Friday, 14 August 2026

சிறுவர் பராமரிப்பும், தமிழீழ நிர்வாகமும். 2

சிறுவர் பராமரிப்பும், தமிழீழ நிர்வாகமும். 2
~~~~~~~~~~~~~~~~
பரவலாக வடக்கு கிழக்கில் நிலவும் போஷாக்கின்மை பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். கொழும்பு அரசு தொடர்ச்சியாக தமிழர்களுக்கு நடத்திய பொருளாதாரத்தடையும் எம் மக்களின் வறுமையும் போஷாக்கின்மையின் கூட்டுக்காரணிகளாக அமைகின்றன. உலகவங்கியின் மனித மேம்பாட்டு ஆய்வலகு (HUMAN DEVELOPMENT UNIT, WB) வெளியிட்ட பெப்ரவரி, 2005 அறிக்கை வட கிழக்கில் நிலவும் போஷாக்கின்மை இலங்கைத்தீவின் பிற பகுதிகளிலும் பார்க்க கூடுதலாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. வட கிழக்குப் போஷாக்கின்மை 46 வீதமாகவும் இலங்கைத்தீவின் பிற பகுதிகளில் அது 29 வீதமாக இருப்பதையும், ஆகக் கூடுதலான போஷாக்கின்மை மட்டக்களப்பிலும் (53%) அதற்கடுத்ததாக
வவுனியாவிலும் (51%) நிலவுவதையும் உலகவங்கி அறிக்கை நிரூபிக்கின்றது. மேற்கூறிய சுட்டு விகிதங்கள் அனைத்தும் சிறுவர் சிறுமியர்கள் பற்றியதாகும். இவ்வறிக்கையில் முல்லைத்தீவு, கிளிநொச்சி பற்றிய ஆய்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. ஆனால் பின்வரும் மாவட்டங்களின் போஷாக்கின்மை விகிதம் அதிலுள்ளன. திருகோணமலை (45%), மன்னார் (28%), அம்பாறை (44%), யாழ்ப்பாணம் (43%).

எல்.ரி.ரி.ஈ, யுனிசெப், சிறிலங்கா அரசு ஆகிய முத்தரப்பினர் இணைந்து உருவாக்கிய “போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான நடவடிக்கைத் திட்டம்” செயலிழப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. இத்திட்டத்தை நடை முறைப்படுத்துவதால் எல்.ரி.ரி.ஈ அமைப்பிற்கு நன்மையும் அனுகூலமும் வந்தடையும் என்று அது நம்புவதற்கு இடமளிக்கப்படவில்லை. குடும்பத்தினருடன் இணைக்கப்பட்ட சிறுவர்களின் இணைப்பிற்குப் பிந்தியகால ஆலோசனை மற்றும் உதவிகளுக்கான உத்தரவாதம் வழங்கப்படவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக முத்தரப்பினருக்கும் இடையில் திருப்திகரமான ஒருங்கிணைப்பு ஏற்படவில்லை, இதனால் நடவடிக்கைத் திட்டத்தை அமுலாக்குவதில் பின்னடைவு ஏற்பட்டது. எதிர்பார்த்த பலனை தரத்தவறியதற்கான மூலகாரணங்களாக இவை இடம் பெறுகின்றன.

மேற்கூறிய நடவடிக்கைத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இடைத்தங்கல் முகாம்கள் ஊடாக 170 வரையிலான சிறுவர்கள் எல்.ரி.ரி.ஈயின் பொறுப்பிலிருந்து யுனிசெப் மூலம் மீளளிக்கப்பட்டனர். இச்சிறுவர்களில் சிலர் கவனிப்பாரற்ற நிலையில் மீண்டும் எல்.ரீ.ரீ.ஈயிடம் வந்தடைந்தனர். அதாவது சமுதாய நீரோட்டத்தில் சேர்ப்பிக்கப்பட்டபின் அவர்களுக்குரிய கவனிப்பு திருப்திகரமாக அமையவில்லை. இடைத்தங்கல் முகாமூடாக அனுப்பப்பட்ட சிறுவர்கள் எல்.ரி.ரி.ஈ நேரடியாக அனுப்பிய சிறுவர்களிலும் பார்க்க கூடுதலான நன்மைகளை அடையவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. இருபாலாருக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்கவில்லை. இடைத்தங்கல் முகாமூடாக
சிறுவர்களைத் திருப்பி அனுப்புவதை எல்.ரி. ரி.ஈ நிறுத்தியதற்கு இது காரணமாக அமைகிறது. அத்தோடு எல்.ரி.ரி.ஈ மீதான கண்டன விமர்சனத்தைத் தளர்த்துவதற்கு யுனிசெப் ஒத்துக் கொள்ளவில்லை. இதே கால கட்டத்தில் நெசோர் (NESOHR) எனப்படும் வடக்கு கிழக்கு மனித உரிமைச் செயலகம் (NORTH EAST SECRETARIAT ON HUMAN RIGHTS) உருவாக்கப்பட்டதால், அதனூடாகச் சிறுவர்களை குடும்பத்தினரிடம் சேர்ப்பிக்கும் நடைமுறையை எல்.ரி.ரி.ஈ செயற்படுத்தத் தொடங்கியது.

இதனடிப்படையில் 2003ஆம்
ஆண்டு வரை எல்.ரி.ரி.ஈயினால் அவரவர் குடும்பத்தினரிடம் சேர்ப்பிக்கப்பட்ட வயது குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை 800. அதேபோல் 2003ஆம் ஆண்டிற்குப்பின் குடும்பத்தினரிடம் சேர்ப்பிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 553. 2003ஆம் ஆண்டிற்குப்பின் திருப்பி அனுப்பப்பட்டோர் பற்றிய புள்ளி விபரங்களில் இருந்து பெறப்பட்ட கீழ்க்காணும் தரவை இதில் தருகிறோம்.

(01) திருப்பி அனுப்பப் படுமுன் எல்.ரி.ரி.ஈயில் 03 ஆண்டுகள் இருந்தவர் எண்ணிக்கை-23.

(02)திருப்பி அனுப்பப்படுமுன் எல்.ரி.ரி.ஈயில் 02 ஆண்டுகள் இருந்தவர் எண்ணிக்-ை 32.

(03)திருப்பி அனுப்பப்படுமுன் எல்.ரி.ரி.ஈயில்
01 ஆண்டுவரை இருந்தவர் எண்ணிக்கை -215.

(04)திருப்பி அனுப்பப்படுமுன் எல்.ரி.ரி.ஈயில் 01 ஆண்டிலும் குறைவாக இருந்தவர் எண்ணிக்கை 283.

இத்தரவிலிருந்து பெறப்படும் முடிவு யாதெனில் திருப்பி அனுப்புதல் மிகவும் வேகமாக நடைபெறுகிறது. வயது குறைந்தோர் எல்.ரி.ரி.ஈயிடம் வந்து இணைவதற்கான காரணங்கள் பல இருப்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். வறுமையும், முறையான பராமரிப்பு வசதிகள் இல்லாமையும் முக்கிய காரணமாக இடம்பெறுகின்றது. பராமரிப்பு வசதிகள் சீராகும்போது வயது குறைந்தோரின் எல்.ரி.ரி.ஈ நோக்கிய வரவு மட்டுப்படும் என்பது தெளிவு. உணவு முதற்கொண்டு கல்வி உள்ளடங்கலான தங்குமிட வசதிகளை எல்.ரி.ரி.ஈ தாராளமாக வழங்குகிறது. வயது குறைந்தோர் பெரும்பாலும் பெற்றோர், பாதுகாவலரை இழந்தவர்களாகவும் சமூகத்தால் கைவிடப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மை.

சிறிலங்கா ஆயுதப் படையினரின் தமிழ்ச் சிறுவர் களுக்கு எதிரான வன்முறைகளும், படுகொலைகளும் தொடர்ந்தவண்ணம் உள்ளன. ஆயுதப் படையினரும் அவர்களோடு இணைந்து செயற்படும் ஆயுதக் குழுக்களும் வயது வேறுபாடின்றி ஆட்கடத்தலில் ஈடுபடுகின்றனர். இதற்காக இலக்கத் தகடற்ற வெள்ளைநிற மோட்டார் வாகனங்களை இவர்கள் பயன்படுத்துகின்றனர். தமிழ்ச் சிறுவர்கள் மத்தியில் குறிப்பாக பள்ளிக்குச் செல்லும் சிறுவர் சிறுமிகள் மத்தியில் அச்ச உணர்வும் பாதுகாப்பின்மையும் நிலவுகின்றது. ஆட்கடத்தலுக்கு உட்படுவதிலும் பார்க்க எல்.ரி.ரி.ஈ யிடம் தஞ்சமடைவது மேல் என்ற கருத்து சிறுவர்கள் மத்தியில் பரவலாகக் காணப்படுகிறது.

சிறிலங்கா
ஆயுதப் படையினரின் தமிழீழச் சிறுவர்களுக்கு எதிரான அண்மைக்கால வன்முறைச் சம்பவங்கள் சிலவற்றை இங்கு தருகின்றோம்.

பேசாலை, மன்னாரிலுள்ள நூறு வீட்டுத்திட்டத்தினுள் நுழைந்த சிறிலங்கா கடற்படையினர் டிசெம்பர் 23, 2005ஆம் நாள் நடத்திய தாக்குதலில் ஒரு தமிழ்க் குடும்பம் முற்றாக அழிக்கப்பட்டது. இதில் 3 வயதினரான டிலக்சன் என்ற ஆண் சிறுவன் கொல்லப்பட்டான். சம்பவ இடத்தைப் பார்வையிட்ட மன்னார் அரச அதிபர் எரியுண்ட வீட்டிற்குள் ஒரு சிறுவனின் கையை மாத்திரம் கண்டதாகச் சாட்சியம் வழங்கியுள்ளார். ஐந்து நாட்களுக்குப் பின் டிசெம்பர் 28, 2005ஆம் நாளன்று கொடிகாமம், தென்மராட்சியைச் சேர்ந்த 15 வயதினரான தம்பிராஜா அருளானந்தன் என்ற இளைஞர் தனது குடும்பத்தினர் முன்னிலையில் சிறிலங்கா ஆயுதப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கொலைச் சம்பவத்திற்குமுன் சில வாரங்களாக இக் குடும்பத்தினர் சிறிலங்கா ஆயுதப்படையினராலும் அவர்களோடு சேர்ந்தியங்கும் ஈ.பி.டி.பி ஆயுதக்குழுவினராலும் தொடர்ச்சியாக மிரட்டப்பட்டு வந்துள்ளனர். இதுபற்றிய விரிவான அறிக்கையை வடக்குக் கிழக்கு மனித உரிமைச் செயலகம் வெளியிட் டுள்ளது.

ஜனவரி 16, 2006ஆம் நாளன்று அக்கரைப்பற்று மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்குப் பின்புறமாகச் செல்லும் வீதியில் வைத்து 16வயதினரான கோபால கிருஷ்ணன் சுரேஷ் என்ற மேசன் தொழிலாளி ஆயுதப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் ஒரு எல்.ரி.ரி.ஈ அனுதாபி என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. சிறிலங்கா ஆயுதப்படையினராலும் ஆயுதக் குழுவினராலும் பல சிறுவர்கள் இக்காலப் பகுதியில் சூட்டுக்காயங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவற்றில் ஒருசில சம்பவ விபரங்களைத் தருகின்றோம்.

டிசெம்பர் 07,2005ஆம் நாள் யோகராசா யோகேஸ்வரி (24), துரைராசா வதனி(18) என்ற இரு சகோதரிகள் ஆயுததாரிகளால் வீடுபுகுந்து சுட்டுக் கொல்லப்பட்டனர். யோகராசா யோகேஸ்வரியின் இரண்டுவயதுக் குழந்தை படுகாயம் அடைந்தது.

வவுனியாவில் செயற்படும் இராணுவத்திற்கு உதவும் துணைப்படையினரின் கிரனேற் வீச்சுத் தாக்குதலில் சகோதரர்களான தமிழ்ச்செல்வன் (13), சுரேஜா (14) ஆகியோர் படுகாயமடைந்தனர். படையினர் மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல்  நடத்தும்போது அப்பாவிகள் மீது துவக்குச் தாக்குதல் சூடு நடத்தும் நடைமுறையை ஆயுதப்படையினரும் ஆயுதக்குழுக்களும் செயற்படுத்துகின்றன. இதனால் பொதுமக்கள் தெருக்களிலும் பொது இடங்களிலும் நடமாட அஞ்சுகின்றனர். இவ்வாறு சூட்டுக்கு இலக்காகியவர்களால் சுட்டவர்களை அடையாளம் காண இயலவில்லை. தாக்குதல் நடத்துவோர் கறுப்புத்துணிகளால் முகத்தைச் சுற்றிக் கட்டியிருப்பது அடையாளம் காண்பதைத் தடுக்கின்றது. யாழ் நீதிமன்றம் கறுப்புத் துணியால் முகத்தை மூடியபடி உலாவ வேண்டாம் என்று கட்டளையிட்ட பின்பும் படையினர் இந்த வழமையை இதுவரை கைவிடவில்லை.

சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைச்சட்டம், பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்குவதற்கான சட்டம், சிறுவர்கள் உரிமைச்சட்டம் என்பனவற்றை சிறிலங்கா அரசு அங்கீகரித்துள்ளது. (INTERNATIONAL COVENANTON CIVIL AND POLITICAL RIGHTS, CONVENTION ON THE ELIMINATION OF DISCRIMINATION AGAINST WOMEN, CONVENTION OF THE CHILD) இம்மூன்று சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக சிறிலங்காவின் குற்றவியல் சட்டம் 1995ஆம் ஆண்டில் திருத்தப்பட்டுள்ளது. 18 வயதிற்குக் குறைந்தவர்களை சிறுவர்கள் என்று இத்திருத்தம் வரையறை செய்கின்றது. இவர்களுக்குத் தீங்கு விளைவிப்பவர்கள் அல்லது துன்புறுத்துபவர்களுக்கு சிறைத் தண்டணை வழங்குவதற்கு மேற்கூறிய சட்டத்திருத்தம் வகை செய்கின்றது. சிறுவர்களைப் படையில் சேர்க்கிறார்கள் என்று குற்றஞ் சுமத்தும் சிறிலங்கா அரசு தான் இயற்றிய சட்டத்தைச் சரிவர நிறைவேற்றுகிறதா என்ற கேள்வி எழுகின்றது.

அண்மைக்காலமாக புத்த விகாரைகளில் 'அபித்தயாக்கள்' என்று அழைக்கப்படும் மிகவும் வயது குறைந்த ஆண் சிறுவர்கள் மதக் கல்விக்காகச் சேர்க்கப்படும் முறைமை பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன. இவர்கள் ஆண்கள் மாத்திரம் வாழும் விகாரைகளில் பாதுகாப்பாக வாழ்கின்றார்களா, சட்டத்தின் முன்னிலையில் இச்சிறுவர்களின் அந்தஸ்து என்ன? போன்ற வினாக்களுக்கு விடை கிடைக்கவில்லை. பாலியலுறவுக்குச் சம்மதிக்க மறுத்தவொரு அபித்தயா சிறுவனை ஒரு பிக்கு தாக்கிப் படுகாயம் விளைவித்த செய்தி சென்றவாரம் கொழும்புத் தினசரிகளில் பிரசுரமாகியது. இச்சிறுவர்களை புத்தமதபீடம் தத்து எடுப்பதாக வாதிடுவோர் திருமணமாகாத ஆண்கள் சிறிலங்கா சட்டத்தின் கீழ் தத்து எடுப்பதற்குத் தகுதி அற்றவர்கள் என்பதை மறுத்துவிடுகிறார்கள். அத்தோடு புத்த விகாரை ஒரு சிறுவர் பராமரிப்பு இல்லமும் அல்ல. எல்.ரி.ரி.ஈ மீது தாக்குதல் தொடுக்கும் அரசு தனது உள் வீட்டு விவகாரத்தை முதற்கண் சீராக்க வேண்டும்.

-
கலாநிதி க. சோமாஸ்கந்தன்
விபு இதழ் : மாசி-பங்குனி 2006

தொகுப்பு :தமிழரசன்அப்துல்காதர்

சிறுவர் பராமரிப்பும்,தமிழீழ நிர்வாகமும்.

சிறுவர் பராமரிப்பும்,தமிழீழ நிர்வாகமும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தனது பகுதியில் வாழும் சிறியோர், முதியோர் நலனில் தமிழீழ நிர்வாகம் அதியுயர் கவனஞ்செலுத்துகிறது. தெருச் சிறுவர்களையும், போக்கிடமற்ற முதியோர்களையும் தமிழீழ மண்ணில் காண முடியாது. இவர்களுடைய பராமரிப்புக்கென பெரும் பொருட்செலவில் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. சிறியோருக்கும், முதியோருக்கும் தனித்தனி இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சிறுவர்களுக்குக் கல்வி வசதி செய்து தரப்பட்டுள்ளது. குறிப்பாக பயனுள்ள தொழிற்கல்வி வழங்கப்படுகிறது. மாதாந்த ஊதியம் பெறும் பராமரிப்பு ஊழியர்கள் சிறியோர், முதியோர் இல்லங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உளவியல் தாக்கம் அல்லது அழுத்தம் ஏற்படக்கூடாது என்பதில் கவனம் எடுக்கப்படுகிறது. சிறிலங்கா நாட்டில் ஈழத்திற்கு நிகரான கவனம் எடுக்கப்படுவதைக் காண்பது அரிது. அங்கு சிறுவர்நலன் சார்ந்த செயற்பாடுகள் வளர்ச்சிகுன்றிய நிலையில் உள்ளன.

வடக்கு கிழக்கிலுள்ள அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் வாழும் சிறுவர் நலனில் தாம் தீவிர அக்கறை எடுப்பதாக சிறிலங்கா அரசு கூறிவந்தாலும் உண்மை வித்தியாசமாக இருக்கிறது. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளின் சிறுவர் நலன்காக்கும் மாவட்ட அலுவலகங்களின் எண்ணிக்கை எழுபத்தி யெட்டு (78). ஆனால் இவ்வலுவலகங்களில் பணியாற்றும் சிறுவர் நலன்பேணும் பயிற்றப்பட்ட அதிகாரிகள் எண்ணிக்கை பதினாறு (16) மாத்திரமே. அத்தோடு இப் பணிமனைகளுக்கு அரசு ஒதுக்கியுள்ள நிதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. போதாமையை ஈடுசெய்வதற்காக சிறுவர் பாதுகாப்பு நிதியம், யுனிசெப் போன்ற நிறுவனங்கள் வழங்கும் நிதி உதவியை நம்பியிருக்க வேண்டியுள்ளது. தேசிய சிறுவர் ஆண்டாக 2006ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரகடனம் சர்வதேசத்திற்கும் செல்லுபடியானது. புலிகளுடைய கட்டுப்பாட்டுப் பகுதியில் இப்பிரகடனம் கருத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் திருகோணமலை நகரில் நடந்த சிறுவர் நலன் தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்ட சிறிலங்கா சிறுவர் பாதுகாப்பு நிதியப் பிரதிநிதி றிச்சார்ட் (RICHARD MAWER, COUNTRY PROGRAMME DIRECTOR, SAVE THE CHILDREN FUND) அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிலவும் சிறுவர் நலன்பேணும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டினார்.

போர்நிறுத்த உடன்படிக்கை செய்யப்பட்ட பின்பு (2002) ஈழத்தமிழர்களின் போர்வடுக்கள் மறையவில்லை. உளவியல் தாக்கங்கள் தொடர்கின்றன. சிறுவர்கள் இதனால் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். சிறுவர் பாடசாலைகள் மீதும் பொதுமக்கள் வீடுகள் மீதும் நடத்தப்பட்ட குண்டுவீச்சுக்கள் இளம் பராயத்தினரின் எதிர்காலத்தினை முற்றாகப் பாதித்துள்ளது. பெற்றார் இருவரையும் இழந்த சிறுவர்கள் கணிசமானளவில் காணப்படுகின்றனர். அதேபோல் தாய் அல்லது தந்தையைப் பலிகொடுத்த சிறுவர்களும் உள்ளனர். திரு கோணமலை மாவட்டத்திலுள்ள சிறுவர் இல்லங்களில் வாழும் 8500 சிறுவர்களில் 60 வீதமானோர் கடும் வறுமை காரணமாக அங்கு புகலிடம் தேடியுள்ளனர். 741 பிள்ளைகள் பெற்றார் இருவரையும் இழந்துள்ளனர். 2580 பிள்ளைகள் பெற்றாரில் ஒருவரை இழந்துள்ளனர். நிதிப்பற்றாக்குறை காரணமாக மேலதிக எண்ணிக்கையில் சிறுவர்களை அனுமதிக்கமுடியாத நிலை பரவலாக வடக்கு கிழக்கில் ஒரு பொதுப் பிரச்சினையாக இருக்கிறது.

வறுமை காரணமாக போஷாக்கின்மையும், கர்ப்பிணித் தாய்மாரின் உடல்நலக் குறைவும் தமிழர் பகுதிகளில் இருப்பதை தொண்டு நிறுவனங்கள் அவதானித்துள்ளன. பிறக்கும் குழந்தைகள் எடை குறைந்தவையாகவும் நோய் எதிர்ப்புச் சக்தியற்றவையாகவும் இருக்கின்றன. சிசு மரணவீதம் சராசரிக்கும் கூடுதலாக இருப்பதால் எமது இனம் ஆபத்தை எதிர்நோக்குகின்றது. உயிர் பிழைக்கும் சிறுவர்கள் வளர்ச்சி குன்றியவர்களாகவும் பல்வேறு உடல் நோய்களுக்கு உட்படுபவர்களாகவும் இருக்கின்றனர்.
விடுதலைப் புலிகள் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவு நிலையங்களை உருவாக்கி பெரும் பொருட் செலவில் நற்பணியாற்றி வருகின்றனர். சிறுவர் நலனில் எமது விடுதலை அமைப்புக் காட்டிவரும் அக்கறையும், கரிசனையும் அளப்பரியது. எமது எதிர் காலம் சிறுவர்களின் வளர்ச்சியில் தங்கியுள்ளது.

சிறுவர் விவகாரம் அரசியலாகிவிட்டது. தமிழர்களுக்கு எதிரான கருத்தியல் போரில் அது முக்கிய அங்கம் வகிக்கிறது. சிங்கள அரசின் பிரச்சார உத்தியின் அடித்தளமாக இரு அம்சங்கள் இடம்பெறுகின்றன. ஒன்று தமிழர்களுடைய விடுதலைப்போர் ஒரு பயங்கரவாதம், அடுத்தது விடுதலைப் புலிகள் தமது படையில் சிறுவர்களை பலவந்தமாகச் சேர்க்கிறார்கள். இப்பிரச்சாரப் பாரம்பரியத்தைத் தொடங்கியவர் சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கதிர்காமராவார். எமது சிறுவர்கள் மீது கரிசனை காட்டுவதாகப் பாசாங்கு செய்யும் சிங்களத் தலைவர்கள் தமது பகுதிச் சிறுவர்களின் கேவலநிலை குறித்துக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கடலோரப் பகுதிகளிலும் உல்லாசப் பயணிகள் விடுதிகளிலும் சிறுவர்கள் விபச்சாரம் அமோகமாக நடைபெறுகிறது. இதில் பிரபல கொழும்பு அரசியல்வாதிகளுக்கும் பங்குண்டு. அதேபோல் பெருமளவு மூவினச் சிறுவர்கள் தெற்கில் உயிராபத்தை விளைவிக்கும் தொழில்களில் ஈடுபடுகின்றனர். மலையகச் சிறுவர்களும் மிகக் குறைந்த ஊதியத்திற்குத் தொழிலாற்றுகின்றனர். இவர்களுடைய கல்வி மற்றும் மருத்துவ வசதிகள் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கிட்டத்தட்ட கொத்தடிமைகளாக மலையகச் சிறுவர்கள் நடத்தப்படுவதை மனித உரிமை ஆர்வலர்கள் கண்டுள்ளனர்.

யுத்தநிறுத்த உடன்படிக்கைகைச் சாத்திடப்பட்ட பின் யுனிசெப் நிறுவனம் 2003இல் வெளியிட்ட வட கிழக்கு சிறுவர் உரிமைகள் பற்றிய அறிக்கையில் ஈழத் தமிழ்ச் சிறுவர்களின் கவலைக்குரிய
நிலவரம் விவரிக்கப்பட்டுள்ளது. 50,000 சிறுவர்கள் பள்ளிக்கூடம் செல்வதில்லை என்றும், 100 சிறுவர்களில் ஒருவர் வீதம் சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வாழ்வதாகவும் இவ்வறிக்கை தெரிவிக்கின்றது. 300 சிறுவர்களில் ஒருவர் வீதம் பெற்றாரில் ஒருவரையாவது இழந்துள்ள தாகவும் 100% சிறுவர்கள் போஷாக்கின்மையால் உடல்நலம் பாதிப்புற்று இருப்பதாகவும் அறிக்கைகள் அறியத்தருகின்றன. வட கிழக்கிலுள்ள பள்ளிக்கூடங்களில் 30% போரினால் சேதமடைந்துள்ளன என்றும் சிறுவர்களுக்குரிய மருத்துவ சேவைகளில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் யுனிசெப் கண்டறிந்துள்ளது. வட கிழக்கில் சிறுவர்நலன் படு மோசமாகப் பாதிப்படைந்திருப்பதற்கு, ஒன்றோடொன்று தொடர்புடைய இரு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. போரின் பாதிப்பு முதற்காரணம், கொழும்பு அரசின் அசிரத்தையும் இனப் பாகுபாடும்

இரண்டாவது காரணம்.
2002க்குப் பின் நிலைமை சீரடையலாம் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது.
ஆறுகட்டப் பேச்சுவார்த்தைகள் செப்ரம்பர் 2002க்கும் மார்ச்சு 2003க்கும் இடைப்பட்ட காலத்தில் உலகின் பல பாகங்களில் நடத்தப்பட்டாலும் வட கிழக்கில் ஒரு நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகள் கடும் தோல்வியடைந்தன. 

சிரான்(SIHRN) கட்டமைப்பு உருவாகும் தறுவாயில் இருந்தபோது கொழும்பு அரசு கொடுத்த வாக்குறுதியை மீளப்பெற்று சீரானைத்
தோல்விகாணச் செய்தது. இதன்போது
வயது குறைந்த சிறுவர்களை எல்.ரி.ரி.ஈயினர் தமது படையில் சேர்க்கின்றார்கள் என்ற
குற்றச்சாட்டு எழுந்தது. சிறுவர்களுடைய
நலன் இதன்மூலம் பாதிப்படைவதாக போர்நிறுத்த கண்காணிப்புக்குழு வலியுறுத்தியது.

"போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான
நடவடிக்கைத் திட்டம்” (ACTION PLAN
FOR WAR AFFECTED CHILDREN)
இதற்காக உருவாக்கப்பட்டது. வட கிழக்குச்சிறுவர்களுக்கு நன்மை செய்வதற்காக இந்த நடவடிக்கைத் திட்டத்தின் பங்காளிகளாக
எல்.ரி.ரி.ஈ, சிறிலங்கா அரசு, யுனிசெப் என்ற முத்தரப்பினர் இடம் பெற்றனர்.

யுத்த நிறுத்தம் ஈழத்தமிழர்களுக்கு இயல்பு வாழ்க்கையை தரத் தவறியுள்ளது. இதில் சிறுவர்களும் பயன் பெறாதுள்ளனர்.
சிறுவர்களின் பள்ளிப் படிப்பில் முன்னேற்றம் ஏற்படவில்லை. தமிழ்ப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.
சிங்கள நாட்டுப் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் எண்ணிக்கை விகிதம் தமிழ்ப் பள்ளிக்கூடங்களில் நிலவும் விகிதத்திலும் பார்க்க அதிகமாக இருக்கிறது. பலமுறை சுட்டிக்
காட்டியும் புதிய தமிழாசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. தமிழ்ப் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் இலவச பாடநூல்கள் தரம்
குறைந்தவையாகவும் குழறுபடிகள் நிறைந்தவையாகவும் உள்ளன. அவை பெரும்பாலும் சிங்கள மாணவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட நூல்களின் மொழிபெயர்ப்புக்களாகவே இருக்கின்றன. இவற்றிலுள்ள
எழுத்துப் பிழை, கருத்துப் பிழை, வரலாற்றுத் திரிபு போன்றவற்றை தமிழாசிரியர் சங்கம் கடந்த சில வருடங்களாகச் சுட்டிக்காட்டிய போதும் முன்னேற்றம்ஏற்படவில்லை.

இப்படியான விபரங்கள் நெசோர் (NESOHR) அறிக்கையில் உள்ளடங்கியுள்ளன.

தமிழ்மொழி மூலமான கற்பித்தல் நடக்கும் பள்ளிக்கூடங்களில் கடந்த 10 வருடங்களாக 40% ஆசிரியர் பற்றாக்குறை நிலவிவருகிறது. 2005இல் புதிய ஆசிரியர்கள் நியமனம் பெற்றனர். இவர்கள் தேவைக்கு எண்ணிக்கையில் உள்ளனர் என்பதோடு திறமையாகச் செயற்படுவதற்கு இரண்டிற்கும் மேற்பட்ட வருடகாலம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 2004ஆம் ஆண்டு டிசெம்பர் மாத சுனாமியில் 24 கல்வி வலயங்களில் 09 கல்வி வலயங்கள் வடக்கு கிழக்கில் பாதிப்படைந்துள்ளன. 2005 ஜனவரியில் தொகுக்கப் பட்ட புள்ளி விபரங்களின்படி 2400 பள்ளிச் சிறுவர்கள் வட கிழக்கில் உயிரிழந்துள்ளனர். கல்முனை கல்விவலயத்தில் 1502, முல்லைத் தீவு கல்விவலயத்தில் 130, மட்டக்களப்பு கல்விவலயத்தில் 235, மூதூர் கல்விவலயத் தில் 217, அக்கரைப்பற்று கல்விவலயத்தில் 141.

54 பள்ளிக் கட்டடங்கள் முற்றாக அழிந்துள்ளன. அழிவுகளின் மொத்தப் பெறுமதி ரூபா 436மில்லியன். தளபாட இழப்பின் பெறுமதி ரூபா 72.8மில்லியன். கொம்பியூட்டர் கருவிகளின் இழப்புப் பெறுமதி ரூபா 49.1 மில்லியன். பகுதியாக இடிந்த பள்ளிக் கட்டடங்களின் இழப்புப் பெறுமதி 107.9 மில்லியன். வட கிழக்கு கல்விக்கந்தோர் கட்டடங்கள் இடிந்துள்ளன. அவற்றின் பெறுமதி ரூபா 21.4மில்லியன். மாணவர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை மேலதிக விபரங்கள் கிடைக்கும்போது இன்னும்
உயரலாம் என்று வட கிழக்கு மாகாண கல்வி நிர்வாக அலுவலகம் தெரிவிக்கின்றது. அதன் பிரசாரம் பிந்திக் கிடைத்த கணக்கின் படி முல்லைத்தீவில் 800 பள்ளிச் சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 16 பள்ளிக் கட்டடங்கள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. 1938 பொதுமக்கள் முல்லைத்தீவில் இறந்திருப்பதாகவும் அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் உத்தியோகபூர்வ அறிக்கை தெரிவிக் கின்றது.

படையினர் அமைதி உடன்படிக்கைக்குப் பின்பும் வட கிழக்குச் சிறுவர்களின் கல்விக்கு ஊறுவிளைவித்து வருகின்றனர். வலிகாமம் வடக்கில் முன்பு 46 பள்ளிக்கூடங்கள் இருந்தன. அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த 29 பள்ளிக்கூடங்களில் 16 மூடப்பட்டுவிட்டன. மிகுதி 13 பள்ளிக் கூடங்களும் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்கு வெளியே தற்காலிக இடங்களில் செயற்படுகின்றன. காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி சுன்னாகம் கந்தரோடையில் தனியார் வீடுகளில் இயங்குகின்றது. பள்ளிச்சிறுவர்களின் வருகை மிகக் குறைவாகக் காணப்படுவதால் அது மிக விரைவில் மூடப்படலாம் என்று கல்வித் தலைமை தெரிவிக்கின்றது. இராணுவத்தின் தலையீடு ஆரோக்கியமான கற்கைக்கு இடையூறாக இருப்பது கண்கூடு. பள்ளிக் கூடங்களின் வாசல்களில் இராணுவத்தினர் கூட்டம் கூட்டமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதை நியாயப்படுத்த முடியாது. அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்கு வெளியே உள்ள பாடசாலைகளும் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன. காலையில் சிறுவர்கள் பள்ளிக்கூடம் செல்லும் அதே நேரத்தில் பெரும் எண்ணிக்கையான துருப்புக்களை ஏற்றிச்செல்லும் இராணுவ வாகனங்கள் தெருக்களில் அதி வேகமாக ரோந்து செல்கின்றன. இது சிறுவர்களுக்கு உயிராபத்தை விளைவிக்கும் செயற்பாடாகும்.

வட கிழக்குச் சிறுவர்களின் கற்கையில் படையினரின் தலையீடு நன்கு திட்டமிட்டு நடைமுறைப் படுத்தப்படுகிறது. யாழ். குடாவின் பிரதான பள்ளிக் கூடங்களையும் யாழ்.பல்கலைக் கழகத்தையும் நலிவுறச் செய்வதே சிங்களப் படையினரின் அடிப்படை நோக்கமாக இருக்கிறது. பருத்தித்துறை ஹாட்லி ஆண்கள் கல்லூரி, மெதடிஸ்த பெண்கள் கல்லூரி என்பன படையினரின் பிடியில் இருக்கின்றன. இப்பள்ளிக்கூடங்களின் விளையாட்டுத்திடல் இராணுவத்தினரின் தேவைக்காகச் சுவீகரிக் கப்பட்டுள்ளது. மாணவர்களும் ஆசிரியர்களும் கடும் உடற்பரிசோதனைக்குப் பின்பு பள்ளிக்கூடத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். தெல்லிப்பளை யூனியன் கல்லூரியிலும் இந்த நடைமுறை காணப்படுகிறது. கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஒரு பகுதி இராணுவத்தினரின் பாவனைக்கு
எடுக்கப்பட்டுள்ளது. அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்கு வெளியேயுள்ள பள்ளிக்கூடங்கள் படையினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளன.

ஏறத்தாழ 52 யாழ்.குடாநாட்டுப் பள்ளிக்கூடங்கள் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ளன. சென்றவருடம் அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தைத் திருத்தி புதிய கட்டடம் அமைப்பதற்காக கட்டிடப் பொருள்களை பெப்பிரவரி 03, 2005ஆம் நாள் கொண்டு சென்றபோது படையினர் நுழைவு அனுமதியை மறுத்தனர். எழுதுமட்டுவாள் வடக்கில் ஐந்து கிராமங் களைச் சேர்ந்த சிறுவர்கள் கல்விகற்கும் எழுதுமட்டுவாள் வடக்கு சாவகச்சேரி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் நிலைகொண்டுள்ள படையினர் அதைவிட்டு விலக மறுக்கின்றனர். மட்டக்களப்பு கொம்மாந்துறை விநாயகர் வித்தியாலய வளாகத்தை படையினர் தமது தேவைக்குப் பயன்படுத்துகின்றனர். கடும் உடற்பரிசோதனைக்குப் பின்பு மாணவர்களும் ஆசிரியர்களும் இப்பள்ளிக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புதல் என்பது பள்ளிவாழ்வை உள்ளடக்கியதாக இருப்பதால், வட கிழக்கு மாணவர்களின் இயல்புவாழ்க்கை இன்னும் எட்டப்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

-தொடரும்
கலாநிதி க. சோமாஸ்கந்தன்
விபு இதழ் : மாசி-பங்குனி 2006

தொகுப்பு :தமிழரசன்அப்துல்காதர்

Thursday, 13 August 2026

புரியாத புதிர்.

புரியாத புதிர்
~~~~~~~~~~~~
முல்லைத்தீவு நகரம் இந்திய இராணுவ முற்றுகைக்குள் சிக்கியிருந்த காலம். நகரிலிருந்து பிரிந்துசெல்லும் ஒவ்வொரு வீதியின் தொடக்கச் சந்தியிலும் பாரிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. வீதிச்சோதனைகளும் வீதிக்கண்காணிப்புகளும் பலமாக இருந்தன.

