Sunday, 15 March 2026

அமெரிக்காவின் மைலாயும்,இந்தியாவின் வல்வெட்டித்துறையும். இரண்டு இனப்படுகொலைகளின் வரலாறு

மை லாய் படுகொலை  என்பது மார்ச் 16, 1968 அன்று வியட்நாம் போரின்போது, அமெரிக்க ஆக்கிரமிப்பு படையினரால் சோன் மை கிராமத்தில் நிகழ்த்தப்பட்ட கொடூரமான படுகொலை ஆகும். இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 347 முதல் 504 அப்பாவி வியட்நாமிய பொது மக்கள் பாலியல் வதைக்கும் துன்புறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டு, அமெரிக்க வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர், 
16 மார்ச் 1968.
தெற்கு வியட்நாமின் சோன் மை கிராமத்தில் உள்ள மை லாய் மற்றும் மை கே கிராமங்களில் வியட்காங் போராளிகளை தேடுகிறோம் என்கிற பெயரில் அமெரிக்க இராணுவத்தின் 11-வது பிரிகேட், சார்லி கம்பெனி வீரர்கள். இரண்டு கிராமங்களையும் சின்னாபின்னப் படுத்தினர்

வியட்நாம் போர் உச்சத்தில் இருந்த நேரம் 1968 ஜனவரி இல்  வியட்காங்  படைகளின் தாக்குதலுக்கு ஆளாகி பின்வாங்கியிருந்த  அமெரிக்கப் படைகள் மிகுந்த கோபமும் விரக்தியும் அடைந்திருந்தன.
சோன் மை பகுதி வியட்காங் போராளிகளின் ஆதிக்கத்தில் இருந்த நிலையில் பதிலடி கொடுக்கும் மனநிலையில் போராளிகள் மீதான கோபத்தை அப்பாவி கிராமத்தின் பொதுமக்கள் மீது அட்டூழியத்தை நிகழ்த்தி காட்டின அமெரிக்கப் படைகள்

முதலில் இது வெளியுலகுக்கு தெரியாமல் அமெரிக்கப்படைகளால் மறைக்கப்பட்டது; "எதிரிகளுடன் சண்டை" என்றுதான் படைதரப்பு அறிக்கை தாக்கல் செய்தது 

ஆனால் 
1969இல் ரோனால்ட் ரிடென்ஹவர்  என்ற முன்னாள் வீரர் மற்றும் பத்திரிகையாளர் சீமோர் ஹெர்ஷ்  மூலம் வெளி உலகுக்கு தெரியவந்தது.

 இதில் முதன்மை சாட்சியங்களாக  ரான் ஹேபர்லே என்பவர் எடுத்து வைத்திருந்த புகைப்படங்கள் உலகையும் ஏன் அமெரிக்காவையும் அதிர வைத்தன.

அமெரிக்க வீதிகளில் வியட்நாம் போருக்கெதிராகவும்,மைலாய் படுகொலைகளுக்கு நீதி வேண்டியும் பொதுமக்கள் தன்னிச்சையான பொராட்டங்களில் ஈடுபட்டனர்,  அதன் விளைவாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு
விசாரணை நடத்தப்பட்டது 26 பேர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது ஆனால் 2 லெப் "வில்லியம் கேலி" மட்டுமே தண்டிக்கப்பட்டார்  அதுவும் முதலில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு பின்னர் குறைக்கப்பட்டு 3.5 ஆண்டுகள் சிறைவாசம் என தண்டிக்கப்பட்டார்.வரலாற்றில் மிக மோசமான படுகொலைகளுக்கு வெறும் ஒரு நபருக்கு 3.5 ஆண்டு சிறைவாசம் என்கிற மிகப்பெரிய தண்டனை கொடுத்து தனது பாவக்கறையை தீர்த்துக்கொண்டது அமெரிக்க நீதிபரிபாலன சபை.

