Monday 17 August 2015

கைது செய்யப்படுபவர்களின் உரிமைகள்

பேருந்து நிலையம் ஒன்றில் நாம் ஒரு குறிப்பிட்ட பேருந்திற்காக காத்து நிற்கும்போது அந்த பேருந்து நிற்காமல் சென்றுவிட்டால் அதன் ஓட்டுனரை திட்டித்தீர்த்து விடுவோம். ஆனால் அதே பேருந்தில் நாம் பயணம் செய்யும்போது அந்தப்பேருந்து, பயணிகள் காத்து நிற்கும்போதும் ஒரு பேருந்து நிலையத்தில் நிற்காமல் செல்லும்போது நாம் அற்ப மகிழ்ச்சி அடைவோம்.

இது ஒரு எளிய உதாரணம்தான்! இதேபோல வாழ்வின் பல நிகழ்வுகளிலும் நாம் இரட்டை அளவுகோல்களை, அதன் தீவிரத்தன்மை தெரியாமலே பயன்படுத்தி வருகிறோம். இவ்வாறான நிகழ்வுகளில் கைது சம்பவங்களையும் சேர்க்கலாம்.

நமக்கு தெரிந்த ஆனால் பிடிக்காத வேறு ஒருவர் கைது செய்யப்படும்போது நமக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். நமக்கு தெரியாத ஒரு நபர் கைது செய்யப்படும்போது எந்த உணர்ச்சிகளும் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் நமது வீட்டிற்கு ஒரு காவலர் வந்தால் நாம் கலங்கி விடுவோம். அதிலும் வரும் காவலர் நம் வீட்டில் உள்ள ஒருவரையோ அல்லது நம்மையோ கைது செய்வதற்கு வருவதாக தெரிந்தால் நம் நிலை மிகவும் பதற்றமாகிவிடும்.

ஆகவே, குற்றவியல் சட்டத்தை புரிந்து கொள்ளும் முயற்சியில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய அம்சம் கைது!

முன்னாள் முதல்வர்களை சில்லறை காரணங்களுக்காக நள்ளிரவில் கைது செய்து இழுத்துச் செல்வதும், கொலை வழக்கில் சிக்கிய மடாதிபதியை கவுரவமாக வீட்டுச்சிறையில் வைத்தால் என்ன? என்று உயர்நீதிமன்ற நீதிபதியே கேள்வி எழுப்புவதும் நாம் அறிந்ததுதான்.

எனவே நமக்கு வேண்டியவரோ, வேண்டாதவரோ கைது செய்யப்படும்போது, கைது செய்யப்படுவதற்கான நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கவனிப்பதும், கண்காணிப்பதும் மிகவும் அவசியம்.

கைது செய்யப்படும் நபர் குற்றவாளியா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியது நீதிமன்றம்தான். எனவே அவர் குற்றவாளி என சட்டப்படி தீர்மானிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படும்வரை அவரை நிரபராதியாகவே கருத வேண்டும். தவிர்க்க இயலாத சம்பவங்களில் ஒரு நபரை கைது செய்ய நேரிட்டாலும், அவரது மனித உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் உச்சநீதிமன்றம் கருத்தளவில் தெளிவாகவே இருக்கிறது.

மேற்கு வங்க உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றிய திரு. திலிப் குமார் பாசு என்பவர், பணி ஓய்வு பெற்ற பின்னர் மேற்கு வங்க சட்டப்பணி சேவை மையம் என்ற அமைப்பை நிர்வகித்து வந்தார்.

மேற்கு வங்க மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியில் இருந்தபோதிலும் காவல் நிலைய வன்முறைகள் மிகவும் அதிகமாக  நடைபெறுவதை கவனித்த (ஓய்வு பெற்ற) நீதிபதி திலிப் குமார் பாசு, இந்த பிரசினை குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 26-08-1986 அன்று கடிதம் ஒன்றை எழுதினார். மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற காவல் நிலைய வன்முறைகள் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளை இணைத்திருந்த நீதிபதி டி.கே.பாசு, காவல் நிலையங்களில் நடைபெறும் வன்முறைகள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த கடிதத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த கடிதத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் குல்தீப் சிங் மற்றும் ஏ.எஸ். ஆனந்த் ஆகியோர் பொதுநல வழக்காக ஏற்று விசாரணை நடத்தினர். இந்த வழக்கின் (AIR 1997 SC 610) தீர்ப்பு 18.12.1996 அன்று வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பில் கைது சம்பவம் குறித்து மிக விரிவாக ஆராயப்பட்டுள்ளது. பல்வேறு குற்றவியல் சட்ட சீர்திருத்தங்களுக்கான ஆலோசனைகள் விரிவாக அலசப்பட்டுள்ளன.

மேலும் அந்தத் தீர்ப்பில் கைது சம்பவத்தின்போது பின்பற்றவேண்டிய மிகவும் முக்கியமான 11 அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.  

1. கைது மற்றும் விசாரணை ஆகிய பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் அனைவரும் அவர்களின் பெயர் மற்றும் பதவியை குறிக்கும் பேட்ஜை அனைவரின் பார்வையில் தெளிவாக படும்வகையில் அணிந்திருக்க வேண்டும். கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும் அதிகாரிகள் குறித்த முழு விவரங்களும் ஒரு பேரேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்.

2.      ஒரு நபரை கைது செய்யும் அதிகாரி, கைது சம்பவத்தின்போதே அதற்கான குறிப்பை தயாரிக்க வேண்டும். அந்த குறிப்பில் கைது செய்யப்படும் நபரின் உறவினர் அல்லது அப்பகுதியில் வசிக்கும் மரியாதைக்குரிய நபர் ஒருவரிடம் சான்று ஒப்பம் பெற வேண்டும். கைது செய்யப்படும் தேதி மற்றும் நேரத்தை குறித்து கைது செய்யப்படும் நபரிடம் கையொப்பம் பெறலாம்.

3.            கைது குறிப்பில் சாட்சிக் கையொப்பம் இடுபவர் கைது செய்யப்படுபவரின் உறவினராகவோ, நண்பராகவோ இல்லாதபோது – கைது  செய்யப்படும் நபர் – தாம் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து உறவினருக்கோ, நண்பருக்கோ, நலனில் அக்கறை கொண்ட வேறெந்த நபருக்கோ தகவல் தெரிவிக்கும் உரிமை உண்டு. கைது செய்த அதிகாரி மற்றும் கைது செய்து வைக்கப்பட்டுள்ள இடம் குறித்தும் இந்த தகவலில் கூறப்படவேண்டும். இதற்கான வசதியை செய்து தரவேண்டியது கைது செய்யும் அதிகாரியின் கடமையாகும்.

4.    கைது செய்யப்படும் நபரின் உறவினரோ, நண்பரோ, நலனில் அக்கறை கொண்ட வேறெவரோ கைது செய்யப்படும் நகரம் அல்லது மாவட்டத்திற்கு வெளியே இருந்தால், குறிப்பிட்ட கைது சம்பவம் குறித்து சட்ட உதவி மையத்திற்கும், காவல் நிலையத்திற்கும் தந்தி மூலம் தகவல் தெரிவித்து, கைது செய்யப்படும் நபரின் உறவினர் அல்லது நண்பருக்கு 12 மணி நேரத்திற்குள் கைது குறித்த தகவல் தெரிவிக்கப்படவேண்டும்.

5.    கைது செய்யப்படும் நபருக்கு, அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து உறவினருக்கோ, நண்பருக்கோ தகவல் தெரிவிக்க உரிமை உள்ளது என்பதை கைது செய்யும் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.