அவனுடைய குடும்பம் சின்னாற்றங்காட்டில் குடியேறி பல ஆண்டுகள் கடந்திருந்தன. தொடக்க நாட்களில் அந்த ஊரின் சூழல், இடைவெளியை ஏற்படுத்தியபோது சில நாட்களிலேயே அந்தச் சூழலோடு அவன் ஒன்றித்துப்போனான்.

அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, நகரிலுள்ள பள்ளிக்கூடத்துக்குப் புறப்படுவான். அவனுடைய பள்ளிக்கூடம் வீட்டிலிருந்து அண்ணளவாக இரண்டு கிலோமீற்றர் தூரத்திலிருந்தது. ஊரிலுள்ள மாணவர்களும் சாரி சாரியாக வந்துகொண்டிருப்பார்கள். கிரவல் வீதியை முதன் முதலில் அவன் தரிசித்தான். அந்த வீதியின் நிறம் அவனுக்குப் புதுமையானதாகவே இருந்தது. எப்போதாவது ஒரு ஊர்தி புழுதியைக் கிளப்பி விரைந்தது.

காட்டையும், பனங்கூடல்களையும், குடிமனைகளையும் இரசித்தபடி பள்ளிக்கூடத்திற்குப் பயணிப்பான். சின்னாற்றுப் பாலத்தை நெருங்க அவனது சிந்தனைகள் சிறகடிக்கத் தொடங்கும். நாள்தோறும் சின்னாற்றைத் தரிசித்தபோதும் தெவிட்டாத காட்சியாய் அது அவனது மனதில் விரிந்துகிடக்கும்.

பள்ளிக்கூடம் விட்டுப் பசியோடு வந்துகொண்டிருந்தாலும் சின்னாற்றுப் பாலத்தில் பசி பஞ்சாய் பறந்துபோகும். ஒருபக்கம் தொடுவாயைத் தாண்டி பெருங்கடல் பரந்திருக்கும்.

இன்னொரு பக்கம் தொடுவாய் நீர் வளைந்து மறைந்திருக்கும். அதற்கப்பால் நந்திக்கடலோரப் பனங்கூடல்களின் தலைகள் தெரியும். கோடைகாலத்தில் சின்னாற்றில் மிதந்திருக்கும் பாறையில் முதலைகள் வாயைத்திறந்தபடி படுத்திருக்கும்.

மாரிகாலம் முற்றிய நாட்களில் சின்னாற்றுப் பாலத்துக்கு மேலால் தண்ணீர் பாயும். அந்தத் தண்ணீரோடு மீன்களும் பாய்ந்து பாலத்தில் விழும். அதனைப் பிடிப்பதற்கு ஊரவர்கள் குழுமியிருப்பார்கள். இந்த நாட்களில் சில வேளைகளில் பள்ளிக்கூடம் நடைபெறாது. அவனுள் கவலை குடிகொள்ளும். சின்னாற்றுப்பாலம் சின்ன மனதில் சிறகடிக்கும்.

இந்தியச் சிப்பாய்கள் சின்னாற்றுப்பால முடிவில் முகாம் அமைத்த நாளிலிருந்து அவனது சின்னாற்றுப்பால இரசனை குறைந்துபோயிற்று. பாலம் நெருங்கப் பயமே அவனைப் பீடித்தது.

