சுதந்திர தமிழீழத் தனியரசே எமது தேசியப் பிரச்சினைக்கு இறுதியான, உறுதியான தீர்வு என்பதை எமது மக்கள் எப்பொழுதோ தீர்மானித்து விட்டார்கள். எமது மக்களின் சுதந்திர அபிலாசையை சிலுவையாக தோளில் சுமந்து, இத்தனை ஆண்டுகளாக எமது இயக்கம் இரத்தம் சிந்திப் போராடி வருகிறது. இன்று, எமது சுதந்திரப் பயணத்தில், அந்த நீண்ட விடுதலை வரலாற்றில், ஒரு முக்கியமான திருப்பத்தை அடைந்துவிட்டோம்.
எமது போராட்ட இலக்கு, ஒளிமயமான எதிர்காலமாக, எமது கண்களுக்குத் தெரிகிறது.
நாம் நம்பிக்கையுடன் எமது இலட்சியப் பயணத்தைத் தொடர்வோம்.
எமக்கு முன்னால் எழக்கூடிய எல்லாத் தடைகளையும் உடைத் தெறிந்து நாம் நெஞ்சுறுதியுடன் நிமிர்ந்து செல்வோம்.
நாம் ஒரே மக்கள் சக்தியாக, ஒன்றுபட்ட தேசமாக, ஒருமித்தெழுந்து, எமது இலட்சியப் பாதையில் விரைந்து செல்வோம்.
சாவைத் தழுவிய எமது வீரர்களின் ஆன்மாவாக சுதந்திரம் எமக்காக காத்து நிற்கிறது.
-1999ஆம் ஆண்டு தமிழீழ மாவீரர் நாளை முன்னிட்டு தமிழீழத் தேசியத் தலைவர் ஆற்றிய உரையிலிருந்து.
No comments:
Post a Comment