Friday, 6 March 2026

ஈரான்,மொசாடெக்கும், ஷா ரிசா பெஹ்லவியும்.

1953 இல் CIA மற்றும் MI6 ஆல் ஈரானின் பிரதமர் முகமது மொசாடெக்கிற்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு நடக்கிறது.
தேசியவாதக் கொள்கை கொண்ட மொசாடெக்  ஈரானின் இயற்கை வளங்களை பிரிட்டிஷ் காலணி அரசு  சுரண்டுவதைத் தடுக்க ஈரானின் எண்ணெயை தேசியமயமாக்கினார்.

வின்ஸ்டன் சர்ச்சில் ஈரானிய எண்ணெயை பிரிட்டனுடையது என்று கருதினார். 

உலகம் முழுவதும் ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை பாதுகாக்கவெனவே 24 மணிநேரமும்  தூங்காமல் மனித சமுதாயத்திற்கு அற்பணிப்போடு பணி செய்து வரும்  அமெரிக்காவும்  இங்கிலாந்தும் மொசாடெக்கைத் தூக்கியெறிந்து விட்டு வாஷிங்டன்,மற்றும் லண்டனின் உத்தரவுகளை செயற்படுத்தும் அடிமையான மன்னர் ஷா முகம்மது ரிசா பெஹ்லவியை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டு வந்தன.

ரிசா பெஹ்லவி மூலம் ஜனநாயகத்திற்கு உயிர் கொடுத்த பிறகு, ஈரானின் எண்ணெய் மீண்டும் தனியார்மயமாக்கப்பட்டு 1954 இல் ஒரு புதிய எண்ணெய் கூட்டமைப்பு மூலம் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே பிரிக்கப்பட்டது. 40% பங்குகள் பிரிட்டிஷ் எண்ணெய் நிறுவனமான BPக்குச் சென்றன. 5 அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் கூட்டமைப்பில் குறிப்பிடத்தக்க பங்குகளைக் கொண்டிருந்தன. 

 ஈரானின் எண்ணெயைத் திருட மேற்கத்திய எண்ணெய் நிறுவனங்களுக்காக இரக்கமற்ற SAVAK (SAVAK stands for Sāzemān-e Ettelā'āt va Amniyat-e Kešvar (Persian: سازمان اطلاعات و امنیت کشور), translated as the "Intelligence and Security Organization of the Country". It was the feared secret police, domestic security, and intelligence service of Iran under Shah Mohammad Reza Pahlavi, operational from 1957 until the 1979 Iranian Revolution.)
ஆல் திணிக்கப்பட்ட பஹ்லவியின் சர்வாதிகாரம், ஈரானிய மக்களிடையே பெரும் கோபத்தைத் தூண்டியது, அது 1979 இல் புரட்சிக்கு வழிவகுத்தது, இது ஈரான் இஸ்லாமியக் குடியரசை உருவாக்கியது. 

இன்றைய ஈரான் மீதான போரின் வேர்கள் 1953 இல் ஈரானிய ஜனநாயகத்தின் மீது MI6 மற்றும் CIA நடத்திய தாக்குதல் ஆகும்... ஆனால் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஜனநாயகத்தையும் 'சுதந்திரத்தையும்' முன்னேற்றுவதற்காக இந்த l பேரழிவு தரும் போரை நடத்துவதாகக் கூறுகின்றன. 

அவர்கள் எப்போதுமே பொய்யர்கள் என்பதை வரலாறு காட்டுகிறது.

படம் 1 பிரதமர் மும்மது மொசாடெக்
படம் 2 மன்னர் ஷா ரிசா பஹ்லவி.

No comments:

Post a Comment