Tuesday, 14 January 2014

சிந்தனைகள்

பாபருக்கும் மசூதியில்லை இராமருக்கும் கோவில் இல்லை ! //////////// 1949 டிசம்பர் 22ல் நள்ளிரவில் திடீரென்று இராமர் சீதையின் சிலைகளை பாபர்மசூதி பள்ளிக்குள் வைத்தவுடன் ,,,, அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேரு உடனே ,, அன்றைய உ.பி முதல்வர் கோவிந்த் பல்லவபந்துக்கு சிலைகளை அகற்ற உத்தரவிட்டார். முதலமைச்சர் உடனே மாநில சீப்-செகரட்டரிக்கு உத்தரவிட்டார். அவரோ ஏ.சூ.லாகிரி எனும் ஐ.ஜி க்கு உத்தரவிட்டார். ஐ.ஜி.உடனே மாவட்ட நீதிபதி பைசாபாத் (கலெக்டர்) நய்யாருக்கு உத்தரவிட . நய்யார் சிலைகளை அகற்ற மறுத்துவிட்டார். நேரு என்ன செய்திருக்கவேண்டும் ? நய்யாரை நீக்கிவிட்டு வேறு ஆளை நியமித்திருக்க வேண்டும் ! சிலைகளை அப்புறப்படுத்தி விட்டு முஸ்லிம்களின் தெழுகைக்கு வழிவிட்டிருக்க வேண்டும்.ஆனால் அதை நேரு செய்யவில்லை. அவர் செய்ய தவறியதால்தான் வருடாவருடம் இப்போதும் அக்டோபர் நவம்பர் டிசம்பர் மாதங்களில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களும் இந்துக்களும் பலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 42 ஆண்டுகளில் ( இது 91 ல் பழநிபாபா பேசியது) சில இலட்சம் மக்களின் உயிர் போனதுதான் நாம் கண்ட பலன். நேருவின் இயலாமைக்கு இன்றுவரை பல உயிர்களை இஸ்லாமிய சமூகம் பலி கொடுத்துள்ளது. நேருவின் பேரன் ராஜீவோ , இராமாயணத்தை டி.வி. யில் காட்டி இராம மோகத்தை ஊட்டிவருகிறான். அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் , மூலவழக்கு நிலுவையில் உள்ளபோதே. அரசு அலகாபாத் சிவில் நீதிமன்றம் தந்த இடைக்கால உத்திரவு சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றத்தில் உத்திரவு வாங்கி திறந்த கதவுகளை பூட்டியாவது வைத்திருக்க வேண்டும் ! நாட்டில் மதக்கலவரத்திற்கு காரணமான பிரச்சினையை தீர்க்க சிறப்பு கோர்ட் நியமித்து . முப்பது நாளில் விசாரணையை முடித்து இருக்க வேண்டும் ! ஆனால் அப்படி செய்யாமல் . வேண்டுமென்றே வகுப்புவாதிகளுக்கு பணிந்து போனதன் விளைவு இன்றும் விஸ்வரூபம் எடுத்து ஆடுகிறது. ராம்சிலா பூஜைகளை மேற்குவங்கம் தடைசெய்தது போல தடைசெய்ய தவறியது அடுத்த பெரும் தவறு. முன்பே எமர்ஜென்சியில் தடைசெய்யப்பட்ட ஆர் எஸ் எஸ் க்கு தடைநீக்கம் செய்தது அதைவிட இமாலயத் தவறு! இன்றுவரை பதினோறு முறை அமைச்சரவை அயோத்தி விவகாரத்திற்க்காக கூடி விவாதித்து ஒன்றும் செய்யவில்லை பல முறை தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூடியும் பலனில்லை. இன்றுவரை அதை வளரவிட்டு இன்று ஜெயலலிதா போன்ற ஒன்றும் தெரியாதவர்கள் கூட, தேசிய ஒருமைப்பாட்டுக் கூட்டத்தில் பேசுகிறார்கள். முஸ்லிம்கள் பெரும்பான்மை இந்துக்களை அனுசரித்துப் போகவேண்டும் என்று மடத்தனமாக கூறுகிறார்கள். ஜெயலலிதா பிறக்கும் முன்பே உள்ள பிரச்சினை இது. அதை எப்படி அணுக வேண்டும் என்று பொறுப்பில்லாமல் பேசுகிறார். ஜெயலலிதா எல்லாம் முஸ்லிம் உலகுக்கு அறிவுரை கூறும் அளவுக்கு முஸ்லிம்கள் முட்டாளாக்கப்பட்டு விட்டார்களா ? இஸ்லாமிய சட்டப்படி கண்டவனுடன் கண்டபடி வாழ்வது கசையடிக்கு உட்பட வேண்டிய கட்டாயச்சட்டத்தின் குற்றவாளிகூட முஸ்லிம்களுக்கு புத்தி சொல்லும் நிலை வந்துவிட்டது ! ///////////// இன்னும் நூறாண்டுகாலம் காத்திருக்கட்டும் . இராமனுக்கும் கோவிலில்லை , பாபருக்கும் மசூதியில்லை. இந்திய ஆளும் வர்க்கங்களால் அயோத்திப் பிரச்சினை . ஓட்டு என்ற மீனைப் பிடிக்க போடும் தூண்டில் என்பது பெரும்பான்மை இந்துக்களுக்கும் தெரியவில்லை. ஆனால் இவர்களால் உருவாக்கப்பட்ட ஆரிய தேச இராமனுக்கும் , ஆப்கானிஸ்தான் பாபருக்குமான அயோத்திப் பிரச்சினையால் பிற்படுத்தப்பட்ட , ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின இந்தியப் பெண்களின் தாலிகள் அறுந்து . விதவைகள் ஆவதுதான் இராமர் கோவிலால் விளைந்த பலன் !, //////

No comments:

Post a Comment