ஆர்.பி.ஜி கணைகளினால் தாக்கியழித்தான். பின்னர் "பல்வேகய" எனும் பெயரில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையில் வீரமரணமடைந்தான். பின் லெப் மணிமாறனாகிய அவனுக்கு "விழுதுகள்" எழுத வேண்டிவந்தது. இப்பொழுதென்னவென்றால் இவன் கேட்கிறான்.
பழைய ஞாபகம் மனதை அழுத்த தொண்டைக்குழிமேலேறி இறங்குகின்றது. "என்ன கதைக்காமல் வாறீங்கள்?" மீண்டும் சிட்டு கேட்க மனதில் ஓடிய எண்ணங்களை வெளிப்படுத்தமால், எப்படி போகுது உங்கள் பாடு.....? ஜெயசிக்குறு செமமாய்த்தான் வாட்டுது போல ....? என கேட்கிறான்" "டொக்ரர் நான் இப்பத்தான் ஒரு மனத்திருப்த்தியை பீல் பண்ணுறன் எனக்கூறுகின்றான்" முகத்தில் எவ்வித உணர்வுகளையும் வெளிப்படுத்தாமல் அதற்கு இவன் கேட்கிறான் "ஏன் முதலில் அப்படி பீல்பண்ணவில்லையா?" இல்லை டொக்ரர் அப்ப மகிழ்ச்சியாகத்தான் இருக்கும், பல்லாயிரம் மக்கள் முன்னிலையில் பல வகை இசைக்கருவிகளுடன் இசைந்து பாடேக்க நல்லாத்தான் இருக்கிறது. ஆனால்... 'என இழுக்கின்றான்" "ஆனால்......' இப்ப எங்கட போராளிகளோட பாடேக்க அதிலும் நல்லா இருக்கு. நாங்கள் எல்லாம் கஸ்ரப்பட்டு களைத்துப்போய் இருக்கும்போது மற்றவர்கள் என்னை பாட சொல்லி கேட்பார்கள். நான் எந்த இசைக்கருவிகளும் இல்லாமல் சதாரணமாக பாடுவேன். அதை எல்லோரும் ரசிப்பதைப் பார்க்கும்போது உண்மையில் திருப்தியை உணருகின்றேன். இப்படி அவன் சொல்ல இவனுக்கு தலைவர் சொன்னது ஞாபகம் வந்தது. வழமைமாதிரி எல்லோரும் சண்டைக்குப் போவதை விரும்புவார்கள் என்பதை எண்ணியதால் என்னவோ தலைவர் ஒருக்கா சொன்னவர்.
"நான் இப்ப சொல்லுறன் வேணுமென்றால் டயறியில் குறித்துவையுங்கள் இப்பொழுது பல்லை கடித்துக்கொண்டு படியுங்கள் பின்னர் உங்களால் ஒவ்வொரு போராளியும் காப்பாற்றப்படும் போது நீங்கள் நூறு "பீல்டுக்கு" போன மனத்திருப்தியை அடைவீர்கள்".
ஆம் ஒவ்வொரு போராளியும் தான் இயக்கத்திற்கு ஏதோ ஒருவகையில்
பயன்படுகின்றான். என உணரும்போதே உற்சாகமடைகின்றான். இவன் இவ்வாறு யோசித்துக்கொண்டிருக்கும் பொழுது சிட்டு சொல்கிறான்.
"எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்ததற்காக இராணுவத்திற்குத்தான் நன்றி கூறவேண்டும். 'இவ்வளவு நேரமும் "சீரியசாகக்" கதைத்துக்கொண்டு வந்தவன் முகத்தில் இப்பொழுது ஒரு சிரிப்பு உருவாகின்றது. கறுத்த அவன் முகத்திற்கு வெண்பற்கள் வெளிச்சம் ஒன்றை கொடுப்பது போல் இருக்கின்றது. இவர்களின் இதயங்களும் இவ்வாறுதான் முழுமையாக செயலுடன் பார்க்கும்போது இரும்பாயும், உணர்வுகளுடன் பார்க்கும்போது வெண்மையாகவும் இருக்கும்.
