Monday, 13 January 2014

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !

சற்றுமுன் அண்ணன் ஒருவர் கதைத்தார் அவர் கடற்புலியாக இருந்தவர் தொடர்பில் வந்ததும் "புத்தாண்டு வாழ்த்துக்கள் " என்று சொன்னேன். அவர் பதில் சொல்லி விட்டு சொன்னார். இப்போது எந்த நல்ல நாளுக்கும் யாரிடமும் வாழ்த்து சொல்வதில்லை எம்மினமே மிகப்பெரும் துயரொன்றில் தத்தளிக்கும் போது வாழ்த்துக்கள் உள்ளத்தில் இருந்து வருவதில்லை வெறும் வாயில் இருந்துதான் வருகிறதென்று ! உண்மைதான் புழலிலும், பூந்தமல்லியிலும்,திருச்சி,செங்கல்பட்டு வேலூர் என தமிழக கொட்டடிகளிலும் சிங்கள பேரினவாதிகளின் சிறைகளிலும் முள்கம்பி முகாம்களிலும் இன்னும் இந்தோனேசியா துபாய் என உலகம் முழுதும் சிறைகள் தமிழர்களுக்காகவே உருவாக்கியதை போல என் இனம் இன்று வதைப்படுகிறது. வருகின்ற புத்தாண்டில் தமிழ்த்தாயின் பிள்ளைகள் உறுதியுடனும் வேகத்துடனும் விவேகத்துடனும் வீரியத்துடனும் எமது இனத்தின் விடுதலைக்காக களம் காண வேண்டும் அடுத்த புத்தாண்டு எம் இனத்தின் விடிவாக இருக்கும் படி கடுமையாக எமது கடமைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் " என் அன்புத் தமிழ்ச் சொந்தங்களுக்கு இனிய புத்தாண்டு,பொங்கள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன. இனத்தின் விடுதலையே ! இறுதி இலக்கு ! வீண்டு எழுவோம் ! மீண்டும் வருவோம் ! வாழ்க தமிழ் !

No comments:

Post a Comment