6.    கைது செய்யப்பட்டுள்ளவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில், கைது சம்பவம் குறித்து அவரது எந்த உறவினருக்கு அல்லது நண்பருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்பது பதிவு செய்யப்படவேண்டும். மேலும், எந்த அதிகாரிகளின் பொறுப்பில் கைது செய்யப்பட்ட நபர் வைக்கப்பட்டுள்ளார் என்பதும் பதிவு செய்யப்படவேண்டும்.

7.   கைது செய்யப்பட்ட நபர் விரும்பினால் அவர் உடலில் உள்ள பெரிய மற்றும்  சிறிய காயங்கள் ஆய்வு செய்யப்பட்டு பதிவு செய்யப்பட வேண்டும். இந்த ஆய்வுக்குறிப்பில் கைது செய்யும் அதிகாரியும், கைது செய்யப்படும் நபரும் கையொப்பம் இட வேண்டும். இந்த ஆய்வுக்குறிப்பின் நகல் கைது செய்யப்படும் நபருக்கும் வழங்கப்பட வேண்டும்.

8.    கைது செய்யப்படும் நபரை 48 மணி நேரத்திற்கு ஒரு முறை பயிற்சி பெற்ற மருத்துவர் ஒருவர் மூலமோ, மருத்துவர்கள் குழு மூலமோ பரிசோதனை செய்ய வேண்டும். இதற்கான மருத்துவர் குழுவை அனைத்து மாநில மருத்துவ இயக்குனர்கள் அமைக்க வேண்டும்.

9.    கைது சம்பவம் குறித்து மேற்குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களும், கைது குறிப்புடன் உரிய அதிகார வரம்புடைய குற்றவியல் நடுவருக்கு உரிய காலத்தில் அனுப்பப்படவேண்டும்.

10. கைது செய்யப்படும் நபரிடம் விசாரணை நடைபெறும்போது, முழு விசாரணையின்போது முடியாது என்றாலும், குறிப்பிட்ட நேரத்தில் வழக்குரைஞரை சந்திக்க அனுமதிக்க வேண்டும்.

11.          நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் உள்ள காவல்நிலைய கட்டுப்பாட்டு அறைகளிலும், அந்தந்த அலுவலகங்களின் அதிகார வரம்புக்குள் வரும் காவல்நிலையங்களில் மேற்கொள்ளப்படும் கைது சம்பவங்கள் குறித்த தகவல்கள் 12 மணி நேரத்திற்குள் பெறப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

மேற்கூறப்பட்ட இந்த அம்சங்களை நாட்டில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் மாநில மொழிகளில் எழுதி பொதுமக்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளனர். 



ஆனால் நடைமுறையில் நாட்டில் உள்ள எந்த காவல்நிலையத்திலாவது இந்த உச்சநீதிமன்ற உத்தரவு எழுதி வைக்கப்பட்டுள்ளதா என்று நீங்களே முடிவு செய்யுங்கள்.

பொதுவாக ஒரு குறிப்பிட்ட அம்சம் குறித்து தெளிவான சட்டம் இல்லாத நிலையில் அந்த அம்சம் குறித்த நீதிமன்ற தீர்ப்பே சட்டமாக அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையில் டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவே சட்டமாகும். ஆனால் இந்த சட்டத்தை மதிப்பதில் எந்த மாநில அரசும் குறைந்த அளவு அக்கறைகூட காட்டவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் மேற்கூறப்பட்டவாறு டி.கே.பாசு வழக்கின் உச்சநீதிமன்ற உத்தரவை தமிழ்மொழியில் எழுதி வைக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கோ, காவல்துறைக்கோ காலக்கெடு எதுவும் விதிக்காமல் பயனற்ற தீர்ப்பு ஒன்றை வழங்கியது.  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்துவதிலோ, மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதிலோ சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உள்ள ஆர்வத்திற்கு இந்த வழக்கு உதாரணமாகும்.

இதற்கிடையில் கைது தொடர்பாக மத்திய சட்ட ஆணையம் மிக விரிவான விவாதங்களை நடத்தியது. நாடு முழுதும் குறிப்பிட்ட காலத்தில் நடத்தப்பட்ட கைது சம்பவங்கள் குறித்தும், அதில் இருந்த சட்டமீறல்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடைமுறையில் உள்ள குற்றவியல் சட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு, குற்றவியல் நடைமுறைச்சட்டத்தில் சீர்திருத்தங்கள் செய்வதற்கு பரிந்துரைகள் செய்யப்பட்டன.

இதன் ஒரு கட்டமாக 2005ம் ஆண்டில், குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின் 50வது பிரிவில் 50-ஏ என்று உட்பிரிவு புதிதாக சேர்க்கப்பட்டது. இதன்படி

(1)  ஒரு நபரை கைது செய்யும் அதிகாரி கைது செய்யப்படுபவரின் உறவினர் அல்லது நண்பரிடம், கைது குறித்தும் – கைது செய்யப்பட்டவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்க வேண்டும்.

(2)  மேற்குறிப்பிட்ட (நண்பருக்கோ, உறவினருக்கோ தகவல் தெரிவிக்கும்) உரிமை குறித்து கைது செய்யப்பட்ட நபருக்கு, அவர் காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட உடன், கைது செய்த காவல் அதிகாரி தெரிவிக்க வேண்டும்.

(3)  கைது சம்பவம் குறித்து, கைது செய்யப்பட்ட நபரின் உறவினருக்கோ அல்லது நண்பருக்கோ தகவல் தெரிவித்தது குறித்து காவல்நிலைய பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

(4)  கைது செய்யப்பட்ட நபரை குற்றவியல் நடுவரிடம் முன்னிலைப்படுத்தும்போது, கைது செய்யப்பட்ட நபரின் மேற்கூறப்பட்ட உரிமைகள் குறித்து அவருக்கு எடுத்துக்கூறப்பட்டதா என்பதை, தொடர்புடைய குற்றவியல் நடுவர் உறுதி செய்ய வேண்டும்.

மேற்கூறியவாறு காவல்துறையினரோ, குற்றவியல் நடுவரோ செயல்பட்டால் கைது செய்யப்படும் நபரின் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படும் என்பதில் ஐயம் இல்லை.

ஆனால் கைது செய்யப்படுபவரின் உரிமைகள் குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில் உயர்நீதிமன்றமே ஆர்வம் காட்டாத நிலையில், உயர்நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் செயல்படும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், கைது செய்யப்படுபவரின் உரிமைகளை பாதுகாக்குமா என்பது கேள்விக்குறியே!

எனினும் மனித உரிமை என்பதே அதை பயன்படுத்தும் விழிப்புணர்வுடையோர் எண்ணிக்கை அதிகரிக்கும்போதுதான் முழுமை அடையும். எனவே கைது செய்யப்படுவோரின் உரிமைகள் குறித்த முழுமையான விழிப்புணர்வும், இதை வலியுறுத்தும் செயல்பாடுகளுமே நீதிமன்றத்தையும் சட்டத்தின்பாதையில் செலுத்தும்.

Monday 10 August 2015

தமிழினப் படுகொலையாளி இந்தியா

1989 ஆம் ஆண்டுஇ ஆகஸ்டு மாதம் 2 ஆம் நாள் வல்வெட்டித்துறை சந்தைச் சதுக்கத்தில் காலை 11 மணிக்கு யாரும் எதிர்பாராத விதமாக விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 6 இந்தியப் படை வீரர்கள் இறந்ததுடன் 11 பேர் காயம் அடைந்தனர்.


