Saturday, 7 March 2026

மாட்சிக்குப் பலி எங்கள் மாசறியா குஞ்சுகளா? நாவண்ணன்

சண்டாளி, சதிகாரி, சந்திரிகா பேய்க்காளி. கொண்டவனை, அப்பனை கொலைக்குக் கொடுத்தவளே !

ஆட்சிக்கொலு அமர்ந்த அரக்கியே ! உன்னுடைய மாட்சிக்குப் பலி எங்கள் மாசறியாக் குஞ்சுகளா?

பிஞ்சுகளைப் பிய்த்தெறியும் பிடாரியே ! பிசாசே ! எஞ்சியுள்ள பரம்பரைக்கும் ஏன் பழியை தேடுகிறாய் ?

பள்ளிச் சிறுவரென்ன பயங்கரவாதிகளா ? துள்ளிவிளையாடி துரத்திப்பிடித்தவரை கொள்ளிக்கும் உடலின்றி குலைத்தாயே குடிகேடி !

துண்டாடி எம் சிறாரை துவசம் செய்பவளே மண்டை ஓட்டு மகாராணி உனக்கு ரெண்டுண்டு எண்ணிப்பார். !

'குடி'யாட்சி நீ நடாத்த குடும்பமாய் அழிப்பவளே !
அடிபெயர்ந்து விழுமுந்தன் அரசு விரைவினிலே !

புத்தமதத் தத்துவத்தை தத்தெடுத்த உத்தமரே? 
சத்தியத்தை சவக்குழிக்கு சமர்ப்பணம் செய்தவரே! 
யுத்தமுனை சென்று ரத்தப்பலியெடுக்க -எம் வித்துகளை அழிக்க விடையளிக்கும் விசர்களே !

உத்தமன் புத்தபிரான் உம்முன்னால் இன்றுவரின் 'உம்ப மரணுவா" தான் உங்கள் பதிலாயிருக்கும்

இத்தனைக்கும் பின் தெற்கில் இலைநக்கும் துரோகிகளே ! பெற்றவளை விற்றுப் பிழைப்பதிலும் பெருமையுண்டோ ?
-உமக்கு

கச்சைகூட வேண்டாம் கையினிலே ! ஓடெடுத்து பிச்சை பெற்று உண்ணும் பெருமை அதில் உண்டூ !

-நாவண்ணன்

-வி.பு இதழ் 1995

No comments:

Post a Comment