"தேசிக்காய் கொஞ்சம் வெட்டித்தாங்கோ." கிணத்தின் அருகில் நின்ற தேசிமரத்தில் சில பழங்களை பிடுங்கிக்கசக்கி வெட்டிக்கொடுக்கின்றான். "சமையலுக்கான எனது சிறிய பங்களிப்பு" சிரித்தபடி கூறுகின்றான்.
மதியம் புறப்பட்ட பேரணியானது மாலையானதும் முகாம் முன்காவலரனில் இருந்து ஒரு கி.மீ முன்னால் தன் நகர்வை நிறுத்திக்கொண்டது. நன்றாக இருட்டியவுடன் மீண்டும் அணிகளாகப் பிரிந்து இருபக்கமும் கண்டிவீதிக்கு சமாந்தரமாகச் செல்லத்தொடங்கியது. ..........👇 10
அதனுள் ஆறு பேர் கொண்ட களமருத்துவ அணியும் நகர்ந்து கொண்டிருக்கின்றது. மூச்சை இழுத்துப்பிடித்த வண்ணம் தங்கள் பாதம் பட்டு இலைகள் சத்தம் எழுப்பாத வண்ணம் மெல்ல, மெல்ல அடிமேல் அடி எடுத்து வைக்கின்றார்கள். இப்பொழுது 500 மீ முன்னால் நிலை எடுத்திருக்கின்றார்கள்.
முகாமை சுற்றிவர மண்ணனை (பண்ட்) அமைக்கப்பட்டுள்ளது. இந்த பண்டைத்தாண்டினால் உள்ளுக்குள்ள இன்னொரு பண்ட் இருக்கும். அதனையும் தாண்டினால் முட்கம்பிச் சுருள், தடை, முட்கம்பி வேலி என்பன இருக்கும். முன்னரனையும் தாண்டி வழியில் தென்படும் காவலரன்களைத் தகர்த்துத்தான் முகாமை நோக்கிச் செல்ல வேண்டும்.
ஒவ்வொரு மண் அணையிலும் ஏறும்போது மரணத்தின் உச்சியில் ஏறுவது போல் இருக்கும். ஏனெனில் உள்ளிருக்கும் எதிரிக்கு சாதகமான இலக்காகவே போராளிகள் தென்படுவார்கள். ஆயினும் அத்தடைகள் தாண்டப்பட்டே ஆகவேண்டும். அப்படித்தாண்டும் போது பலர் இறப்பர். பலர் காயமடைவார்கள். சிலர் தான் முகாமின் மையப்பகுதியை அடைவார்கள். அவர்கள் முகாமினுள் நடத்தும் சண்டையைப் கட்டுப்பாட்டில் பொறுத்தே முழுத்தளத்தையும் கொண்டு வருவதா இல்லை பின் வாங்குவதா என முடிவு எடுக்கப்படும். போராளிகளை எதிரிக்குக் காட்டிக் கொடுக்கக்கூடாது என விரும்பியதாலோ என்னவோ இருள் தன்னை நன்றாகவே பலப்படுத்தி உள்ளது. "ஸ்ராட் பயறிங்" ஆரம்பித்துவிட்டது. பின்னால் இருந்து முகாமிற்குள் எறிகணைகளும் அடிக்கப்படுகின்றது. திகைத்த எதிரி தன்னை உசார்படுத்திக் கொண்டான். முகாமினுள் வெளிப்புறம் நோக்கி கனரக இயந்திரத் துப்பாக்கிகளையும், எறிகுண்டு செலுத்திகளையும் பரவலாக இயக்கத் தொடங்கினான். தணல் துண்டங்களினால் வலைப்பின்னல் ஒன்றை ஏற்படுத்தினான்.செல்மழை வானைப் பிய்த்துக் கொண்டு கொட்டத் தொடங்கியது. டும்.... டும் ..... சட... சட படீர்.... படீர் ..... போர்ச்சத்தங்கள் செவிப்பறை மென்சவ்வைக் கிழிக்கத் தொடங்கியது. எதிரியினாலும், எம்மவர்களினாலும் ஏவப்பட்ட பரா வெளிச்சம் இரவைப் பகலாக்கியது. அந்த வெளிச்சத்தில் போராளிகள் துப்பாக்கியால் சுட்டவண்ணம் பலமாகக் கத்திக் கொண்டு ஆக்ரோசத்துடன் ஓடியும் பாய்ந்தும் மண் அரணை ஏறிக் கடக்கின்றார்கள். சிலர் குண்டடிபட்டு விழுகின்றார்கள். சிலர் காயங்களையும் பொருட்படுத்தாது உள்ளே பாய்கின்றார்கள். காயம் பட்ட சிலர் தங்கள் காயங்களுக்கு "பீல்ட்கொம்கிறசை" வைத்துக்கட்டி இரத்தப்பெருகை கட்டுப்படுத்திவிட்டு படுத்து கிடந்தபடியே எதிரியின் ரவைகள் புறப்பட்டுவரும் பகுதியை நோக்கி சுட்டவண்ணம் உள்ளார்கள். இன்னும் சிலர் அவன் எல்லைக்குள் ஊர்ந்து முன்னேறுகின்றார்கள். அவர்களில் சிலரின் உயிர் மெல்ல மெல்ல பிரிந்துபோகின்றது. குருதியில் நனைந்து மண் ஈரலிப்படைகிறது.
