Friday, 24 January 2014

மொழிப்போர் தியாகிகள் தினம்

மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் சனவரி 25" 1938-1965 ஆகிய ஆண்டுகளில் இந்தித் திணிப்பில் ஈடுபட்ட இந்திய அரசைக் கண்டித்து தீக்குளித்தும், நஞ்சுண்டும், இந்திய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டிலும் பலியான மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினம் தமிழகம் முழுவதும் இன்று(25-1-2014) கடைபிடிக்கப்படுகிறது. இந்தி மொழியை அரசு அலுவல் மொழியாகவும் , கட்டாய கல்வியாகவும் திணிக்க முற்பட்ட போது அதை எதிர்த்து போரடி உயிர் தியாகம் செய்தவர்கள் நினைவாக தமிழகம் கடைபிடித்து வருகிறது முதலாம் இந்தி எதிர்ப்பு போர்; பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியா அரசில் ,1938 ஆம் ஆண்டு  அன்றைய சென்னை மாகாணத்தில் முதல்முறையாக வெற்றிபெற்ற காங்கிரசுக் கட்சியின்  இராஜகோபாலாச்சாரி  தலைமையில் அமைந்த அரசு. பள்ளிகளில் இந்தி படிப்பதை கட்டாயமாக்கியது.  இதை எதிர்த்து நீதி கட்சியும் பெரியாரும் உண்ணாநோன்பு, மாநாடுகள், பேரணிகள் மற்றும் மறியல் போராட்டங்கள் நடத்தினர் பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர், இந்த போராட்டத்தை ஒடுக்கிய அரசு , போராட்ட காரர்களை கைது செய்தது. போராட்டக்காரர்களில் கைது செய்ய பட்டவர்களின் ஒருவர்  நடராசன் என்ற  இளைஞர் திசம்பர் 5, 1938 அன்று கைது செய்யப்பட்டார். காவல் துறையின் தாக்குதலால் காயமுற்று அவர் 30 திசம்பர், 1938 அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 15 சனவரி 1939 அன்று மரணமடைந்தார்.  இதே போல மற்றொரு போராட்ட காரர் ,13 பிப்ரவரி 1939 அன்று தாளமுத்து இந்துதியோசாபிகல் உயர்நிலைப்பள்ளியருகே மறியல் செய்ததாக பிறருடன் கைது செய்யப்பட்டார். அவரும் காவலில் இருக்கும்போது காவல் துறையின் தாக்குதலுக்கு உள்ளாகி 6 மார்ச் அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 11 மார்ச் அன்று மரணமடைந்தார். இவர்களின் இருவரின் மரணத்தால் பெரும் போராட்டங்கள் வெடித்தது , இவர்கள் இருவரும் தான் முதலில் மொழிக்காக உயிர் நீத்த தியாகிகள். இரண்டாம் கட்ட போராட்டம்  இந்தியா விடுதலை பெற்றபின்னர் காங்கிரசு தலமையிலான புதிய இந்திய அரசு இந்தியை பள்ளிகளில் கட்டாயமாக்க மாநிலங்களை வற்புறுத்தியது.அதன்படி சென்னை மாகாணத்தில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையிலான காங்கிரசு அரசு 1948ஆம் ஆண்டு கட்டாயமாக்கியது.  திராவிடர் கழகமும் பெரியாரும் போராட்டத்தை முன்னெடுத்தார் .இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு இம்முறை காங்கிரசில் இருந்த ம. பொ. சிவஞானம் மற்றும் திரு.வி.க தங்கள் முந்தைய இந்தி ஆதரவுநிலைக்கு மாறாக ஆதரவளித்தனர். போராட்ட விளைவாக பின்வாங்கிய அரசு ,இந்திப் பாடத்தை 1950-51 கல்வியாண்டிலிருந்து விருப்பப்பாடமாக மாற்றி விட்டது. இந்தி கற்கவிரும்பாத மாணவர்கள் இந்தி வகுப்புகளின் போது பிற செயல்பாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர். மூன்றாம் கட்ட போராட்டம். நேரு மே 1964ஆம் ஆண்டு மரணமடைந்ததைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி இந்தியப் பிரதமராக பதவியேற்றார். நடுவண் அரசு வேலைகளில் இந்திக்கு முதலிடம் தரப்படும், குடியியல் சேவை தேர்வுகளில் இந்தி கட்டாயமாக்கப்படும், பள்ளிகளில் இந்தி கட்டாயம் ஆக்கப்படும் , என உத்தரவு போட்டது  மத்திய அரசின் உத்தரவின் போக்கில்  7 மார்ச் 1964 அன்று, மாநில சட்டப்பேரவையில் முதல்வர் எம் .பக்தவத்சலம்  மும்மொழி திட்டத்தை (ஆங்கிலம், இந்தி, தமிழ்) பள்ளிகளில் கற்க முன்மொழிந்தார். மூன்று மொழிகளைப் படிக்க வேண்டிய கட்டாயம் என தீர்மானம் போட்டது . இந்தி எதிர்ப்பு மாணவர் குழுக்களையும் ஒருங்கிணைக்க"தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்பு சங்கம்" என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.அதன் அலுவலர்களாக தமிழகமெங்கிலும் உள்ள கல்லூரிகளின் மாணவர் சங்க தலைவர்கள் இருந்தனர். அவர்களில் சிலர்: பெ. சீனிவாசன், கா. காளிமுத்து, நா. காமராசன், பா. செயப்பிரகாசம், ரவிசந்திரன், திருப்பூர் சு. துரைசாமி, சேடப்பட்டி ஆர். முத்தையா, துரை முருகன், கே. ராஜா முகமது, நாவளவன், எம். நடராஜன் மற்றும் எல்.கணேசன். இவர்களால் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது , இத்தோடு இந்தியும் தமிழகத்தில் ஒழிந்தது , காங்கிரஸ் அரசும் ஒழிந்தது. இதை தொடர்ந்து மதுரை யில் மாணவர்களுக்கும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கும் நடந்த கலவரத்தில் , பலர் பலியானார்கள், இவர்களையும் முன் பலியான தாளமுத்து , நடராசன் போன்றவரின் நினைவாக இந்த நாளை மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் என அனுசரிக்கின்றோம். இந்தித் திணிப்புக்கு எதிரான மொழிப்போரில் உயிர் நீத்த தியாகிகள் தாளமுத்து, நடராஜன், தர்மாம்பாள், அரங்கநாதன் ,கீழப்பழூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் .மொழிப்போரில் இந்திய அரசின துப்பாக்கிச் சூட்டில் வீரமரணமடைந்தசிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் இராசேந்திரன் ,சிவலிங்கம்  போன்றவர்களை நாமும் நினைவு கூறுவோம். வாழ்க தமிழ் ! வெல்க தமிழ் ! 

No comments:

Post a Comment