ஆக்கிரமிப்பு அமெரிக்க  காட்டுமிராண்டிப் படைகளால் படுகொலை செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் கூட பாகுபாடு காட்டப்பட்டது அமெரிக்க தரப்பு  
347 பேர்கள் எனவும் வியட்நாம் தரப்பு 504 பொது மக்கள் கொல்லப்பட்டனர் என்றும் கூறியது  பெண்கள் குழந்தைகள் பாலியல் வதைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூரங்களுக்கு அமெரிக்காவை பொறுத்தவரை எந்த நீதியும் வழங்கப்படவில்லை, இந்த காட்டுமிராண்டிகள் தான் உலகுக்கு சமநீதி சமத்துவம் சனநாயகம் எனப் பாடம் நடத்துகின்றனர் .........

வியட்நாமில் அமெரிக்கா நடத்திய மைலாய் படுகொலைகளுக்கு ஈடாக இந்திய வல்லாதிக்க ஆக்கிரமிப்பு படைகளும் தமிழீழத்தில் தேசியத்தலைவரின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் மிகப்பெரிய ஒரு படுகொலையை நடத்தியது, இது இந்தியாவின் மைலாய் எனவும் அழைக்கப்படுகிறது.

1989 ஆகஸ்ட் 2 திகதி முதல் 4ஆம் திகதி வரை இரண்டு நாட்கள் தமிழீழநாட்டின்   வட மாகாணம் யாழ் மாவட்டம் வல்வெட்டித்துறையில் கிந்திய அமைதிப்படை என்கிற IPKF சாத்தான்படைகள் இரத்தவெறிபிடித்து பேயாட்டம் ஆடின, 

ஆகஸ்ட் 2 அன்று காலை சுமார் 11:15 மணிக்கு, வல்வெட்டித்துறை சந்தையில் புலிகள் IPKF வீரர்களைத் தாக்கினர்  இதில் 6 IPKF சாத்தான்கள்  கொல்லப்பட்டனர்.
இதற்குப் பதிலடியாக, IPKF வல்வெட்டித்துறையில் ஊரடங்கை அமல்படுத்தினர்.

அதன் பின்னர், வீடுகளுக்குள் புகுந்து, துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் தமிழ்மக்களை படுகொலை செய்து அவ்வுடல்கள் மீதும் வீடுகள் மீதும் தீ வைத்தனர் எரியும் வீட்டின் நெருப்புகளில் கொலைசெய்யப்பட்ட தமிழர்களின் உடல்களை தூக்கி வீசினர், பெண்கள் குழந்தைகள்,வயதான மூதாட்டிகள் என எந்த பேதமுமின்றி அந்த சாத்தான் படைகள் பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அவர்களையும் கொலை செய்து நெருப்பில் போட்டனர்.

 கையில் அகப்பட்ட சில இளைஞர்களை வரிசையாக நிறுத்தி சுட்டுக் கொன்றனர்.
கோயில்களுக்குள் தஞ்சமடைந்தவர்களும் கோயிலுக்குள்ளேயே வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பல வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டன; மீன்பிடி உபகரணங்கள் அழிக்கப்பட்டன.

64 பேர் வரை கொல்லப்பட்டனர் 52 உடல்கள்  அடையாளம் காணப்பட்டன,

 12 பேர் உடல்கள் கிடைக்காததால் காணாமல் போனவர்கள் எனக் கருதப்பட்டது. அவர்களும் நெருப்பில் எறியப்பட்டதால் எரிந்து சாம்பலாகி போயிருக்கலாம்.

100க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர் இதில் 
16 வயதுக்குக் கீழ் 5 குழந்தைகள் மற்றும் ஒரு பிறந்த கைக்குழந்தை.

 122 வீடுகள், 45 கடைகள் எரிக்கப்பட்டன; 10 கார்கள், 50 சைக்கிள்கள், 175 மீன்பிடி வலைகள் அழிக்கப்பட்டன.

பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர்; சிலர் சித்திரவதை செய்யப்பட்டனர்.
அமைதி காக்க வந்த அயோக்கியர்கள் இரத்தவெறி பிடித்து 2 நாட்களாக கோரத்தாண்டவம் ஆடிக் களித்தனர்.
1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர் IPKF இலங்கைக்கு வந்தது தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கொடுக்க என்றுதான் முதலில் தமிழர்களும் நம்பினர்.