இந்நகழ்ச்சியைத் தொடர்ந்து வல்வெட்டித்துறையைச் சுற்றி இருந்த அன்று இராணுவ முகாம்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இந்திய இராணுவத்தினர் வெறியுடன் புறப்பட்டு வந்து வல்வெட்டித்துறையைச் சுற்றி வளைத்தனர். உடனடியாக ஊரடங்குச் சட்டத்தைப் பிரகடனப்படுத்தினர். தொடர்ச்சியாக அன்று நாள்களுக்கு ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டது. வீடுகளை விட்டு வெளியே வராமல் அச்சத்துடன் பதுங்கியிருந்த மக்களை வீட்டுக் கதவுகளை உடைத்து உள்ளே புகுந்து பதறப் பதறச் சுட்டுக் கொன்றார்கள். மொத்தம் 63 பேர் இவ்விதம் படுகொலை செய்யப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு மருத்துவ உதவி செய்வதற்கு முன்வந்த பிரான்சு மருத்துவக் குழுவினரை ஊருக்குள் நுழையவே இந்திய இராணுவம் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து அன்று நாள்களாக இராணுவத்தினர் ஊரைச் சுற்றி முற்றுகையிட்டு இருந்ததால் இறந்து போனவர்களின் பிணங்களைக்கூட அப்புறப்படுத்த முடியவில்லை. பிணங்கள் அழுகிப்போன நிலையில் அந்தந்த வீடுகளுக்குள்ளேயே வைத்து உறவினர்களால் எரிக்கப்பட்டன. கணவர் உடலை மனைவியும்இ மனைவியின் உடலைக் கணவரும்இ பெற்றோரின் உடலைப் பிள்ளைகளும்இ பிள்ளைகளின் உடலைப் பெற்றோரும் எரிக்க வேண்டிய அவலத்திற்கு ஆளாயினர்.


மொத்தம் 123 வீடுகள் அடியோடு நாசமாக்கப்பட்டன. 45 கடைகள் முழுமையாக எரிக்கப்பட்டுச் சாம்பலாயின. 12 மீன்பிடி படகுகள் நாசம் செய்யப்பட்டன. 176 மீன்பிடி வலைகள் எரிக்கப்பட்டன. பல வீடுகளில் தங்க நிகைகள்இ பணம்இ மின்னணுப் பொருள்கள் இந்திய இராணுவத்தினரால் கொள்ளையடிக்கப்பட்டன. ஏராளமான பெண்கள் மிக மோசமான முறையில் கற்பழிக்கப்பட்டார்கள்.


இந்த நிகழ்ச்சி நடப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் இந்திய இராணுவ பிரிகேடியர் சங்கர் பிரசாத் என்பவர் மக்கள் குழு உறுப்பினர்களைக் கூட்டிப் பின்வருமாறு கொக்கரித்தாராம்.


'இந்திய இராணுவம் மீது புலிகள் தாக்குதல் மேற்கொண்டால் உங்கள் ஊரை அடியோடு எரிப்பேன். நூற்றுக்கணக்கில் மக்களைச் சுட்டுத் தள்ளுவேன். இராமாயணத்தில் இலங்கை எரிக்கப்பட்டதைப் போல மீண்டும் இலங்கை எரியும். எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. நாங்கள் உலகின் 4 ஆவது பெரிய இராணுவம்"


அவர் மிரட்டியதைப் போலவே விரைவில் நடந்தது. அழகிய வல்லை நிகரம் சுடுகாடானது.


அந்த சோக வரலாற்றினைக் கீழே தந்துள்ளேன்.


மினி வீடியோ சினிமா கொட்டகை ஒன்றில் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த சுமார் 30 பேரை வெளியே கொண்டுவந்து நடுத்தெருவில் உச்சி வெயிலில் உட்கார வைத்தார்கள். அங்கு நின்ற ஒரு சீக்கிய சிப்பாய் திடீர் என இயந்திரத் துப்பாக்கி மூலம் படபடவென்று சுட்டான். அண்மையில் திருமணம் செய்துகொண்ட இராஜரத்தினம் என்பவர் அந்த இடத்திலேயே துடிதுடித்து மாண்டார். அவர் அருகில் இருந்த கருணாநந்தராஜா என்பவர் படுகாயத்துடன் கீழே விழுந்தார். அவர் மார்பில் இருந்து இரத்தம் பெருக்கெடுத்து ஓடியது. அந்தப் பயங்கரங்களைக் கண்டு மற்றவர்கள் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். மற்றொரு இந்திய இராணுவ சிப்பாய் அங்கிருந்த கடைகள் மீது மண்ணெண்ணையை ஊற்றித் தீயை வைத்தான். இதற்கிடையில் சடையாண்டி கோயிலுக்குள் இருந்த பெண்கள்இ குழந்தைகள் உட்பட 20 பேரை வேறு சில சிப்பாய்கள் அடித்து இழுத்துக்கொண்டு வந்தார்கள். அவர்கள் உடலிலிருந்து இரத்தம் பீறிட்டு வந்தது. அப்போது ஒரு ஜீப் வேகமாக வந்து நின்றது. அதிலிருந்து கீழே குதித்த சிப்பாய்கள் திடீர் என்று நாலாபுறமும் தானியங்கித் துப்பாக்கிகளினால் சடசடவெனச் சுட்டார்கள். 40 வயதான சிவபாக்கியம்இ 60 வயதான தங்கராஜா ஆகியோர் அந்த இடத்திலேயே துடிதுடித்துச் செத்தார்கள். முப்பதுக்கும் அதிகமானவர்கள் பலத்த காயத்துடன் கீழே சரிந்து விழுந்தார்கள். காயம் அடைந்தவர்கள் தண்ணீர்இ தண்ணீர் என்று கதறிக்கொண்டு இருந்தார்கள். இரத்த வெறி பிடித்த இந்தியச் சிப்பாய்கள் அதைப்பற்றிக் கவலைப்படாமல் மேலும் மேலும் தங்கள் நரவேட்டையைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார்கள்.


சிவபுர வீதி என்னும் தெருவை நான் பார்வையிட்டேன். அங்கு 10 வீடுகள் முழுவதுமாக எரிந்து நாசம் ஆகிக் கிடப்பதைக் கண்டேன்.


கோட்சேயின் மறுபிறவி


இந்திய இராணுவ சிப்பாய்கள் வெறிக்கு இந்தியத் தலைவர்களின் படங்கள் கூடத் தப்பவில்லை. நெடியகாடு என்னும் பகுதியில் கணபதி படிப்பகம் ஒன்று உள்ளது. அதில் ஐந்து அடி உயரமான மகாத்மா காந்தியின் உருவப்படம் தொங்க விடப்பட்டு இருந்தது. இந்திய சிப்பாய்கள் அந்தப் படிப்பகத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்து தங்கள் தேசத் தந்தையின் படத்தையும் உடைத்து எரித்துவிட்டுச் சென்றார்கள். காந்தி அடிகளின் எரிந்து கிடந்த அலங்கோலமான படத்தை நானும் பார்த்தேன். காந்தியைச் சுட்ட கோட்சே மறுபிறவி எடுத்து வந்து காந்தியின் படத்தைக்கூட விட்டுவைக்கவில்லை.


அதைப் போல வர்ணகுலசிங்கம் அரசரத்தினம் என்னும் ஒரு வணிகன் பெரிய வீடு ஒன்றும் நாசப்படுத்தப்பட்டு இருந்தததை நான் பார்த்தேன். அவர் ஓர் இந்திய பக்தர். இந்தியத் தூதுவராக இருந்த தீட்சித்தின் நெருங்கிய நண்பர். தமிழீழ மக்களின் பிரச்சினைகளை இந்தியாவினால்தான் தீர்க்க முடியும் என்று உறுதியாக நம்பியவர். 1987 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர்தம் மனைவி பத்மலோசினிஇ தம் 5 பெண் குழந்தைகளுடன் தனியாக இருந்து குடும்பத்தை எப்படியோ சிரமப்பட்டு நடத்திக் கொண்டிருந்தார். அந்தப் பெரிய வீட்டில் வரவேற்பறையில் இந்திரா காந்தியின் ஆளுயர மூவர்ணப்படம் தொங்கவிடப்பட்டு இருந்தது. அந்த வீட்டிற்குள் புகுந்த இந்திய இராணுவத்தினர் அதைப் பார்த்துக்கூடத் தங்கள் கொடுஞ்செயலை நிறுத்தவில்லை. வீட்டையே கொளுத்திவிட்டுச் சென்றார்கள்.


