16-6-86.
அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில், சிங்கள இனவாத அரசு மேற்கொண்ட படையெடுப்பு படுதோல்வியில் முடிந்ததையடுத்து, அரச படை வெளியே புறப்படப்பயந்து தமது முகாமிற்குள்ளேயே பதுங்கியிருக்கின்றது. இப்பொழுது கிளிநொச்சி மாவட்டம் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றது. எனினும் சிங்களப்படையினர் சர்வதேசப் பயங்கரவாதிகளான மொசாட்டின் ஆலோசனையின்படி அடிக்கடி முகாமை விட்டு வெளியே வந்து தமிழ் மக்களின் சொத்துடமைகளை நாசமாக்க முனைகின்றார்கள். எனவே இதனைத் தடுப்பதற்காக இராணுவத்தினர் பயன்படுத்தும் உருத்திரபுரம் பாலத்தைப் புலிகள் தகர்த்தனர். இதனால் இராணுவத்தினரின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதுடன், பொதுமக்களின் சேதத்தையும் தவிர்க்க முடிந்தது.
தமிழீழத்தின் வடபகுதியில் அமைந்துள்ள கடற்கரையோர நகரமான வல்வெட்டித்துறை மீது ஸ்ரீலங்காவின் முப்படைகளும் சமீபத்தில் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைப் புலிகள் முறியடித்ததையடுத்து, நகரில் நிலவிய அமைதியைக் குலைப்பதென இராணுவத்தினர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றார்கள். நகரின் மேற்குப்புறத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருக்கும் இராணுவத்தினர் அடிக்கடி வெளியே தலை நீட்டிப்புலிகளிடம் முறையாக வேண்டிக் கொள்கிறார்கள். இவ் வகையில் 18.6.86 அன்று முகாமிலிருந்து புறப்பட்ட இராணுவத்தினருடன் புலிகள் கடுமையாக மோதினார்கள். புலிகளின் அதிரடித் தாக்குதலில் 05 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் மேலும் சிலர் படுகாயமடைந்தனர். நகரின் அமைதியைக் குலைக்கப் புறப்பட்ட இராணுவத்தினர் பீதியடைந்த நிலையில் தமது முகாமிற்கு மீண்டும் திரும்பினார்கள்.
தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்குச் சிங்கள அரசு கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றது. இதன் ஒரு பகுதியாகத் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைச் சிங்கள அரசு உருவாக்கி வருகின்றது. இந் நடவடிக்கையானது ஜோர்டானின் மேற்குக்கரையில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த அரபு மக்களை அடித்து விரட்டி, அவர்களைக் கொலை செய்து, அங்கு சியோனிசப் பயங்கரவாதிகளான இஸ்ரேலிய யூதர்கள் தமது குடியேற்றங்களை ஏற்படுத்திய சம்பவத்திற்கு ஒப்பானது . இதே போலவே இஸ்ரேலிய மொசாட்டின் ஆலோசனைப்படி தமிழ் மாவட்டத்திலுள்ள வவுனியாவில் உள்ள உழுக்குளம் என்னுமிடத்தில் சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இக் குடியேற்றங்களிற்குக் காவலாகக் கடைந்தெடுத்த சிங்களக் காடையர்கள் இருந்து வருகிறார்கள். இவர்கள் அப்பாவித் தமிழ் மக்கள்மீது மிருகத்தனமான தாக்குதலை மேற்கொண்டு வருகிறார்கள். புலிகள் இவற்றையெல்லாம் பார்த்துக் கைகட்டிக் கொண்டு இருக்கவில்லை. 16-06-86 அன்று உழுக்குளத்தில் மூன்று ஊர்காவல்படையினர் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து இரு வேட்டைத் துப்பாக்கிகள் எம்மால் கைப்பற்றப் பட்டன.
18-06-86.
கொக்காவில் கூட்டு இராணுவ முகாமிலிருந்த சிங்களப்படைகள் கிளிநொச்சி நகரின் மீது தாக்குதலை மேற்கொள்ளப் புறப்பட்டனர். படைகளின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட புலிகளின் கெரில்லா அணி இராணுவத்தை இடைவழியில் மறித்துத் தாக்கியது. சிலமணிநேரம் இருதரப்பினருக்கும் இடையில் நடைபெற்ற உக்கிரமான போரையடுத்து இராணுவத்தினர் பலத்த உயிரிழப்பின் மத்தியில் தமது முகாமிற்கு மீண்டனர்.
