Wednesday, 15 January 2014
திருவள்ளுவர் தின வாழ்த்துகள்
திருக்குறள் தமிழர்க்கு கிடைக்கப் பெற்ற வரமான தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. இது அடிப்படையில் ஒரு ஒப்பரிய வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழும் புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழத் தேவையான மாறா அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்கும் பேரழகுடைய இலக்கியப் படைப்பு.
திருக்குறள் காலம்:
திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்படுகிறது. மறைமலை அடிகள் செய்த ஆராய்ச்சியின் பயனாய், தமிழ்நாட்டில் ஆண்டுகளைக் குறிக்க திருவள்ளுவர் ஆண்டு பயன்படுத்தப் படுகின்றது. திருவள்ளுவர் ஆண்டு என்பது கி.பி ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.
இன்று திருவள்ளுவர் பிறந்ததினம் அன்புச் சொந்தங்களுக்கு வாழ்த்துக்களுடன் !
வள்ளுவர் சம்பந்தமாக பல காலம் கிடக்கும் உள்ளக்கிடக்கையையும் வெளிப்படுத்துகிறேன் '
அய்யன் என்று அழைக்க அழகாக அடைமொழி கொடுத்த தமிழின தலீவரு ?
குமரிக்கடலில் அவருக்கு வைத்த சிலையின் நளினத்தைதான் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை !
Labels:
திருவள்ளுவர் தினம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment