Tuesday, 4 August 2015

மயிலந்தனை ,திராய்க்கேணி ,செஞ்சோலைப் படுகொலைகள் .

ஆகஸ்ட் மாதத்தில் தமிழீழ நாட்டில் நடந்த படுகொலைகள் ......
மயிலந்தனைப் படுகொலை:
``````````````````````````````````````````
1992ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் நாள், மட்டக்களப்பு நகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மயிலந்தனை என்ற கிராமத்தில் சிங்கள இராணுவத்தினர் நடத்திய வெறியாட்டத்தில் 39 அப்பாவித்தமிழ் மக்கள் சுடப்பட்டும், வெட்டப்பட்டும் கொல்லப்பட்டனர். 34பேர் கை, கால்கள் வெட்டப்பட்டு அங்கவீனர்களாக்கப் பட்டனர்.
கொல்லப்பட்டோரில் கர்ப்பிணிப்பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். இவ்வெறியாட்டத்தில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு ஊழிய சலுகையும், அதிகாரி பதவிகளும் வழங்கப்பட்டு அவர்கள் மேலும் ஊக்குவிக்கப்பட்டனர்.
திராய்க்கேணி படுகொலை:
`````````````````````````````````````````````````````
ஆகஸ்ட் 07ஆம் நாள் 1990ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள திராய்க்கேணி என்ற கிராமத்தில் சிறப்பு இராணுவப்பிரிவினரின் பாதுகாப்போடு வந்திறங்கிய முசுலிம் காடையர் 47 அப்பாவித்தமிழர்களை வெட்டிக் கொன்றனர். தமிழர்களுக்கும் முசுலிம் மதத்தைத் தழுவிய தமிழர்களுக்கும் இடையே கலவரத்தைத் தூண்டும் வகையில் ஒரு சில நாட்களின் முன் முசுலிம் தமிழர்கள் 13பேரை சிறப்பு இராணுவப்பிரிவினரே சுட்டுக்கொன்றுவிட்டு, தமிழர்கள்மீது பழிபோட்டு, பின்னர் முசுலிம் தமிழர்களை வைத்து அப்பாவிகள் 47பேரை அன்றைய நாள் கொன்றுகுவித்தது. குடும்பத்தினர் பார்த்திருக்க ஒவ்வொருவராக இவர்கள் கொல்லப்பட்டனர். வயதானவர்கள் வீடுகளுக்குள்ளேயே பூட்டப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்டனர். தமிழர்களுக்குச் சொந்தமான 350வீடுகள் எரிக்கப்பட்டு அந்தக் கிராமத்தைவிட்டே தமிழ்மக்கள் துரத்தப்பட்டனர்.
செஞ்சோலை படுகொலை:
````````````````````````````````````````````````
ஆகஸ்ட் 14ஆம் நாள் 2006ஆம் ஆண்டு வல்லிபுனம், முல்லைத்தீவில் அமைந்திருந்த பெற்றோரை இழந்த பெண் குழந்தைகளுக்காக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டிருந்த செஞ்சோலை குழந்தைகள் இல்லம் சிறீலங்கா வான் படையினரின் வான்தாக்குதலுக்குள்ளானது. சிறீலங்கா வான்படையால் செஞ்சோலை வளாகத்தில் 9 எரிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் 61 பள்ளிக்குழந்தைகளும் 15 பொதுமக்களும் கொல்லப்பட்டனர். மேலும் பல குழந்தைகள் கை, கால்களை இழந்தனர். இன்னும் பலரது உடல் பாகங்கள் எரிந்து சிதைந்தன.
இழப்புகளும் படுகொலைகளும் ஈழத்தமிழன் நாள்தோறும் சந்திக்கும் ஒன்றுதான். தமிழீழ மண்ணில் இழப்புகள் இல்லாத வீடு ஒன்று இருந்தால் அது தமிழன் வீடாக உறுதியாக இருக்காது. நாள்தோறும் வீரச்சாவடைந்த மாவீரர் பட்டியலும் கொல்லப்பட்ட பொதுமக்கள் பட்டியலும் பார்த்து கண்ணீரில் கரைந்து நிமிர்ந்து சாவுக்குள்ளும் வாழ்ந்தவர்கள்தான் நாம். இருந்தாலும் சில படுகொலைகளை நெஞ்சு கனக்க மீட்பது அந்த மக்களின் வேதனையை நினைவுகூர்வதற்காய் மட்டுமல்ல.அவர்களின் தியாகத்தின் மூலம் எமது இலட்சியத்தில் நாம் உறுதியுடன் நடைபோடவும் தான் .....
புலிகளின் தாகம்.....தமிழீழத் தாயகம் ....

No comments:

Post a Comment