தொடர்ந்து வல்வெட்டித்துறை நகரை அழிப்பதற்குச் சிங்களப்படைகள் முயன்று வருகின்றன . 18ந் தேதி நண்பகல் 10 மணியளவில் சுமார் 75 இராணுவத்தினர் முகாமிலிருந்து புறப்பட்டனர். இவர்கள் மேற்குப்புறமாக நகர்ந்து சுமார் 100 மீற்றர் தூரம் செல்வதற்குள் புலிகள் இடைமறித்துத் தாக்குதலை மேற்கொண்டார்கள். இராணுவத்தினருக்கு உடல், உளவியல் ரீதியாகத் தாக்கத்தைக் கொடுக்கும் கண்ணிவெடித் தாக்குதலைப் புலிகள் மேற்கொண்டனர். இச்சம்பவத்தில் 3 இராணுவத்தினர் தளத்திலேயே கொல்லப்பட்டனர்.மேலும் சிலர் மோசமாகக் காயமடைந்தனர். இதனையடுத்து இராணுவத்தினர் முகாமிற்குள் சென்று பதுங்கினார்களாயினும் இனப்படுகொலை மேற்கொள்ளும் தமது எண்ணத்தை மாற்றவில்லை. 18-06-85 அன்று இரவும் அவர்கள் முகாமை விட்டுப் புறப்பட்டனர். இவர்களிற்கெதிராகப் புலிகள் கண்ணி வெடித் தாக்குதலைத் தொடுத்தனர். இதில் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இடம்பெற்ற கடும் துப்பாக்கிச் சண்டைக்கு ஈடு கொடுக்க முடியாத சிங்களப்படையினர் தமது பாசறைக்குப் பின்வாங்கினார்கள்.
19-06-96
தமிழீழத்தின் உணவு உற்பத்தியில் முதன்மை பெற்று விளங்கும் கிளிநொச்சி மாவட்டத்தைச் சீர் குலைப்பதற்குச் சிங்கள அரசு முயன்று வருகின்றது. 19-06-86 அன்று கிளிநொச்சி இராணுவமுகாமிலுள்ள சிங்களப்படை இருவேறு பிரிவுகளாகப் புறப்பட்டுத் திருநகர், ஜெயந்திநகர் ஆகிய கிராமங்களை முற்றுகையிட முனைந்தனர். இராணுவத்தினரது நடமாட்டத்தை அறிந்த புலிகளின் இரு கெரில்லா அணிகள் திருநகரிலும், ஜெயந்திநகரிலும் இராணுவத்தை எதிர்கொண்டனர். நூற்றி ஐம்பதிற்கும் அதிகமான இராணுவத்தினர் கவசவாகனங்கள் சகிதம் திருநகரிற்கு வந்துகொண்டிருந்தபோது எமது கெரில்லா அணி அதிர்ச்சித் தாக்குதலை தொடுத்தது எமது றொக்கற் தாக்குதலினால் கவசவாகனமொன்று முற்றாகச் சேதமடைந்தது. அதிலிருந்த அனைத்து இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் யுத்தத்தில் 6 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் 7 பேர் மோசமாகக் காயமடைந்தனர். இறுதியில் எமது தாக்குதலிற்கு ஈடுகொடுக்க முடியாத படையினர் இறந்த காயமடைந்த இராணுவத்தினர்களைத் தூக்கிக்கொண்டு பின்வாங்கிச் சென்றார்கள். இதே வேளையில் ஜெயந்தி நகரிற்குச் சென்ற சிங்களப் படைகளைப் புலிகளின் மற்றுமொரு கெரில்லா அணி சுற்றிவளைத்துக் கொண்டது. காலை 11 மணி யிலிருந்து பலமணி நேரமாகச்சண்டை தொடர்ந்து நடைபெற்றது. இராணுவத்தினர் தரப்பில் பலர் இறந்தும், காயமடைந்தும் காணப்பட்டனர். தாக்குதலைத் தொடர முடியாத இராணுவத்தினர் பின்வாங்கிச் சென்றார்கள். இவ்விரு தாக்குதல் களிலும் ரவைகள், மோட்டார் செல்கள் போன்றன எம்மால் கைப்பற்றப்பட்டன.