தொடும். உப்புக்காற்றில் அவர்களின் முகாமின் அடையாளநெடி காற்றில் கலந்து மூக்கைத் தொடும்.

இந்தியச் சிப்பாய்கள் நேரகாலமின்றித் தேங்காய்களை உடைத்துச் சப்பிக் கொண்டிருந்தார்கள். சில சிப்பாய்களின் கண்கள் பள்ளி மாணவிகளை விழுங்கிக் கொண்டிருந்தன. அந்த முகாமுக்குப் புதிதாக இராணுவப் புலனாய்வு அதிகாரியொருவன் வந்திருந்தான். அவனின் தோற்றம் மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் தன்மையாய் இருந்தது. சரளமாகத் தமிழ் கதைத்தான். அந்த அதிகாரி பல இடங்களில் நடந்த கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவுச் சம்பவங்களுக்குக் காரணமாக இருந்திருந்தான். இடுப்பில் கைத்துப்பாக்கியுடன் இறுமாப்பாய் நடப்பான். அவர்களின் காவலரணிலிருந்து சிறிது தூரத்தில் போராளியால் ஒருநாள் அவன் சுட்டுக்கொல்லப்பட்டான். ஊரவர்கள் உளமார மகிழ்ந்தார்கள்.

இந்திய ஜவான்களின் சுற்றிவளைப்பும், தேடுதல்களும், கைதுகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருந்தன. சில நாட்களில் இரவு வேளைகளில் தாறுமாறாகச் சுட்டபடி வருவார்கள். அவனும் ஊரவர்களோடு ஓடி காட்டுக்குள் பதுங்கியிருந்திருக்கிறான்.

அமைதிப்படையாக வந்தவர்களின் கொடுமைகளால் ஊரவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டபோது ஒரு இந்தியச் சிப்பாயின் செயற்பாடு சற்று மனதுக்கு ஒத்தடம் கொடுத்தது. சுற்றிவளைப்புக்களை முன்கூட்டியே தெரியப்படுத்தி உதவியிருக்கிறான். அவன் ஒரு தமிழ்நாட்டுக்காரன்.

அவன் பள்ளிக்கூடம் போகும்போது அந்தச் சிப்பாய் அவனோடு கதைப்பான். அவனுக்குப் பயமாக இருந்தபோதும் அந்தச் சிப்பாயின் செயற்பாடு பிடித்திருந்தது.

ஒருநாள் பள்ளிக்கூட நேரத்தில் சிலாவத்தைப் பக்கம் சூட்டுச் சத்தங்கள் அகோரமாய்க் கேட்டன. போராளிகளுக்கும் இந்திய இராணுவத்திற்குமிடையே மோதல் வெடித்திருந்தது. சில மணிநேரத்தில் சத்தம் ஓய்ந்துபோனது.

அவன் பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தான். காவலரணிலிருந்த சிப்பாய்கள் முழுசிக் கொண்டிருந்தார்கள். வேர்த்துக் களைத்திருந்த தமிழ்நாட்டுச் சிப்பாய் அவனைக் கூப்பிட்டான்.

என்ன உங்கடை ஆக்கள் வண்டியில (ஊர்தி) பூட்டி அடிக்கிற ஆயுதத்தை எல்லாம் கையிலைவைச்சு அடிக்கிறாங்கள். எங்களிலை நாலுபேரு லொஸ்ற்” - அவனுக்கு அன்று அந்தச் சிப்பாயின் பேச்சுப் புரியாத புதிராக இருந்தது. ஆனால் இன்று அவனும் ஒரு போராளியென்பதால் அது புரியாத புதிராக இருக்கவில்லை.

-ஆ.ந.பொற்கோ
விபு இதழ் :மாசி-பங்குனி 2006.

தொகுப்பு: தமிழரசன்அப்துல்காதர்

மேதகு

பிரபாகரன் 🐅

மாநில சுயாட்சிக்காகப் பிறப்பெடுக்கவில்லை.

காலம் நம்மிடம் தலைவனைத் தந்தது,

ஒழுக்குநீரில் தாகம் தணிக்கவல்ல.

கனகாலம் அழுதபடி கிடக்கிறாய் !

உனக்கொருவனைத் தருகிறேனென

இடியுண்டு கிடந்த எமக்குள்ளே

காலம் இறக்கிய பிள்ளையல்லவா கரிகாலன்.

கையிற்சுடரும் கற்பூர விளக்கொளியை

கனம்பண்ணத் தெரியாமல்

கரைந்துபோகும் திசையிற்தானே

நாங்கள் கணக்கெழுதுகிறோம்.

இனியும் வேண்டாம் இந்த இழிநிலை.

குனிந்து குனிந்து முதுகே கூனாகி

அழிவதற்கல்ல உன் அவதாரம்.

போராட்டமும்

அதன்மூலம் எட்டும் விடுதலை எல்லைகளும்

உனக்கானதல்ல

உன் தலைமுறைக்கானது.

-புதுவை இரத்தினதுரை

தவளைத் தாக்குதலில் துணைப்படையினர்.

தவளைத் தாக்குதலில் துணைப்படையினர். 
~~~~~~~~~~~~~~~~~~~
1993 ஆம் ஆண்டு, கார்த்திகைத் திங்கள் 1 ஆம் நாள். மணலாற்றுத் துணைப்படை முகாமிற்கு முல்லை மாவட்டத் துணைப்படையில் பெரும் பகுதியினர் அழைக்கப்பட்டிருந்தனர்.

 2 ஆம் நாள் செவ்வாய்க் கிழமை மாலை 6.30 மணிக்கு தளபதி முகாமிற்கு வருகை தந்திருந்தார். சில நிமிட கலந்துரையாடலின் பின்னர் அணிகள் தனித்தனி பிரிக்கப்பட்டன. 

சண்டை ஒன்றுக்குச் செல்லப்போகின்றோமென்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது ஆனால் எங்கே,எப்போது என்பது மட்டும் எவருக்கும் தெரியாது.

 "எங்களுக்குள் என்ன பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவற்றை இங்கு வந்து கதைத்துக் கொள்வோம்; அதுவரை பொறுமையாக இருந்து, தரப்படும் பணிகளைச் செய்து, முல்லை மாவட்டத்தின் பெருமையை, துணைப்படையின் பெயரினைக் காப்பாற்றிப்போடுங்கோ" என்ற வார்த்தைகளை மட்டும் எமது மாவட்டத்தின் தளபதி, மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறிக்கொண்டார். 

மழைத்துளிகள் விழ ஆரம்பித்தன. வீட்டு நினைவுகளிலிருந்து அனைவரும் விடுபட விரும்பினோம். சமையல் கொட்டிலில் இருந்த குடமொன்று எமது அணியினர் இருந்த பகுதிக்கு வந்துசேர்ந்தது.அதுதான் மிருதங்க இசைக்கருவி. பாடத் தொடங்கினார்கள். பாடத் தெரியாது என்று எவரும் இருக்கவில்லை. அனைவருமே பாடகராய் மாறினர். புரட்சிப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், பக்திப்பாடல்கள் எல்லாம் மாறிமாறி வந்தன. இனம்புரியாத இன்பமும் துன்பமும் கலந்த இரவாக அது நகர்ந்துகொண்டிருந்தது. பசியும் இல்லை; தூக்கமும் இல்லை. இரவு 11.30 மணியிருக்கும். வெளியே சென்றிருந்த தளபதி மீண்டும் வந்திருந்தார். தூறலாகத் தொடங்கிய மழை வேகமாகக் கொட்டியதை, தளபதி நன்றாக நனைந்து வந்ததிலிருந்து அறிந்து கொண்டோம்.

" எல்லோரும் சாப்பிட்டுவிட்டீர்களா?" என்று தளபதி கேட்ட கேள்விக்கு, "ஆம் என்று எல்லாரும் ஏககாலத்தில் பதில் கொடுத்தார்கள் ஆனால் பலர் சாப்பிடவில்லை என்பது எனக்குத் தெரியும். சண்டையென்று புறப்பட்டு விட்டால் சாவு வருவதும் தவிர்க்கமுடியாததென்பது அனைவருக்கும் தெரிந்ததே.ஆனால் வீணாக நாங்கள் மரணிப்பதற்கு எமது வீரர்கள் சந்தர்ப்பம் கொடுக்கமாட்டார்களென்பதும் தெளிவாகத் தெரியும். இருந்தாலும் சாப்பிடுவதில் எவருக்கும் புலன் செல்லவில்லை. ஒழுக்கவிதிகள் பற்றி சில நிமிடங்கள் கலந்துரையாடிய பின்னர், ''எல்லோரும் ஓடிச்சென்று வாகனங்களில் ஏறுங்கோ" என்ற பணிப்பு விடுக்கப்பட்டது. ஓடிச்சென்று ஏறினோம். ஒன்றன்பின் ஒன்றாக அனைத்து வாகனங்களும் புறப்படத் தொடங்கின. இருளைக் கிழித்துக்கொண்டு பயணம் தொடர்ந்தது.எமது மாவட்டத்தை விட்டு வெளியே செல்கின்றோமென்ற உண்மையை, சற்று நேரத்தின் பின் அனைவரும் தெரிந்துகொண்டனர்.

மனித நடமாட்டமற்ற காட்டுவழியில் வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்தன .

எல்லோரும் ஒருவரை ஒருவர் கேள்விக்குறியுடன் நோக்கியவண்ணம் இருந்தனர். 

பலருக்கு ஏற்கெனவே அந்தப் பாதை தெரிந்திருந்ததால் எங்கே செல்கின்றோமென்பதைத் தெரிந்துகொண்டனர்; இருப்பினும் மௌனமாக இருந்தனர்.அன்றிரவு அமைதி யாகவே விடிந்தது.

மறுநாட் காலை 9.00 மணியளவில் அனைவரும் ஒன்றுகூடினோம். மன்னார் மாவட்டத் தளபதி எம்முடன் கலந்துரையாடினார். “நீங்கள் என்ன பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளீர் களென்பது எனக்குத் தெரியும். உங்களுடைய பணிக்குரிய நாள் வரும்வரை எங்களுக்கு இன்னுமொரு பணி செய்து தரவேண்டும். அதுவும் ஒரு பொறுப்புமிக்க பணிதான். சமையற் பணிதான் அந்தப்பணி. 

இது உங்களுக்குப் புதிய இடம். கண்டபடி வெளியே செல்லாதீர் கள். எங்களுடைய வெற்றிக்கு உங்களின் பூரண ஒத்துழைப்பை வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. இன்று மாலையிலேயே சமையல் பணியைத் தொடங்கலாம்" என்று அவர் சொல்லிக்கொண்டார். 

பூநகரி இராணுவ முகாம் தாக்குதலுக்கு உதவிப்பணிக்காக நாம் வந்துள்ளோமென்ற உண்மை, அனைவருக்கும் தெளிவாயிற்று. எமது மாவட்டத்தை விட்டு ஏன் இங்கு எங்களை அழைத்துவந்தார்கள் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் ஒருமுறை தோன்றினாலும், அடுத்த கணம் அது மறைந்து போயிற்று. மணலாற்றுத் துணைப்படை (முல்லை மாவட்டம்) மன்னார் சண்டையில் பங்கெடுத்தார்களென்ற பெருமை மட்டுமல்ல, தமிழீழ மக்களை இது விழிப்படையவும் செய்யும் என நினைத்துக்கொண்டோம். இதனை விட எங்களை வளர்த்துப் பெருமை சேர்த்த அன்பண்ணனின் பிறந்த மண்ணை விடுவிக்கும் சண்டைக்கு வந்துள்ளோம் என்ற மகிழ்வு புதிய உற்சாகத்தினைக் கொடுத்தது.

எங்கள் பணி அவருக்கு எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று நினைத்தபோது, அனைத்துத் துயரங்களும் பறந்துபோயிற்று.

சண்டை உடனே தொடங்கும். ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என நினைத்தோம். சமையல் அடுக்குகளைப் பார்த்த போது,நாலைந்து நாட்களுக்கு நீடிக்கும் என்பது தெரிந்தது. ஒவ்வொரு நாள் இரவும் புதிய அணிகள் வந்து கொண்டிருந்தன . அதற்கேற்ப சமையல் அளவும் அதிகரித்தது. 8 ஆம் திகதி காலையிலிருந்து சமையலைத் திட்டமிட்டு நடாத்த வேண்டியிருந்ததால், நான்கு அணிகளாகப் பிரிந்து சமைக்கத் தொடங்கினோம். தொடர்ச்சியான சமையல் சற்றுக் களைப்படைய வைத்திருந்தது. ஆனால் எமது போராளிகள் இரண்டு மூன்று மாதங்கள். இரவு பகல் பாராது எடுத்த கடுமையான பயிற்சியை நினைத்த போதெல்லாம் களைப்பு தெரியாதுபோயிற்று. 

ஒரு வாரத்துக்கு
மேலாகிவிட்டதாலும், புதிய பழகிய போராளிகள் பலர் வந்து உரையாடத் தொடங்கியதாலும் வீட்டு நினைவுகள் மறந்துபோயின.

மகிழ்வடையச் 1993/11/9ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலையில், மூத்த தளபதி சொர்ணமும் எமது மாவட்டத்தின் தளபதியும் வந்தனர். சலிக்காத எங்களின் பணி அவர்களை மகிழ்வடைய செய்தது.
 உற்சாகம் தரும்வகையில் எம்முடன் கலந்துரையாடிவிட்டு, நாளைக்காலையில் மீண்டும் சந்திப்பதாகச் சொல்லிவிட்டுச் சென்றிருந்தனர். சண்டை, நாளை தொடங்கும் என்பதை அனைவரும் எதிர்பார்த்தோம். ஏனெனில் அதற்கான இறுதி நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

தொடர்ச்சியாக நெருப்பு
வெக்கையில் நின்றதாலும், குளிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லாமையினாலும் எம்மில் பலருக்குக் காய்ச்சல் கண்டிருந்தது. அருகே இருந்த மந்துக் காட்டில் மழைக்குத் தேங்கிய தண்ணீரை குளமென்று சொல்லி, பலர் குளிக்கச் சென்றார்கள். அதைக் குளம் என்று சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. அதன் பக்கத்தில் நாலைந்து நாவல் மரங்கள் நன்கு பழுத்து நின்றன. நாவலும் எம் வீரர்களும் பட்டதேபாடு. இரண்டு நாட்களில் மரத்தை வெட்டைகண்டார்கள்.

1993/11/10 ஆம் நாள் புதன்கிழமை காலையிலிருந்து, சமையல் பணியிலிருந்து எமக்கு ஓய்வு தரப்பட்டது. நோயாளிகள் அணிகள் சீர் செய்யப்பட்டன. 9ஆம். திகதி இரவு வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களிலி ருந்தும் துணைப்படை அணிகள் பல வந்தன. காலை உணவுக்குப் பின் சொர்ணமண்ணனும் எமது மாவட்டத் தளபதியும் வந்திருந்தனர். அனைவரும் அணிவகுத்து ஓரிடப்படுத்தப்பட்டோம்; சொர்ணமண்ணன் எங்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டார்:

"இன்று இரவு நாம் பூநகரி இராணுவத் தளத்தைத் தாக்கி அழிக்கப் போகின்றோம். இத் தாக்குதலில் வெற்றி எங்களுக்குத்தான் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் படைமுகாமில் ஒரு கேணல் உட்பட இரண்டாயிரம் இராணுவத்தினர் வரை இருக்கின்றனர். ஒருநாள் அல்லது இரண்டுநாள் அல்லது மூன்றுநாட்கள்கூட இந்தச்
சண்டை நீடிக்கலாம்;ஆனால் வெற்றி எங்களுக்குத் தான். நாம் அடித்து முன்னேறிக் கொண்டிருப்போம்.
காயமடைந்த வீரர்களையும், இராணுவத்தின் படைக்கலன்களையும் உடனுக்குடன் நீங்கள் தான் எடுத்துச்செல்லவேண்டும். நீங்கள் சண்டைக்கு இறங்கத் தேவையில்லை. தேவையான வீரர்கள் அதற்காக இருக்கிறார்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இராணுவ உபகரணங்களையும் எமது காயமுற்ற வீரர்களையும் வேகமாக வெளியே எடுத்துவருவதுதான். நீண்டதூரம் இவற்றை எல்லாம் நீங்கள் தூக்கத் தேவையில்லை. உள்ளே நூற்றுக்கணக்கான 
உழவியந்திரங்கள் வருவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன; அவற்றையும் நீங்கள்தான் ஓட்டிச் செல்லப்போகின்றீர்கள். இந்த வெற்றி எமது விடுதலைப் போரினை புதியபாதைக்கு இட்டுச் செல்லும். புலிகளின் கழுத்து நெரிக்கப்பட்டுவிட்டது; அவர்கள் அழிக்கப்பட்டுவிட்டார்கள் என்று கருதும் சிங்கள அரசுக்கும், இராணுவத்துக்கும் எமது பலம் எத்துணை வலிமையானதென்பதைச் செயல்மூலம் எடுத்துக்காட்டப் போகின்றோம். எமது இந்தத் தாக்குதலின் வெற்றிக்கு, மண்கிண்டி இராணுவ முகாம் தகர்ப்புக்கு எவ்வாறு ஒத்துணையாகவிருந்து செயற்பட்டீர்களோ, அதேபோன்று செயற்பட வேண்டும்; செயற்படுவீர்களா?" என்று கேட்ட கேள்விக்கு.'" ஆம்" என்று அனைவரும் ஒருமித்துப் பதில் கூறினர். "உங்களை நம்பி ஏணிப்படிகளில் நாங்கள் ஏறலாமா? ஏணியை உறுதியாய்ப் பிடித்துக்கொள்வீர்களா?" என்றபோதெல்லாம்
உற்சாகமாக, " ஆம் " என்ற குரல் ஓங்கி ஒலித்தது.

மாலை 4.45 மணியளவில் சத்தியப்பிரமாணத்துடன் படை நகர்வுகள் ஆரம்பமாகின. மாலை 6 மணிக்கெல்லாம் மழை கொட்டத் தொடங்கியது என்றுமில்லாதவாறு அன்று வானம் இடிந்துவிழுவது போன்று ஊற்றியது. நனைந்தபடியே முகாம்நோக்கி ஓடிக்கொண்டிருந்தோம்; மழைக்காகக் காத்திருந்தால் இலக்கைத் தவறவிடவேண்டி ஏற்படும். எதிர்நீச்சல் போட்டே வெற்றிகண்டு பழகிப்போன போராளிகள் அல்லவா!

பாழடைந்த பிரதான வீதி எங்கும் வெள்ளம் தேங்கி நின்றது. கொட்டும் மழையிலும் இலக்கினை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் பெண் போராளிகளைப் பார்த்தபோது, எங்களுக்கெல்லாம் புதியவேகம் பிறந்தது: எறிகணைகள், கனரக ஆயுதங்கள் என்பவற்றைச் சுமந்து கொண்டு எவ்வளவு வீராவேசத்துடன் ஓடிக் கொண்டிருந்தார்கள்! உலகில் எந்த ஒரு நாட்டிலும் இத்துணை பலம்வாய்ந்த பெண்கள் படையணி இருந்திருக்கமுடியாது.

இரவு 10.00 மணிக்கெல்லாம் இராணுவ முகாமை அண்மித்துள்ள இடங்களில் நின்றிருந்தோம். எம்மைத்தாண்டி எம் தியாகக் குழந்தைகள் முன்னேறினர். வயல்வெளிகள் எங்கும் வெள்ளம் தேங்கி நின்றது. மழைவிட்டிருந்தது. இராணுவ முகாம்களைத் தாக்கும் எல்லைக்குள் செல்வதற்கு அன்றைய இயற்கையின் செயல் பெரிதும் சிரமத்தைக் கொடுத்தது. இருப்பினும் பல மாதங்கள் அவர்களெடுத்த பயிற்சியின் முன்னே, அது தூசாகிவிட்டது. இராணுவ முகாமில் சுழன்று கொண்டிருந்த தொலைதூர ஒளிபாய்ச்சும் மின்குமிழ் தன்வேலையைச் செய்து கொண்டேயிருந்தது. இடையிடையே இராணுவத்தினர் தாம் விழிப்புடன் இருப்பதை துப்பாக்கி வேட்டுக்களால் காட்டினர். இது எங்களுக்குப் புதுமையாக இருந்தாலும் எமது வீரர்களுக்குப் பழகிப்போனதொன்று.

நடு இரவு தாண்டிவிட்டது. திடீரென துப்பாக்கிகள் பல வேகமாக இயங்கத் தொடங்கின. கடிகாரத்தைப் பார்க்கின்றேன். 1.35 காட்டியது. அனைத்துத் திசைகளிலும் வெளிச்சக் குண்டுகளை படையினர் வீசினர். திரும்பும் திசையெங்கும் எறிகணைகளும், துப்பாக்கிக் குண்டுகளும் வீரமுழக்கம் செய்தன. உடலிலுள்ள ரோமங்கள் குத்தி நின்றன. சில மணித்தியாலங்களில் எங்களின் பணி ஆரம்பமாகியது. காயமுற்ற எமது வீரர்களை, உயிர் கொடுத்த உத்தமர்களைச் சுமக்கத் தொடங்கினோம். எங்களின் வேகத்தைவிட எமது வீரர்கள் பலநூறு மடங்கு வேகத்துடன் முன்னேறிக் கொண்டிருந்தனர். வேதனை ஒருபுறமும் மகிழ்வு ஒரு புறமுமாக ஓடிஓடிச் சுமந்தோம். எமது வாகனச் சாரதிகள் வேகமாகவும், சாதுரியமாகவும் இயங்கிக் கொண்டிருந்தனர். சிங்கள தேசத்தின் வான் படை விமானங்கள் அனைத்தும் முழுவேகத்தில் செயற்பட்டன. அவற்றின் தாக்குதலைக் கருத்தில் கொள்ளும் மனோநிலை எவரிடமும் இருக்கவில்லை.

தூக்கம், துயர்களை மறந்து தாக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த எம் வீரர்களைப் பார்த்தபோது தலை சுற்றியது; கண்ணீர் பொங்கியது. சிரித்துச்சிரித்தே எதிரியின் காப்பரணை நோக்கி ஓடினார்கள். வீர விளையாட்டொன்று, வெற்றியும் சோகமும் நிறைந்த வீர சாகசமொன்று நடந்துகொண்டிருந்தது. மக்களின் துயர்துடைக்க ரத்த வேள்வி ஒன்று நடந்து கொண்டிருந்தது. துப்பாக்கிக் குண்டுகளின் நடுவே புயலாய்ப் பாய்ந்து கொண்டிருந்த பெண் புலிகளைப் பார்க்கின்றேன். என்ன வீரம், என்ன தியாகம், இவர்களின் வீரத்துக்கு மலையை ஒப்பிடுவதா வானத்தை ஒப்பிடுவதா கடலை ஒப்பிடுவதா......? விளங்காத விந்தையான வீரத்தைக் கண்டு கொண்டிருந்தேன். நான்கு திசைகளிலிருந்தும் வந்த வெற்றிச் செய்திகளை ‘வோக்கி ரோக்கிகள் முழங்கிக் கொண்டிருந்தன. அன்று பகல் வந்ததும், பின் இரவு வந்ததும் பிரமை போலிருந்தது.

நாகதேவன் துறை கடற்படைத் தளமும் ஏனைய மூன்று படை முகாம்களும் அன்று முழுமையாக அழிக்கப்பட்டிருந்தன. எஞ்சியிருந்த ஒரு படை முகாமைத் தாக்கி அழிப்பதற்கான புதிய சண்டைகள், அன்று இரவே ஆரம்பமாகின. அன்றைய இரவுதான் எம்மையெல்லாம் வளர்த்தெடுத்த அன்பண்ணனின் வீரம் அவர் பிறந்த மண்ணில் விதையாகின்றது. நடு இரவு தாண்டி விடிகின்ற காலையில் அவர் முடிவு எம்மை எட்டுகின்றது. பசிமறந்து, களைமறந்து, தூக்கம் மறந்து அழுதோம்; அழுதால்தான் மனம் ஆறும். துணைப்படையை உருவாக்கி, எல்லையில் எம்மைத் துணிவோடு நிறுத்தி வேண்டிய போதெல்லாம் விரும்பிய துப்பாக்கிகளைத் தந்து, திசை மாறி நின்றவர்க்கு நேர்வழிகாட்டி, பூநகரிவரை வரும் துணிவைத் தந்து வளர்த்த 'அன்பு' அண்ணன், பிறந்த மண்ணில் மரணிக்கும் பாக்கியம் பெற்றுவிட்டார். கண்முன் மறையாது நிற்கும் அந்தக் களநினைவுகளில், கடல் நின்று களம் வென்ற கடற்புலிகளின் வீரத்தை எழுதுவதா...? எதிரியின் உடல்மீது ஏறி நின்று புறம் பாடிய பெண்புலிகளைப்பற்றி எழுதுவதா......? வான்படை வட்டமிட வைத்த அடி நகராமல் சிங்களத்தைச் சிதறடித்த வீரப்புதல்வர்களின் விந்தைகள் எழுதுவதா......? எதிரியின் டாங்கியை எடுத்து ஓடி வந்த எங்கள் மறக்குலத்தின் வேகத்தை எழுதுவதா......? நாமென்ன எழுதுவது; உலகவரலாறே தன் சாதனைப் புத்தகத்தில் எழுதிவிட்டது!

வெற்றிமேல் வெற்றியை, துயரத்தின் சுமை களை, இழக்கக்கூடாத எங்கள் 'அன்பைச்' சுமந்தவர்களாய் நீங்காத நினைவுகளோடு- 14ஆம் திகதி அதிகாலை மணலாறு நோக்கி எம் பயணம் தொடர்ந்தது.

-மணலாறு விஜயன்

-விடுதலைப்புலிகள் இதழ் : மாசி 1994.

தொகுப்பு : தமிழரசன்அப்துல்காதர்

வெந்துதணியாது இந்த வீரநிலம். -புதுவை இரத்தினதுரை

ஒன்றுமட்டும் உறுதி, 
இனியுமெம் தேசம் படுக்காது. குனிந்தெவருக்கும் குற்றேவல் செய்யாது. 
தேவநிலை வந்தெய்தினும் தாயகக் காதல் மட்டும் தணியாது. 
சாவரினும் தளரோம் இதுசத்தியம். யார்வரினும் பணியோம் இதுசத்தியம். போரெடுத்தோம் வெல்வோம் இதுசத்தியம் .
வெந்துதணியாது 
இந்த வீரநிலம்.

பகையுழுது போகலாம் உங்கள் படுக்கைகளை தகையழிந்து போகுமோ சந்தனக்காடுகள்? 

வேரறுந்து வீழுமோ விடுதலை?

ஊரெரிந்தும், உயிர்பிரிந்தும் போகலாம் பிரியும் நொடியிலும் உம்மையே பேசுமெம்வாய். 
விரியும் மலரிலும் தெரியுமும் முகம். உமக்கருகில் எமக்கும் வேண்டும் ஓர்குழி. 
உறவுகள் வந்து விளக்கேற்ற உள்ளேயிருந்து நாமும் சிரிப்போம் ஓர்நாள். 
அதுவரை ஓயாதெம் அலைகள்.

எத்தனை புயல்களும் எழுந்து வீசட்டும் சித்தம் கலங்கிச் சிதறோம். 
எத்தனை துயரெனினும் அழுத்தட்டும் அத்தனை வரிப்புகளையும் ஆனந்தமாக்குவோம். 
விடுதலை எங்களின் பேச்சு. 
விடுதலை எங்களின் மூச்சு. 
விடுதலை நெஞ்சிற் பதியம்போட்ட நாற்று.

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி.

வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி.

விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி.

இழிவாக வாழோம் தமிழீழப் போரில் இனிமேலும் ஓயோம் உறுதி.

-புதுவை இரத்தினதுரை.

லெப்.சங்கர். ஈகத்தின் முதல் வித்து.

"லெப் சங்கர் 
~~~~~~~~~~~~~
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப்படுவதற்கு முதலாவது அத்திவாரக்கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி லெப். சங்கர்.

