Wednesday, 14 January 2026

தமிழீழத்தில் முஸ்லிம்கள்

தமிழீழம் ஓர் மத சார்பற்ற நாடாகும். ஆனால் அங்கு எல்லோருக்கும் மத சுதந்திரம் உண்டு. அதேவேளை தமிழீழத்தில் மத வெறியர்களுக்கு இடமளிக்கப்பட மாட்டாது.

இலங்கையில் வாழும் தமிழ் பேசும் முஸ்லிம்கள் தனிச்சிறப்புடைய மதக் கலாச்சார பண்புகளைக் கொண்ட இனக்குழு என்பதனையும், தமிழீழத்தில் வாழும் முஸ்லிம்கள் முழுமையான உரிமையுடன் வாழ வேண்டும் என்பதையும் எமது அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.

இன்று முஸ்லிம்கள் தமிழீழப் போராட்டத்திற்கு எதிராகச் செயற்படுகிறார்கள். தமிழீழப் போராட்டத்திற்கெதிராக முஸ்லிம்களைச் செயற்பட வைப்பதில் சிறீலங்கா அரசும் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது.

தமிழர்களையும், முஸ்லிம்களையும் பிரித்தால் தமிழீழப் போராட்டத்தை அழிப்பது சுலபம் என சிறீலங்கா நினைக்கின்றது.

தமிழீழப் போராட்டம் அழிக் கப்பட்டால் முஸ்லிம்களின் உரிமைக்கான குரலும் அழிந்து போகும் என சரியாக சிறீலங்கா கணித்து செயற்படுகின்றது.

கிழக்கில் இருந்து கிழக்கு வாழ் முஸ்லிம் மக்களின் உரிமைக்காக போராடப் போவதாக உருவாக்கப்பட்டது முஸ்லிம் காங்கிரஸ்.

ஆனால் அதன் தலைமையின் நலன் முழுவதும் சிறீலங்காவில் (கொழும்பில்) தங்கியிருக்கின்றது. அவர்களது குறுகிய வழியில் பதவிகளை, தலைமையை பெறும் எண்ணத்தையும் கொழும்பில் தங்கி நிற்கும் நிலையையும் பயன்படுத்தி தமிழர்களையும் முஸ்லிம்களையும் பிரிப்பதில் சிங்கள அரசு வெற்றி கண்டுள்ளது. தமிழீழத்தில் முஸ்லிம்களின் நிலைப்பாடு குறித்து ஓரளவு பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சிறீலங்காவிலோ, தமிழீழத்திலோ முஸ்லிம்கள் இது வரை தமது உரிமைகளுக்காக போராடியது கிடையாது.

சிறீலங்காவால் தமிழர்களும், முஸ்லிம்களும் ஒடுக்கப்பட்டார்கள்.

தமிழர்கள் ஒடுக்குமுறைக் கெதிராகப் போராடினார்கள். ஆனால் முஸ்லிம்களோ தமிழர், சிங்களவர் என்ற முரண் பாட்டைப் பயன்படுத்தி வாழ முயன்றார்கள்.

தாங்கள் தமிழர்களும் அல்ல, சிங்களவர்களும் அல்ல, முஸ்லிம்கள் எனவும், அராபியர்கள் எனவும் இனம் காண முயன்றார்கள்.

அதன் மூலம் சிங்கள தேசத்திடம் அற்ப சலுகைகளை பெறலாம் என நம்பினார்கள் சில சலுகைகளையும் பெற்றார்கள்.

உண்மையில் இத்தீவில் வாழும் முஸ்லிம்களில் 95% தமிழர்கள்.

இங்கு வாழும் முஸ்லிம் மக்களின்  வாழ்க்கை முறையில் அராபிய கலாச்சாரம் எதையும் காணமுடியாது.

ஒரு சிலரைத் தவிர வேறு யாருக்கும் அரபு மொழி தெரியாது. அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த எந்த ஊருக்கும் அரபுப் பெயர் கிடையாது.

