரதேசத்தில் இருந்த ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு சோகச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. தங்களது இளம் பிள்ளைகளை பாதுகாப்பாக ஏற்கனவே வெளியே அனுப்பிவிட்டு வீடுகளில் தங்கியிருந்த வயது முதிந்தவர்களே அனேகமாக கொல்லப்பட்டிருந்தார்கள். வீடுகளுக்குள் நுழைந்த இந்தியப்படை வீரர்கள் அங்கு தங்கியிருந்த முதியவர்களை இரக்கம் இன்றிச் சுட்டுக் கொன்றிருந்தார்கள்.

அப்பிரதேசத்தில் மட்டும் இவ்வாறு கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 ற்கும் அதிகம் என்று உத்தியோகப்பற்றற்ற கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்காப் படைகளும் களத்தில்?

இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க, இந்தியப் படையினாரின் இந்த அழித்தொழிப்பு நடவடிக்கைகளுக்கு ஸ்ரீலங்காப் படையினரும் துணைபோயிருந்தது பற்றிய பல செய்திகள் அந்த காலகட்டத்தில் வெளியாகி இருந்தன.

இந்தியப் படையினர் யாழ்நகரை நோக்கி ஸ்ரீலங்காப் படையினரின் உதவிகளையும் பெற்றிருந்த விடயம் அப்பொழுது மிகவும் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது. தமிழ் நாட்டில் எதிர்ப்புக்கள் உருவாகிவிடும் என்பதால் இந்தியப் படையினரின் நடவடிக்கைகளுக்கு ஸ்ரீலங்காப் படையினர் உதவிய விடயங்கள் மிகவும் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன.

ஆனாலும், இந்தியப் படையினருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஸ்ரீலங்காப் படையினர் பல சந்தர்ப்பங்களில் தம்மை மறந்த நிலையில் சிங்களத்தில் பேசிய தம்மை வெளிக்காண்பித்திருந்தார்கள்.

இந்தியப் படையினருக்கு வழி காண்பித்து அவர்களை அழைத்துச் சென்ற ஸ்ரீலங்காப் படையினருக்கு ஆங்கிலம் தெரியாது, ஹிந்தி தெரியாது, தமிழும் தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது சிங்களம் மட்டுமே.

மற்றய ஸ்ரீலங்காப்படை வீரர்களுடன் அவர்கள் சிங்களத்தில் பேசியதை வீடுகளில் மறைந்திருந்த பல தமிழ் மக்கள் கேட்டிருக்கின்றார்கள். தமிழ் மக்களுக்கு எதிராக இந்தியப்படையினர் மேற்கொண்டிருந்த படுகொலை நடவடிக்கைகளுக்கு தமிழ் மக்களின் ஜென்ம விரோதிகளான சிங்களப் படையினரையும் துணைக்கழைத்துச் சென்றதானது ஈழத்தமிழருக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட மிகப்பெரிய துரோகங்களுள் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடரும்...

nirajdavid@bluewin.ch