Saturday, 18 January 2014

நிரபராதி தமிழர்களை விடுதலைச்செய் !

நீதி நியாயம் புண்ணாக்கு கடையில் விற்றால் சொல்லுங்கள் ! காசு கொடுத்தும் வாங்கமாட்டேன் கடனாய் கொடுத்தால் சொல்லுங்கள் ! ஆண்டுகள் இருபத்திமூன்று ஆகிவிட்டது இன்று ; அநீதி இழைக்கப்பட்ட தமிழர்களின் கோவணமானது ? நீதி தேவதையின் வெள்ளைப்புடவை ! பேரறிவு முருகன் சாந்தனும் ,, இராபர்ட் பயஸ் உடன் நால்வரும் தீராத இந்தியவஞ்சகத்தால் தீயாக எரிகின்றார் சிறைகளிலே ' பாராத முகத்துடன் பாவித்தமிழர்கள் நாம் ஏறி முகம் பார்க்காமல் இருப்பதுவும் இனி எத்துணை நாள் ? கூடிவரும் காலம் குறைவாக உள்ளதனால் நீதி வேண்டி நாமும் நன்றாய் கூடியொழுகுவோம் ஒன்றாய்! தூங்கியதும் போதும் அதனால் துன்பக்கடல் மீது நிதமும் நீந்தியதும் போதும் தூங்காமல் சிறைகளுக்குள் இருக்கின்றார் எம்தமிழர் விடிவை நோக்கி ! அய்யா பொழிலனும் அவருடன் தோழர்களும் நன்றாக முடிவெடுத்து நடத்துகின்றார் பேரணியொன்று ! இரண்டாம் மாதத்தின் ஐந்தாம் திகதியில் தாய்த்தமிழ் தலைநகராம் சென்னைப்பட்டணத்தில் காலம் மூன்றுமணி மாலை நேரத்தில். புலியென படையாக புறப்பட்டு வாரீர் எம் உயிர் அண்ணன்களில் உயிர் காக்க வாரீர். தமிழரின் விடுதலையே தமிழின விடுதலை அதை மீட்டியெடுத்திடவே மனம் விரும்பி வாரீர் !

No comments:

Post a Comment