தமிழினத்தின் தாகம் சுமந்து, தாவணி போடும் கனவுகள் துறந்து, போர்க்களம் ஆடிய பெண்புலி ஒன்று, களத்திலே மடிந்து காவியமானாள்.
வேலிகள் சுற்றிய எல்லைகள் மீறி, வேங்கைகள் அணியில் ஏறிய நிலவு.
நிலவாய் இருந்தவள் நெருப்பாய் எழுந்தாள்,
நெருப்பாய் நின்று நெருப்பிலே எரிந்தாள்.
கப்டன் சுந்தரி கண்ணுக்குள் நிற்கிறாள்.
மேடையில் நின்று முழங்கிய கோலம், ஆயுதம் ஏந்திய அக்கினிக் கோலம். எல்லாம் எல்லாம் எதிரே தெரிகிறது.
-மாலினி
No comments:
Post a Comment