சத்தியநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட லெப்.சங்கர் 1961இல் பிறந்தவர். 1977ஆம் ஆண்டு.., வீட்டில் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு அவர் பண்ணை ஒன்றில் இயங்கிய புலிகளின் பாசறையை அடைந்தார். தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் பண்டிதருடன் வந்த அவரை கூர்ந்து நோக்கினார். 

இளைஞன்... தோற்றத்தில் சின்னவன். தலைமறைவுப் போராட்டம் என்பது மிகவும் கடினமானது. குறி வைத்த எதிரியை வீழ்த்துவதற்காக எதிரியின் கண்களில் மண்ணைத் தூவி பல நாட்கள் அலைந்து திரியவேண்டும். நிரந்தரமாக ஓரிடத்தில் தங்கமுடியாது. நேரத்திற்கு உணவு கிடைக்காது. அல்லது பலநாட்கள் உணவின்றியே இருக்கவேண்டும். இவற்றை யெல்லாம் தாங்கும் மனோபலம் சிறுவனுக்கு இருக்குமா...?

தலைவர் பிரபாகரன் கூற்றுப்படி படிப்பைத் தொடர்வதற்காக வீடு திரும்புகிறான் சத்தியநாதன்.

“ஏதோ அறியாதவன். சில நாட்கள் சுற்றிவிட்டு வீடு வந்து விட்டான். இனி ஒழுங்காகப் படிப்பைத் தொடர்வான்” என இவரது பெற்றோர் எண்ணினர்.

ஆனால், சத்தியநாதனின் உள்ளத்து உறுதி கலையவில்லை. தானும் ஒரு போராளியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்கிறான். இடைப்பட்ட காலத்தில்
போராட்டத்திற்கு உறுதுணையாக சாரதிப்பயிற்சி பெறத்தீர்மானித்து அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறான்.

1978ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள் இரவு மீண்டும் தம்முன் வந்து நின்ற சத்தியநாதனை ஏறிட்டனர் ஏனைய போராளிகள். அவர்கள் முகங்களில் புன்னகை. அதில் சத்திய நாதனின் உறுதி புலப்படுகிறது. சத்தியநாதனுக்கு தலைமறைவு வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் புனைபெயர் சூட்டப்படுகிறது. சத்தியநாதன்... சங்கராக மாறினான்.

சங்கரின் உள்ளத்தைப்போலவே உடலும் உறுதிபெற்றது. ஓயாது உழைத்தான். எதிலும் ஆர்வம் எப்போதும் சுறுசுறுப்பு. தோழர்கள் ஒன்றுகூடிக் கருத்தரங்குகள் வைப்பதும், திட்டங்கள் தீட்டுவதும், விவாதிப்பதுமாக... சங்கரின் அரசியல் அறிவு விரிந்தது. வளர்ச்சி பெற்றது.

இயக்கத்தில் ஆரம்பகாலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டது. ஓய்வு நேரங்களில் ரிவோல்வரில் குறிபார்ப்பதிலும் ஆங்கில சினிமாப்படங்கள் மூலம் தன் ஆயுத அறிவை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டினான் சங்கர். 1979இல் சிறிய ஆயுதங்களில் குறிபார்த்துச் சுடும் பயிற்சி சங்கருக்கு வழங்கப்பட்டது.

சங்கருக்கு குறிபார்த்துச் சுடும் பயிற்சியிலிருந்த திறமையால் தலைவரிடமிருந்து வெகுமதியாக 0-45 ரிவோல்வர் ஒன்று கிடைத்தது. அது சங்கருக்கு கிடைத்த பின் அதை வைத்து மேலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டான். இரு கரங்களாலும் குறி பார்த்துச் சுடுவதில் தன்னிகரற்றவனாயினான். சிறந்த ஆயுதப் பராமரிப்பு. தினசரி துப்பரவாக்கப்பட்டு பளபளத்தது ரிவோல்வர்.

1979 வைகாசியிலே இயக்கத்தை தடை செய்வதாக அறிவித்திருந்த அரசு, புலிகளை அழிக்கும் நோக்குடன் தேடுதல் வேட்டைகளை விஸ்தரித்தது. சங்கரின் பெயரும் எதிரிக்குத் தெரிந்துவிட்டது. அவனும் தேடப்பட்டான்.

1981ஆம் ஆண்டு நவீன ரக ஆயுதங்களை இயக்கும் பயிற்சி சங்கருக்கு வழங்கப்பட்டது. சங்கர் தாக்குதல் படைப்பிரிவில் ஒருவனானான்.

1982 ஆடி 2ஆம் நாள் முதல்முதலாக எதிரியுடன் ஆயுதம் தாங்கிய மோதலில் சங்கர் ஈடுபடப்போகும் நாள், திட்டமிட்டபடி போராளிகள் எழுவர் நெல்லியடியில் ரோந்து வந்த பொலிஸ் ஜீப் மீது தாக்குதல் தொடுத்தனர். சங்கரிடம் ஒரு ரிவோல்வர் வேறொரு போராளியிடம் ஒரு இயந்திரத்துப்பாக்கி இதைத்தவிர வேறு ஆயுதங்கள் இல்லை .

முதலில்... எதிரியின் வாகனச் சாரதி சுட்டு வீழ்த்தப்பட்டான். சங்கரின் நீண்டகாலக் கனவு நனவாகத் தொடங்கியது. வெற்றிகரமான தாக்குதலில் எதிரிகளில் நால்வர் கொல்லப்பட்டனர். அவர்களின் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. புலிகள் எந்தவித இழப்புகளுமின்றி வெற்றியுடன் மீண்டனர்.

1982இல் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பிற்காக முதன் முதலாக இரு மெய்ப்பாதுகாவலர்கள் தெரிவுசெய்யப்படுகின்றனர். அவர்களில் ஒருவனாக சங்கரும் தெரிவுசெய்யப்பட்டிருந்தான். இக் காலகட்டத்தில் நவீனரக ஆயுதவரிசையில் இரண்டு ஜீ-3க்கள் மட்டுமே இயக்கத்திடமிருந்தன. இவற்றில் ஒன்று சங்கருக்கு வழங்கப்படுகின்றது.

இராணுவத் தாக்குதல்களில் மட்டுமல்ல மக்களை அரசியல் மயப்படுத்தும் நடவடிக்கைகளிலும் சங்கர் ஈடுபட்டான். புலிகளை வலை வீசித்தேடும் நடவடிக்கைகளுக்கு ஊடாகவே இவற்றை யெல்லாம் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

கூலிப்படைகளின் தேடுதல் வேட்டை மும்முரமாகின்றது. புலிகள் இயக்க ஆதரவாளராக இருந்த விரிவுரையாளர் ஒருவரின் வீட்டில் சங்கர்... 

இதை மோப்பம் பிடித்துவிடுகின்றது கூலிப் படை... 

வீடு முற்றுகையிடப்படுகிறது...

முற்றுகை முற்றுமுழு தான முற்றுகை. சங்கரின் கை இடுப்பிலிருந்த ரிவோல்வரின் பிடியை இறுகப் பிடிக்கின்றது. தப்பியோடத் தீர்மானிக்கின்றான் சங்கர். கூவிப் பாய்ந்த ரவைகளில் ஒன்று சங்கரின் வயிற்றைப் பதம் பார்த்துவிடுகிறது. தரையை நனைக்கின்றது குருதி. உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோரவில்லை. எதிரியின் கையில் தனது ரிவோல்வர் கிடைத்துவிடக்கூடாது. எப்படியும் தன் தோழர் கையில் அதனை ஒப்படைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தை உறுதியாக்க கிட்டத்தட்ட இரண்டு மைல் ஒடியிருப்பான். தெரிந்த ஒருவரின் உதவியுடன் நண்பர்கள் இரகசியமாகக் கூடும் இடத்தை அடைந்தான். ரிவோல்வரை தோழர்களிடம் கையளித்துவிட்டு உணர்விழந்தான் சங்கர். தோழர்கள் அவனைத் தாங்கிக் கொள்கிறார்கள். 

முற்றுகையில் அகப்பட்ட புலி கைநழுவிவிட்டது என்ற ஆத்திரம் அரச படையினருக்கு. ஆதரவாளர் கைது செய்யப் பட்டார். தேடுதல் முடுக்கிவிடப்பட்டது. தெருவெங்கும் இராணுவம். காயமுற்றவனை வெளியில் கொண்டு செல்லமுடியாத நிலை. இரத்த வாந்தி எடுத்த சங்கர் துவண்டு போனான். ஐந்து நாட்கள் கடந்தன. சங்கரை பாரதம் கொண்டு செல்வதற்காக மோட்டார்
படகு தயார் செய்யப்பட்டது.

பலத்த சிரமத்தின் மத்தியில் சங்கர் ஒருவாறு கரைசேர்க்கப்பட்டான். அங்கும் போதிய வைத்தியம் செய்ய முடியாதநிலை. உடல்நிலை நாளுக்கு நாள் நலிவடைந்தது.

27.11.1982 அன்று...  புலிகளால் மறக்கவே முடியாத நாள். தமிழீழ மக்கள் மனதில் உத்வேகத்தை ஊட்டிய நாள். ஆயிரமாயிரம் போராளிகளை தன்னகத்தே கொண்டு விடுதலைப் போர் வீறுநடைபோட வித்திட்ட நாள் அன்றுதான்...

தலைவர் தம்பி பிரபாகரனின் மடியில் அவர் கைகளை இறுகப்பற்றி “தம்பி” என்றவாறே சங்கர் உயிர் துறந்தான்.

தலைவரின் விழிகளை நிறைத்த கண்ணீர் விழுந்து தெறித்து அவ் வீரனுக்கு அஞ்சலி செலுத்தியது.

தாயக மீட்புக்கான உரிமைப் போரில் வீரச்சாவடைந்த முதற் புலி லெப்டினன்ட் சங்கரின் உடல் தமிழீழத்திற்கு வெளியே பாரதத்தில் தகனம் செய்யப்பட்டது. இவனது வீரச்சாவுகூட மக்களுக்கும் புலிகளுக்கும் இடையே இருந்த இணைப்பு இறுகிய பின்னரே வெளியே தெரியப்படுத்தப்பட்டது.

இம் மாவீரனின் வழித்தடத்தில் நடந்த ஆயிரக்கணக்கான பேராளிகளில் 16000ற்கு மேற்பட்ட போராளிகள் விடுதலைப் போருக்கு தம்மை வித்தாக்கியுள்ளனர். இம் மாவீரர்களை யெல்லாம் நினைவுகூரும் நாளாக லெப். சங்கர் வீரச்சாவடைந்த நாள் மாவீரர் நாளாக தமிழீழ மக்களால் கடைபிடிக்கப்பட்டு வருவதுடன் அவர்களின் இலட்சியப் பயணம் பல வெற்றிகளைப் பெற்று உறுதியுடன் தொடர்கின்றது.

-எரிமலை,நவம்பர் 2000.

தொகுப்பு : தமிழரசன்அப்துல்காதர் 

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.