வித்தனை ஒழுங்கை என்னும் தெருவில் ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து கண்டபடி சுட்டு 8 பேரைப் படுகொலை செய்துஇ ஏராளமானவர்களைப் படுகாயப்படுத்தி விட்டுச் சென்றார்கள். இறந்தவர்களின் சடலங்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு நடுவே மற்றவர்கள் அன்று நாள்கள்வரை அப்படியே பதுங்கி இருக்க வேண்டியிருந்தது. வல்வெட்டித்துறை கிராமிய வங்கி முற்றிலுமாக எரிந்து சாம்பல் மேடாகிக் கிடந்தது. எந்தத் தெருவுக்கு நான் சென்றபோதிலும் அந்தந்த தெருக்களில் இந்திய இராணுவம் இழைத்த அட்டூழியங்களைப் பற்றியும்இ படுகொலைகளைப் பற்றியும் கண்ணீர்க் கதைகளை மக்கள் கூறினார்கள்.


வல்வெட்டித்துறையில் மட்டுமில்லாமல் அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊரணிஇ பொலிகண்டி ஆகிய இடங்களிலும் இந்திய இராணுவத்தினர் வன்முறை வெறியாட்டம் நடத்தினார்கள். ஊரணி அரசு மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான மக்கள் அடைக்கலம் புகுந்திருந்தார்கள். இந்திய இராணுவம் அந்த மருத்துவமனையைச் சுற்றி வளைத்துக்கொண்டு யாரையும் வெளியே செல்லவிடவில்லை. அதே நேரத்தில் வீடுகளில் இருந்தும் கோயில்களில் இருந்தும் பலர் இராணுவத்தினரால் இழுத்து வரப்பட்டு மருத்துவமனைக்கு முன்னால் உள்ள தார்ச் சாலையில் உட்கார வைக்கப்பட்டு இருந்தனர். மருத்துவமனைக்கு உள்ளே இருந்தவர்கள் வெளியில் உட்கார வைக்கப்பட்டவர்களின் கதி என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் இருந்தார்கள். நீண்ட நேரத்திற்குப் பிறகு அனைவரும் முகாமுக்குக் கொண்டு போகப்பட்டனர்.


வல்வெட்டித்துறை சந்தையில் இருந்து 100 மீட்டர் தெற்கே தெணிய அம்பை என்ற இடத்தில் பல வீடுகள் எரிக்கப்பட்டு அந்தத் தீ மேலும் பரவிக்கொண்டே இருந்தது.


இராணுவத்தினர் போய்விட்டதாக நினைத்து அங்கிருந்த மக்கள் தண்ணீரை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். வல்லை மக்கள் குழுவின் செயலாளர் ஆனந்தராஜாவும் அங்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஒத்துழைத்தார். அப்போது உடுப்பிட்டியில் இருந்து இந்திய இராணுவச் சிப்பாய்கள் 30 பேர் திடீர் என அங்கு வந்து சேர்ந்தனர். தீயை அணைக்க முயற்சி செய்து கொண்டிருந்த ஆனந்தராஜாவை அவர்கள் பார்த்துவிட்டார்கள். அவருடன் சேர்ந்து மேலும் 8 பேரைப் பிடித்துக் கைதிகளாகத் தங்களுடன் இழுத்துச் சென்றார்கள். அப்போது கேப்டன் பர்க் என்னும் இந்திய அதிகாரி அங்கு வந்தார். அவர் ஏற்கெனவே ஆனந்தராஜாவிற்கு நன்கு அறிமுகமானவர். எனவே அவரிடம் ஏதோ முறையிடுவதற்காக ஆனந்தராஜா முயன்றபோது தன்னிடம் இருந்த துப்பாக்கியை அவர் மார்புக்கு நேரே தூக்கிப் பிடித்தார். ஆனந்தராஜ் பாடசாலை ஒன்றின் முதல்வர்இ மக்கள் குழுவின் செயலாளர்இ இந்திய இராணுவத்திற்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருந்து செயல்பட்டவர். ஒரு முறை பருத்தித்துறை இந்திய இராணுவ முகாமைச் சேர்ந்த சிப்பாய் ஒருவனைப் புலிகள் கைது செய்து கொண்டுபோய் விட்டார்கள். அவரை மீட்பதற்கு வடமராட்சி முழுவதும் இராணுவத்தினர் சல்லடை போட்டுத் தேடினார்கள். ஆனாலும்இ அவர்களால் சிப்பாயை மீட்க முடியவில்லை. அந்த Nநிரத்தில் இந்திய அதிகாரி ஆனந்தராஜாவிடம் மன்றாடினார். புலிகளின் வடமராட்சிப் பொறுப்பாளரான தீபன் என்பவருடன் தொடர்புகொண்டு அந்தச் சிப்பாயை விடுவிக்கச் செய்து இந்திய இராணுவ அதிகாரிகளிடம் ஆனந்தராஜாவும் மக்களும் ஒப்படைத்தார்கள்.


இப்படியெல்லாம் செய்த ஆனந்தராஜாவையே அவர்கள் துச்சமாக மதித்தார்கள். ஆனந்தராஜாவையும்இ அவருடன் கைது செய்யப்பட்ட மற்றவர்களையும் அழைத்துச் சென்று உடுப்பிட்டி இராணுவ முகாமில் மிருகத்தனமாகத் தாக்கினார்கள். நான்கு சீக்கிய சிப்பாய்கள் ஆனந்தராஜாவைச் சுற்றிக்கொண்டு உருளைக் கட்டைகளால் மாறி மாறித் தாக்கினார்கள். அவர் தலையில் இருந்து குருதி ஓடியது. முகத்தில் ஆழமான காயங்கள் ஏற்பட்டன. கீழே விழுந்த அவர் தொண்டையின் மீது ஒரு மரக்கட்டையை வைத்துச் சீக்கிய சிப்பாய் ஒருவன் அதன் மீது ஏறி நன்றான். தான் இறக்கப்போவதை உணர்ந்துவிட்ட நேரத்தில் அவர் அவனைப் பிடித்துத் தள்ளியதும் ஆத்திரம் கொண்ட அந்தச் சிப்பாய் அவர் முகத்தில் மாறி மாறி மிதித்தான். அவர் மூச்சு திணறி மயங்கிவிட்டார். அவர் இறந்துவிட்டதாகக் கருதி அந்த வெறியர்கள் விலகிச் சென்றார்கள். சிறிது நேரத்தில் அங்கு வந்த இராணுவ டாக்டர் கேப்டன் சௌத்ரி ஆனந்தராஜாவை ஏற்கெனவே அறிந்தவர். அதனால் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று தக்க சிகிச்சை செய்து அவர் உயிரைக் காப்பாற்றினார்.


