புத்தனின் வதனம் முறுவலித்தது சிகரங்களின் பனி விளிம்புகளில்.
கருணை உருகி காலங்களினூடே ஓடியது. சரித்திரத்தின் கறைகளில் கலங்கிக் கடலில் கலந்தது.
ஆணவம் - அம்பாகி, குண்டாகி. அணுவாகி-சமூகத்தின் கரைகளில் அலை மேல் அலையாக விழுகிறது.
...
உன்னதம் ஒரு போதும் சமூகத்துக்கல்ல.
...
அசோகனின் மனம் மரண ஓலங்களில் வாழ்வின் அர்த்தத்தை தரிசித்தது.
உயிர் ராசிகளனைத்தையும் நேசிக்கச் சொல்லி லங்காபுரி சேர்ந்தான் மகிந்தன்.
எல்லோருமே வாழ்வதற்காகப் போராட வேண்டியிருக்கிறது.
...
காற்று வெடி மருந்துப் புகையாயிற்று. விடுதலையைச் சுவாசிக்கத் துவக்கெடுத்தேன்.
காலம் என் உயிரைக் குப்பியில் அடைத்து என் கையிலேயே கொடுத்தது.( cyanide)
மரணம் தன் குகைக்குள் அழைக்கிறது. விடை பெறுகிறேன் நம்பிக்கையுடன்-அடுத்த தலைமுறைக்காவது உயிர் மிஞ்சட்டும்
...
அன்பு மகத்தானது.
-யாழ் சித்தார்த்தன்.
No comments:
Post a Comment