வட நிலத்தவனே
~~~~~~~~~~
இராமன் தொடுத்த
கணையால்.
இராவணன் மீது பதிந்த
துளைகளால்.
ஈயிருக்க இடமின்றியவன் உயிர் போனதெனப் புனைந்தான் கம்பன்.
தொடுத்த கவிகளில் அத்துமீறி-நீ இங்கு வந்து ஈந்துவிட்ட ஆட்லெறி ஷெல்களாலே எத்தனை பிணமிங்கு குவிந்தது ஈயிருக்க இடமின்றி அவை சிதைந்து போனது கண்டாய் !
வட நிலத்தவனே !
இந்தியனே !
வாலிவதை செய்த கதையை நீதியென்று கூறு நிலையால், போலியாகிப் போனதையா மேதினியில் நீகூறும் நிலை.
சூர்ப்பனகை மூக்கறுக்க துணிந்த வீரர் வர்க்கமன்றோ - நீங்கள் வந்து இங்கு செய்த வதைகள் எந்தக் கவி புனைவான் நீதியென்று ?
வாலி, இராவணன் என்போர் பட்டியல் போட்ட நீங்கள் போலியான மேடைப் பேச்சினிலே வெட்டி வீழ்த்தினீர் தென்னவரை .
இதுகாலவரை தென்னவன் இறந்த கதைதானே உண்டு? இனியாவது மாறும் நிலை சற்று வட மன்னவன் சாய்ந்த நிலைகண்டு.
No comments:
Post a Comment