சிலர் டோபிடோக்களை எடுத்துக் கொண்டு வேகமாகப்பாய்ந்து சென்று முட்கம்பி வேலியினுள் செருகி இயக்கிவிட்டு பின்னால் வந்து நிலையெடுக்க அது பாரிய சத்தத்துடன் வெடிக்க, முட்கம்பி வேலியையும் சுருள்களையும் காணவில்லை. உடனே துப்பாக்கிகளை அப்பாதையுனூடு போராளிகள் தங்கள் இயக்கிய வண்ணம் மின்னலெனப் பாய்ந்து செல்கின்றார்கள். எதிரி இருக்கலாம் என சந்தேகித்து, உறுதிப்படுத்தும் இடங்கள், காவலரன்கள் எல்லாவற்றினுள்ளும் கைக்குண்டுகளையும் ரைபிள் கிரனைட்டுகளையும் வீசி சிறு, சிறு எரிமலை வெடிப்புக்களை
ஏற்படுத்துகின்றார்கள். எங்கும் கந்தக நொடியும் எரியும் காவலரன்களிலும் புகையும், வலியில் கத்தும் காயமடைந்த போராளிகளினதும் இராணுவத்தினரதும் ஈனக்குரல்களும் என சேர்ந்து இன்னதென விபரிக்க முடியாத அகோரச் சூழலை உருவாக்குகின்றது. எதிரியின் கைமெல்ல ஓயத்தொடங்குகின்றது. நிலமையை உணர்ந்த எதிரி மெல்ல, மெல்ல ஓடத்தொடங்குகின்றான். பின்வாங்கியவன். தனது பிரதான முகாமினுள் இருந்துகொண்டு இப்பிரதேசம் நோக்கி போர்ப்புயலை வேகமாக வீசவைக்கின்றான். எனினும் இப்பிரதேசம் இவர்கள் கட்டுப்பாட்டினுள் மெல்ல, மெல்ல வந்து கொண்டிருக்கின்றது.
இப்பொழுது மருத்துவப் போராளிகள் வேகமாக இயங்கத் தொடங்குகின்றார்கள். காயமடைந்தவர்கள் இருக்கும் இடத்தை தேடித் தேடி ஓடி ஓடி அவசர சிகிச்சைகளைச் செய்கின்றார்கள். எதிரி இவர்கள் கட்டுப்பாட்டில் வந்த இப்பிரதேசத்தினுள் சரமாரியாக எறிகணைகளை வீச, அவை படீர் படீர் என விழுந்து வெடிக்க நிலைமை மோசமடைகின்றது. ஆனால் எதற்கும் கவனம் எடுத்து நிலை எடுக்க முடியாத நிலை, தாமதம் ஒவ்வொரு கணமும் குருதிப்பெருக்கால் போராளிகள் இறந்து கொண்டிருக்கலாம், அதனைத் தடுக்க வேண்டுமாயின் உடனுக்குடன் குருதிப்பெருக்கை நிறுத்த வேண்டும். நோநிவாராணி ஊசி ஏத்த வேண்டும். பிரதான மருத்துவ சிகிச்சையை இலகுபடுத்தக் கூடியவாறு நாளத்தினூடு வென்புளோன் ஏத்த வேண்டும். களமுனையில் இருந்து வேகமாக அப்புறப்படுத்த வேண்டும். போராளிகள் மிக மிக வேகமாகவும் நிதானமாகவும் இயங்கிக்கொண்டு இருக்கின்றார்கள்.