இன்று சிறீலங்காவிலும், தமிழீழத்திலும் முஸ்லிம்கள் தமிழ் பேசுகின்றார்கள்.

இதற்கு முக்கிய காரணம் இவர்கள் கலாச்சாரமே. முஸ்லிம் பெண்கள் வெளியே  சென்று மற்றைய சமூகத்தினரோடு கலந்து வாழாததால் வீட்டு மொழி, தாய் மொழித் தமிழ் தொடர்ந்து பிள்ளை களால் பேசப்படுகின்றது.

இப்படியாக தமிழ் மொழி சிறீலங்காவில் அழியாமல் - காப்பாற்றப்பட்டது. ஆனால் அரபு மொழி பேணப்பட வில்லை.

இவை முஸ்லிம்கள் தமிழர்கள் என்பதை தெளிவாக எடுத்துக் காட்டப் போதுமானவை.

சிங்களவர்களிடம் சலுகைகளைப் பெறுவதற்காக முஸ்லிம் மக்கள் தமது வரலாற்றை மறைத்து நிற்பதை நாம் பார்க்கிறோம்.

கொழும்புத் தலைமைகள் அல்லது அங்கு வர்த்தக, மற்றும் நலன்களைக் கொண்ட தலைமைகளே, முஸ்லிம் மக்களை வழி நடாத்தும் பள்ளி வாசல்களைக் கட்டுப்படுத்து கின்றன.

மார்க்கம் என்பதன் பெயரால் அறியாமையில் வாழும் பல முஸ்லிம் மக்கள் தலைமைகளால் பிழையாக வழிநடாத்தப்படுகின்றார்கள்.

33% முஸ்லிம் மக்கள் வாழ்ந்த புத்தளம் இன்று சிங்களவர்களிடம் பறிபோயிற்று.

46. 1% முஸ்லிம்கள் வாழ்ந்த அம்பாறை மாவட்டத்தில் - 1732 சதுர மைலில் 1200 சதுர மைலுக்கு மேல் சிங்களவர்களி டம் பறிபோயிற்று.

அடிப்படையில் விகிதாசார - தேர்தல் என்பதின் பெயரால் - முஸ்லிம் மக்களின்பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டது.

முஸ்லிம்களிடம் இருந்து வர்த்தகம், திட்டமிட்டு சிங்களவர்களால் கைப்பற்றப்பட்டது.

இதற்கு ஓர் சிறந்த உதாரணம். புத்தளத்தில் பழைய பேரூந்து நிலையத்தில் முஸ்லிம் மக்களின் வர்த்தகத்தை  உடைக்க புதிய பேருந்து நிலையம் ஒன்று அமைக்கப் பட்டு அங்குள்ள கடைகள் சிங்களவருக்கு கொடுக்கப்பட்டமையாகும்.

இதை எதிர்த்த முஸ்லிம்களை புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்குள் வைத்து சிங்களப் படை சுட்டுக் கொன்றது. இவற்றை எதிர்த்து முஸ்லிம்கள் போராடவில்லை. பதிலாக, முஸ்லிம்களின் உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அற்ப சலுகைகளுக்காக சிங்கள அரசுகளுடன் சேர்ந்து அழிக்க முனைகின்றனர்.

தமிழீழப் போராட்டத்தால் கிழக்கில் 50, 000 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்படுவது தடுக்கப்பட்டது.

விகிதாசார அடிப்படையில் வேலை வாய்ப்பு, பதவி உயர்வு என சில சலுகைகளை சிறீலங்கா வழங்க முன்வந்தது.

முஸ்லிம்கள் தமது உரிமை பற்றிப் பேசும் பலத்தைப் பெற்றனர்.

இப்போராட்டத்தோடு இணைந்து நின்று போராடாமல், போராட்டத்திற்கு எதிராகவே முஸ்லிம் மக்கள் செயற்பட்டனர். 