"டொக்ரர் நாங்கள் இதை எதிர்பார்த்தனாங்கள். ஆதலால் தானே
பரப்புரையை முடக்கிவிட்டனாங்கள். ஆனால் டொக்ரர் ஒருவிசயம் நான்
பரப்புரையில் நிற்கும்போது இயக்கத்தில் சேர்ந்த கனபேர் இப்ப குறுப்லீடேசா
எல்லாம் இருக்கிறாங்கள். அவன் தொணியில் ஒரு பெருமிதம் தெரிகின்றது.
ரத்வத்தை சொல்கின்றான் இதுதான் இறுதிப்போர் என்று ஆனால் இவனுக்கு
விளங்கவில்லை இப்பதான் ஆரம்பம் என்று" இதனைக்கூறிய சிட்டுவின்
குரலில் ஏளனம் தொனித்ததா அன்றி எம் வெற்றியின் உறுதி தொனித்ததா
என விளங்கவில்லை 'எதைவைத்து இப்படி கூறுகின்றீர்கள்" என அவன்
கேட்க "பிறகென்ன ஏற்கனவே இரண்டு தரம் முறையாய் போட்டிட்டம். இது
மூன்றாம் தரம் பதினைந்து மைல் மூவ் பண்ணுறதுக்குள்ளாகவே
இப்படியென்றால் மிச்சம் எப்படி இருக்குமென்று கட்டாயம் யோசிப்பான்.
அவன் முடிக்க "அதனால்...' என இவன் தொடர்ந்து அவன் கதைப்பதற்கு
உட்சாகமூட்டுகிறான்
'பிறகென்ன
சைக்கோலஜிக்கலா
ஆள்
குழம்பிவிடுவான். பிறகு எங்கட ஒவ்வொரு சின்ன அடியுமே அவனுக்கு
பெரிசாத்தான் தெரியும் தன் நிம்மதியை அவன் வன்னிமண்ணில; தான் தொலைக்கப்போறான;." அவனின் குரலில் உறுதிதென்படுகின்றது.
நாங்கள் இப்ப சந்திக்கிறது ஆட்பற்றாக்குறையே அதுதான் இப்ப லிமிற்றிங்பக்ரர். அவனுக்கும் அது தான் பிரச்சனை. இன்னும் சில ஆயிரம் போராளிகள் இருந்தால்போதும். நாங்கள் எங்கட இலக்கை கெதியா அடைந்திடலாம். "ஏனோ அவனின் குரலில் கவலை தெரிகின்றது. எங்கள் இளையதலைமுறையில் இன்னும் பலர் இதனை உணரவில்லை என்பதை அவன் முகக்குறியே உணர்த்துவதுபோல் இருக்கின்றது. "டொக்ரர்" எங்கடசகல வளங்களையும் ஒரு முகப்படுத்தியேனும் இந்த ஜெயசிக்குறு முறியடிக்க வேz;Lk;. இதில் பெறப்போகும் வெற்றிதான் தமpழீழத்தின் மட்டுமல்ல உலகத்தமிழh;fspd; தலைவிதியையும் தன்மானத்தையும் தீர்மானிக்க போகின்றது'யதார்த்தமான உண்மைகளைச் சாதாரணமாக
கதைத்துக்கொண்டு வருகிறான்.