ஆனால் புலிகளுடன்  மோதல் போக்கையே கடைபிடித்தது.

அதனால் புலிகளின் தாற்காப்பு தாக்குதல்கள்  தீவிரமானது,

வல்வெட்டித்துறை புலிகளுக்கு ஆதரவு பெற்ற பகுதி என்பதால் சாத்தான் படைகளின் இலக்கானது.

இவ்வளவு பெரிய இனப்படுகொலைக்கு பிறகும்
இந்தியா அல்லது IPKF சார்பில் எந்த அதிகாரப்பூர்வ விசாரணையும் இல்லை யாருக்கும் தண்டனையும் இல்லை.

இது சம்பந்தமாக 
 2025இல் International Truth and Justice Project (ITJP)  என்கிற அரசுசாரா சர்வதேச அமைப்பு  அறிக்கை வெளியிட்டது.

 உயிர் தப்பியவர்களின் வாக்குமூலங்கள் அடங்கிய அறிக்கையையும் வெளியிட்டது. அந்த அறிக்கை வழியாக 
வல்வெட்டித்துறை குடிமக்கள் குழு (Citizens' Committee) மூலம்  இந்தியாவிடம் USD 15 மில்லியன் இலங்கை மதிப்பில் 4.5 பில்லியன் சுமார்  450 கோடி ரூபாய் இழப்பீடு கோரி உரிமை கோரிக்கை சமர்ப்பித்துள்ளது .

சிறீலங்கா - தமிழீழப்போரில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்த இந்தியாவின் IPKF-இன் மிக மோசமான அட்டூழியங்களில் ஒன்றாக வல்வைப்படுகொலைகளை வரலாறு பதிவு செய்துள்ளது,  இந்தியா தமிழீழத்தில் நடத்திய "மைலாய்" என சர்வதேச அரசியல் பார்வையாளர்களாலும் குறிப்பிடப்படுகிறது கருதப்படுகிறது.  அமெரிக்கா காட்டுமிராண்டிகள் வியட்நாமிலும்,இந்திய சாத்தான் படைகள் தமிழீழத்திலும் நடத்திய படுகொலைகளை, நாகரீக வளர்ச்சிப்பெற்ற எந்தவொரு மானுட சமூகமும் ஏற்றுக்கொள்ள முடியாத அநியாயமும் அக்கிரமுமாகும்,  நிராயுதபாணியான அப்பாவி மக்கள் மீது, சகல ஆயுதங்களையும் கொண்டிருந்த அரசப்படைகள் நடந்திய கோழைத்தனமான தாக்குதல்கள் ஆகும்.  இதே இரண்டு படுகொலைகளிலும் பெண்கள் மீது நடத்திய வன்முறைகள் இவர்கள் எப்படிபட்ட வக்கிரபுத்திக் கொண்ட கயவர்கள் என்பதையும் வரலாறு பதிவு செய்துள்ளது.  தாயக விடுதலைப்போரில் உயிர்நீத்த பொதுமக்களுக்கு தமிழர்களின் வீரவணக்கம்!   

தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்.  

தகவல் தொகுப்பும் எழுத்தும்: தமிழரசன்அப்துல்காதர்.

குறிப்பு:

இந்திய அமைதிப்படை நடத்திய வல்வெட்டித்துறைப் படுகொலைகள் சம்பந்தமான
ITJP அறிக்கை விவரங்கள்:

ITJP (International Truth and Justice Project) என்பது தென்னாப்பிரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு மனித உரிமை அமைப்பு. இது இலங்கை உள்நாட்டுப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தி, நீதி கோரும் பணியில் ஈடுபட்டுள்ளது.

அறிக்கையின் பெயர் மற்றும் வெளியீடு:
தலைப்பு: Valvettithurai: Testimonies of a Massacre

வெளியீட்டு தேதி: மார்ச் 2025 (சில இடங்களில் பிப்ரவரி 2025 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது)

மொழிகள் : ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகியவற்றில் கிடைக்கிறது.