தன்னைக் காத்த தலைவனுடைய கண்களில் நீர் பெருகுமாறு வீரமரணம் அடைந்தால், அத்தகைய மரணத்தை இரந்தாவது பெற்றுக் கொள்வதில் பெருமை உண்டு

குறள் :780

நீங்களே வரலாற்றின் பிள்ளைகள். -செகத் கஸ்பார்

வெளிச்சம் பொருத்தமான பெயர். தமிழீழ விடுதலை முயற்சிக்கு சரியான குறியீடு. சூரியனுக்கும் ஆதவனுக்குமான சிறியதோர் வேறுபாடும் அதற்குள் உண்டு. சூரியன் சுடும். வெம்மையும், வெக்கையுமாக நிர்மலமும் நிம்மதியும் இல்லாத ஒன்று. அதிகாலை வெளிச்சமே பிரபஞ்ச உயிரின் உன்னதப்பாட்டு. அது கவிந்த இருளை கவனமாக அகற்றும், ஆழ்ந்த உறக்கத்தில் இருப்போரை அரவமின்றித் தட்டியெழுப்பும், பூக்களைத் தழுவிப் புன்சிரிக்க வைக்கும், பறவைகளின் சிறகுகளை உசுப்பிவிடும், பள்ளியெழுச்சி பாடவைக்கும், இருள் போர்த்துக் களையிழந்திருக்கும் இயற்கை மகனுக்கு முகங்கழுவிவிடும். இன்னும் என்ன வெல்லாமோ செய்யும். வெளிச்சமென இங்கு நான் குறிப்பிடுவது வெயிலை
அல்ல, ஒளியை. பைபிளின் கடவுள் ஆதியில் உலகைப்படைத்த போது முதலில் உரைத்த சொற்கள் 'ஒளியுண்டாகுக.

பல நூறு ஆண்டுகளாய் இருளில் மூழ்கி பாதையையும் பயணத்தையும் இழந்து நின்ற தமிழ் வரலாற்றுக்கு தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் ஒளியும் வழியும் தந்திருக்கிறது. வன்முறையும் வலியும். துயரங்களும் இந்த வழியில் அதிகம் தான்.அது தவிர்க்க முடியாதது. காரணம் இது பொம்மை செய்கிற அலுவலல்ல, இது பிரசவம். புதிய பிறப்பு, இலட்சியம் என்கிற தவவனத்தில், இரத்தத்தில் காவியுடை தரித்து தலைமுறைகளின் மீட்புக்காகத் தம்மையே ஆகுதியாகிற பிள்ளைகளே நீவிர் எம் செல்வங்கள். எமக்கேனும் பரலோகமும் வைகுண்டமும் பரிசாக உண்டு. உமக்கு என்ன உண்டு? உங்களது தலைமுறைகளேனும் நலமாக
வாழும் என்ற கனவுமட்டும் தானே உங்களுக்கான பரிசு. நீவிர், எம்மை விடவும் பெரியவர்கள். பரலோகத்தையும் வைகுண்டத்தையும் விட மேலான ஒரு இடத்தை உங்களுக்கு ஏற்பாடு செய்ய பரமபிதாவை மன்றாடுவேன்.

மலைமகள் என்ற தங்கை புதுக்குடியிருப்பிலிருந்து 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ற் 15 ஆம் நாள் தேதியிட்டு எழுதிய கடிதமொன்று என் நெஞ்சில் நிரந்தரமாய்ப் பதிந்துவிட்ட ஒன்று. "தந்தை வீரச்சாவு அடைய தன் மகனை களத்துக்கு அனுப்பினாள் தாய்" என்று படித்திருக்கிறேன். ஆனால், களத்திலே வீரச்சாவடைந்கு தன் மகனுக்கு போராளித் தந்தை மண் போட்டதை நான் கண்டிருக்கிறேன். திருமண நாள் நிச்சயிக்கப்பட்ட தன் போராளித்துணைவியின் உடல் களத்தில் சிதறிட அவளுக்காக நினைவுக்கல் நாட்டிய போராளிக்காதலனை நான் கண்டிருக்கிறேன். பிறந்து 45 நாட்கள் மட்டுமே ஆன தன் பெண் குழந்தையைப் பின்னால் ஒரு போராளி சுமந்து வர முன்னே தன் போராளிக் கணவனின் வித்துடலை தன் தோளிலே சுமந்து நடந்து விதைகுழியில் வைத்து மண்போட்டு மூடிய போராளி மனைவியின் அருகில் நின்றிருக்கிறேன். ஒருவருக்கு மற்றவர் சொல்லாமல் சண்டைக்களத்துக்குப் போய் நின்று தொலைத்தொடர்பு கருவியில் குரல்கேட்ட பின்னரே தான் மட்டுமல்லாமல், தன் துணையும் களத்தில் நிற்பதை அறிந்து கொண்ட போராளித் தம்பதியரை நான் அறிந்திருக்கிறேன். அடுத்த வேளை சமைக்க அரிசியில்லை என்று தெரிந்தும் களைத்துப் போய் வந்து தன் வீட்டுத் திண்ணையில் சாய்ந்திருக்கும் புலிப்பிள்ளைகளுக்கு உணவு சமைக்கிற ஏழைத் தாய்மார்களை நான் பார்த்திருக்கிறேன்" இதையெல்லாம் எழுதி விட்டு தங்கை மலைமகள் ஆதங்கத்தோடு கேட்டிருந்தார், "இவையெல்லாம் உலகத்துக்குத் தெரியுமா ?

மலைமகள் தங்காய், யாரது அங்கீகாரம் எவருக்கு வேண்டும்? அங்கீகரிப்பவர்களுக்கும்
சொன்னாயே ஒரு தகுதி வேண்டாமோ? நீ அடுத்த வேளைக்கு அரிசியில்லையென்று தெரிந்தும் களைத்துப்போய் வந்து நிற்கும் எங்கோ பிறந்த பிள்ளைகளுக்கு உணவு சமைக்கிற ஏழைத்தாய்மார்கள்... இவர்களது புனிதம் போப்பாண்டவர்களினதும் சங்கராச்சாரிகளினதும் புனிதத்தை விட மேலானது. இவர்கள் தான் நமது உலகின் வெளிச்சம் ஒளி. இருளின் அங்கீகாரம் இவர்களுக்கு அவசியமில்லை.

ஆயினும், நீங்களே அறியாமல் உங்களுக்காய் அழுகிறவர்கள், உங்களை நேசிக்கிறவர்கள் -நீங்களே எம் செல்வங்கள் எனப் பெருமிதத்துடன் ஓங்காரமாக முழங்குகிறவர்கள் ஏராளம் பேர் இருக்கிறார்கள்? 1996 ஆம் ஆண்டு கொழும்பு நகரில் இருந்துகொண்டு சகோதரி சிவசங்கரி எழுதிய கடிதம் 'வேரித்தாஸ்' வானலையில் வந்ததே நினைவிருக்கிறதா? “ எம்மைப்பொறுத்தவரை மடிந்து போன எம் உறவுகளின் உயிர்களைவிடவும், முடமாக்கப்பட்ட எமது சகோதரர்களின் கால்களை விடவும், பழிக்கப்பட்ட எம் மக்களின் சந்தோசங்களை விடவும், தெருவோர வீடுகளில் தொலைக்கப்பட்ட சிரிப்புகளை விடவும், அழிக்கப்பட்ட எமது தாய்மாரின் வாரிசுகளை விடவும், எல்லாவற்றிற்கும் மேலாக விடுதலை வேள்விக்கு தம்மையே ஆகுதியாக்கிக்கொள்ளும் அந்த அத்தனை -போராளிகளின் உயிர்களை விடவும் பெறுமதியானது இந்த உலகில் எதுவும் கிடையாது"

தமிழகம், மலேசியா, ஐரோப்பா, கனடா, அமெரிக்கா என லட்சக்கணக்கான தமிழ்மக்கள் சகோதரி சிவசங்கரியின் இதய உணர்வுகளோடு உங்களுடன் நிற்கிறார்கள்; நான் உட்பட. நீங்கள் வரலாற்றின் பிள்ளைகள்; எங்களின் செல்வங்கள்.

-ஜெகத்கஸ்பார்

வேரித்தாஸ் தமிழ்ப்பணி

மனிலா.

வெளிச்சம் : கார்த்திகை 2001.

அன்றுதான் நிலவை அத்தனை அழகாய்ப் பார்த்தோம்: எத்தனை எழிலதற்கு. -புதுவை இரத்தினதுரை.

வெறுங்கையராய் வெளியேறி

ஆண்டுகள் கடந்த ஒருநாள்

ஓயாதலையொன்று ஊர்புகுந்த மறுநாள்.

கைப்பற்றிய பீரங்கிகளைத் தடவியபடி மீண்டும் புகுந்தோம் எங்கள் அழகிய கடலோரம்.

பொட்டுத் துணியுமற்ற மேனியாய் கிடந்தது எம் உயிர் விதைத்த ஊர்கள்.

வல்லுறவுக்குள்ளான வயோதிப மாதராய் கிடந்தது சின்னக் காவிரிப்பூம் பட்டினம்.

அழுகையும், ஆனந்தக் கண்ணீருமாக கையெடுத்துத் தொழுதோம் வற்றாப்பளை ஆச்சியை.

பரவசம் தரித்த முகத்தினராய் நந்திக் கடலோரம் நின்று பாடினோம். வானில் நிலவிருந்தது அன்றும்.

அழுதபடி அல்ல...

"வென்றீரென பாடியது - நிலவு. விழிமுன்னே' என்றோர் விடுதலைப் பாடலை.

அன்றுதான் நிலவை அத்தனை அழகாய்ப் பார்த்தோம்: எத்தனை எழிலதற்கு. 

-புதுவை இரத்தினதுரை.

மண்ணில் ஊறிய உணர்வுகள்

மண்ணில் ஊறிய உணர்வுகள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அந்த அன்னையர்கள், கல்லூரியில் மட்டும் எனக்கு ஆசிரியர்கள் அல்ல. நான் பங்காற்றும் இந்த விடுதலைப் போராட்டத்தில் கூட இவர்கள் எனக்கு ஆசான்களாகத் திகழ்கிறார்கள் என்பதை எண்ணும் போது, என் கற்பனா சக்திக்கும் மேலான ஒன்று என்னுள் குடிபுகுந்து, என் உணர்வுகட்கு மேலும் வலுவூட்டுகின்றதென்றால் அத்தாய்மார்கள் அப்படி வித்தியாசமாக என்னதான் செய்திருப்பார்கள் என்ற கேள்வி எமக்குள் எழலாம்.

ஆம்! கஷ்டத்தில்தான் உண்மையானவர்கள் இனங் காணப்படுவார்கள். அதற்கேற்ப எம்மண்ணின் ஒரு பகுதி எதிரியின் ஆக்கிரமிப்பு வலைக்குள் சிக்குண்டிருக்கையில், தமது உயிர் உடமைகளைத் துச்சமென மதித்து எமது விடுதலைப் போருக்கு பூரண பங்காற்றிய அந்த அன்னையரை நாம் எல்லோரும் அறிந்து கொண்டால், எமது உள்ளத்து உணர்வுகளில் சிறிதேனும் உந்துதல் உண்டாகும் என்ற நம் பிக்கையில் இப்பக்கங்களை எனதாக்குகிறேன்.

அதிரும் அந்த அதி காலைப்பொழுது, எமது செவிப் பறைகளை மட்டுமல்ல எமது மண்ணே பிளந்து போகும் அளவிற்கு குண்டு வீச்சு விமானங்களின் தாக்குதலோடு ஆரம்பிக்கப்பட்டதுதான் "வடமராட்சி விடுவிப்புத் தாக்குதல்". எம் மக்களைக் கதிகலங்க வைத்த மாபெரும் இன அழிப்பு இராணுவ நடவடிக்கை அது. இது தொடங்கியது 87 இல்
தொழிலாளர் தினத்தைக் கடந்து 25 நாட்களின் பின் ஓர் அதிகாலை. அப்போது நாமோர் "கொரில்லா" அணி என்ற நிலையிலிருந்து சற்று முன்னேறி முகாம் வாசலில் வைத்தே இராணுவத்தினர் முகாமைவிட்டு வெளியேறாது, தடுத்து திருப்பியனுப்பும் புதிய யுக்தியைக் கைக்கொண்டிருந்த காலம். ஆனால் எமக்கு விடப்பட்ட சவாலோ பெரியது. எமது சக்திக்கு மிகமிக அப்பாற்பட்ட ஒரு சக்தியோடு மோத வேண்டிய, அதாவது நூற்றுக்கணக்கான போராளிகள், நூற்றுக்கும் குறைவான ஆயுதங்கள், இவற்றோடு ஒரு நாட்டின் அரைப் பங்கு இராணுவ பலத்தை (முழு அளவிலான விமானப்படைப் பலம், 75% ஆன கடற்படைப் பலம், 8,000 தரைப்படை இரா ணுவம்) எதிர்த்து மோத வேண்டிய இக்கட்டான நிலை. ஒரு கெரில்லா அணியின் நேரடியான மரபுவழி யுத்தம். பொருத்தமற்ற, யுத்த மரபுகளுக்கு முரணானதோர் யுத்தப் பிரகடனத்தை ஸ்ரீலங்கா அரசு எம்மீது பிரகடனம் செய்தது. ஒரு மரபுவழி யுத்தத்தை எதிர் கொள்ள வேண்டிய ஆயுதச் சமபலம் எம்மிடம் இல்லாத நிலையில் தற்பாதுகாப்பிற்காக சில நாட்கள் நேரடியாகப் போரிட்ட நாம் மீண்டும் ஓர் "கெரில்லா" அணியாக மாறி போர் புரிய வேண்டிய நெருக்கடியான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டோம். ஏனெனில் அப் பிரதேசம் முழுவதும் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு சதுரங்கத் தந்திரோபாய முறைப்படி (இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனத்தில்
கையாளும் போராளிகளின் நடமாட்டங்களை, செயற்பாடுகளை
கட்டுப்படுத்தும் தந்திரோபாயம்)

முழத்துக்கு முழம் முகாமிடப்பட்டிருந்தது. வீதியால் ஓர் ஆள் உருவம் அசைகின்றதென்றால் நெற்றி வெடி விழும் சூழ்நிலையில் தான், இவ் இராணுவ யுக்தி வியூகத்தை உடைத்தெறிய வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டது. அதாவது போராளிகள் நகரவோ, அன்றி வேவு பார்க்கவோ முடியாத சூழ்நிலை. ஆனாலும் இராணுவத்தினரின் சதுரங்க வியூகத்தை உடைத்தேயாக வேண்டிய தேவை. அப்போதுதான் நான் படித்த பாடசாலையில் அமைந்திருந்த அந்த முகாமின் அருகே அமைந்திருந்த எனது ஆசிரியர்களின் வீடுகள் எம் நினைவுக்கு வந்தன. அப்பாடசாலையில் இராணுவ முகாம் அமைக்கப்பட்ட பின்னர் அருகே உள்ள பெண்கள் பகுதிக்கு இப்பாடசாலையின் வகுப்பறைகள் இடமாற்றப்பட்டிருந்தும், பாடசாலையின் உபகரணங்கள் எதுவும் புதிய இடத்திற்கு மாற்றப்படாமையும் எங்கள் சிந்தையில் எழுந்தன. ஆகையால் இவ் உபகரணங்கள் இடம் மாற்றுவதைக் காரணங்காட்டி முகாமிற்குள் சென்று முகாமை வேவு பார்க்க என் பள்ளி ஆசிரியர்களை நான் அணுகினேன். அன்றைய ஆபத்தான சூழ்நிலையில் எமது விடுதலைப் போராட்டம் ஓர் பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இரு ஆசிரியர்கள் உதவ முன்வந்தபோது அவர்கள் எமது பாதையையும், இந்த மண்ணையும் எவ்வளவு தூரம் நேசிக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எமது ஆலோசனைகளின்படி உளவு
பார்க்கும் பணியை செவ்வனே நிறைவேற்றிய இவர்கள், சுற்றத்தார் மத்தியில் தாக்குதல் பற்றிய வீண் சலசலப்புகள் ஏற்படக்கூடாது என்பதற்காக அவரவர் வீடுகளில் இருந்தவாறே எதிரியின் முகாமை தினசரி நன்கு நோட்டமிட்டு இராணுவத்தினரின் நடவடிக்கைகள் பற்றி தெரிவித்திருந்தார்கள். எங்களிடம் அவர்கள் தந்த தகவல்களின் பிரகாரம் இரவு 7.30 மணி, இராணுவத்தினர் உணவு அருந்தும் நேரம் எனவும் பின்னர் இரவு 8 மணிக்கு சிங்கள தொலைக்காட்சிச் செய்தியை பார்ப்பதில் பெருமளவு இராணுவத்தினர் கவனம் செலுத்துவார்கள் எனவும் இரவு 9 மணிக்குப் பின் அதிகளவு இராணுவத்தினர் முகாமைவிட்டு வெளியேறி மறுநாள் காலை வரை முகாமைச் சுற்றியுள்ள வீடுகளுக்கு தங்கச் சென்று விடுவார்கள் என்றும் கூறினர். ஆகவே இரவு 9 மணிக்கு முன் முகாமைத் தாக்கியாக வேண்டும் என்ற கட்டாயம் எமக்கு ஏற்பட்டது. இராணுவத்தினர் எல்லோரும் விழிப்பாக இருக்கும் போது நாம் நடாத்தத் திட்டமிட்ட முதலாவது இராணுவ முகாம் மீதான தாக்குதல். பொருத்தமற்ற நேரம்தான். ஆனாலும், அவர்களின் பலவீனம் சிங்கள செய்தி கேட்பதில் இருந்ததால் அதை நாங்கள் சாதகமாக்கி "கரும்புலி" கப்டன் மில்லரின் தன்னலமற்ற தியாகத் தாக்குதலால், அம்முகாமை நிர் மூலமாக்கினோம்.

என் தளச் சகா மில்லரின் நினைவு நாள் ஆடித் திங்களில் என்பதால், இவ்விதழில் நான் அவனோடு வாழ்ந்த காலத்து நினைவுகளை மீட்டல், காலத்தின் அவசியமாகின்றது. சாவுக்கே சவால் விட்ட அந்த வீரனின் விந்தையை இன்றும் பலர் பின்பற்றும் மனோபலம் பெற்றிருக்கிறார்கள். இவன் தந்தை ஓர் வங்கி முகாமையாளர். வசதியான குடும்பத்தில் வசதியான வாழ்க்கை வாழ்ந்த இவன் விடுதலைப் போராட்டத்தில் வாழ்ந்த எளிமையான வாழ்க்கையும், மற்றவர் மனம் நோகாமல் பழகும் பண்புகளும், தான் சிரிக்காமலே
பாசறையில் தன்னைச் சுற்றியுள்ளோரை சிரிக்க வைக்கும் இலாவகமும், இராணுவத்தினருடனான மோதல்களின் போது துப்பாக்கியோடு ஒரு பம்பரம் போல் சுழன்று அநாயாசமாகச் சண்டையிடும் இவன் வேகமும், துப்பாக்கி வேட்டுகளுக்கு மத்தியில் மட்டுமல்ல, ஆகாய அரக்கர்களின் வானத் தாக்குதல்களுக்கு நடுவேயும் சிறிதும் கலங்காமல் வழி பிசகாமல் வாகனம் ஓட்டும் சாதுரியமும், இன்றும் எங்கள். கண்களுக்குள்ளே நிழலாடுகின்றதென்றால் கொண்டிருக்கும் ஓர் தோற்றத்தை கொடுக்கிறதென்றால் அவன் திறமையை சிறிது சிந்தித்துப் பாருங்களேன். அவனது வாகனம் கடைசியாக ஊர்ந்து கொண்டிருக்கும் தோற்றம் என்றும் எமது நினைவை விட்டு நீங்காது. எல்லாவற்றுக்கும் மேலாகச் சாவைக் கண்டு அஞ்சியோடும் மனிதருக்கு மத்தியில், தன் சாவிற்கு தானே போட்டி போட்டு தேர்வின்றிச் சாவைத் சந்திக்கும் மனோவலிமை அவனுக்கு உள்ளேயே வளர்ந்த ஒன்று. அது தலைவர் பிரபாகரனின் பாசறையில் பயின்றோரால் மட்டுமே சாதிக்கக் கூடியதுமாகும். இவன் வகுத்திட்ட இவ் வழிப்பாதையைத் தொடரும் பல போராளிகள் எமக்குள் இருக்கும் வரை எம்மை, எமது விடுதலையை யாரால் என்ன செய்துவிட முடியும்?
 எமது திட்டத்தின் பிரகாரம் மில்லரின் வெடிகுண்டு வாகனம் இராணுவ முகாமின் மிகப் பொருத்தமான இடத்தில் வெடித்துச் சிதறிய பின் ஒரு குழு சண்டையிட, மறு குழுவோ இடிந்த கட்டிடங்களுக்குள் மில்லரை சல்லடைபோட்டுத் தேடியது. நிஜமாக அப்போது அவன் சரித்திரம் படைத்துச் சங்கமமாகிவிட்டான் என ஊர்ஜிதப் படுத்த முடியாமல், எங்காவது ஒரு மூலையில் அவன் கிடைப்பான் என்ற நம்பிக்கையில், நப்பாசையில் சத்தமிட்டு, அவன் பெயரைக் காற்றிலே கலக்கவிட்டுத் தேடினோம், தேடுகிறோம். இன்றுவரை அவன் எமக்கு
கிடைக்கவேயில்லை.

