Sunday, 12 January 2014

மாவீரம்

முற்றுகைக்குள் மீண்டும் சென்ற பண்டிதர் இன்னும் திரும்பிவரவில்லை. பண்டிதரின் வீரமரணம் உறுதிப்படுத்தப்பட்டு அது ஊடகங்டகளுக்கு வெளியிடுவதற்காக அமைப்பின் கடிதத்தலைப்புடன் அடிக்கப்பட்டு —– ன் கையொப்பத்துடன் தயாராகின்றது. எல்லோர் முகங்களிலும் இப்படியான ஒரு சோகத்தை இதற்கு முதல் கண்டதேயில்லை. களத்தில் இருந்து தொலைத்தொடர்பில் தளபதி கிட்டு அழுதது இதற்கு முன் எப்போதும் கேட்டதும் இல்லை. தலைவரின் கண்கள் கலங்கி முகத்தில் இழப்பு ஒன்றின் ஆழமான கோடுகள். ஆம். எல்லோரையும்விட தலைவர் மட்டுமே பண்டிதரின் அர்ப்பணிப்பின் முழுமையும், விடுதலையின் மேலான அசைக்க முடியாத உறுதியையும், எல்லாவற்றிலும் மேலான அவனின் நேர்மையையும் அவர் மட்டுமே அதிகம் அறிவார். ஏனென்றால் பண்டிதர் தலைவரின் வளர்ப்பு. தலைவரின் அத்தனை இயல்புகளும் அவனில் தெரியும். அவனின் 29வது நினைவுவருடம் (09.01.85) இது. அவனின் நினைவுக்குறிப்புகள் அவனின் நினைவுடன்…….. விடுதலைக்கான தேடலாகவே மானிடவரலாறு நகர்ந்துகொண்டிருக்கிறது. நின்றும், நகர்ந்தும், அதி வேகமான பாய்ச்சலுடனும், தேங்கியும், பின்னகர்ந்தும் இந்த விடுதலைக்கான வரலாற்று தேடல் இன்னும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. ஆனால் வரலாறே பிரமித்து நிற்பதாக சிலரின் வரலாறுகள் அமைந்துவிடுகின்றன. அத்தனை அர்ப்பணமும், ஈகமும், தியாகமும் அவர்களின் வரலாறு முழுதும் நிறைந்தே கிடக்கும். அப்படியான ஒரு வரலாற்றுக்கு உரியவனாகவே கப்டன் பண்டிதர் நிற்கிறான். மேலும் படிக்க : சுட்டியை அழுத்துங்கள். http://ltn247.com/?p=16774

No comments:

Post a Comment