Sunday, 12 January 2014

முதுகில் குத்தும் இந்தியா

சந்திரிகா அரசும் விடுதலைப்புலிகளும் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது . புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்றன் பாலசிங்கம் அண்ணை சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் . அவருடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சமாதானப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வசதியாகவும் நீண்ட தூரப்பயணத்தைத் தவிர்க்கவும் தேசியத்தலைவருடன் கலந்தாலோசிக்கவும் ஏற்ற வகையில் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதிக்கவும், சமாதானப் பேச்சுவார்த்தையை இந்தியாவில் நடத்த அனுமதிக்கவும் புலிகள் ஜனவரி 2002 ல் இந்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் சமாதானப்பேச்சுவார்த்தையை இந்தியாவில் நடத்துவதற்கும் பாலா அண்ணை இந்தியாவில் தங்கியிருக்கவும் அப்போது இருந்த பாரதியஜனதா கட்சி அரசு அனுமதியளிக்க மறுத்துவிட்டது . கிளிநொச்சியில் 2002 ஆம் ஆண்டு ஊடகவியளாலர் மாநாடு நடந்தபோதும் பாலா அண்ணை இந்தியாவில் சிறுநீரகச் சிகிற்சை செய்து கொள்ள அனுமதிக் கேட்டார் அப்போதும் பாஜக அரசு அனுமதி மறுத்துவிட்டது . ஒரு நோயாளிக்கு டயாலிசஸ் சிகிற்சை செய்யவே அனுமதிக்காத பாஜக அரசு . தமிழீழத்தை பெற்றுத் தரும் என்று சிலர் கிளம்பி உள்ளனர். கேப்பையில நெய்வடியுதுனா " கேட்கிறவங்க கேனைகளா ? என்ன ?

No comments:

Post a Comment