Sunday, 15 March 2026

திலீபம் -காசி ஆனந்தன்

செந்தமிழ் ஈழத்தின் விடுதலை தாருங்கள்! திலீபனின் பசி அடங்கும்! எந்தநாளும் எம்மை ஏமாற்றாதீர்... மீண்டும் இரத்தத்தின் கதை தொடங்கும்!

தித்திக்கும் எங்கள் தாய்மண்ணிலே தினம் தினம் சிங்களவர் குடியேற்றமா? எத்தனை புலிகளின் உயிரை எடுத்தீர்கள் இன்னமும் வெறியாட்டமா?

தழும்புகள் சுமந்தநம் புலிகள் பிறர்காலைத் தாங்கவோ போர் தொடுத்தார்?

கொழும்புதான் தமிழ்மண்ணை ஆளுமாம் அட எங்கள் குழந்தைகள் இதற்கோ செத்தார்? 

கொடுதலை எனும்நிலை வந்தாலும் புலிகள் தம் கொள்கையை விடுவாரோடா? எடு இதை எனச் சொன்னால் புலிகள் பிறர்வீசும் எலும்பைப் போய்த் தொடுவாரோடா?

செந்தமிழ் ஈழத்தின் விடுதலை தாருங்கள்! திலீபனின் பசி அடங்கும்! எந்நாளும் எம்மை ஏமாற்றாதீர்... மீண்டும் இரத்தத்தின் கதை தொடங்கும்!

-காசிஆனந்தன்

No comments:

Post a Comment