மறுநாள் காலை மருத்துவமனையில் படுத்திருந்த ஆனந்தராஜாவை டாக்டர் கேப்டன் சௌத்திரி 'உடல்நிலை விசாரிப்பதுபோல" வந்தார். தலையிலே பட்ட காயத்திற்கு மருந்து போடப்பட்டு இருந்தது. முகம் வீங்கி இருந்தது. வலது கன்னத்தில் ஆழமான காயம் இருந்ததால் எழுந்திருக்க முடியவில்லை. படுத்திருந்தார். டாக்டருடன் வந்த கேப்டன் கர்பத்சிங் என்னும் சீக்கியன் அவரின் தலைமயிரைப் பிடித்துத் தூக்கி நிமிர்த்தினான். பின்பு இந்தியில் ஏதோ திட்டினான். 'போரில் இரண்டு பக்கமும் இழப்புகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததுதான்இ ஆனால்இ போரில் எந்தச் சம்பந்தமும் இல்லாத பொது மக்களிடம் நீங்கள் நடந்து கொண்ட முறை காட்டுமிராண்டித்தனமானதுஇ கொடூரமானது" என ஆனந்தராஜா பதில் கூறினார். அதைக் கேட்ட டாக்டரின் முகம் கோபத்தினால் சிவந்தது.


'புலிகளின் ஆயுதக் கிடங்குகள் இருக்கும் இடத்தை நீங்கள் காட்டிக் கொடுத்தால் உங்கள் உயிரைக் காப்பாற்றும்படி மேலதிகாரிகளுக்கு நான் சிபாரிசு செய்வேன். நீங்களும் குடும்பஸ்தர்இ பள்ளியின் முதல்வராக இருப்பவர்இ எதற்காக வீணாக உயிரை இழக்க வேண்டும்" என்றார்.


அவரது வார்த்தைகளைக் கேட்டதும் ஆனந்தராஜா அந்த வேதனையின் நடுவிலும் சிரித்துக்கொண்டே 'டாக்டர் நான் கடவுளை பிரார்த்திக்கப் போகிறேன். இவ்வாறு கூறியதும் டாக்டர் சௌத்திரி வேகமாக விலகிச் சென்றார்.


அவர் போய்ச் சேர்ந்த சில நிமிடங்களில் பிரிகேடியர் சங்கர் பிரசாத்இ கர்னல் அவுஜியாஇ கர்னல் சர்மா ஆகியோர் ஜீப்பில் வந்து சேர்ந்தனர். நேராக ஆனந்தராஜா படுத்திருந்த கட்டிலை நோக்கி வந்தார்கள். அவரைப் பார்த்ததும் ஆச்சரியப்படுபவர் போல் பிரிகேடியர் நடந்தார்.


'என்ன மிஸ்டர் ஆனந்தராஜா என்ன நடந்தது. உங்களை எதற்காக இங்குக் கொண்டு வந்தார்கள்" என்று கேட்டார். என்னை ஏன் கொண்டுவந்தார்கள் என்பது எனக்கே தெரியாது. என்னுடைய கோலத்தைப் பாருங்கள் என்று கூறிக் குருதியில் தோய்ந்து உலர்ந்து இருந்த தனது சட்டைஇ வேட்டிஇ குருதி ஓடி உறைந்து போயிருந்த தலை எல்லாவற்றையும் பிரிகேடியருக்குக் காட்டினார்.


'மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாடுதானா உங்கள் நாடு? சே! என்னால் நம்பவே முடியவில்லை". என்று வேதனையோடு ஆனந்தராஜா கூறியபோது அந்தப் பிரிகேடியர் பின்வரும் பதிலைச் சொன்னார்.


'மிஸ்டர் ஆனந்தராஜாஇ வெரி சாரிஇ உங்களைத் தற்செயலாகத்தான் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்காக மனம் வருந்துகிறேன். உங்களுடைய சொல்லைப் புலிகள் கேட்கமாட்டார்கள். எப்படியாவது அவர்களை நாங்கள் அழித்து விடுவோம். அதற்கு உங்களைப் போன்ற படித்தவர்கள் தான் உதவி செய்ய வேண்டும். புலிகள் ஒளிந்திருக்கும் இடங்களை நீங்கள் கூறினால் உங்களைப் பத்திரமாக இந்தியாவுக்கே அனுப்பி அங்கே நீங்களும் உங்கள் குடும்பம் நிம்மதியாக வாழ்வதற்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்கிறோம். நீங்கள் பயப்படத் தேவையில்லை. உங்கள் முகத்தை மறைத்து முகமூடி போட்டு அழைத்துச் செல்கிறோம். எங்களுடைய ஜீப்பில் வந்தே புலிகளின் மறைவிடங்களைக் காட்டிக் கொடுக்கலாம்" என்றார்.


பிரிகேடியரின் இந்தக் கோமாளித்தனமான வார்த்தைகளைக் கேட்டு ஆனந்தராஜா எரிச்சலுடன் பதில் கூறினார்.


'அத்தகைய துரோகத்தை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன். புலிகளை அழிக்க நினைப்பதை மறந்துவிட்டு அவர்களுடன் பேசிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள். அதுதான் உங்களுக்கும் உங்கள் நாட்டிற்கும் நல்லது. அதை விட்டுவிட்டுச் சிறு பையன்களிடம் கூறுவது போல என்னிடம் கூறாதீர்கள்." என்று கூறிவிட்டு அவர் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார்.


பிரிகேடியர் அருகே நின்ற கர்னல் சர்மா 'நாங்கள் சொன்னபடி செய்யாவிட்டால் உம்மை காங்கேசன்துறை முகாமுக்கு அனுப்பிவிடுவோம்" என்று மிரட்டினார்.


புலிகள் அல்லது அவர்களின் ஆதரவாளர்கள் என்று சந்தேகத்தின் பேரில் சிறைப்பிடிக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சித்திரவதை முகாமான காங்கேசன்துறை முகாமுக்கு அனுப்பிவிடுவார்கள். அங்கு 750 சதுர அடி கொண்ட ஒரு வீட்டில் 150 பேரை அடைத்து வைப்பார்கள். ஒரே ஒரு மலக்கூடத்தைத்தான் அத்தனை பேரும் பயன்படுத்த வேண்டும். சாப்பாடு ஒழுங்காக அளிக்கப்படுவது இல்லை. கைதிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5ஃஸ்ரீ வழங்கப்படவேண்டும் என்பது விதிமுறை ஆகும். அனால்இ கைதிகளிடம் கையெழுத்து பெற்றுக் கொள்வார்களே தவிர பணத்தைக் கொடுக்க மாட்டார்கள். இராணுவ அதிகாரிகளே அவற்றை எடுத்துக் கொள்வார்கள். யாராவது தப்பித் தவறி இதைத் தட்டிக் கேட்டால் அன்று முழுவதும் அவருக்கு அடியும் உதையும்தான் கிடைக்கும்.


முன்பொரு நாள் காங்கேயன்துறை முகாமுக்கு அங்குள்ள கைதிகளைப் பார்வையிட்டு அவர்களது குறைகளைக் கேட்டு ஏதாவது உதவி செய்வதற்காகச் சென்ற மக்கள் குழுவில் ஆனந்தராஜாவும் ஒருவராக இருந்தார். அந்தக் கொடுமையான முகாம் பற்றி அவருக்கு ஏற்கெனவே தெரியும். அதனால்தான் அவரை அந்த முகாமுக்கு அனுப்பப் போவதாக அதிகாரிகள் மிரட்டினார்கள்.


'அந்த முகாமுக்கு அனுப்புவதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நீங்கள் என்னைச் சுட்டுக் கொன்றால் கூட நீங்கள் கூறும் கீழ்த்தரமான வேலைகளை நான் செய்யப்போவது இல்லை" என ஆனந்தராஜா பதில் கூறினார்.


தங்களின் மிரட்டல் பலிக்காத கோபத்தில் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். அவர் துயரம் அத்துடன் ஓயவில்லை. ஆகஸ்ட் 4 ஆம் நாள் அன்று காலை 10 மணி அளவில் டாக்டர் சௌத்திரி மீண்டும் வந்தார். ஆனந்தராஜாவிடம் ஒரு கோப்பைக் காட்டிக் கையெழுத்து போடும்படி வற்புறுத்தினார்.