காயமடைந்து குப்புறக்கிடந்து முனங்கிக் கொண்டிருக்கும் ஒருவனை ஓடிச்சென்று மருத்துவப்போராளி ஜீவானந்தன் புறட்டுகின்றான். வானில் எரியும் பரா வெளிச்சத்தில் முகத்தைப் பார்க்கின்றான், "சிட்டு" வயிற்றில் பாரிய காயம் உடனேயே மேலதிகமாக இன்னுமொரு குருதித்தடுப்பு பஞ்சனையை வைத்துக் கட்டுகின்றான். களமுனையை விட்டு வேகமாக வெளியேற்றி அடுத்தடுத்த மருத்துவத் தளங்களுக்கு சில மணிகளில் கொண்டு செல்லப்பட வேண்டும் இல்லாவிட்டால் இவன் வீரச்சாவடைவது நிச்சயம். அவனை உடனடியாக வெளியேற்ற அவன் முனைகின்றான். அப்பொழுது காற்றை கிழித்துவரும் எறிகணை தங்களுக்கு அருகில் விழப்போகின்றது என்பதனை உணர்ந்து, இவன் நிலத்தில் விழுந்து படுக்கவும் இவர்களுக்கு மிக அருகில் அது விழுந்து வெடிக்கவும் கண நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்து விடுகின்றது.
அடுத்த கணம் தலை நிமிர்ந்து பார்த்தவனுக்கு என்ன செய்வது என்று தோன்றவில்லை. மருத்துவக்குழுவைச் சேர்ந்த அனைவரும் காயப்பட்டு முனங்கிக் கொண்டு கிடக்கின்றார்கள். இவனுக்கும் வயிற்றில் சிறு காயம் உடனே தனது ஜீன்ஸ் பொக்கட்டில் இருந்த பீல்கொம்பிறசை எடுத்து தனக்கும் கட்டிவிட்டு ஓடி ஓடி மற்றவர்களுக்கு கட்டுகின்றான். ஆட்களைக் கூப்பிட்டு அனைவரையும் விரைவாக வெளியேற்றுகின்றான். ஒவ்வொருவராக அனுப்பி சிட்டுவிடம் வந்து மீண்டும் அவனைப் புரட்டுகின்றான். அதிர்ச்சி இறுதியாக வீழ்ந்த எறிகணையில் மீண்டும் காயமடைந்தவன் சடலமாகக் கிடக்கின்றான். ஆம் ஈழவிடுதலைக்காக உறுமிய புலியொன்று தன் பேச்சடங்கியது. பாடிய குயிலொன்று தன் மூச்சடங்கியது. இதே வேளை ஏனைய போராளிகள் எதிரியின் ஆயுதங்களைச் சேகரிப்பதிலும்
அவன் பாசறைகளைத் தீயிடுவதிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். கண்டி வீதியின் ஒரு பகுதி கட்டுப்பாட்டினுள் வந்து விட்டது. ஆனால் இன்னும் அவனது பிரதான முகாம் பிடிபடவில்லை. அங்கு சண்டை நடந்து கொண்டிருக்கின்றது. இன்னும் 30-40 நிமிடங்களினுள் பிடித்துவிட வேண்டும். இல்லையேல் கள நிலமை எதிரிக்கு சாதகமாக மாறிவிடும்.
இத்தாக்குதல் இடையில் துண்டறுந்து நடைபெறுவதால் தன்னை அவன் மீழ ஒழுங்கமைத்து முன்னாலும், பின்னாலும் பலத்தைக்கூட்டி இவர்களை இடுக்கிப் பிடியொன்றினுள் மாட்ட முனைவான். ஆனால் அவன் அவ்வாறு சண்டையை செய்ய அவகாசம் கொடுக்காமல் தளபதிகள் வேகப்படுத்தினார்கள். தூ அதிஸ்டம் எதிர்பார்த்தது நடக்கவில்லை. ஒரு வழியாக பிரதான முகாமினுள் நுளைய பாதை எடுத்த போராளிகள் அதனூடாக வேகமாக ஓடிச்செல்கின்றார்கள் ஆனால் அப்பகுதியை நோக்கி எதிரிகள் பெரும் எடுப்பில் தாக்குதல் கொடுத்தான். விளைவு முன்னால் ஓடிச் சென்ற போராளிகள் அனைவரும் குண்டடிபட்டு விழுகின்றனர். அவர்களுக்கு ஆதரவாகச் சென்ற போராளிகளும் காயமடைந்து வீரமரணம் அடைகின்றார்கள்.
