Friday, 17 January 2014

இராபர்ட் பயஸ் ; மறுக்கப்படும் நீதி

சிறை வைக்கப்பட்ட நீதி தேவதை ! (பாகம் : 1) என் அன்பு தமிழ் உறவுகளே ராசீவ் கொலை வழக்கில் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு 23 வருடமாக அநியாய தண்டனை அனுபவித்து வரும் நிரபராதி தமிழர்களின் நானும் ஒருவன் . என் பெயர் ராபர்ட் பயஸ் , எமது தாயகத்தில் எதிரியின் சொல்லொனா அடக்குமுறையின் காரணமாக உயிர்வாழும் ஆசையின் காரணமாக எம் தொப்புள்கொடி உறவுகளான தமிழகத்தை நோக்கி வந்ததற்கு எனக்கு கிடைத்த பரிசுதான் . ராசீவ் காந்தியுடைய வழக்கில் குற்றவாளி என்ற அடையாளமும் அதன் மூலம் முடிவேயில்லா நீண்ட நெடிய இந்த சிறைக்கொடுமையும். தமிழகத்தை நோக்கி எந்த நம்பிக்கையில் வந்தேனோ அதே நம்பிக்கையில் எமது தமிழக உறவுகள் எமக்கு நீதி பெற்று தரும் என்ற நம்பிக்கையிலேயே இவ்வளவு நாட்களையும் நகர்த்தி வந்துள்ளேன் ! இப்போதும் அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே தளராமல் இருக்கிறேன் அந்த அடிப்படையில் எம் தமிழக உறவுகளுக்கும் இந்த உலகிற்கும் இந்த வழக்கு பற்றிய சில உண்மைகளையும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க மனமின்றி நிரபராதிகளான எங்களையே குற்றவாளிகளாக உலகிற்கு காட்டச்செய்த அயோக்கியத்தனத்தை பற்றி தெரியப்படுத்துவது என் கடமையாக நினைக்கிறேன். ராஜீவ் கொலை வழக்கு விசாரணை மிகவும் பரபரப்பாக தொடங்கினாலும்.விசாரணை நேர்மையாகவும்,உண்மையாகவும் நடைபெற்றதா என்றால் இல்லை. கிடைத்தவரைக்கும் இலாபம் என்ற அடிப்படையில் சிபிஐயால் வடிவமைக்கப்பட்ட கதைபக்கங்களில் கதாபாத்திரங்களாக நாங்கள் இட்டு நிரப்பப்பட்டோம் என்பது தான் உண்மை ! விசாரணை தொடங்கியதில் இருந்து தமிழர்களை குற்றவாளிகளாக்கும் எண்ணத்துடன் ஒரே கோணத்தில் தான் நடைபெற்றது. சிபிஐ இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன் அவர்கள் எந்த அரசியல் வாதிகளையும் இந்தவழக்கில் சேர்க்க கூடாதென்பதில் தெளிவாக இருந்தார் காரணம் அப்படி யாரையாவது இணைத்து கொண்டால் வழக்கு பலவீனபடுமென்பதால் இறுதிவரை எச்சரிக்கையாகயிருந்தார். இந்த வழக்கில் மர்மங்களையோ ஆதாரங்களையோ ஆராயும் கண்ணோட்டம் இன்றி அவசர அவசரமாக அதுவும் ரகசியமாக இந்த வழக்கு நடத்தி முடிக்கப்பட்டதிலிருந்தே இதன் உண்மைநிலை புரியும். *முக்கியமாக இராசீவுடன் இறந்தவர்களில் ஒருவர் கூட காங்கிரசு கட்சியின் பொறுப்பில் இருந்தவர்கள் இல்லையே ஏன் ? *இராசீவுடன் இறந்தவர்களில் அவரின் மெய்க்காப்பாளர்கள் ஒருவர் கூட இல்லையே ஏன் ? * இராசீவ் காந்திக்கு தணு சந்தனமாலை