அவன் உடலோ, அன்றி அவனின் உடலின் பாகங்களோ கிடைக்காத நிலையில் அவன் இடித்துச்
சாய்த்த கட்டிடச் சிதறல்களுக்குள் சிக்குண்டிருந்த எதிரியிடமிருந்து மீட்ட ஞாபகச் சின்னங்களை ஏந்திச் சோகமாக எமது தாக்குதல் நிலைகளை நோக்கி திரும்பினோம். அப்போதும் அருகிலுள்ள எதிரி முகாம்களிலிருந்து வீசப்பட்ட சரமாரியான குண்டு வீச்சு ஒரு புறமும், ஆகாயப் படையினரின் தாக்குதல்கள் மறு புறமும் நடந்து கொண்டேயிருந்தன .

இவற்றுக்கு மத்தியில் தமக்கு ஏற்படவிருக்கும் உயிராபத்தைக்கூட பொருட்படுத்தாது யுத்த களத்தில் நின்றுகொண்டே எமக்கெல்லாம் எலுமிச்சை நீர் கரைத்துப் பரிமாறி எம்மை உற்சாகப்படுத்திய அவ் ஆசிரியர்களைப் போன்ற உள்ளங்களின் உணர்வு தான் இன்றும் எம்மை உறுதியாக இயங்க வைக்கிறது. எமது இத்தாக்குதல் முடிவடைந்து வெடிச் சத்தங்கள் ஓய்ந்த பின்னர் தத்தமது வீடுகளைப் பார்க்கச்சென்ற ஆசியர்களுக்கோ அங்கு காத்திருந்தது பேரதிர்ச்சிதான். முகாமிற்கு வெறும் இருபதே யார் தொலைவிலே இருந்த இருவர் வீடுகளும் இத்தாக்குதலின் போது முற்றாகச் சேதமடைந்திருந்தன. இவர்களும் இவர்தம் குடும்பங்களும் எம்மோடு எமது முகாம் திரும்ப வேண்டியிருந்த பரிதாப நிலையின் பின்பும், இவர்கள் இன்றும் விடுதலைப் போராளிகளோடுதான் வாழ்கிறார்கள் என்றால், இவர்கள் உள்ளங்களில் சங்கமித்திருக்கும் விடுதலை வேட்கை எத்தகையது என எண்ணிப் பார்க்கிறோம். உண்மை தான்; இவ்வளவிற்குப் பின்பும் எனது ஆசிரியர்தான் எமது இராணுவப் படைத்துறை வாத்தியக் குழுவின் அஸ்திவாரமாக திகழ்கிறார் என்றால் என்னுள் எழுகின்ற கேள்வி, புறநானூற்றுத் தாய்மாரால் தமிழீழ அன்னையருக்கு நிகராக நிற்க முடியுமா என்பதுதான்.

-யதார்த்தன்

-எரிமலை ஆடி 1992

ஆகஸ்ட் 11 , குமரி மண்ணின் உரிமைக்காக இன்னுயிர் ஈந்த தியாகிகள் நாள்.

1954 ஆகஸ்ட் 11 🔥

கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர்-கொச்சி சமஸ்தானத்தில் இருந்து விடுதலை பெற்று, தாய் தமிழகத்துடன் இணைவதற்காக நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தின் முக்கிய மைல்கல் நாளாகும்.

இந்திய விடுதலைக்கு பின், தமிழர் நிலங்களான  தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு மற்றும் செங்கோட்டை பகுதிகள் திருவிதாங்கூர்-கொச்சி மாநிலத்தின் கீழ் இயங்கி வந்தன. இங்கு வாழ்ந்த தமிழர்களுக்கு வரி விதிப்பு, மொழி உரிமை மற்றும் நிர்வாக ரீதியில் பல்வேறு அடக்குமுறைகள் அநீதியாக இழைக்கப்பட்டன.
இதனை எதிர்த்து, கன்னியாகுமரி பகுதியைத் தமிழகத்துடன் இணைக்கக் கோரி 'மார்ஷல்' ஏ. நேசமணி தலைமையில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் (TTNC) இயக்கம் தீவிர போராட்டங்களை முன்னெடுத்தது.

1954 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 அன்று, தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்தி குமரி மாவட்டம் முழுவதிலும் மிகப்பெரிய அளவிலான அமைதிப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அப்போதைய திரு-கொச்சி மாநில அரசு, போராட்டத்தை ஒடுக்கக் காவல்துறையை ஏவிவிட்டது. மார்த்தாண்டம் மற்றும் புதுக்கடை ஆகிய இடங்களில் அமைதியான முறையில் திரண்டிருந்த மக்கள் மீது காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இத்துப்பாக்கிச் சூட்டில் 

முத்துசாமி (மார்த்தாண்டம்)
​அருளப்ப நாடார் (மார்த்தாண்டம்)
​செல்லையா (புதுக்கடை)
​குமரன் நாடார் (புதுக்கடை)
​மாடசாமி நாடார் (புதுக்கடை)
​ராமன் (புதுக்கடை)
​பீர் முகமது (புதுக்கடை)
​சுப்பிரமணியன்
​பாலையன்
​வேலாயுதன்
​முத்துசாமி (புதுக்கடை)
​

ஆகிய 11 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் பலத்த காயமடைந்தனர்.

இந்த உயிர்த்தியாகங்கள் போராட்டத்திற்குப் பெரும்தீயை மூட்டின. இறுதியில், நீதிபதி ஃபசல் அலி தலைமையிலான மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையத்தின் பரிந்துரையின்படி, 1956 நவம்பர் 1 அன்று கன்னியாகுமரி மாவட்டம் அதிகாரப்பூர்வமாகத் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 11 , குமரி மண்ணின் உரிமைக்காக இன்னுயிர் ஈந்த தியாகிகளை நினைவேந்துவோம்.

அறத்தமிழ்

அன்பு மொழி..

அமைதி மொழி..

இரக்கத்தின் மொழி ..

அன்பு மொழி :

சங்க இலக்கியத்தில் 'அன்பு' என்பது அகவாழ்க்கையின் (காதல்) அடிப்படையாகவும், புறவாழ்க்கையில் (சமூகம்) சுற்றத்தாரோடு கூடி வாழும் பண்பாகவும் போற்றப்படுகிறது.

 "அன்பின் வழியது உயிர்நிலை"
   — திருவள்ளுவர் (திருக்குறள் - 8)

 தமிழரின் அறக்கோட்பாட்டின் உச்சம் இது. அன்பு இருக்கும் உடம்பில்தான் உயிர் இருக்கிறது; அன்பு இல்லாத உடம்பு வெறும் எலும்பும் தோலும் போர்த்திய பிணமே ஆகும். என்பது வள்ளுவர் வாக்கு.

 "யாமே பிரிவு இன்று இயந்து துவரா நட்பின்
   இருதலைப் புள்ளின் ஓருயிரம்மே"
   — கபிலர் (அகநானூறு - 12)

நாமோ பிரிவில்லாமல் இயைந்த, வெறுப்பில்லாத நட்பைக் கொண்டவர்கள். இரண்டு தலைகளையும் ஒரே உயிரையும் கொண்ட பறவையைப் போன்றவர்கள் நாம். இது தலைவன்-தலைவி அல்லது தோழமையின் ஆழமான அன்பைக் குறிக்கிறது.

செம்புலப் பெயல் நீர்போல்
 "அன்புடை நெஞ்சத் தாம்கலந் தனவே"
  (குறுந்தொகை - 40)

செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல, அன்புடை நெஞ்சம் உடைய நாம் ஒருவரோடு ஒருவர் கலந்துவிட்டோம்.

அமைதி மொழி:

சங்க காலத்தில் போர்கள் மலிந்து காணப்பட்டாலும், புலவர்கள் அமைதியின் அவசியத்தையும், போரினால் வரும் அழிவையும் மன்னர்களுக்கு எடுத்துரைக்கத் தவறவில்லை.

"ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும்,
   பெண்டிரும், பிணியுடையீரும், பேணித்
   தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும்
   பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும்,
   எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்"
   — நெட்டிமையார் (புறநானூறு - 9)

போர் தொடங்குவதற்கு முன், பசுக்கள், அந்தணர்கள், பெண்கள், நோயாளிகள், மற்றும் தென்புலத்தார்க்கு (சடங்குகள்) கடன் செலுத்தக் கூடிய புதல்வரைப் பெறாதவர்கள் ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இது போரிலும் கடைபிடிக்கப்பட்ட அறத்தையும், எளியோர்க்கு அமைதியை விரும்பிய பண்பையும் காட்டுகிறது.

"கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்"

இது பாரதிதாசனின் வரி, சங்க இலக்கியம் அல்ல. எனினும், சங்க காலப் புலவர்கள் போரைத் தடுக்க முயன்ற மனநிலையை இது பிரதிபலிக்கிறது.

 "வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்
   புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன
   கடிமரம் தடிதல் ஓம்பு நின் நெடுநல் யானைக்குக் கந்து ஆற்றாவே"
   — காரிக்கண்ணனார் (புறநானூறு - 57)

 புலவர் காரிக்கண்ணனார், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் மற்றும் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி ஆகிய இரு பேரரசர்களையும் ஒன்றாகக் கண்டு, அவர்கள் பகைமை பாராட்டிப் போரிடக் கூடாது என அறிவுறுத்தி அமைதியை நிலைநாட்டுகிறார்.

இரக்கத்தின் மொழி:

பிற உயிர்களின் துன்பம் கண்டு வருந்துதலும், உதவி செய்தலும் தமிழ் இலக்கியத்தில் மிக முக்கிய அறமாகக் கருதப்படுகிறது.

"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே"
   — குடபுலவியனார் (புறநானூறு - 18)

பசி என்று வந்தவருக்கு உணவு கொடுத்தவர், அவருக்கு உயிரைக் கொடுத்தவருக்குச் சமமாவார். இது ஈகை மற்றும் இரக்கத்தின் உச்சக்கட்ட அறம்.

 "நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
   அல்லது செய்தல் ஓம்புமின்"
   — நரிவெரூஉத்தலையார் 
(புறநானூறு - 195)

உங்களால் பிறருக்கு நன்மை செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை; ஆனால், தீமை செய்யாமல் இருங்கள். இதுவே உலகிற்குக் காட்டும் அடிப்படை இரக்கம்.

 "வாடினேன் வாடி"
   — இது வள்ளலார் பிற உயிர்களின் வாட்டத்தைக் கண்டு வருந்தும் சங்க கால மனநிலையின் தொடர்ச்சி.

"சேற்று நிலை முனைஇய செங்கண் காரான்...
   தண்ணென் கானல் தமியள் ஏகும்
   நம் காதலரே"
   — (ஐங்குறுநூறு - 140)

தலைவன் பிரிந்து சென்ற நிலையை நினைத்து, தலைவி படும் துன்பத்தைக் கண்டு தோழி இரங்குகிறாள் (வருந்துகிறாள்). 'இரங்கல்' என்பது நெய்தல் திணையின் உரிப்பொருள், இதுவே இரக்கத்தின் மொழியாகும்.

இறுதியாக .....

சிறந்தவற்றுள் எல்லாம் சிறந்தன்று,
பெருமையான் எய்தியக் கண்ணும், சிறுமையை
உள்ளுதல் வல்லா அகம்"

— நக்கீரர் (புறநானூறு - 56)

​ஒருவர் எவ்வளவு பெரிய பதவியையோ பெருமையையோ அடைந்தாலும், பிறரைத் தாழ்வாகப் பார்க்காமல் பணிவோடு இருக்கும் பண்பே சிறந்த அறமாகும்.

தமிழ்நாட்டில் நடந்த மிகப்பெரிய விபத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவர்களுக்கு தமிழ் என்றால் என்னவென்று தெரியும்?  நாம் இதை கேள்வி கேட்டால் -தமிழ் தெரியாது போடா!  என்று # போட்டாலும் போடுவார்கள் சுயசிந்தனையற்ற மாக்கள் கூட்டம்.

-தமிழரசன்அப்துல்காதர்.

வீரமுனைப் படுகொலைகள் நாள்.