'மிஸ்டர் ஆனந்தராஜா இங்கே அடைத்து வைக்கப்பட்டவர்களுள் 6 பேர் இறந்து போனார்கள். அவர்களின் அடையாளம் தெரியாததால் அவர்களை இங்கேயே தகனம் செய்துவிட்டோம்"


'டாக்டர்இ அவர்கள் இங்கே கொண்டு வரும்போது நின்றாகத்தானே இருந்தார்கள். அவர்கள் விடுதலைப் புலிகள் அல்லவே. அப்பாவிப் பொது மக்கள்தானேஇ திடீர் என அவர்கள் எப்படி இறந்தார்கள்" என்று ஆனந்தராஜா கேட்டார்.


ஆனால் டாக்டர் எவ்விதப் பதிலும் சொல்லாமல் ஆறு பேரை எரித்ததற்கு ஆதாரமாக அவரிடமிருந்து கையெழுத்தைக் கட்டாயமாகப் பெற்றுக் கொண்டார்.


ஒரு மரண வீட்டில் துக்கம் கொண்டாடுவதற்காக உறவினர்கள் வந்து கூடியிருந்தார்கள். திடீர் என அந்த வீட்டை இந்திய இராணுவம் சுற்றி வளைத்துக் கொண்டது. ஆண்கள் அனைவரையும் வயது வேறுபாடு இல்லாமல் வெளியே இழுத்து வந்து வரிசையாக நிறுத்தி வைத்தார்கள். நீங்கள் எல்லோரும் புலிகள்இ உங்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று வெறிபிடித்தவன் போல ஒரு சிப்பாய் கத்தினான். துக்க வீட்டில் இருந்த பெண்கள் எல்லோரும் வெளியே ஓடிவந்து சிப்பாய்களின் கால்களில் விழுந்து கதறினார்கள். அனால்இ அந்த மூர்க்கர்களின் மனம் இரங்கவில்லை.


ஆண்களையெல்லாம் அடித்து இழுத்துக்கொண்டு முச்சந்தியை நோக்கி நடந்தார்கள். அவர்களுக்கு பின்னால் அழுது கொண்டும் புலம்பிக்கொண்டும் ஓடிவந்த பெண்களை 'பூட்ஸ்" கால்களினால் உதைத்தும்இ துப்பாக்கிக் கட்டைகளினால் அடித்தும் விரட்டினார்கள். வல்வெட்டித்துறைச் சந்தியை அடைந்ததும் அவர்களை ஒரு சாலையில் உட்கார வைத்தார்கள். முதல் நாள் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் ஊதிப்போய் அங்கேயே கிடந்தன. சிலருடைய தலைமயிரைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் எதிர்ப்புறமாக எரிந்த கடை ஒன்றின் முன்னால் நிற்க வைத்தார்கள். அடுத்து என்ன நிடக்குமோ என்ற அச்சம் எல்லோரையும் ஆட்டிப் படைத்தது. அங்கு நின்ற மற்றொரு சிப்பாய் அவ்வாறு நிறுத்தப்பட்ட ஆறு பேரையும் சுட்டுத் தள்ளினான். அந்த ஆறு பேரும் அந்த இடத்திலேயே அவர்களுடைய உறவினர்கள் பார்த்துக் கொண்டிருக்க துடிதுடித்து இறந்தார்கள்.


மனிதர்கள் மட்டுமல்லாமல் பறவைகளையும் இந்திய இராணுவம் விட்டுவைக்கவில்லை. வல்வெட்டித்துறை இராணுவ முகாமிலிருந்து சிறிது தொலைவில் பூச்சிபுத்தான் என்ற இடத்தில் இருந்த கோழிப்பண்ணையை இந்திய இராணுவம் கொளுத்தியதன் விளைவாக அங்கிருந்த 500க்கும் மேற்பட்ட கோழிகள் எரிந்து கருகிப் போயின.


வல்வெட்டித்துறைப் பிள்ளையார் கோயில் ஊரிலிருந்து சிறிது ஒதுக்குப்புறத்தில் அமைந்து இருக்கிறது. பொதுவாக எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் மக்கள் அங்கே ஓடி அடைக்கலம் புகுவார்கள். அன்றும் ஏறக்குறைய 400 பேர் வரையில் அந்த ஆலயத்திற்குள் தஞ்சம் புகுந்து இருந்தனர். அவர்களையும் இந்திய இராணுவம் விட்டுவைக்கவில்லை.


கோவில் என்றும் பார்க்காமல் பூட்ஸ் கால்களோடு வெறித்தனமாகப் பாய்ந்து ஓடி வந்தார்கள். உள்ளே நுழைந்த அவர்களின் கண்களுக்கு முதலில் பட்டவர்கள் கோயில் அர்ச்சகர்கள்தாம். அந்த இரண்டு அர்ச்சகர்களையும் கோவிலுக்குள் வைத்தே பலமாகத் தாக்கினார்கள். பிறகு அங்கிருந்த இளைஞர்களையெல்லாம் தேடிப்பிடித்து அடித்து வெளியே சந்திக்குக் கொண்டு வந்தார்கள். மேலும்இ மற்றப் பகுதிகளில் பிடிபட்டவர்களையும் அங்கே கூட்டி வந்தார்கள். கொதிக்கும் வெயிலில் அங்கிருந்து உருண்டுகொண்டே உடுப்பிட்டியில் இருந்த இந்திய இராணுவ முகாம் நோக்கிச் செல்லுமாறு ஆணையிட்டார்கள். கொதிக்கும் தார்ச்சாலையின் சூட்டைப் பொறுக்கமுடியாமல் வேதனையுடன் உருண்டு உருண்டு சென்று கொண்டிந்த மக்களை மரக்கட்டைகளால் அடித்துக் கொண்டே சென்றார்கள்.


உடுப்பிட்டி முகாமிலும் மிகக் கொடுமையான சித்திரவதைகள் நடந்தன. அதன் விளைவாக இறந்த 11 பேரின் சடலங்களை முகாமுக்குள்ளேயே மற்றக் கைதிகள் முன்னால் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினார்கள்.


வல்வெட்டித்துறையில் அன்று நாள்களாகத் தொடர்ந்து நரவேட்டை நடத்திய இந்திய இராணுவம் அச் செய்திகளை அடியோடு மறைத்தது. இந்திய இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நிடந்த மோதலில் சற்றும் எதிர்பாராத விதமாகப் பொதுமக்கள் 24 பேர் கொல்லப்பட்டனர்.


விடுதலைப் புலிகள் தாக்குதல் மேற்கொண்டதன் விளைவாகச் சில வீடுகளும்இ கடைகளும் சேதம் அடைந்தன. இம்மோதலில் 6 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர் என்று இந்திய இராணுவம் கூறிய அப்பட்டமான பொய்யை இந்திய வானொலியும்இ தொலைக்காட்சியும்இ பத்திரிகைகளும் வெளியிட்டன. இந்தக் கொடுமைகளை அடியோடு மறைப்பதற்கு முயற்சி செய்தன. ஆனால்இ அன்னிய நாடுகளைச் சேர்ந்த பத்திரிகைகள்தாம் முதன் முதலாக இந்திய அக்கிரமங்களை அம்பலப்படுத்தின.


அதைப் போல சர்வதேச மன்னிப்புச் சபைஇ ஆசியா வாட்ச் என்னும் உலக மனித உரிமை அமைப்புகள் வல்வெட்டித்துறைப் படுகொலைகளைப் பற்றி விசாரணை நடத்தி இந்திய இராணுவத்தைக் கண்டனம் செய்தன.
வல்வெட்டித்துறை மக்கள் குழுவின் செயலாளரும் இந்திய இராணுவத்தின் பாதிப்புக்கு நேரிடையே ஆளானவருமான ஆனந்தராஜா அவர்கள் தலைமையில் மக்கள் குழு ஒன்று சென்னைக்கு வந்து சகல அரசியல் தலைவர்களையும் சந்தித்து இந்தக் கொடுமைகளை அம்பலப்படுத்தியது.


