Sunday, 12 January 2014

நந்திக்கடலோரத்தின் குரல் !

தமிழரசன் அப்துல் காதர் ஓயாமல் துரத்தும் குரல் அது ! கடந்து போன நாட்களில் கேட்டும்மிராத குரல் அது ! உயிரை நெருக்கி உடலை வதைக்கும் - ஓங்காரமாக வளர்ந்து ஒடுங்கிப் போகும் ஈனக்குரல் ! எரிந்து போன பிணத்தின் வாடையுடன் - அடிக்கடி ஒலிக்கும் அது ! பகலோ இரவோ ' அயர்ந்து சிறிது கண்மூடும் சமயங்களில் ; அரண்டு போய் விழிதிறக்கச் செய்யும் ' அந்தக் குரல் ! எப்போதும் இதுவரை கேட்டிராததால் அதுபோல் ; இதயம் தளர்ந்து இறக்கின்றேன் அடிக்கடி,. என்ன சொல்ல வருகிறது ? - என யூகிக்க முடியாமல் எனை வருத்தும் அழுகைக் குரல் ' அது நந்திக் கடலோரத்திலிருந்து வரும் அவலக்குரல் !

No comments:

Post a Comment