திட்டமிட்டபடி ஏனைய முகாம்களும். காவலரன்களும் பிடிபட்டுவிட்டன. கனரக ஆயுதங்களும் வாகனங்களும் கைப்பற்றப்பட்டது. எனினும் பிரதான முகாம் பிடிபடதாது தோல்வியே. ஆனால் அதற்காக கவலைப்பட நேரமில்லை. மோட்டார் பிரிவுகளுக்கு அறிவித்தல் கொடுக்க அவர்கள் 120.மி.மீ எறிகனைகளை தொடராக பிரதான முகாமினுள் ஏவிவிடுகின்றனர்.
எதிரி தான் மீண்டும் தாக்கப்படுவதாக எண்ணி தனது தற்காப்பு தாக்குதலை தீவிரப்படுத்தினான். அவன் முன்னேறிவராமல் இருப்பதற்காக இத்திசை திருப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். ஏனைய இடங்களில் பரவலாக கிடந்த காயமடைந்த போராளிகளையும் வித்துடல்களையும் அப்புறப்படுத்த அணிகள் விடப்படுகின்றன. சிறு காய மடைந்த போராளிகள் வலியைப் பொருட்படுத்தாது
நடந்து வந்தார்கள். ஏனைய போராளிகள் மருத்துவப் போராளிகளுக்கு தமது பங்களிப்பை நல்கினர்.
வீதிக்கு மேற்குபக்கமாக காயமடைந்து கிடந்த போராளிகளை முதலில் தூக்கி வந்து கிழக்குப்பக்கமாக கிடத்தினார்கள். . பின்னர் எல்லோரையும்
அப்புறப்படுத்தினர்
இப்பொழுது பின்வாங்கி வரும் போராளிகளை நோக்கி வானில் இருந்து MI 24 உலங்கு வானூர்தி தாக்குதலை நடத்தத் தொடங்கிவிட்டது. அதற்கு ஏற்ப நிலை எடுத்தவர்கள் வேகமாக பின்வாங்குகின்றார்கள்.
நேரம் இரவு 8.30. மாலை உணவை முடித்துவிட்டு எல்லோரும் மெல்லிய குரலில் கதைத்த வண்ணம் இருக்கின்றார்கள். அவ்விடத்தில் இருந்து சற்று எட்டத்தில் காவல் கடமையில் சில போராளிகள் ஈடுபட்டவண்ணம் உள்ளனர். இவர்கள் உரையாடிக் கொண்டிருந்தாலும் செவிகளை கூர்மையாகவே வைத்திருக்கின்றார்கள். அப்பொழுது ஒரு போராளி மெல்ல வந்து இவர்களிடம் கூறினான். "அண்ண! அங்கால இருக்கிற பத்தைக்குள்ள சத்தம் ஒன்று கேட்டது. நான் கிட்டப்போக சேஞ்லிவர் தட்டும் சத்தம் கேட்டது." உடனேயே எல்லோரும் உசார் ஆனார்கள்.
எல்லோரும் ஏற்கனவே ரவையேற்றித்தயாராக வைக்கப்பட்டிருந்த ரைபிள்களை எடுத்துக்கொண்டு மெல்ல மெல்ல நடக்கத் தொடங்கினார்கள். இந்த நிலை மிகவும் சங்கடம் தரக்கூடிய ஒன்றாக இருந்தது. ஏனெனில் துரதிஸ்ட்டவசமாக எதிரியின் ரெக்கிக்காரங்கள் வந்து நின்று, இவர்களின் நடமாட்டங்களை அவதானித்து, உரிய இடத்திற்கு அறிவித்து இருப்பார்களானால்! நினைக்கவே நெஞ்சில் உதறல் எடுத்தது. இன்னொரு கொக்குத்தொடுவாயை தமிழீழம் சந்திக்க வேண்டிவரும். எம்மவரின் துரோகத்தால் இல்ல எதிரியின் திறமையால். அதற்கு அனுமதிக்கமுடியாது. எதிரி முகாமைச் சுற்றி இப்பொழுது போராளிகள் நிலை எடுத்திருப்பார்கள் சண்டை ஆரம்பிக்கும் வரை கடக்கும் ஒவ்வொருகணமும் கவனமாக கழிக்கவேண்டிய நிலை. ஒரு கணத்தில் ஏற்படும் தவறே பலநூறு போராளிகளை பலி எடுப்பதுடன் சண்டையின் போக்கையே திசை திருப்பி விடலாம்.
