🔥ஈகைப்பேரொளி” முருகதாசன் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு நாள்!
தமிழீழத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில்
துன்னாலை என்ற ஊரைப் பிறப்பிடமாகக்
கொண்ட 27 வயதுடைய முருகதாசன்.
புலம் பெயர்ந்து
இலண்டனில் வசித்து வந்தார்
சுவிட்சர்லாந்தில்
ஐக்கிய நாடுகள் அவையின் வளாகம் முன்பாக, பவுத்த சிங்கள இனவெறி சிறீலங்கா அரசு, தமிழ்மக்கள் மீது நிகழ்த்திய பாரிய இனவழிப்புப் போரை சர்வதேசம் தடுத்து நிறுத்தவேண்டும் என்கிற கோரிக்கையை, "உலக சமூகத்துக்கு
தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்” என்ற தலைப்பில் 7 பக்கங்கள் கொண்ட மரணசாசனமாக எழுதிவைத்துவிட்டு.
12/2/2009 வியாழக்கிழமை அன்று இரவு 8:15 -9:45 நிமிடம் வரையான
நேரத்துக்குள் இன அழிப்பில் இருந்து ஈழத்தமிழ் மக்களைக் காப்பாற்றக்கோரி தீக்குளித்து இறந்தார். உலகத் தமிழர்கள் ஒட்டுமொத்தமாக கதறித்துடித்தனர்.
இச்சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 17 வருடங்கள் ஆகின்றன.
தமிழ்மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து 17 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும் இந்த சர்வதேச சமூகத்தின் முன்னால் நமக்கான நீதி இன்றுவரை மறுக்கப்பட்டு வருவது என்பது, இனப்படுகொலையில் சிங்கள வல்லாதிக்கத்திற்கு இந்த சர்வதேச நாடுகளும் உறுதுணையாக இருந்த உண்மை உறுதிப்படுத்தப்பட்ட ஒன்று,. அந்த வகையில் நம்மை கொன்ற கொலைகாரர்களிடமே நாம் நீதிக்காக கையேந்தி நிற்கும் இழிநிலையில் தான் இன்றும் உள்ளோம் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.
தமிழரின்தாகம்,தமிழீழத்தாயகம்!
ஈகைப்பேரொளி வ. முருகதாசன் அவர்களுக்கு வீரவணக்கம் 🙏
No comments:
Post a Comment