போட அனுமதி வாங்கித் தந்த மரகதம் சந்திரசேகரை குற்றவாளி பட்டியலில் சேர்த்து விசாரிக்காதது ஏன் ? *மனிதவெடிகுண்டு தனுவை காங்கிரசு தலைவர் மரகதம் சந்திரசேகரின் மகள் லதா பிரியக்குமார் நிகழ்ச்சி அன்று இராசீவுக்கு அருகில் அழைத்துச் சென்றுள்ளார் . இச்சம்பவத்தை மறைத்தது ஏன் ? * மே 21 ஆம் திகதி இராசீவுடன் பேசவிருந்த திட்டத்தை செயலலிதா ஏன் ரத்து செய்தார் ? அவரை பொதுக்கூட்டத்திற்கு வரவிடாமல் தடுத்தது எது ? *இராசீவ் கொல்லப்பட்டவுடன் காணாமல் போன வாழப்பாடி ராமமூர்த்தி 30 நிமிடங்களுக்கு பிறகுதான் இராசீவின் சடலத்தை பார்க்க வந்தார் ( ஆதாரம் : இல்லஸ்டிரேட்டட் வீக்லி 15/06/1991 இதழ் ) இடையில் இவர் எங்கு சென்றார் ? யார் யாரை பத்திரமாக வழியனுப்பி வைத்தார் ? * இராசீவ் படுகொலைக்கு ஜிகே .மூப்பனார் தான் காரணம் என்று . செல்வி செயலலிதா குற்றம் சாட்டினாரே ? (தினத்தந்தி : 18/04/1996 இதழ்) இது குறித்து ஏன் விசாரிக்கப்படவில்லை ? * இராசீவ் கொல்லப்பட்ட போது உடனிருந்து காப்பாற்றாமல் மக்கள் தலைவர் மூப்பனார் அவர்கள் பீடி பிடிக்க சென்றிருந்தேன் என்பது நம்புபடியானதா ? உண்மையில் அவர் ஏன் அந்த இடத்தில் இல்லாமல் இருந்தார் ? என்பது ஏன் விசாரிக்கப்படவில்லை ? *தா.பாண்டியன் சென்னையில் இருந்து திருப்பெரும்புதூர் வரை ஒரே காரில் இராசீவுடன் பயணம் செய்தார். அதே காரில் கடைசியாக இராசீவை பேட்டிக்கண்ட இரண்டு பத்திரிகையாளர்கள் யார் ? என்பதை சிபிஐ விசாரித்ததா ? இராசீவ் அப்பத்திரிக்கையாளர்களுடன் என்ன பேசினார் என தனக்கு தெரியாது என தா. பாண்டியன் சொல்வது மூலம் எதை மறைக்கப் பார்க்கின்றார் ? இவ்வாறு அரசியல் வாதிகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் திட்டமிட்டே நிராகரிக்கப்பட்டது. இந்த வழக்கில் சம்மந்த படுத்தப்பட்ட அனைவரும் நிரபராதிகளாக இருந்தும் அவர்கள் சொல்லும் எதையும் நம்புவதற்க்கு தயாராக இருக்கவில்லை.காரணம்,ஊடகங்களும்,அரசியல் வாதிகளும் இதை ஆராய்வதற்க்கு பதில் எம்மை மிகப்பெரிய கொலைகாரராக சித்தரித்தார்கள். காரணம் ! இறந்தவர் முன்னாள் பிரதமர் இவரை கொலை செய்து விட்டார்கள் என்ற கோபமும்,ஆத்திரமுமே தவிர இதை யார் ? எதற்கு? செய்தார்கள் என்பதை அறிய முற்படவில்லை.சிபிஐ போலிசார் சொல்லும் அனைத்தும் உண்மையென அனைவருமே நம்பினார்கள்.எப்படியாவது குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே தவிர உண்மையில் இவர்கள் சம்மந்தப்பட்டவர்களா ? என அறிந்துக் கொள்ள யாரும் முன்வரவில்லை. -ராபர்ட் பயஸ் அண்ணா . -தொடரும்

No comments:

Post a Comment