1983 ல் இருந்து தமிழீழப்போராட்டம் கூர்மையடைய தொடங்கியதும்,தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும் பிரித்து அழிக்கும் திட்டத்தை சிறீலங்கா செயற்படுத்தத் தொடங்கியது.

தமிழர், சிங்களவர் முரண்பாட்டில் வாழ நினைக்கும் முஸ்லிம்களை சிறீலங்கா பயன்படுத்தியது.

முஸ்லிம் ஊர்காவல் படைகளை உருவாக்கியது. தனது கைக்கூலிகளைக்கொண்டு தமிழ், முஸ்லிம் சமூகக் கலவரங்களைத் தூண்டியது.

விசேட அதிரடிப்படை. முஸ்லிம் ஊர்காவற்படையின் துணைப்படையுடன் பல தமிழ் கிராமங்களில் கிராமியப் படு கொலைகளை நடாத்தியது.

தமிழ்க் கிராமங்களில் இருந்து விரட்டப்பட்ட தமிழ் மக்கள் குறைந்த விலைக்கு தமது நிலங்களை விற்றனர், அல்லது விட்டுச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

சிறீலங்கா எதிர்பார்த்தது போல தமிழ், முஸ்லிம் மக்களின் உறவு நிலை உடைக்கப்பட்டது.

சிறிலங்காப் படையில் அல்லது காவல் துறையில் சேரும் தமிழர்கள் துரோகிகளாக கருதப்பட்டதால் தமிழர்கள் அதில் சேர்வதைத் தவிர்த்தனர்.

ஆனால் முஸ்லிம்கள் தாம் தனித்துவமானவர்கள் எனக் கூறிக்கொண்டு அதில் சேர்ந்தனர். இந்த முரண்பாட்டையும் சிறீலங்கா பயன்படுத்தத் தவறவில்லை.

தமிழ், முஸ்லிம் மக்களின் உறவு நிலை மிகப் பாதிப் படைந்த நிலையில் நாம் முஸ் லிம் மக்கள் சார்பாக ஓர் வேலைத்திட்டத்தை 21.4.1988ல் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியூடாக முன் வைத்தோம்.

முஸ்லிம்கள் ஒன்றிணைத்த தாயகத்தில் 30% குறைவில் லாத வகையில் மாகாண சபை யில் பிரதிநிதித்துவம் பெறவும். அமைச்சரவையில் இடம் பெற வும் உரித்துடையவர்கள்.

எதிர்கால காணிப் பங்கீடு முஸ்லிக்களுக்கு கிழக்கு மாகா ணத்தில் 35% குறைவில்லாத வகையிலும், மன்னார் மாவட் டத்தில் 30% குறைவில்லாத வகையிலும்,வடமாகாணத்தின் ஏனைய பகுதிகளில் 5% குறை வில்லாத வகையிலும் இருக்க வேண்டும்.

முஸ்லிம் மக்களுக்கு இஸ் லாமிய பல்கலைக் கழகம் நிறு வப்படும்.

தமிழீழத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாழும் முஸ் லிம்களின் விகிதாசாரத்தின் படி பொதுத்துறை வேலை வாய்ப்புக்கான உரிமையை முஸ்லிம் மக்கள் கொண்டிருப்பர்.

முஸ்லிம் மக்களினது தனித் துவத்தின் உரிமைகள். அக் கறைகள் என்பவற்றை பாதிக் கக்கூடிய எந்தவித சட்டவாக் கங்களும் அவற்றிற்கு முஸ்லிம் பிரதிநிதிகளின் 3/4 பெரும் பான்மையினர் சார்பாக வாக்களித்தாலன்றி தமிழீழத்தில் நிறைவேற்றப்படலாகாது என்னும் வகையில் பல விடயங்களில் இணக்கம் கண்டோம்.