'மா, ஒசேதுங்" ஒரு இடத்தில் சொல்லி இருக்கிறார். ஒரு சண்டையில் பெறுகின்ற வெற்றியோ தோல்வியோ எதுவாயினும் அது அதனைத்தொடரும் பல சண்டைகளில் செல்வாக்கு செலுத்தும். இவன் நல்லாத்தான் புத்தங்கள் வாசித்திருக்கின்றான் போலும் மனம் சாடையாக பொறாமை கொள்கின்றது. இவனை கவனிக்காமலே அவன் தொடர்கின்றான் 'வன்னியில் காலை வைத்தவனுக்கு என்ன நடக்குமென விளங்கத்தானே வேணும்" 'அப்ப டொக்டர் நான் வாறன்" இவன் கையைப்பிடித்து இறுக்கியவன் சற்று பின்தங்கி தனது அணியுடன் இணைந்துகொள்கின்றான். இவன் சற்று எட்டப்போய்விட்ட தன் அணியினரை பிடிப்பதற்காக விரைந்து நடக்கின்றான். இப்பொழுது பழையவாடி வீதியை அடைந்துவிட்டார்கள். வீதியில் நடப்பது சற்று இலகுவாக இருக்கின்றது. ஆனால் இருமருங்கிலும் இருக்கும் வீடுகளை பார்க்கும்போதுதான் மனம் கவலைப்படுகின்றது. சிறிய கல்வீடுகள் தான் ஆனால் அவற்றின் முற்றங்களை அலங்கரிக்க நாட்டப்பட்டிருந்த பூக்கண்டுகள் தண்ணீருக்காய் தவமிருந்து வாடிக்கிடக்கின்றன. கிணற்றடியில் நின்ற வாழைகள் தங்களின் இறுதிக்காலத்தை கவனமாக கழிப்பதுபோல் இருக்கின்றது. காற்றுக்கூட அவைகளின் நிலமை விளங்கி அதிகம் அல்லல்படுத்த தயங்குகிறது. குருத்திற்கு பக்கத்தில் இருக்கும் இளைய இலைகள் கூட சீப்புருவாக கிழிந்து மெல்லிய அசைவைக்காட்டுகின்றன. எலுமிச்சை மரங்களில் பச்சையும், இளமஞ்சலுமாக காய்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஆனால் அவற்றின் அளவோ மிகவும் சிறியதாகத்தான் காணப்படுகின்றது. சில தென்னை மரங்கள் மட்டுமே நிறைய தேங்காய்களை தாங்கியவண்ணம் எக்காலத்திலும் நாம் எம் கடமையில் இருந்து விலகோம்
என்பதுபோல் காட்சியளிக்கின்றன. இவற்றை உருவாக்க இம்மக்கள் எவ்வளவு கடினப்பட்ட .ருப்பார்கள். நிலக்கீழ் நீருடன் தம் நெற்றிவேர்வையையும் சேர்த்தல்லவோ ஊற்றி இருப்பார்கள். இப்பொழுது அவர்கள் நிலைமை.... தொடரும் எண்ணங்களை பாலையடி பள்ளிக்கூடம் திசைமாற்றுகிறது.
நாங்கள் சின்னனில் படிக்கின்றபோது இனவாதத்தின் கோரப்பற்கள் பதியதொடங்கிவிட்டனதான். ஆனாலும் எவ்வளவு சந்தோசமாக இருந்தனாங்கள். எல்லோருமாக சுற்றுலா செல்வோம். சுப்பிரமணியம் பூங்கா காங்கேசந்துறை சீமேந்து தொழிற்சாலை காரைநகர் சீனோ.. ஒவ்வொரு இடமாக செல்ல ரீச்சர்மார் விளங்கப்படுத்துவினம். யாழப்பாணம் றீகல் தியட்டரில் "யங்கிள்புக்" படம் பார்த்தோம். முற்ற வெளியில் ஐஸ்கிறீம் வேண்டிக் குடித்தோம். மாலை நேரம் உடல்வருட குளிரான ஐஸ்கிறீம் தொண்டையினுள் இறங்க அப்பப்பா உடல் சிலிர்க்கும். ஆனந்தம். இப்படியெல்லாம் வாழ்ந்துவிட்டுத்தான் இயக்கத்திற்கு வந்தனான். ஆனால் இப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பிள்ளைகள் எங்கே...?
உண்ண உணவின்றி உடுத்த உடையின்றி, நிம்மதியாக படுத்தெழும்ப இடமின்றி, எவ்வளவு அல்லல்படுங்கள், மழையிலும் வெயிலிலும் வாடும் அவர்களிற்கு நுளம்புகள்கூட இரக்கம் காட்டுவதில்லைத்தானே பாவம் நீங்கள். பல விதமாக ஓடிய மனம் அவர்களிற்காக பரிதாபப்படுகின்றது. இன்னும் கொஞ்சக்காலம் பொறுங்கள் உங்களின் பிஞ்சுப்பாதங்களை இப்பள்ளிக்கூடம் தரிசிக்கும். இவன் மனத்தினுள்ளே அவர்களுக்கு உறுதி கூறுகின்றான்.
