Sunday, 19 January 2014

இராபர்ட் பயஸ் விடுதலைக்கு விலங்கு ,2

நீதியைத்தேடி ! //////// 23 வருடங்களாக மறுக்கப்படும் நீதி - அண்ணன் இராபர்ட் பயஸ் பகுதி :2 சட்டத்தின் முன் சமம் என்று கூறப்படும் இந்தியாவில் செய்யாத குற்றத்திற்காக அதுவும் இறந்தது முன்னாள் பிரதமர் என்ற ஒரே காரணத்தை மட்டும் வைத்துக் கொண்டு தடா சட்டத்தின் கீழ் இவ்வழக்கில் எங்களுக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சாதாரண சட்டத்தின் கீழ் நடைபெறவில்லை.தடா எனும் கொடிய சட்டத்தின் கீழ் தான் விசாரணை நடைபெற்றது.இந்த சட்டத்தின் கீழ் எமது கருத்துக்களை வெளியிடமுடியாது.கருத்து சுகந்திரம் கொஞ்சம் கூடகிடையாது . எனவே,சிபிஐ அதிகாரிகள் சொல்வதை அப்படியே ஏற்கப்பட்டது.இவர்கள்சொல்வதுதான் உண்மை. என நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் வெளியுலகம் அறியாதபடிக்கு இரகசியமாக அமைக்கப்பட்ட நீதிமன்றங்களில் இரகசியமாகவே அவசர அவசரமாக இவ்வழக்கு நடத்தி முடிக்கப்பட்டதிலிருந்து இந்த வழக்கின் உண்மைத் தன்மையை நீங்கள் அறிந்துக் கொள்ளலாம். தடா சட்டத்தின் கீழ் ஒப்புதல் வாக்கு மூலம் பெறுவதென்றால் கண்காணிப்பாளர் தான் பதிவு செய்யவேண்டும்.அதன்படி திரு.தியாகராஜன் அடித்து துன்புறுத்தி வாங்கிய பல வெற்று தாள்களில் தாங்களே திரை கதை வசனம் எழுதி கையெழுத்து போட சொன்னார்.இதுக்கு மறுக்க மீண்டும் அடித்தும் சித்திரவதைகள் செய்தும் எங்களிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினார்கள். சிபிஐ காவலில் இருந்த காலத்தில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும் போது நீதிமன்றத்தில் எதுவும் முறையிட கூடாதென்று மிரட்டிதான் அழைத்து போவார்கள் அதனால் போலிஸ் காவலில் எதுவும் சொல்லமுடியாத நிலையே. ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் நடைபெற்றது.நீதிமன்றமும் சிறையும் அருகில்தான் இருந்தது.ஒரு சுவர் தான் இடையில் அதிலேயே கதவு வைத்து அப்படியே நீதிமன்றம் வருவதற்கான ஏற்பாடுகள். நீதிமன்றம் பெரிதாக இருக்கும் நீதிபதி இருக்கும் இடத்தில் இருந்து முப்பது மீட்டருக்கு மேற்பட்ட தூரத்தில் நாம் இருப்பதற்க்கு கூண்டு கட்டி இருந்தார்கள்.ஒவ்வொருக்கும் ஒவ்வொரு கூண்டு போலிஸ் காவலில் இருக்கும் கூண்டைவிட மோசமானது.ஆரம்பத்தில் அதற்குள் போக சொன்னார்கள் நாம் மறுத்துவிட்டதால் அதற்கு முன்னால் உட்காரவைத்தார்கள். இதை ஏன் சொல்லுகிறேனென்றால் நாம் குற்றம் சாட்டப்பட்டுதான் இருந்தோம் குற்றவாளி கிடையாது.ஆனாலும் நீதிமன்றம் குற்றவாளியாகத்தான் பார்த்தது. போலிஸ் காவல் முடிந்து சிறைக்கு சென்றதும் . எழுத்து மூலம் ஒரு புகார் கடிதம் கொடுத்தோம் அதில் எங்களை அடித்து துன்புறுத்தி தான் ஒப்புதல் வாக்கு மூலம் பெற்றதாக புகார் எழுதி கொடுத்தோம் ஆனால் இதை பற்றி விசாரணை செய்யவில்லை.பின்னர்சிறையில் இதை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்தோம் அதன்பேரில் வழக்கு விசாரணையின் போது இதுசம்பந்தமாக விசாரிப்பதாக வாக்குறுதி கொடுத்ததின் பேரில் உண்ணாவிரதத்தை கைவிட்டோம். ஆனால் வழக்கு விசாரணையின் போது இதை பற்றி விசாரிக்கவில்லை என்பது குறிப்பித்தக்கது. -வலிகள் ' -தொடரும்-

No comments:

Post a Comment