இக்குழு டெல்லிக்கும் சென்று பல அரசியல் தலைவர்களையும் சந்தித்து உண்மையை விளக்கிற்று. ஜனதா தளப் பொதுச் செயலாளரான ஜார்ஜ் பெர்ன்னாண்டஸ் இந்தப் பிரச்சினையை அம்பலப்படுத்துவதில் முன்னின்றார். வெறும் வார்த்தைகளோடு அவர் நின்றுவிடவில்லை. வல்வெட்டித்துறைப் படுகொலை பற்றிய ஆதாரங்கள்இ புகைப்படங்கள் ஆகியவற்றைத் தொகுத்து ஆங்கிலத்திலும்இ தமிழிலும்இ இந்தியிலும் நூலாக வெளியிட்டு இந்தியா முழுவதிலும் மட்டுமன்றுஇ உலகெங்கிலும் அனுப்பி இராஜீவ் அரசின் முகமூடியைக் கிழித்து எறிந்தார். அவரின் இந்த முயற்சிக்குத் தமிழ் மக்கள் கடமைபட்டுள்ளார்கள்.



யாழ். மருத்துவமனை


27.2.90 அன்று யாழ். மருத்துவமனைக்குச் சென்றேன். இந்திய இராணுவம் செய்த கொடுமைகளுக்கெல்லாம் தலையாய கொடுமை இங்குதான் நடத்தப்பட்டது. எந்த நாடாக இருந்தாலும் அந்த நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் இராணுவமோஇ காவல்துறையோ உள்ளே புகக்கூடாது. போர் விதிகளில் மிக முக்கியமானதாக இதை உலகெங்கும் கடைப்பிடித்து வருகிறார்கள். இந்தப் போர் விதியை இந்திய இராணுவம் அடியோடு மீறியது.


யாழ். நகரின் ஒரு பகுதியில் விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு ஆளானதால் ஆத்திரம் கொண்ட இந்திய இராணுவம் யாழ். மருத்துவமனையுள் வெறியுடன் புகுந்தது. அங்கிருந்த பலரைச் சுட்டுக் கொன்றது. இந்தக் கொடிய நிகழ்ச்சியைப் பற்றி நேரில் விசாரிக்க நேரின் அங்கு சென்றேன். அங்குள்ள டாக்டர்கள் என்னை அன்போடு அழைத்துச் சென்று நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடங்களை எனக்குக் காட்டினார்கள்.


இந்தியப் படை உள்ளே சுட்டுக்கொண்டே வந்தபோது மாடி அறை ஒன்றில் இருந்த டாக்டர்கள் இந்த ஒலி கேட்டுக் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார்கள். 'இது மருத்துவமனைஇ நாங்கள் டாக்டர்கள்" என அவர்கள் அலறியதற்கு இந்தியப் படை செவிசாய்க்கவில்லை. மாடிப்படிகளிலேயே அவர்களைச் சுட்டுத் தள்ளினார்கள். மருத்துவமனையின் பல பகுதிகளில் கண்மூடித்தனமாகத் துப்பாக்கியால் சுட்டார்கள். இதன் விளைவாக டாக்டர்கள்இ செவிலியர்கள் 21 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.


நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் 109 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அந்த மருத்துவமனையில் 89 ஆகிய இரண்டு பிரிவுகள் முழுமையாகச் சேதம் அடைந்துவிட்டன. படுகொலை செய்யப்பட்ட டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பெயர்கள் எழுதப்பட்ட பலகை மருத்துவமனையின் முகப்பில் தொங்கவிடப் பட்டுள்ளது. இஃது இந்திய இராணுவத்தின் கொடுமையை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. அந்த அதிர்ச்சியில் இருந்து அந்த மருத்துவமனை டாக்டர்களும் செவிலியர்களும் இன்னமும் மீளவில்லை என்பதையும் நேரின் பார்த்தேன்.




தம்பி வீட்டில் இந்தியப்படை


1985 ஆம் ஆண்டுஇ அக்டோபரில் வல்வெட்டித்துறையில் உள்ள தம்பி பிரபாகரன் அவர்களுடைய வீட்டிற்கு நான் சென்று பார்த்தபொழுது வீட்டின் கூரை மட்டுமே நாசமாகிக் கிடந்தது. சுவர்கள் சேதமடையாமல் நின்றன. சிங்கள இராணுவம் அதற்கு மேல் நாசப்படுத்தவில்லை. ஆனால்இ ஐந்தாண்டுகளுக்குப் பின்பு 1990 ஆம் ஆண்டுஇ மார்ச்சு மாதம் அதே வீட்டைச் சென்று பார்த்தபொழுது சுவர்கள் எல்லாம் இடிக்கப்பட்டு அடியோடு நாசமாகிக் கிடந்தன.


பிரபாகரனைப் பிடிக்க முடியாத இந்திய இராணுவம் பீரங்கியால் சுட்டு அவரின் வீட்டை நாசப்படுத்தியது. பிரபாகரனைச் சுடமுடியாத ஆத்திரத்தை அவரது வீட்டைச் சுட்டுத் தீர்த்துக்கொண்டது.


அனாலும்இ இந்தியப்படை வீரர்கள் தம் நாட்டிற்குத் திரும்பும் சமயத்தில் அணிஇ அணியாக அந்த வீட்டிற்கு வந்து அதன் முன் நின்று ஒருவருடன் ஒருவர் போட்டி போட்டுப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். இந்த வினோதக் காட்சியை வல்வெட்டித்துறை மக்கள் வேடிக்கையாகப் பார்த்து இரசித்தனர்.



நன்றி: அய்யா பழ நெடுமாறன் 
தென்செய்தி


--------------------

Tuesday 4 August 2015

மயிலந்தனை ,திராய்க்கேணி ,செஞ்சோலைப் படுகொலைகள் .

