Thursday, 16 January 2014

முள்ளிவாய்க்கால் முடிவல்ல ! ஆரம்பம் !

முள்ளிவாய்க்கால் முடிவல்ல " ஆரம்பம் !

//////////////////////////////

நீதி கேட்டு யாசித்து நிற்கும் தமிழினம் !

கொல்லி வைக்க ஆளின்றி கொத்துக் கொத்தாக
கடலில் மிதக்கும் சடலங்கள். "

எம் சகோதரிகள் மார்பரிந்து ' எம்மழழைகள் மீது பாஸ்பரஸ் குண்டு சொறிந்து '
எம்மவர்களை ஆடுமாடுகளை விடக் கேடா ,,
முள்வேலி முகாம்களில் அடைத்து வைத்துள்ள அநீதம் !

வெள்ளைக் கொடியில் இரத்தத்தை தோய்த்து '
ஆயிரக்கணக்கில்
எம்மினத்தை
கொன்று குவித்து
ஆங்காரமாக சிங்களம் '
கூச்சலிட்ட நாள்
மே 18/ 2009,

வரும் நாட்கள் சோகங்களை
மட்டும்
சுமப்பதற்கல்ல ?
தியாகங்கள் வரலாற்றில்
வீணானதில்லை '

வீரத்திற்கு வேகம் கொடுத்து '
விடுதலையை மீட்டெடுப்போம் !
நாம் தமிழர் என்று காட்டி '
தமீழீழத்தை பெறுவோம் மீட்டி !

எமக்காக எந்தக் கடவுளும்
வரமாட்டார் - இனி
என உணர்ந்து '
எமக்காக நாம்தான் போராடவேண்டும்
என்ற உணர்வை
மேலெடுப்போம் "

வாழ்ந்து மறைந்த கூட்டமன்று '
ஈழத்தை ஆளவந்த கூட்டமென்று
பாரறிய செய்திடுவோம் !
பறையறிவித்தே !

எதிர் காலத்தை முன்னெடுக்க
கடந்தகால
நிகழ்கால வினைகளை
அவதானிப்போம் !

தனிமரம் நாமல்ல'
பலமரம் தோப்பானால் '
வரமாக கிடைக்கும்
தமிழீழம் "
என்பதனை
நெஞ்சில் கொள்வோம் !

ஆதவனை கைக்கொண்டு
மறைக்க இயலாது
அலைகடலை சுவர் கட்டி
தடுக்கவியலாது '
எரிமலை குழம்பாக
பாய்வதற்கு
நெஞ்சில் நெருப்பேந்தி
வருவோம் !

சிதறிக்கிடக்கும் சடலங்களும் '
கொட்டிக் கொடுத்த குருதியும் "
இழப்பென்று நினையாமல்-
எமது மீள் எழுச்சிக்கு உரமென்று சொல்வோம் !

முள்ளிவாய்க்கால் எமது போராட்டத்தின்
முடிவல்ல '
ஆரம்பம் !
நந்திக்கடல் அழிவின் சின்னமன்று
எமது நம்பிக்கையின்
அடையாளம் !

தமிழீழத்தாயகத்
தாகத்தோடு 
அலைந்துக் கொண்டிருக்கும்
ஆயிரமாயிரம் மாவீரர்களின்
ஆத்மாக்கள் "
அதை தான்  பண்ணாக இசைத்து பவனி வருகின்றனர்
நந்திக் கடலோரமாய் !!!!

No comments:

Post a Comment