புலிகள் தமது அதிரடித் தாக்குதல்களினால் இராணுவத்தினரை உளவியல் ரீதியாகப் பாதிப்படையச் செய்ததுடன் அவற்றில் வெற்றியும் கண்டுள்ளார்கள். 19-06-86 அன்று முல்லைத்தீவு முகாமிலிருந்த இருநூறுக்கும் அதிகமான கூலிப் படையினர், கெலிகப்டர்கள் ஆகாயப்பாதுகாப்புக் கொடுக்க நடந்து வந்தனர். இவர்களை, எமது வீரர்கள் புதுக்குடியிருப்பு எனுமிடத்தில் இடை மறித்துத் தாக்கினார்கள். இத்தாக்குதலில். இராணுவத்தினருக்குத் தலைமை தாங்கியவர் உட்பட மூன்று இராணுவத்தினர் படுமோசமாகக் காயமடைந்தனர். கெலிகப்டரொன்று மிகவும் பலமாகச் சேதமாக்கப்பட்டது இதனால் கலக்கமடைந்த இராணுவத்தினர் தமது முகாமிற்குள் ஒடிவிட்டார்கள். இதனைத் தொடர்ந்து சிங்கள இராணுவம் புலிகளுக்குச் சமாதானத் தூதுவிட்டுள்ளது தாங்கள் இந்தப் பகுதிக்குப் புதியவர்கள் என்றும், தங்களுக்கும் குழந்தைகள், குட்டிகள் இருப்பதாகவும் தங்களை ஒன்றும் செய்ய வேண்டாமென்றும் கெஞ்சி மன்றாடிச் சில பொதுமக்கள் மூலம் புலிகளுக்குச் சமாதானத் தூதை விட்டனர். தங்கள் நிலைமையைப் புலிகளிற்கு விளக்கிக் கூறும்படி அவர்கள் அப்பொதுமக்களைக் கேட்டுள்ளார்கள்.
முருங்கன் முகாமிலிருந்து இரவு வேளை புறப்பட்ட இராணுவத்தினர் உயிலங்குளம் சந்தியில் மறைந்து நின்று, அவ்வழியில் போவோர், வருவோர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இவர்களுக்கு உதவியாக 3 வாகனங்களில் இராணுவத்தினர் வந்து சேர்ந்தனர். தகவலறிந்த புலிகளின் கெரில்லாப் பிரிவு சடுதியில் விரைந்து சென்று, இராணுவத்தினர் மீது றொக்கற் தாக்குதலை நடாத்தியது இதனால் பீதியடைந்த இராணுவத்தினர் தமது 'முகாமிற்குள் சென்று பதுங்கிக் கொண்டார்கள்.
20-06-86.
கிளிநொச்சி மாவட்டத்தில் வியட்னாம் பாணியிலான தாக்குதலைச் சிங்களப் பேரினவாத அரசு மேற்கொண்டு வருகின்றது. ஏற்கெனவே கிளிநொச்சி மாவட்டத்தில் விமானத் தாக்குதல்களை நடாத்திய இராணுவத்தினர் பொதுமக்களின் இருப்பிடங்களை நாசமாக்கியுள்ளார்கள். இதே பாணியில் 20-06-86 அன்று பகல் 10 மணியளவில் முகாமிலிருந்து புறப்பட்ட இராணுவத்தினர் கரடிப் போக்கு-கிராமத்திற்குள் புக முற்பட்டனர் ஆகாயப் பாதுகாப்பாகக் குண்டுவீச்சு விமானங்களும், கெலிகப்டர்களும் பாதுகாப்புக் கொடுக்க ஆங்காரத்துடன் புறப்பட்ட இராணுவத்தினர் மீது புலிகள் அதிரடித் தாக்குதலைத் தொடுத்தனர். பலமணி நேரம் இடம் பெற்ற சண்டையையடுத்து உயிரிழப்புகளின் மத்தியில் இராணுவம் முகாமிற்குள் பின்வாங்கியது.
21-06-86.
விமானத் தாக்குதல்களை நடாத்தித் தமிழ் மக்களைப் பீதியடையச் செய்து தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை முறியடிப்பது பௌத்த பேரினவாத அரசின் திட்டமாகும். இதற்கான ஆலோசனைகளை இஸ்ரேலிய மொசாட் சிங்கள அரசுக்கு அளித்து வருகின்றது. இவ்விமானத் தாக்குதல்கள் கிளிநொச்சி மாவட்டத்தை மைய மாகக் கொண்டே நடைபெற்று வருகின்றது. இன்றும் இரு குண்டு வீச்சு விமானங்கள், கெலிகப்டர்கள் சகிதம் கிளிநொச்சியை முற்றுகையிட்ட சிறிலங்கா விமானப்படை கனகபுரம் எனுமிடத்தில் அழிவு நடவடிக்கைகளில் இறங்கியது. பாகிஸ்தானிய, அமெரிக்க விமான ஒட்டிகளால் செலுத்தப்படும் சிறிலங்கா விமானப்படை தமிழ் மக்களுக்கெதிரான அழிவு நடவடிக்கைகளில் முதலிடம் வகிக்கின்றது. புலிகள் தமது கனரக விமான எதிர்ப்புத் துப்பாக்கிகளைப் பயன்படுத்திக் கடுமையான தாக்குதலில் இறங்கினார்கள். இதனால் விமானப்படை விமானங்கள் உயரே பறந்து மறைந்து விட்டன.
-உறுமல் 16/7/1986.
No comments:
Post a Comment