கவிதை
(1)
இது அமைதிக்காலம் ஆகாயத்தில் விமானங்கள் போய்வருகின்றன.
ஆனால் குண்டுகளைப் பொழிவதில்லை 'ஹெலி' கள் இறங்கிவந்து பேசிவிட்டுப் போகின்றன.
தினமும் இரவும் வருகின்றது. ஆனால் பீரங்கிகள் முழங்குவதில்லை.
"கிரேக்கர்களிடமிருந்து அன்பளிப்பாயினும் அவதானமாயிருங்கள்" சிங்களவரிடமிருந்து சமாதானமாயினும் அவதானமாயிருங்கள்.
வரலாற்றுத் தெருவில் கிழித்தெறியப்பட்ட உடன்படிக்கைகள் காற்றுக்குப் பறந்து கொண்டிருக்கின்றன. மூன்றாவது ஈழப்போர் வரை பத்திரிகைகளில் "சமாதானம்" வந்து கொண்டிருக்கும்!
கவிதை
(2)
தொட்டுக் கொள்ளும் தூரத்தில் தொடமுடியாது தவிக்கும் காதலரின் கரங்களாய் தவித்துக் கிடக்கிறது.
கேரதீவு - சங்குப்பிட்டிப் பாதை இமைப் பொழுதின் கடப்பிற்கு கால்கடுக்கும் காத்திருப்பு இரவும் பகலும்; பனியும் மழையும் வெயிலும்; எல்லாமும் ஒன்றாகி வழியும் காலம்.
-சிவஞானம் ஜயசங்கர்
No comments:
Post a Comment