அகராதியில் அழித்தெழுதிக் கொள்ளுங்கள்.
பூபதி அம்மா...
ஒரு பெண்ணின் பெயரல்ல.
பூகம்பத்துக்குப் புதுப்பெயர்.
இவள்
காலக்குரலுக்கு, சேலைகட்டிய தோற்றம்.
ஊரெங்கும் ஓநாய்கள், ஊளையிட்ட போது.
தன்னந்தனியனாக தடியெடுத்து விரட்டியவள்.
எமது சுற்றுப் புறச் சூழலை அந்நியக் காற்று அசுத்தப்படுத்திய போது,
ஊத்தைக் காற்றின் உரிமையாளர் மீது, வழக்குத் தொடுத்து வாதிட்டவள்.
இங்கு அதிகமானோர் மௌனித்திருந்த போது, "புலிகள் எங்கள் பிள்ளைகள்.
அவர்களே எங்கள் பாதுகாவலர்கள்"
என்று.
வாய் திறந்து பாடிய விடுதலைக்குயில்,
சக்தி,
வலுப்பொருள்.
விஞ்ஞானம் இப்படி விதந்துரைக்கிறது.
சக்தி,
தாய்மையின் வடிவம்.
மெஞ்ஞானம் இப்படி முழக்கமிடுகின்றது.
எப்படிப் பார்த்தாலும் பூபதி அம்மா, பூரண வடிவம்.
No comments:
Post a Comment