ஆகஸ்ட் மாதத்தில் தமிழீழ நாட்டில் நடந்த படுகொலைகள் ......
மயிலந்தனைப் படுகொலை:
``````````````````````````````````````````
1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் நாள், மட்டக்களப்பு நகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மயிலந்தனை என்ற கிராமத்தில் சிங்கள இராணுவத்தினர் நடத்திய வெறியாட்டத்தில் 39 அப்பாவித்தமிழ் மக்கள் சுடப்பட்டும், வெட்டப்பட்டும் கொல்லப்பட்டனர். 34பேர் கை, கால்கள் வெட்டப்பட்டு அங்கவீனர்களாக்கப் பட்டனர்.
கொல்லப்பட்டோரில் கர்ப்பிணிப்பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். இவ்வெறியாட்டத்தில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு ஊழிய சலுகையும், அதிகாரி பதவிகளும் வழங்கப்பட்டு அவர்கள் மேலும் ஊக்குவிக்கப்பட்டனர்.
திராய்க்கேணி படுகொலை:
`````````````````````````````````````````````````````
ஆகஸ்ட் 07ஆம் நாள் 1990ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள திராய்க்கேணி என்ற கிராமத்தில் சிறப்பு இராணுவப்பிரிவினரின் பாதுகாப்போடு வந்திறங்கிய முசுலிம் காடையர் 47 அப்பாவித்தமிழர்களை வெட்டிக் கொன்றனர். தமிழர்களுக்கும் முசுலிம் மதத்தைத் தழுவிய தமிழர்களுக்கும் இடையே கலவரத்தைத் தூண்டும் வகையில் ஒரு சில நாட்களின் முன் முசுலிம் தமிழர்கள் 13பேரை சிறப்பு இராணுவப்பிரிவினரே சுட்டுக்கொன்றுவிட்டு, தமிழர்கள்மீது பழிபோட்டு, பின்னர் முசுலிம் தமிழர்களை வைத்து அப்பாவிகள் 47பேரை அன்றைய நாள் கொன்றுகுவித்தது. குடும்பத்தினர் பார்த்திருக்க ஒவ்வொருவராக இவர்கள் கொல்லப்பட்டனர். வயதானவர்கள் வீடுகளுக்குள்ளேயே பூட்டப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டனர். தமிழர்களுக்குச் சொந்தமான 350வீடுகள் எரிக்கப்பட்டு அந்தக் கிராமத்தைவிட்டே தமிழ்மக்கள் துரத்தப்பட்டனர்.
செஞ்சோலை படுகொலை:
````````````````````````````````````````````````
ஆகஸ்ட் 14ஆம் நாள் 2006ஆம் ஆண்டு வல்லிபுனம், முல்லைத்தீவில் அமைந்திருந்த பெற்றோரை இழந்த பெண் குழந்தைகளுக்காக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டிருந்த செஞ்சோலை குழந்தைகள் இல்லம் சிறீலங்கா வான் படையினரின் வான்தாக்குதலுக்குள்ளானது. சிறீலங்கா வான்படையால் செஞ்சோலை வளாகத்தில் 9 எரிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் 61 பள்ளிக்குழந்தைகளும் 15 பொதுமக்களும் கொல்லப்பட்டனர். மேலும் பல குழந்தைகள் கை, கால்களை இழந்தனர். இன்னும் பலரது உடல் பாகங்கள் எரிந்து சிதைந்தன.
இழப்புகளும் படுகொலைகளும் ஈழத்தமிழன் நாள்தோறும் சந்திக்கும் ஒன்றுதான். தமிழீழ மண்ணில் இழப்புகள் இல்லாத வீடு ஒன்று இருந்தால் அது தமிழன் வீடாக உறுதியாக இருக்காது. நாள்தோறும் வீரச்சாவடைந்த மாவீரர் பட்டியலும் கொல்லப்பட்ட பொதுமக்கள் பட்டியலும் பார்த்து கண்ணீரில் கரைந்து நிமிர்ந்து சாவுக்குள்ளும் வாழ்ந்தவர்கள்தான் நாம். இருந்தாலும் சில படுகொலைகளை நெஞ்சு கனக்க மீட்பது அந்த மக்களின் வேதனையை நினைவுகூர்வதற்காய் மட்டுமல்ல.அவர்களின் தியாகத்தின் மூலம் எமது இலட்சியத்தில் நாம் உறுதியுடன் நடைபோடவும் தான் .....
புலிகளின் தாகம்.....தமிழீழத் தாயகம் ....

பிரெட்ரிக் ஏங்கல்ஸ்

பிரெட்ரிக் ஏங்கல்ஸ் (Friedrich Engels) (நவம்பர் 28, 1820– ஆகஸ்டு 5, 1895) 19ம் நூற்றாண்டைச்சேர்ந்த ஜேர்மன்அரசியல் மெய்யியலாளர்.




பிரெட்ரிக் ஏங்கல்ஸ் (Friedrich Engels),1895-ஆம் ஆண்டு ஆகத்து 5-ஆம் நாள் இறந்தார்.

(நவம்பர் 28, 1820– ஆகஸ்டு 5, 1895) 19ம் நூற்றாண்டைச்சேர்ந்த ஜேர்மன்அரசியல் மெய்யியலாளராவார். இவர் கார்ல் மார்க்ஸ் உடன் இணைந்து கம்யூனிச சித்தாந்தத்தை உருவாக்கியதுடன்,கம்யூனிச
கட்சி அறிக்கையை உலகுக்கு "மூலதனம்" தந்தவர்கள் கார்ல் மார்க்சு - எங்கெல்சு.

கார்ல் மார்க்சு மூலதனத்தை வெளியிட முழுமூச்சாக தோள்கொடுத்து உதவியவர் எங்கெல்சு. இவர் பிரசியாவிலுள்ள பர்மன் என்னுமிடத்தில் 1820-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 28-ஆம் நாள் பிறந்தவர். 20 அகவை வரை நாய் பிழைப்பு என்று அவரே குறிப்பிடும் வணிகத்தில் ஈடுபட்டார். சிறுவனாக இருக்கும் பொழுதே மதங்களின் மீதும் முதலாளித்துவத்தின் மீதும் வெறுப்புக்கொண்டிருந்தார். இக்காலக்கட்டத்தில் பெர்னிலுள்ள மெய்யியல் அறிஞர் கெகலின் கொள்கையைப் பின்பற்றுபவர்களோடு தொடர்பிலிருந்தார்.


மான்செசுடரில் தன்னுடைய தந்தையின் நூற்பு ஆலையில் 1845ஆம் ஆண்டு வேலை செய்த பொழுது தொழிலாளர்களின் மேல் முதலாளித்துவத்தின் வரையற்ற அடிமைத்தனத்தை நேரடியாக உணர்ந்தார். அங்கிருந்து செர்மனிக்கு செல்லும் வழியில் பாரீசில் கார்ல் மார்க்சைச் சந்தித்து நட்பை வளர்த்துக்கொண்டார். 1849-இல் செர்மனியிலிருந்து தப்பி இங்கிலாந்து வந்து முதலாளித்துவத்தின் மீது தாக்குதல் நடத்தும் கார்ல்மார்க்சுக்கு உதவுவதையே தன்னுடைய வாழ்வின் நோக்கமாகக் கொண்டிருந்தார். பணமின்றி துயரப்பட்டுக் கொண்டிருந்த மார்க்சுக்கு உதவுதற்காகவே மீண்டும் தன் தந்தையின் நூற்பு ஆலையில் வேலை செய்தார். 1869- சூலை 1 அன்று தனது ஆலையின் பங்கை விற்றுவிட்டு வணிக அடிமைத்தனத்திலிருந்து தன்னையே விடுவித்துக்கொண்டார். அதை ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான நாளாகக் கருதினார். 1870- செப்டம்பரில் மார்க்சுக்கு அதிகமாக ஒத்துழைக்க எண்ணி மார்க்சின் இல்லத்தருகிலேயே வந்து தங்கினார்.

தன்னை முன்னிலைப்படுத்தாமல் மார்க்சை முன்னிலைப்படுத்தி அவர் வளர்வதற்காக தன்னையே கரைத்துகொண்டவர்தான் எங்கெல்சு. மார்க்சின் கருத்துக்களை வளமுள்ளதாக்க அவ்வப்போது உறவாடி பல புதிய கருத்துக்களையும் மார்க்சுக்குக் கொடுத்தார். தன்னுடைய தனித்தன்மையை அதிகம் வெளிக்காட்டாவிட்டாலும் மிகப்பெரிய அறிஞர் இவர் என்பதை அனைவரும் அறிவர். மார்க்சின் "மூலதனம்" நூல் இவருடைய தனித்தன்மையை நன்கு வெளிக்காட்டுகிறது. மேலும் 1847-48 காலவாக்கில் பொதுவுடைமை அறிக்கையையும் இவர் வெளியிட்டார்.


எங்கெல்சு மிகப்பெரிய அறிஞர்; தத்துவ ஞானி; எல்லாவற்றையும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர். தன் தனிப்பட்ட வாழ்க்கையில் மிகக் கட்டுப்பாடான ஒழுங்கு நிறைந்தவர். மார்க்சின் நெருங்கிய நண்பர் எங்கெல்சு 1895-ஆம் ஆண்டு ஆகத்து 5-ஆம் நாள் இறந்தார்.