- **முழு அறிக்கை PDF**: https://itjpsl.com/assets/ITJP_VVT-report_Digital_Final-March-2025.pdf (அல்லது sangam.org இல் கிடைக்கும்)

இந்த அறிக்கை 1989 ஆகஸ்ட் 2-4 வரை வல்வெட்டித்துறையில்  IPKF ஆல் நிகழ்த்தப்பட்ட படுகொலையில் உயிர் தப்பியவர்களின் வாக்குமூலங்கள் (testimonies) அடிப்படையில் விவரிக்கிறது.

கொல்லப்பட்டோர் எண்ணிக்கை: 60க்கும் மேற்பட்டோர் (பெரும்பாலான ஆதாரங்கள் 64 அல்லது 66 என்று கூறுகின்றன).

இதில் 5 குழந்தைகள் (16 வயதுக்குக் கீழ்) + ஒரு கைக்குழந்தை.

காயமடைந்தோர் : 34 முதல் 100க்கும் மேற்பட்டோர்.

-மற்ற அட்டூழியங்கள் :
 பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை (sexual violence).
சித்திரவதை (torture).
வீடுகள், கடைகள், மீன்பிடி உபகரணங்கள், வாகனங்கள் ஆகியவை அழிக்கப்பட்டன.

 ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அப்பாவி மக்கள் வீடுகளுக்குள் இருந்தபோதே சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஆதாரங்கள் : உள்ளூர்  நபர் நடராஜா அனந்தராஜா போன்றோரின் வாக்குமூலங்கள்.

சேகரித்த 200க்கும் மேற்பட்ட sworn affidavits (சத்தியப் பிரமாண அறிக்கைகள்) அடிப்படையில் தொகுக்கப்பட்டது. இவை மற்ற ஆதாரங்களுடன் இணைக்கப்பட்டு வலுவான வழக்கு உருவாக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின் கோரிக்கைகள்
❌குற்றவியல் பொறுப்பு

 (criminal accountability): IPKF அதிகாரிகளை அடையாளம் கண்டு தண்டிக்க வேண்டும்.

❌இழப்பீடு (reparations): பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு, mass grave exhumation (புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டி எடுத்தல்).

❌இந்திய அரசு மன்னிப்பு கோர வேண்டும், பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

❌இலங்கை அரசு சுதந்திர விசாரணை நடத்த வேண்டும்.

 ❌எதிர்கால உண்மை அறியும் ஆணையத்தில் (truth commission) IPKF அட்டூழியம் நடத்திய காலத்தை சேர்க்க வேண்டும்.

இதன் பின்விளைவாக அக்டோபர் 2025ல்
- ITJP உடன் இணைந்து Valvettithurai Citizens’ Committee இலங்கை Office for Reparations-க்கு USD 15 மில்லியன்(LKR 4.5 பில்லியன் ≈ ரூ.450 கோடி) இழப்பீடு கோரி விண்ணப்பித்தது.

இது இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஒரு பழைய படுகொலைக்கு விரிவான இழப்பீடு கோரிக்கையாகும்.

இழப்பீடு கோரிக்கை:

 உயிரிழப்பு, காயங்கள், சொத்து அழிவு, நீண்டகால இடம்பெயர்வு, intergenerational trauma ஆகியவற்றை உள்ளடக்கியது.

ITJP இயக்குநர் Yasmin Sooka குறிப்பிடும் போது,  இது "வெளிநாட்டு இராணுவ அட்டூழியங்களுக்கு பொறுப்புக்கூறல்" முன்னுதாரணம் என்று கூறினார்.

இந்த அறிக்கை 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த சம்பவத்தை உலக கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. முழு அறிக்கையை PDF-இல் படிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் உங்கள் ஈ மெயில் ID மூலம் உள்நுழைந்து படிக்கவும்,  PDF தரவிறக்கம்  தேவைப்பட்டால் எனது எண்ணிற்கு பகிரியில் தொடர்புகொள்ளவும் நன்றி" 👇

https://drive.google.com/file/d/1_uY42nLsmm3T0leCLqoscSQ5oO9xP9Am/view?usp=drivesdk

No comments:

Post a Comment