நெடுநாட்களுக்கு பின்னொரு இராக்காலம் பேரலைகள் விழுங்கிய ஊர்க்கரையை தனியே காணச் சென்றிருந்தேன்.
முடிவற்ற துயரின் ஒவியங்களாக எல்லாம் காட்சி தந்தன.
உடைந்திருக்கும் வீடுகளில் முற்றங்களில் கரிய இருள் எழுந்து படர்ந்தது, குப்பி விளக்கொன்றை ஏற்றிடக்கூட சுவர்களில்லை, ஆட்களில்லை.
முறிந்திருக்கும் தென்னைகளின் பனைகளின் தெருக்களின் மேலாக ஒசையற்ற காற்று தனித்தலைந்தது.
இறக்கை தொலைத்த கடல்பட்சிகள் திசைகெட்டு கடலை ஒடுங்கிக் கடந்தன.
முடிவடையும் சோகப் பாடலொன்றின் இறுதி அடியாக எல்லாமே இறந்து காட்சியளித்தன.
மங்கிக் குருடாகும் நிலவின் மஞ்சள் இருளில் விபரிக்க முடியா வேதனை சுமந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன் என்னையும் இழந்து.
-அலறி
-எரிமலை 3/2008
No comments:
Post a Comment