இன்று வீரமுனைப் படுகொலை நாள்.
12/8/1990.
~~~~~~~~~~~~~
வரலாற்றுக்கு முந்திய நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த வீரமுனை எனும் தமிழ்கிராமம் இன்று அந்த மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. 1954ம் ஆண்டிலிருந்து 1991ம் ஆண்டுவரை சிங்கள இராணுவத்தினராலும் முஸ்லீம்களாலும் தொடர் தாக்குதலுக்குள்ளாகி ஆக்கிரமித்து அழிக்கப்பட்டுவிட்டது. 1954ம் ஆண்டு முஸ்லீம் காடையர்கள் இவ்வழகிய கிராமத்தை இரத்தக் களறியாக்கினார்கள். வாள் வெட்டுக்கும்.. கத்திவெட்டுக்கும் அஞ்சிய தமிழ்க்குடும்பங்கள் வீரச்சோலை, வளதாப்பிட்டிய, மல்லிகைத்தீவு, மல்வத்தை போன்ற கிராமங்களில் வாழத்தலைப்பட்டனர்.

1954ம் ஆண்டிற்குப் பின்னர் ஏறக்குறைய முப்பத்தியாறு ஆண்டுகள் வீரமுனைக்கு வருவதும் தப்பி ஓடுவதுமாய் துன்பத்தையே சுமந்தனர். கொண்டவெட்டுவான் இராணுவ முகாமும் இக்கிராமத்தைச் சூழ இருந்த முஸ்லீம் கிராமங்களும் தமிழர்களை இங்கிருந்து அகற்றிவிடவேண்டுமென்ற திடமானமுடிவுடன் செயற்பட்டனர். 1990ம் ஆண்டு, ஆனி மாதமும், ஆடிமாதமும் இனி மேல் அங்கே தமிழ் மக்கள் வாழவோ, காலடிவைக்கவோ முடியாதென்ற நிலையை உருவாக்கியது. ஆனிமாதம் 20ம் திகதி வீரமுனை, வளத்தாப்பிட்டிய, வீரஞ்சோலைக் கிராமங்கள் சுற்றிவளைக்கப்பட்டன. கொண்ட வெட்டுவான் இராணுவமுகாமிலிருந்து வந்த இராணுவத்தினரும் அவர்களோடு இணைந்துவந்த முஸ்லீம் காடையர்களும் மக்களெல்லோரையும் வீரமுனைக் கோயிலடிக்கு செல்லுமாறு கட்டளையிட்டனர்.

ஒருசில நாட்களின்முன் கல்முனையில் தமிழர்கள் கொல்லப்பட்டதையறிந்திருந்த மக்கள் அச்சத்துடன் ஆலயத்தில் ஒன்று கூடினர். ஆலயத்தில் வைத்தே கொல்வதற்குரியவர்களை தெரிவு செய்தார்கள். தட்டிக்கேட்க யாருமில்லை. முதற்கட்டமாக ஐம்பத்தியாறு ஆண்கள் தெரிவு செய்து எடுக்கப்பட்டனர். மரணக் குழிநோக்கி அவர்கள் தள்ளிக் கொல்லப்பட்டார்கள். கட்டிய மனைவிமாரும்,
பெற்ற தாய்மாரும் கதறி அழுதார்கள். கையெடுத்துக் கும்பிட்டார்கள். தாலிப்பிச்சை கேட்டு காலடியில் விழுந்தார்கள். கொலை வேறியோடு வந்தவர்கள் எக்காளமிட்டுச் சிரித்தார்கள். எங்கள் மக்களின் கண்ணீரும், வேண்டுதலும் அவர்களுக்கு கேளிக்கையாக மாறியது.

சம்மாந்துறை மலைக்காட்டிற்குள் தீ பற்றி எரிந்தது. முப்பத்தியேழுபேரையும் சுட்டுச்சுட்டு நெருப்புக்குள் தூக்கி வீசினார்கள். இராணுவத்தினரின் இச்செயலினை சுற்றிநின்ற முஸ்லீம் காடையர் கைதட்டி மகிழ்ந்தார்கள். எமது மக்களின் வாழ்வும், வளமும் பற்றி எரிந்தது. வாய்விட்டுச் சொல்ல முடியாத எங்கழுறவுகளுக்காக குரல்கொடுக்க யாரும் இருக்கவில்லை.

காலையில் கைதுசெய்து சென்றவர்களை சுட்டுப் பொசுக்கியபோதும் இராணுவத்தினரின் கொலைப்பசி மாறவில்லை. ஒரு வாரம்கூட மறையவில்லை. 29ம் திகதி மீண்டும் கைது. 

எச்சஞ் சொச்சமாயிருந்த ஆண்களில் ஐம்பத்தியாறுபேரை துப்பாக்கிமுனையில் தள்ளிச்சென்றார்கள். கொண்டைவெட்டுவானில் பெரு நெருப் பெரிந்தது. சுட்டுச்சுட்டு நெருப்புக்குள் எறியப்பட்டார்கள். சொல்லியழ வார்த்தைகளின்றி கையில் தூக்கிய பொருட்களோடு காரைதீவிற்குத் தப்பியோடினார்கள். காரைதீவுப் பாடசாலை அகதிமுகாமாகியது. சொந்த மண்ணிலேயே எமது மக்கள் அகதியாக்கப்பட்டார்கள். அகதி வாழ்வோடு விட்டிருந்தால் கூடப் பரவாயில்லை. அகதிமுகாமையும் கொலை முகமாக சிங்கள இராணுவத்தினர் மாற்றினார்கள்.

தமிழ் மாணவர்களின் கல்விக்கூடம் கொலைக்  கூடமாக்கப்பட்டது. ஆட்டுப்பண்ணைகளில் இறச்சிக்குத் தெரிவாகிய கிடாப்போல அகதிமுகாமில் வைத்து கொலை செய்வதற்குரிய ஆண்களை தெரிந்தெடுத்தார்கள். இம்முறை காரைதீவு விசேட அதிரடிப் படையினர் தங்கள் கைவரிசையினைக் காட்டினார்கள். ஒரு மாதங்கூட மறையவில்லை, ஆடிமாதம் 4ம் திகதி காரைதீவு
அகதிமுகாமில் அழுகுரல் ஓங்கி ஒலித்தது. முதல்த் தெரிவில் பன்னிரெண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டனர். ஓரிருநாள் கழித்து படை முகாமுக்குச் சென்ற தாய்மாருக்கு படையினர் கொடுத்த பதில் விசித்திரமானது. 'உங்கட ஆக்கள் நாங்க கொண்டுவரல்ல, ஆக்கள் இனம் தெரியாதவர்களால் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று பதிவு செய்துவிட்டு கச்சேரியில காசு எடுங்க'.

பாடசாலையிலிருந்த அகதிமுகாமுக்குள் மீண்டும் 10ம் திகதி காலையில் விசேட அதிரடிப்படையினர் புகுந்தனர். பதினொரு ஆண்கள் பிடிக்கப்பட்டனர். எஞ்சியிருந்த ஆண்கள் இவ்வளவுதான். எச்சசொச்சமின்றி எல்லோரையுமே கொண்டுபோய் சுட்டுவிட்டு எரித்தார்கள். வீரமுனைக்கிராமத்து மக்கள் எங்கிருந்தாலும் அவர்களைக்கொன்றொழித்து விடுவதென்று சிங்களப்படையினர் முடிவெடுத்து விட்டனர்.

1990ம் ஆண்டு, ஆடிமாதம் கணவன்மாரைப் பறி கொடுத்த துயரோடு காரைதீவு அகதிமுகாமிலிருந்து தமது கிராமத்துக்கு திரும்பினார்கள். யாரைப் பறிகொடுக்கக் கூடாதென்று காரைதீவுக்கு ஓடினார்களோ அவர்களைக் காரைதீவில் பறிகொடுத்துவிட்டதால் இனிமேல் எது நடந்தால்தான் என்ன என்ற விரக்தியோடு திரும்பினார்கள். வரும் வழியில் மல்வத்தை இராணுவ முகாமிலிருந்த இராணுவத்தினர் தமது கொலைப்பசியையும் தீர்க்க விரும்பினர். நடந்துவந்தவர்களில் எட்டுப்பேரைப் பிடித்திழுத்துச் சென்றனர். பசிதீரும் வரை மாறி மாறி குதறினார்கள். கடைசி மூச்சு அடங்கும் வரை மிருகத்தனமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார்கள். பிணமாகிப்போனதும் கிண்டிப் புதைத்தார்கள்.

26ம் திகதி கொண்டவெட்டுவான் படைமுகாமிலிருந்து வந்த படையினர் மல்வத்தை, வீரமுனை, கலைதிபுரம், புதுநகர், கிராமங்களிலிருந்து எட்டுப்பேரை கைதுசெய்து சென்றார்கள். இன்றுவரை அவர்களின் கதையில்லை, மரண அத்தாட்சிக்கு இராணுவத்தினர்
கிராமசேவகர்களுக்கு அனுமதி வழங்கியபோதுதான் முடிந்துபோன இவர்களின் கதையும் தெரியவந்தது.

ஆனிமாதம் ஆரம்பித்த இனஅழிப்பு ஆடி மாதமும் தொடர்ந்து ஆவணிமாதத்தில் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஆவணி மாதம் 8ம் திகதி சிங்களப் படையினருடன் இணைந்துவந்த சிங்கள ஊர்காவற்படையினரும், முஸ்லீம் ஊர் காவற்ப்படையினரும், எங்களாலும் தமிழர்களைக் கொல்லமுடியுமென்பதைக் காட்டினார்கள். ஓடி ஒழிந்துவாழ்ந்த ஆண்களில் எட்டுப்பேரினைக் கைதுசெய்து கண்டதுண்டமாக வெட்டிக் கிணற்றில் போட்டார்கள். வீரமுனையிலோ, வளத்தாப்பிட்டியிலோ, அல்லது மல்வத்தையிலோ, இனிமேல் வாழமுடியாது எனக்கருதிய எமது மக்கள் மண்டூருக்குச்சென்று வாழவிரும்பி கையில் தூக்கிய பொருட்களோடு நடந்தார்கள். 11ம் திகதி சவளைக்கடை இராணுவ முகாமில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். வீதியில் முகாமுக்கு முன்னால் வைத்தே பதினெட்டுப்பேரை வெட்டிக்கொன்றார்கள். தப்பி ஓடியமக்கள் மீண்டும் தங்கள் கிராமத்துக்கே வந்து சேர்ந்தனர். சவளைக்கடை இராணுவத்தினரும் தமிழர்களைக் கொல்வதில் தாங்களும் சளைத்தவாகளல்ல என்பதைக் காட்டினார்கள்.

"புதைகுழிகளைத் தோண்டட்டும். அதற்குப் பின்னர் சிறு வயதில் நாங்கள் ஆயுதம் தூக்க வேண்டிவந்ததற்கான தீர்ப்பை சட்டப் புத்தகத்தில் தேடட்டும்' என அந்தப் போராளி நீதிக்கான போரின் பக்கமொன்றை புரட்டி வைத்தான்."

அனாதைகளாய் ஆதரவின்றி ஓடிவந்த மக்களை கொண்டவெட்டுவான் படையினர் விட்டு வைக்கவில்லை, 12ம் திகதியே இக்கிராமங்களுக்குள் புகுந்தார்கள். முஸ்லீம் காடையர்களும், துணைக்கு வந்தனர். வீடுகள் தீயிடப்பட்டன. சொத்துக்கள் சூறையாடப்பட்டன, எரியும் நெருப்பில் உயிருடனேயே எமது உறவுகள் தூக்கி வீசப்பட்டனர். தப்பி ஓடியவர்கள் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகினர். இருபத்தைந்துபேர் இக் கொடிய கொலைவலைக்குள் சிக்கினர்.

04. சிவஞானம் கணேசன் வீரமுனை

20.06.1990

05. தங்கராசா உதயசூரியன் வீரமுனை

20.06.1990

06.நாகலிங்கம் தியாகராசா வீரமுனை

20.06.1990

07. கந்தவனம் ஆறுமுகம் வீரமுனை

20.06.1990

08. அழகையா சாமித்தம்பி வீரமுனை

20.06.1990

09. கதிரேசப்பிள்ளை சந்திரசேகர் மல்வத்தை

20.06.1990

10. அம்பாரக்குட்டி தியாகராஜா புதுநகர்

20.06.1990

11. பாண்டியன் முனியாண்டி- புது வளத்தாப்பிட்டி

20.06.1990

12. சாமித்தம்பி சுப்பிரமணியம் வீரமுனை

20.06.1990

13. செல்லையர் அசோகன் வீரமுனை

20.06.1990

14. P.நந்தசிறி வளத்தாப்பிட்டி

20.06.1990

15. சிவசம்பு தேவராசா வீரமுனை

20.06.1990

16. சின்னத்தம்பி அண்ணாதாசன் மல்வத்தை

20.06.1990

17.மார்க்கண்டு சிவானந்தன் வீரமுனை

20.06.1990

18. கந்தவனம் சோமசுந்தரம் வீரச்சோலை

20.06.1990

19. கந்தவனம் குமார் வீரச்சோலை

20.06.1990

20. வைரமுத்து சிவம் வீரமுனை

20.06.1990

21. செல்லையா கிருஸ்ணபிள்ளை வீரமுனை

20.06.1990

22. நாகலிங்கம் தவராசா வீரமுனை

20.06.1990

23. இராசலிங்கம் அழகையா வீரமுனை

20.06.1990

24. கந்தையா திசாநாயக்க வீரமுனை

20.06.1990

25. இளையதம்பி கணபதிப்பிள்ளை மல்வத்தை

20.06.1990

26. கந்தக்குட்டி தருமலிங்கம் வீரச்சோலை

20.06.1990

27. சின்னையா முத்தையா கணபதிபுரம்

20.06.1990

28. T.மாதவன் அம்பாறை

20.06.1990

29. நவசிவாயம் தேவராசா அம்பாறை

20.06.1990

30. A.சிவநேசன் அம்பாறை

20.06.1990

31. M.முத்துக்குமார் அம்பாறை

20.06.1990

32. M.அருள்மணி அம்பாறை

20.06.1990

33.A.E.தேவதாசன் அம்பாறை

20.06.1990

34. S.மனோகரன் அம்பாறை

20.06.1990

35. A.A.சண்முகவேல் அம்பாறை

20.06.1990

36.N.சந்திரகுமார் அம்பாறை

20.06.1990

37. N.இராசன் அம்பாறை

20.06.1990

38. A.சித்திரவேல் கணபதிபுரம்

20.06.1990

39. A.கனகரெத்தினம் கணபதிபுரம்

20.06.1990

40 P.சுசிபன் வீரமுனை

20.06.1990

41. Y.பிரான்சிஸ் அம்பாறை

20.06.1990

42. Y.இராசதுரை மல்வத்தை

20.06.1990

43. K.அழகையா அம்பாறை

20.06.1990

44. A.பரமநாதன் கணபதிபுரம்

20.06.1990

45. E.யோகனாதன் கணபதிபுரம்

20.06.1990

46.K.ரவிச்சந்திரன் மல்வத்தை

20.06.1990

47. A.முருகேகசபிள்ளை வீரச்சோலை

20.06.1990

48. P.G.பியாந்தன் வீரச்சோலை

20.06.1990

49. தங்கராசா மனோகரன் வளத்தாபிட்டி

20.06.1990

50. செல்வன் சிவநாதன் கோரக்கர்கோயில்

20.06.1990

51. தம்பிப்பிள்ளை கந்தையா தமிழ் டிவிசன் சம்மாந்துறை

20.06.1990

52 கறுவல் தம்பி திருச்செல்வம் வீரமுனை

20.06.1990

53. முத்தலிங்கம் செல்லையா வீரச்சோலை

20.06.1990

54. பாலசுந்தரம் வீரமுனை

20.06.1990

55. முருகேசு உதயகுமார் மல்வத்தை

20.06.1990

இரண்டாவது தடவை புதைகுழியில் இடப்பட்டவர்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

01. சங்கரப்பிள்ளை வில்வராசா வீரமுனை

1990-06-29

02.கிருபானந்தம் அமிர்தலிங்கம் வீரமுனை

1990-06-29

03. வேலுப்பிள்ளை, திருச்செல்வம் வீரமுனை

1990-06-29

04. இராமநாதன்-வாணிதாசன் வீரமுனை

1990-06-29

05. கந்தசாமி-விஜயகுமார் வீரமுனை

1990-06-29

06. முருகேசபிள்ளை-பத்மநாதன் வீரமுனை

1990-06-29

07. சிந்தாத்துரை-செல்வராசா வீரமுனை

1990-06-29

08. சிந்தாத்துரை-சம்பந்தன் வீரமுனை

1990-06-29

09. வேலுப்பிள்ளை-கதிரமலை மல்வத்தை

1990-06-29

10. காத்தமுத்து-நாகேந்திரன் புதுமல்வத்தை

1990-06-29

11. பொன்னுச்சாமி- கணேசமூர்த்தி வீரமுனை

1990-06-29

12.பொன்னுச்சாமி-கந்தசாமி வீரமுனை

1990-06-29

13. மாசிலாமணி- வினாயகமூர்த்தி வீரமுனை

1990-06-29

14. திருநாவுக்கரசு-கணேசமூர்த்தி வீரமுனை

1990-06-29

15. கனகரெட்ணம்-யோகராசா வீரமுனை

1990-06-29

16.கந்தையா-நவரெட்ணம் வளத்தாப்பிட்டி

1990-06-29

17. கிருஸ்ணபிள்ளை-சிதம்பரமூர்த்தி வீரமுனை

1990-06-29

18. வினாயகமூர்த்தி-பாலு மல்வத்தை

1990-06-29

19. சிவனடியார் -ரவிச்சந்திரன் வீரமுனை

1990-06-29

20. தேவநாயகம்-மகேந்திரன் வளத்தாப்பிட்டி

1990-06-29

21. வேலுப்பிள்ளை-யோகராசா மல்வத்தை

1990-06-29

22. அழகையா-ரகுநாதன் வீரமுனை

1990-06-29

23. முருகேசு-பாஸ்கரன் புதுநகர்

1990-06-29

24. அழகையா-வீரசேனன் புதுநகர்

1990-06-29

25. வேலுப்பிள்ளை-தெய்வேந்திரன் புதுநகர்

1990-06-29

26. ஏகாம்பரம்-தருமலிங்கம் புதுநகர்

1990-06-29

27. சின்னத்தம்பி-வன்னியசிங்கம் புதுநகர்

1990-06-29

28. கந்தையா-கணேசமூர்த்தி வீரமுனை

1990-06-29

29. கணபதிப்பிள்ளை-பரசுராமன் மல்வத்தை

1990-06-29

30. சந்திரன்-அருளப்பன் வளத்தாப்பிட்டி

1990-06-29

31. முத்துலிங்கம்-பாலபாஸ்கரன் புதுநகர்

1990-06-29

32. சீனித்தம்பி-வேல்முருகு புதுநகர்

1990-06-29

33. மணியம்-சோமசுந்தரம் புதுநகர்

1990-06-29

34. வேலுப்பிள்ளை-சுதாகரன் புதுநகர்

1990-06-29

35. ஐயாத்துரை-கோவிந்தன வளத்தாப்பிட்டி

1990-06-29

36. பாலன்-கேதரன் கோரக்கோவில்

1990-06-29

37. சித்திரவேல்-பத்மநாதன் கோரக்கோவில்

1990-06-29

38. சீனி-தபசீலன் கோரக்கோவில்

1990-06-29

39. கணபதிப்பிள்ளை-சிவபாலன் வீரமுனை

1990-06-29

40. அரசரெட்ணம்-மகேந்திரன் கோரக்கோவில்

1990-06-29

41. மாணிக்கம்-ஜெகநாதன் மல்வத்தை

1990-06-29

42. வேலுப்பிள்ளை-சந்திரகுமார் மல்வத்தை

1990-06-29

43. சுப்பிரமணியம்-நடேஸ்வரன் மல்வத்தை

1990-06-29

44. காளிக்குட்டி-உலகநாதன் வீரமுனை

1990-06-29

45. சிவானந்தன்- பாலச்சந்திரன் வீரமுனை

1990-06-29

46. சிவானந்தன்-ரவிச்சந்திரன் வீரமுனை

1990-06-29

47. சிவானந்தன்-இந்திரன் வீரமுனை

1990-06-29

48. சித்தாத்துரை-தபராசா புதுநகர் மல்வத்தை

1990-06-29

49. சித்தாத்தரை-தேவராசா புதுநகர் மல்வத்தை

1990-06-29

50. சாமித்தம்பி-கணபதிப்பிள்ளை புதுநகர் மல்வத்தை

1990-06-29

51. கணபதிப்பிள்ளை-பொன்னுத்துரை புதுநகர் மல்வத்தை

1990-06-29

52.. சாமித்தம்பி-தங்கவேல் வீரமுனை

1990-06-29

53.மாணிக்கம்-முருகேசபிள்ளை வீரமுனை

1990-06-29

54. மார்க்கண்டு-யோகராசா கணபதிபுரம்,

1990-06-29

55. வேலுப்பிள்ளை-நாகேந்திரன் மல்வத்தை

1990-06-29

56. நல்லதம்பி-தவராசா வீரமுனை

1990-06-29

1990-07-04 இல் காரைதீவு விசேட அதிரடிப்படையினரால் கைதாகி கொலை செய்யப்பட்டவர்கள்.
~~~~~~~~~~~~~~~~~

01. பாவில்- சண்முகம் மல்வத்தை

1990-07-04

02. பொன்னையா-உதயகுமார் புதுநகரம்

1990-07-04

03. அழகையா-இராமச்சந்திரன் புதுநகரம்

1990-07-04

04. கிருஸ்ணப்பிள்ளை-மோகனராஜ் மல்வத்தை

1990-07-04

05. தம்பிப்பிள்ளை-இராசலிங்கம் வீரமுனை

1990-07-04

06. சொலமன் -சகாயநாதன் வீரமுனை

1990-07-04

07. மாணிக்கம்-பாலு தமிழ்டிவிசன் சம்மாந்துறை

1990-07-04

08. சங்கரப்பிள்ளை-அற்புதராசா

1990-07-04

09. ஐயாத்துரை-மகேஸ்வரன்

1990-07-04

10. பாண்டியன்-முனியாண்டி

1990-07-04

11. கந்தையா-தருமலிங்கம்

1990-07-04

12. கதிரவேல்-ராதிகாகிருஸ்னன்

1990-07-04

1990-07-10 இல் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டவர்கள் வர்கள்
~~~~~~~~~~~~~~~~~~
01. பாலன் மகேந்திரன் கோரக்கர் கோயில்

1990-07-10

02.சீனி ஜெயசீலன் கோரக்கர் கோயில்

1990-07-10

03.சீனி இந்திரன் கோரக்கர் கோயில்

1990-07-10

04.குமாரன் சின்னத்தம்பி கோரக்கர் கோயில்

1990-07-10

05.கணபதி சந்திரன் கோரக்கர் கோயில்

1990-07-10

06. கணபதி குகநாதன் கோரக்கர் கோயில்

1990-07-10

07.நல்லதம்பி விக்கினேஸ்வரன் வீரமுனை

1990-07-10

08. செல்லையா வடிவேல் வீரமுனை

1990-07-10

09. நல்லதம்பி வடிவேல் வீரமுனை

1990-07-10

10.கிருஸ்ணப்பிள்ளை, சுந்திரலிங்கம் மல்வத்தை

1990-07-10

11. சின்னத்தம்பி, குகதாஸ் கோரக்கர் கோயில்

1990-07-10

மல்வத்தை இராணுவத்தினரால் 1990-07-16 இல் கைது செய்யப்பட்டு தீயிலிடப்பட்ட பெண்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~
01.வைரமுத்து தெய்வானை புதுநகர்

1990-07-16

02. வைரமுத்து கற்பகம் புதுநகர்

1990-07-16

03. கிருஸ்ணப்பிள்ளை-விஜயகுமாரி புதுநகர்

1990-07-16

04. இளையதம்பி-சின்னப்பிள்ளை புதுநகர்

1990-07-16

05. கணபதிப்பிள்ளை-இராஜேஸ்வரி புதுநகர்

1990-07-16

06. சித்தாத்துரை வேவி புதுநகர்

1990-07-16

07. செல்லன் அரளம்மா புதுநகர்

1990-07-16

08. இளையதம்பி செல்லம்மா புதுநகர்

1990-07-16

1990-07-26 இல் கொண்டவட்டுவான் இராணுவத்தால் கொல்லப்பட்டவர்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~

01. சின்னத்தம்பி-திலகேஸ்வரி மல்வத்தை

1990-07-26

02. பொன்னம்பலம்-இராஜேந்திரன் கணபதிபுரம்

1990-07-26

03. மாசிலாமணி- செல்வரெட்டினம் கணபதிபுரம்

1990-07-26

04. தர்மலிங்கம்-பொன்னுத்துரை கணபதிபுரம்

1990-07-26

05. ஆறுமுகம்-கந்தசாமி வீரமுனை

1990-07-26

06.

வீரக்குட்டி- கிட்ணன் மல்வத்தை

1990-07-26

88

07. செல்லத்துரை-தர்மலிங்கம் புதுநகர்

1990-07-26

08. நடராசா-இளங்கோ மல்வத்தை

1990-07-26

1990.08.08 இல் கைது செய்யப்பட்டு ஊர்காவல்படை இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்கள்.
~~~~~~~~~~~~~~~~~~

01. சின்னத்துரை-காளிக்குட்டி வீரமுனை

1990-08-08

02. சதாசிவம்-புவனேந்திரன் வீரமுனை

1990-08-08

03.

