Wednesday, 15 January 2014

கேணல் கிட்டு வீரவணக்கம்

விடுதலை தீ என்றும்
அணையாது !
இருட்டு விடியும் வரை - அது
ஓயாது !
நெருப்பாய் உயர்ந்து
நீராய் உருகி வங்கக்கடலில்- நீவீர்
கரைந்தாலும்
வஞ்சகம் எம் நெஞ்சில்
குறையாது !

அடுத்துக் கெடுத்து கொழுத்து
வாழும் மாந்தர் வாழும் பூமிதனில்'
தம்மை அழித்துக் கொண்டு இனமானம் காத்த அழியாத் தியாகத் தீபங்களே !

கடமை உணர்ந்தோம் ' கடிதினில் விரைவோம் கலங்காதிருப்பீர் எம் மாவீரர்களே !
களம் பல காண தாய் புலி வழி பார்த்து காத்திருப்போம் மனம் சோராமலே !

தமிழினம் காப்போம் ! தாயகம் காப்போம் ! தன்னலம் கருதா
உவப்புடனே !
தமிழர் சங்கடம் தீர்க்க சடுதியில் அமைப்போம் தமிழீழம் தன்னை தரணியிலே !

வீரவணக்கம் கிட்டண்ணை
வீரவணக்கம் குட்டிசிறியண்ணை
வீரவணக்கம் மாவீரர்களே !

No comments:

Post a Comment