முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கொக்கிளாய் இராணுவ முகாம் மீது விடுதலைப்புலி வீரர்கள் நடத்திய உக்கிரமான, வெற்றிகரமான தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமான சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். தமிழீழ மண்ணில் நிலைகொண்டிருக்கும் சிங்கள இராணுவ முகாம் ஒன்றின் மீது முதன் முதலாக மேற்கொள்ளப்பட்ட பெரிய கெரில்லா தாக்குதல் இதுவாகும்.
இத்தாக்குதல் பிப்ரவரி 13 ஆம் திகதி அதிகாலை நடைபெற்றது. நவீனமான, கனரக ஆயுதங்களுடன் எமது கெரில்லா அதிரடிப் படை அணியொன்று இந்த இராணுவ முகாமை சூழ்ந்து கொண்டு தாக்குதலை ஆரம்பித்தது. இதனையடுத்து இரு தரப்பிலும் கடும் சண்டை மூண்டது. சுமார் 5 மணி நேரம் வரையில் நடைபெற்ற இந்தச் சண்டையில் இராணுவத்தினரின் பாதுகாப்பு அரண்களை உடைத்துக்கொண்டு எமது வீரர்கள் முகாமிற்குள் புகுந்து நேருக்கு நேர் எதிரியுடன் சமரிட்டனர். இராணுவத்தி யனர் தரப்பில் பலத்த உயிர்ச் சேதம் ஏற்பட்டது. விடுதலைப் புலி வீரர்களின் மூர்க்கமான, வீராவேசமான தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாது இறுதியில் இராணுவத்தினர் சிதறி ஒடினர்.
இந்தத் தாக்குதலில் மொத்தம் 106 சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 25 பேர் வரை படுகாயமுற்றனர். எமது தரப்பில் 16 இளம் புலிகள் களத்தில் நின்று கடைசிவரை போராடி வீர மரணம் எய்தினர். 9 வீரர்கள் காயமுற்றனர்.
இது இவ்வாறிருக்க முல்லைத் தீவு இராணுவ முகாமிலிருந்து உதவிக்கு அழைக்கப்பட்ட இராணுவப் படை மீதும் எமது கெரில்லா அணியொன்று தாக்குதலை நடத்தியது. நாயாறு என்னுமிடத்தில் கண்ணிவெடி வைத்து நடத்திய தாக்குதலில் 28 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் பலர் படுகாயமடைந்தனர். இராணுவ வாகனங்களும் சேதமடைந்தன.
விடுதலைப் புலி வீரர்களின் இந்த வெற்றிகரமான தாக்குதல்களை அடுத்து முல்லைத்தீவில் கொக்கிளாய், திரியாய் என்னு மிடங்களிலுள்ள இராணுவ முகாம் கள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்க் கிரா மங்களிலிருந்து இடம் பெயர்ந்த சிங்கள இராணுவத்தினர் இப் பொழுது பதவியா என்னும் சிங்கள பிரதேசத்தில் நிலைகொண்டுள்ளனர்.
தமிழீழ மண்ணிலிருந்து சிங்கள ஆயுதப் படைகளை விரட்டியடிக்கும் எமது போராட்ட இலட்சியத்திற்காக, முதன் முதலாக இராணுவ முகாம் ஒன்றை தாக்கி உயிர்த் தியாகம் செய்த இளம் போராளிகளுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் வீர வணக்கம் செலுத்திக் கொள்கிறது.
🙏
-விடுதலைப்புலிகள் இதழ்
ஏப்ரல் 1985
No comments:
Post a Comment