ஆதலால் இவர்கள் முன் வீட்டில் முகாமிலிருந்த போராளிகளுக்கும் விடயத்தை அறிவித்தார்கள். பின் ஒவ்வொரு பற்றையாக அலசத்தொடங்கினார்கள். இவர்கள் வெளிக்கிட வேண்டிய நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. அந்தநேரம் பார்த்து கிணற்றடியில் வாளிதட்டப்படும் சத்தம் கேட்டது. தொடர்ந்து அங்கிருந்து யாரோ ஓடும் சத்தம் கேட்டது. உடனேயே இவனுக்கு அருகில் நின்ற போராளி துப்பாக்கியை சுடுவதற்கு ஆயத்தமாக தோளிற்கு உயர்த்தி விட்டான். இந்த நேரத்தில் அனாவசியமாக தீர்க்கப்படும் ஒவ்வொரு வேட்டும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிடும். உடனே இவன் கையால் தடுத்து சுடவேண்டாம் எனச் சையைால் கூறினான். பின்னர் இருவரும் கிணற்றடியை நோக்கி மெல்ல நகர்ந்தார்கள். சிறிது நேரம் நின்று காதுகளை கூர்மையாக்கி காற்றுக்கு மரங்கள் அசையும் ஓசையில் இருந்து, சகசலதையும் அவதானித்தார்கள். செவிப்புலன் ஒன்றே இப்பொழுது இவர்களுக்கு கைகொடுக்கக் கூடியது. ஏனெனில் சில யார் தூரத்திற்கு அப்பால் கண்களை நம்ப முடியாது.. அது
ஏமாற்றியும் விடலாம், எனவே இவர்கள் காதுகளின் உச்ச பயனைப்பெற முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவ்வேளையில் மீண்டும் சருகுகள் சரசரக்கும் சத்தம் கேட்டது. இப்பொழுது சத்தம் இவர்களை நோக்கி வந்துகொண்டிருந்தது. இருவருமே துப்பாக்கியை தயார் நிலையில் பிடித்தவண்ணம் சேஞ்லிவரை ஒட்டோவுக்கு கொண்டுவந்தார்கள். தங்களின் இதயத்துடிப்பு வீதம் அதிகரிப்பதை தாங்களே உணர்ந்தார்கள். சரசரக்கும் சத்தம் கேட்டதே தவிர உருவங்கள் ஒன்றும் தென்படவில்லை. இருவரும் மூச்சைப்பிடித்தபடி நின்றார்கள். இப்பொழுது சிறிய உருவம் ஒன்று அசைவதும் அந்த இருளிலும் பத்து யார் தொலைவில் தெரிகிறது. உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தவர்கள் அவர்களுக்கு அருகில் வந்தவுடன்
பெருமூச்சொன்றை விட்டபடி ஒருவரை ஒருவர் பார்த்து
மென்மையாகச் சிரிக்கின்றார்கள்.
ஒரு நாய் இவர்களை நன்றாக ஏமாற்றிவிட்டது. இருவரும் எதுவும் கதைக்காமல் வீதியில் வந்து நின்றார்கள். கிளியறிங் செய்யப்போனவர்கள். ஒவ்வொரு இடங்களிலும் போராளிகளை நிறுத்திவிட்டு வந்தார்கள். எவ்விதத்திலும் ஒன்றையும் காணவில்லை. ஆனால் சுமார் 100 யார் தூரத்தில் நாய் ஒன்று குரைப்பது கேட்டது. இவர்களால் இப்பொழுது எதுவும் மேலதிகமாக செய்ய முடியாது. நேரம் 10.00 மணியாகிவிட்டது. இன்னும் அரை மணித்தியாலத்தில் சண்டை ஆரம்பித்துவிடும். அப்பொழுது எதிரி முகாமில் இருந்து ஆட்லறி எறிகணைகளை ஏவத்தொடங்குவான். இவர்களுக்கு குளப்பம் ஏற்பட்டுவிட்டது. "சில வேளை...... சீ... அப்படியிருக்காது, அவன் அலேட் ஆகியிருந்தால் இப்ப பெரியகளோபரம் ஆரம்பிச்சிருக்கும்" என இவன் தன்னுள் எண்ணியிருக்கின்றான்......
-தொடரும்
-யுத்தகாண்டம்
-தூயவன்
No comments:
Post a Comment