காத்தமுத்து-சண்முகநாதன் வீரமுனை

1990-08-08

04. கதிராமத்தம்பி-இராசையா, புதுநகர்

1990-08-08

05. மருதுரிஸ்-செல்வராசா, வீரமுனை

1990-08-08

06. கிருஸ்ணப்பிள்ளை-கனகசூரியம் வீரமுனை

1990-08-08

07. கந்தவனம்-கந்தசாமி,N,2 வீரமுனை

1990-08-08

08. கணபதிப்பிள்ளை-சண்முகம் புதுநகர்

1990-08-08

1990.08.11 இல் வீரமுனையில் இருந்து மண்டூர் சென்றபோது சவளக்கடை இராணுவத்தினரால் வெட்டிக்கொல்லப்பட்டவர்கள்
~~~~~~~~~~~~~~~~~~

01. க.மாரிமுத்து வளத்தாப்பிட்டி

1990-08-11

02. மார்க்கண்டு-தங்கவேல் மல்வத்தை

1990-08-11

03. செல்லையா-சோமசுந்தரம் வீரமுனை

1990-08-11

04. வேல்முருகு-முத்து வீரமுனை

1990-08-11

05. க.கறுவல்தம்பி மல்வத்தை

1990-08-11

06. மாசிலாமணி-தருமலிங்கம் வீரமுனை

1990-08-11

07. இராமக்குட்டி-பொன்னம்மா வீரமுனை

1990-08-11

08. அருணாசலம்-இராசரெட்ணம் மல்வத்தை

1990-08-11

09. கதிர்காமத்தம்பி-கருணாகரன் மல்வத்தை

1990-08-11

01. கதிரவேல்-இராஜேந்திரன் வீரமுனை

1990-08-11

02. அருணாசலம்- இராசரெட்ணம் மல்வத்தை

1990-08-11

03. தங்கநேசம்-வேலுப்பிள்ளை சவளக்கடை

1990-08-11

04. வேலுப்பிள்ளை-காசியானந்தன் சவளக்கடை

1990-08-11

05. பத்மநாதன்-வினாயகமூர்த்தி சவளக்கடை

1990-08-11

06.நாகலிங்கம்-மாரிமுத்து சவளக்கடை

1990-08-11

07. பொன்னம்மபலம் இராசமணி வீரமுனை

1990-08-11

08. கனகசபாபதி-இளங்கோ வீரமுனை

1990-08-11

09. அழகையா-சிவா வீரமுனை

1990-08-11

1990-08-12 அன்று வீரமுனை அகதிகள்க முகாமில் வைத்து ஆயுதமேந்திய முஸ்லீம்களால் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~
01. முத்துலிங்கம்-பரமேஸ்வரி வீரமுனை 

02. முருகுப்பிள்ளை-தங்கரெத்தினம் வீரமுனை 

03. கணபதிப்பிள்ளை சிவலிங்கம் வீரமுனை 

04. இராசையா-சுபாசினி புதுநகரம்

05. இராசையா-பரமேஸ்வரி புதுநகரம்

06. முருகுப்பிள்ளை-தங்கராசா புதுநகரம்

07. தம்பிமுத்து-தயாபரன் புதுநகரம்

08. முருகுப்பிள்ளை-ஞானம்மா கணபதிபுரம்

09. யோகராசா-கிருபானந்தினி புதுநகரம்

10. கணபதிப்பிள்ளை-சண்முகநாதன் புதுநகரம்

11. கணபதிப்பிள்ளை-புஸ்பலதா புதுநகரம்

12. கந்தையா-கணபதிப்பிள்ளை புதுநகரம்

13. அருணாசலம்-சின்னப்பிள்ளை புதுநகரம்

14. குணரெட்ணம்- சிவகௌரி வளத்தாப்பிட்டி

15. தங்கராசா-ராகினி புதுநகரம்

16. வீரபாண்டியன்-யமுனா மல்வத்தை

17. கணபதிப்பிள்ளை-தவராசா வீரமுனை

18. சீனித்தம்பி-மாரிமுத்து வளத்தாப்பிட்டி

19. ரவி-தில்லையம்மா வளத்தாப்பிட்டி

20. அருளப்பா இந்துருஜன் வளத்தாப்பிட்டி

21. ஆறுமுகம்-கலா புதுநகரம்

22. அரசரெட்ணம் வீரமுனை வள்ளியம்மை

23. இராமன் - வீரமுனை

24. வள்ளியம்மை - மல்வத்தை

25. பி.மாரியான் வீரச்சோலை

26. கந்தக்குட்டி-பாக்கியராசா மல்லிகைத்தீவு

1990-08-15

27. அரசரெத்தினம்-கதிரமலை மல்லிகைத்தீவு

1990-08-15

28. சாமித்தம்பி,குணசீலன் மல்லிகைத்தீவு

1990-08-15

29. திருநாவுக்கரசு-புஸ்பராசா வீரமுனை

1990-08-15

30. நல்லதம்பி-கோபால் வீரமுனை

1990-08-15

அகதிமுகாமில் 1990-08-12 காயப்பட்டு அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து கடத்திச்செல்லப்பட்டு கொல்லப்பட்டவர்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~
01. தம்பிமுத்து சிந்தாத்துரை 90-08-12 வீரமுனை (கோயில் தலைவர்.)

02. கந்தையா-நடராசா மல்வத்தை 90-08-12 மல்வத்தை

03. வல்லிபுரம் - கந்தசாமி வள்ளுவர்புரம் மல்வத்தை

மிகப்பெரும் படுகொலைகள் தவிர்ந்த, பல்வேறு இடங்களில் வெவ்வேறு காலப்பகுதிகளில் 'காணாமல் போனோர்' என்ற தலைப்பிற்குப் பின்னால் சிங்கள இனவெறி இராணுவத்தாலும், தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட சகோதர இனமான முஸ்லீம் இனத்தில் பிறந்த ஈனப்பிறவிகளான முஸ்லீம் காடையர் களாலும் கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்டு புதைக் கப்பட்ட தமிழ் மக்களின் பெயர் விபரங்கள் சில இங்கே தரப்படுகின்றன.

1) வேலப்பன் ரமேசன், 1ம் குறிச்சி, ஏறாவூர்

2)கந்தசாமி -தணிகாசலம், கண்ணகியம்மன் கோவில் வீதி, சந்திவெளி.

3) கணேசமூர்த்தி நாகராசா, தயிர்வாடி வீதி, 4ம் குறிச்சி, ஏறாவூர்.

4) அந்தோனி யோகராஜா, ஏறாவூர்

5) அந்தோனி சிவரதன், ஏறாவூர்,

6) கணேசமூர்த்தி தச்சனாமூர்த்தி, ஏறாவூர்.

7) கறுவல்தம்பி தர்மகுலசிங்கம், ஏறாவூர்

8) சுளகண்ணன் குமார் வண்ட் றோட் எருவில்.

9) பாலசுப்பிரமணியம் சேவர் 4ம் குறிச்சி, ஏறாவூர்.

10) மாணிக்கப்போடி பாஸ்கரன், ஏறாவூர்.

11) பத்மநாதன் சிவலோகேஸ்வரன், 72 தாமோதரம் வீதி, ஏறாவூர்.

12) பெரியதம்பி நடராஜ், எருவில்.

13) ரவிசங்கர், டிபெரியதம்பிரான் கோவில் வீதி, ஏறாவூர்-5

14) வரதராஜா கந்தசாமி ஏறாவூர்-4 பிள்ளையார் கோவில் றோட்,

15) சுதாகரன் சுப்பிரமணியம் புகையிரத நிலைய வீதி, ஏறாவூர்-4

16) முத்துவடிவேல் கந்தையா, ஏறாவூர்-4

17) செல்லத்துரை புத்திசிகாமணி, ஏறாவூர்-4

18) சந்திரமோகன் சிவசுப்பிரமணியம், தாமோதரம் வீதி ஏறாவூர்-4

19) சுகுமார் உதயகுமார், ஏறாவூர்-4

20) நாகமணி மகேந்திரன், வண்ணாத்தியாறு

21) செல்லையா பாலகிருஸ்னன், வண்ணாத்தியாறு

22) செல்லப்பா உதயகுமார், வண்ணாத்தியாறு

23) கந்தப்போடி பாலன், வண்ணாத்தியாறு

24) கந்தப்போடி புவனசிங்கம், வண்ணாத்தியாறு

25) சாமித்தம்பி யோகராஜ், வண்ணாத்தியாறு

26) கந்தக்குட்டி சித்திரவேல், வண்ணாத்தியாறு

27) நாகமணி பஞ்சாச்சரம், வண்ணாத்தியாறு

28) நாகமணி சிவமூர்த்தி, வண்ணாத்தியாறு

29) மைலிப்போடி உமாறஞ்சன், வண்ணாத்தியாறு

30) நாகமணி தங்கவடிவேல், வண்ணாத்தியாறு

31) பொன்னுத்துரை சாமித்தம்பி, வண்ணாத்தியாறு

32) விஸ்வநாதன் ராஜகுமார், வண்ணாத்தியாறு

33) கந்தையா முருகமூர்த்தி, வண்ணாத்தியாறு

34) வேலுப்பிள்ளை ஜெயகுமார், வண்ணாத்தியாறு

35) தச்சனாமூர்த்தி கணேசமூர்த்தி, எல்லைவீதி ஏறாவூர்

36) கந்தசாமி ரவீந்திரன், பன்சால றோட் ஏறாவூர்-4

37) நேசராசா செல்லத்தம்பி

38) சின்னப்பு யோகராஜ், ஆலயடி றோட், வந்தாறுமூலை

39) கந்தப்பன் சிவலிங்கம், செட்டிவீதி வந்தாறுமூலை

40) சின்னத்துரை காளிக்குட்டி, காளிவோவில் வீதி ஆறுமுகத்தான் குடியிருப்பு, செங்கலடி.

41) வேதநாயகம் கணபதிப்பிள்ளை, புதுச்சேனை, வடமுனை

42) செல்வராஜா ஜீவராஜ், பிரதான வீதி, மயிலம்பாவெளி, தன்னாமுனை

43) நாகமுத்து ரவீந்திரன், உமா றோட், கொம்மாதுறை

44) மயிலிப்போடி உமாறஞ்சன், வண்ணாத்தியாறு

45) கந்தக்குட்டி சித்திரவேல், வண்ணாத்தியாறு

46) சாமித்தம்பி யோகராஜ், வண்ணாத்தியாறு

47) நாகமணி புண்ணியமூர்த்தி, வண்ணாத்தியாறு

48) செல்லப்பா உதயகுமார், வண்ணாத்தியாறு

49) கந்தப்போடி பாலன், வண்ணாத்தியாறு

50) கந்தப்போடி புவனசிங்கம், வண்ணாத்தியாறு

51) சதாசிவம் பூபாலபிள்ளை, மரப்பாலம் கரடியனாறு

52) மயிலிப்போடி தெய்வநாயகம், மயிலம்பாவெளி

53) கதிர்காமத்தம்பி கருணாகரன், சித்தாண்டிக்கிராமம்.

54) சின்னையா பொன்னுத்துரை, சித்தாண்டி-7

55) பெரியான் சிவலிங்கம், சித்தாண்டிக்கிராமம்

56) சித்திரவேல் சிவகுமார், சித்தாண்டிக்கிராமம்

57) கோணேசபிள்ளை சத்தியராஜ், சித்தாண்டிக்கிராமம்

58) தர்மலிங்கம் ராஜேஸ்வரன், சித்தாண்டிக்கிராமம்

59) பாஸ்கரன் மாசிலாமணி, ஆறுமுகத்தான்குடியிருப்பு

60) சுந்தரமூர்த்தி ராஜேந்திரன், ராஜன்,ராஜபுரம் மரப்பாலம்

61) செல்வராஜ் சோதிநாதன், ஆறுமுகத்தான்குடியிருப்பு

62) நல்லையா புவனேந்திரன், சித்தாண்டி

63) துரைரெட்ணம் ஜெயதேவன், பிரதானவீதி செங்கலடி

64) தங்கராஜா மாணிக்கவேல், சோவிங் சென்ரர் செங்கலடி

65) முருகுப்பிள்ளை யோகலிங்கம், செங்கலடி

66) துரைரெத்தினம் விவேகுமார், செங்கலடி

67) துரைரெத்தினம விவேகானந்தன், செங்கலடி

68) அந்தோனி யோகராஜா, கழுவன்கேணி செங்கலடி

69) வேலிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை, நெடுலி லேன் துன்னாலை, கரவெட்டி வடக்கு

70) W.M. விஜயதுங்கோலை, மட்டக்களப்பு

71) சுப்பிரமணியம் குமாரசிங்கம், வீசி றோட் செங்கலடி

72) எம். ராஜேந்திரன், மட்டக்களப்பு

73) வைரமுத்து தயாசீலன், 195, பிரதானவீதி ஏறாவூர்-4

74) W.M. தர்மதாச, மட்டக்களப்பு

75) வீரகதிப்பிள்ளை தங்கராஜா, மட்டக்களப்பு

76) கணபதிப்பிள்ளை பாக்கியராசா, களுவன்கேணி

77) செல்லத்தம்பி, மட்டக்களப்பு

78) சந்தானம் சீனித்தம்பி, மட்டக்களப்பு

79) சச்சிதானந்தன் வரதராஜா, வந்தாறுமூலை, கிரான்கோவில்

80) செல்வரெத்தினம் வரதமுத்து, மட்டக்களப்பு

81) பாலசுப்பிரமணியம் வரதமுத்து, மட்டக்களப்பு

82) காந்தி இளங்கோ, எல்லைவீதி ஏறாவூர்-4

83) சாமித்தம்பி கந்தசாமி, வந்தாறுமூலை

84) தர்மதுரை கணபதிப்பிள்ளை, மட்டக்களப்பு

85) கந்தையா பகவத்சிங், கிருஸ்னன் கோவில்வீதி வ. மூலை

86) சோமசுந்தரம் அரசரெட்ணம், மட்டக்களப்பு

87) இக்னேசியஸ் நாகேல், ஏறாவூர்

88) கந்தராசா ராமலிங்கம், மட்டக்களப்பு

89) W.M மதுரை ரத்னபால் மட்டக்களப்பு

90) செல்லத்தம்பி நாகராசா பள்ளச்சேனை, கரடியனாறு

91) கிருஸ்னபிள்ளை விஜயகுமாரி. மட்டக்களப்பு

92) O.M. முத்தையா, மட்டக்களப்பு

93) வைரமுத்து முத்தையா, மட்டக்களப்பு

94) ராசரெத்தினம் நாகலிங்கம், மட்டக்களப்பு

95) தவராசா நாகலிங்கம், மட்டக்களப்பு

96) சின்னத்துரை கிருஸ்னமூர்த்தி, 10ம் கட்டை கொம்மாதுறை

97) கந்தையா கந்தக்குட்டி, மட்டக்களப்பு

98) P.S கண்ணன்

99) ராசையா கந்தசாமி, புதுக்குளம் செங்கலடி

100) கார்த்திகேசு துரைராஜா, செங்கலடி

101) கணபதிப்பிள்ளை பெரியேஸ்வரன், வந்தாறுமூலை

102) நாகேந்திரன் கணேசமூர்த்தி, வந்தாறுமூலை

103) தர்மலிங்கம் சக்திவேல், பெரியபுல்லுமலை

104) செல்லையா, மட்டக்களப்பு

105) கணபதிப்பிள்ளை ராஜேஸ்வரன், செங்கலடி

106) கிருஸ்னபிள்ளை சிவனேசன், குமாரவேலியார்கிராமம்

107) நல்லையா தேவேந்திரன் செங்கலடி

108) A.S. அரசகோன், 18 பிரதானவீதி செங்கலடி

109) மென்டிஸ் தர்மதாஸ, பிரதானவீதி செங்கலடி

110) சுரேஸ்குமார் குமாரவேல், செங்கலடி

III) இளயதம்பி கணபதிப்பிள்ளை, மொறக்கொட்டான்சேனை

112) தங்கையா யேசுதாசன், மட்டக்களப்பு

113) நடராஜ் ஜோஜ் ஸ்ரான்லி, பிரதானவீதி வந்தாறுமூலை

114) கந்தையா ராஜரெட்ணம், கோப்பாவெளி

115) முருகப்பிள்ளை சண்முகநாதன், கோப்பாவெளி

116) சுப்பையா ராஜேந்திரன், கோப்பாவெளி

115) N.N. பொன்னுசாமி, கோப்பாவெளி

116) நடேசன் வெங்கடாசலம், உறுகாமம்

117) நேசராஜா சந்திரமோகன், உறுகாமம்

118) கதிர்காமத்தம்பி சிவநாதன், உறுகாமம்

119) ஆறுமுகம் கனகரெட்ணம், உறுகாமம்

120) சாமித்தம்பி நேசராஜ், உறுகாமம்

121) கணபதிப்பிள்ளை கிருஸ்னகுமார், பாலையூர் செங்கலடி

122) சுவாரிஸ், பிரதானவீதி செங்கலடி

123) செல்லத்துரை சுசித்தம்பி, ஏ.ஜி.ஏ றோட் செங்கலடி

124) நாகராஜா மகேந்திரன், ஏறாவூர்-4

125) கிரிதயன் கணபதிப்பிள்ளை, பாலையூர் செங்கலடி

126) அமிர்தலிங்கம் வேலுப்பிள்ளை, பெரியபுல்லுமலை

127) விஜயரெட்ணம் ராமலிங்கம், ராஜபுரம் கரடியனாறு

128) சுப்பையா சந்திரபோஸ், ஏறாவூர்-5 செங்கலடி

129) ராஜ்குமார் பொன்னுத்துரை, ஆலையடிவீதி வந்தாறுமூலை

130) குமாரவேல் சுரேஸ்குமார், தபாலகவீதி செங்கலடி

131) ஆர்.தம்பிமுத்து, வந்தாறுமூலை

132) சாமுவேல் யோகேந்திரன், வந்தாறுமூலை

133) வேலன் சிங்கராஜ், வந்தாறுமூலை

134) பாலக்காய்போடி செங்கமலம், கொடுவாமடு

135) தட்சனாமூர்த்தி கணேசமூர்த்தி, எல்லைவீதி ஏறாவூர்

136) ரவீந்திரன் கந்தசாமி, பன்சாலவீதி ஏறாவூர்-4

137) மாணிக்கப்போடி பாஸ்கரன், ஏறாவூர்

138) புத்திசிகாமணி செல்லத்துரை, ஏறாவூர்-4

139) றமேசன் வேலப்பன், ஏறாவூர்-1

140) சீவர் பாலசுப்பிரமணியம், தியட்டர்வீதி ஏறாவூர்-4

141) அந்தோனி சிறிவரதன், ஏறாவூர்

142) தணிகாசலம் கந்தசாமி, சந்திவெளி

143) கறுவல்தம்பி தர்மகுலசிங்கம், ஏறாவூர்

144) கணேசமூர்த்தி தச்சனாமூர்த்தி, ஏறாவூர்

145) அந்தோனி யோகராஜ், ஏறாவூர்

146) சிவசுப்பிரமணியம் சந்திரமோகன், தாமோதரம்வீதி ஏறாவூர்

147) நாகராஜா கணேசமூர்த்தி, தயிர்வாடிவீதி ஏறாவூர்

148) விஜயகுமார் காசுமதி, சித்தாண்டி

149) நடராஜா பெரியதம்பி, ஏறாவூர்

150) சுகுமார் உதயகுமர், ஏறாவூர்-4

151) பூபாலபிள்ளை கிருஸ்னபிள்ளை, அகதிமுகாம் மொறக்கொட்டான்சேனை

152) மோகன் நாகம்மை, மாவடிவேம்பு

153) ஆர். சங்கா, ஏறாவூர்-5

154) கந்தசாமி வரதராஜா, பிள்ளையார்வீதி ஏறாவூர்-4

155) சுதாகரன் சுப்பிரமணியம், றெயில்வேவீதி ஏறாவூர்-4

156) கந்தையா முத்துவடிவேல், ஏறாவூர்-4

157) சிறிவேல் சரவணமுத்து, சந்திவெளி

158) துரைரெட்ணம் ஜெயதேவன், பிரதானவீதி செங்கலடி

159) தங்கராஜா மாணிக்கவேல், செங்கலடி

160) செல்வராஜா ஜீவராஜ் மயிலம்பாவெளி

161) கதிர்காமத்தம்பி கருனாகரன், சந்திவெளி கிராமம்

162) சோமசுந்தரம் அரசரெட்ணம், மட்டக்களப்பு

163) கந்தையா பகவத்சிங்.

எதிரியின் தமிழினவழிப்பின் கொடுங்கரங்களுக்குள் சிக்கி படுகொலைக்கு ஆளான அனைத்து தாய்த்தமிழ் தொப்புள்கொடி உறவுகளுக்கும் வீரவணக்கம் 🙏

-மெளனப் புதைகுழிக்குள்

-மணலாறு விஜயன்

தொகுப்பு : தமிழரசன்அப்துல்காதர் 
12/8/2026.