களைத்துப்போன இரு போராளிகள் தாங்கள் கொண்டுவந்திருந்த
ஒரு ஸ்ரெச்சரில் வைத்து தோளில் சுமந்தவண்ணம் பொருட்களை செல்கின்றனர். "என்ன இப்பவே காயக்காரரை தூக்க ஒத்திசை பாக்கிறீர்களோ?" அருகில் ஒரு போராளி கேட்க
"அதுக்கெண்டே கனகாலம் றெயினிங் எடுத்தனாங்கள்." இருவரில் முன்னால் சென்றவன் பதிலளிக்கின்றான். ஆம் களமுனையில் நடைமுறைப்படுத்தப்படும் ஒவ்வொரு செயற்பாட்டிற்குமே பயிற்சிகள் செய்யப்படுகின்றன "கடினபயிற்சி இலகுவான சண்டை" அண்ணை சொல்லியிருந்த வசன வசனம் பல முறை நடைமுறை உண்மையாகவே உணரப்பட்டுள்ளது.
இப்பொழுது பழையவாடி பாதையில் இருந்து, இறங்கி கண்டிவீதிக்கு சமாந்தரமாக காட்டுப்பாதை ஒன்றினூடு நடக்கின்றார்கள். நேரம் இனிய மாலைப்பொழுதாக இருக்கின்றது. சூரியன் மேற்கின் தொடுவானத்தை அண்மித்திருப்பான் நேரடியாக.... பார்க்கமுடியாது ஏனெனில் இரண்டு பக்கமும் வளர்ந்துள்ள 30-40 அடி வரை உயரமான காட்டுமரங்கள் தங்களினுள் சூரியக்கதிரை ஊடுருவ விடுவதில்லை எனக்கங்கணம் கட்டிய வைபோல் தம் கிளைகள் எனும் கரங்களை ஒன்றுடன் ஒன்று நெருக்கமாகவே வைத்திருக்கின்றன. இந்திய இராணுவ காலகட்டத்தில் அண்ணையை சந்திக்கிறதிற்காக இந்தியாவில் இருந்து இங்கே வந்திருந்த திரு கோபாலசாமி கூறியிருந்தது. ஞாபகத்திற்குவந்தது.
நான் சூரிய ஒளி புகமுடியாத காடுகளினூடாக அழைத்துச்செல்லப்பட்டேன். தெரியவில்லை காலநிலை இதமாக இருந்தாலும் கால்களைத்தான் அரக்கன் பிடித்து கடித்து உண்பதுபோல் இருக்கிறது. ஒவ்வொரு அடி எடுத்து வைப்பதும் பரமபிரயத்தனமாகவே இருக்கிறது. ஆயினும் அதனை
வெளிக்காட்ட முடியாது, வழமையான வரட்டுக்கௌரவப்பிரச்சனைதான். சுமார் 11/2 கி.மீ தூரம் நடந்திருப்பார்கள் போகும் பாதைக்கு குறுக்கே ஒரு பெரிய பாலைமரம் விழுந்துகிடக்கிறது. அதன் இலைகள் உதிர்ந்திருக்கும் பதத்தை பார்க்கும்போது சுமார் இரண்டுகிழமைக்கு முன் வீழ்ந்திருக்கவேண்டும். சாதாரணமாக ஒரு மரம் இப்படி விழுந்திருக்காது. அதுவும் நிலத்திலிருந்து இரண்டு அடி மேலாக குறுக்காக முறிந்துள்ளது. யானையாலும் இந்த மரத்தை முறித்து வீழ்த்தமுடியாது. இப்படி மரத்தை முறித்து வீழ்த்தக்கூடிய புயல்காற்று என்றும் இப்பிரதேசங்களில் வீசுவதில்லை.
இவன் பலவாறு சிந்திக்கின்றான். முன்னால் சென்று கொண்டிருந்த சந்திரன் நின்று திரும்பி இவன் முகத்தைப் பார்க்கிறான். இவன் மனதில் ஓடிய எண்ணங்களை விளங்கியதனால் என்னவோ சற்று நின்று "இந்த இடத்தில் என்ன நடந்தது தெரியுமா?" கேட்கிறான். இவன் தெரியாது என்பதனை தலையசைப்பின் மூலம் தெரிவிக்கின்றான். சந்திரன் அந்த சம்பவத்தை விபரிக்க தொடங்குகின்றான்.
-தொடரும்……………
-யுத்தகாண்டம்
-தூயவன்
தொகுப்பு:தமிழரசன்அப்துல்காதர்
No comments:
Post a Comment