ஓர் 'சுமூகமான சூழ்நிலை உருவாகத் தொடங்கியது.

முஸ்லிம் மக்கள் மனதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தினால்தான் தமது நிலங்களும் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்ற உணர்வு வளரத் தொடங்கி யது.

பல வழிகளில் நாம் முஸ்லிம் மக்களை அணுகிப் பேசினோம். சாதாரண முஸ்லிம் மக்கள் உண்மையைப்புரிந்து கொண்டு போராட்டத்தை ஆதரிக்கும் செயலில் இறங்கத் தொடங்கினர்.

கொழும்பில் தங்கி நிற்கும் முஸ்லிம் தலைமைகள் தமது தலைமைக்கு ஆபத்து வருவதை உணர்ந்து கொண்ட னர்.

தமது நீண்டகால திட்டங்கள் உடைந்து போவதைக் கண்டது சிறீலங்கா.

தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து தமிழ், முஸ்லிம் மக் கள் உறவை, தமது குறுகிய நலனுக்காக உடைக்க வேண் டிய அவசியம். இவர்கள் எல் லோருக்கும் ஏற்பட்டது.

முஸ்லிம் மக்களுக்கு பாது காப்பு என்னும் பெயரில், இந்தி யப்படையுடனும், பின்னர் சிறீ லங்காவுடன் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் ஓர் சமூக விரோதக் கும்பலை. முஸ்லிம் மதவெறியை வளர்த்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முஸ்லிம் உறுப்பினர்களை, ஆதரவாளர்களை கொலை செய்தனர். 

தமிழீழ விடுதலைப் போராட் டத்திற்கு எதிராக அரேபிய நாடுகளில் பொய்ப் பிரச்சாரங் களை கட்டவிழ்த்து விட்டன.

விடுதலைப் புலிகள் முஸ்லிம் களை கொல்கின்றார்கள் எனக் கூறி. பணம் திரட்டி தமது சுக போக வாழ்க்கைக்கு பயன் படுத்தினர்.

தமிழீழப் போராட்டத்திற்கு எதிராகசெயற்பட்டுக்கொண்டு, தமிழீழப் போராட்ட வெற்றி களில் பங்கு வேண்டும் என நியாயமற்ற தீர்வுகளை நிபந் தனைகளோடு வைத்தனர்

மீண்டும் தமிழீழ-சிறீலங்காப் போர் ஆரம்பித்த போது.சிறீ லங்காவுடன் சேர்ந்து பெரு மளவில் தமிழ்மக்களைகொலை செய்தனர். 

பல பெண்கள் பாலியல் வன் முறைக்குள்ளாக்கப்பட்டனர்.

கிழக்கில் இவர்களின் செய லால் 4 இலட்சம் தமிழ் மக்கள் அகதிகள் ஆகினர். கொல்லப் பட்ட 4000 ற்கும் மேலான மக் களில் 2000 ற்கும் மேற்பட்டோர் முஸ்லிம்களால் கொல்லப்பட்டனர்.

அம்பாறையில் 80, 000 ற்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் கொலை செய்யப்பட்டு விரட்டப்பட்ட னர். பல கிராமியப் படுகொலைகள் நடந்தன.

வடக்கில் இருந்த 60,000 முஸ்லிம் மக்களில் 30,000 பேர், போர் ஆரம்பித்ததும் சிறீ லங்காவுக்கு பாதுகாப்புத்
தேடிச் சென்றனர். 

மிகுதிப் பேர், அவர்கள் பாதுகாப்புக் கருதி அனுப்பி வைக்கப்பட்டனர்.

விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டில் இருந்த பகுதிகளில் ஒரு முஸ்லிம் கூட கொல்லப் படவுமில்லை. ஒரு முஸ்லிம் பெண்கூட பாலியல் வன் முறைக்குள்ளாக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வடக்கும் கிழக்கும் இணைந்த நிர்வாகத்தில் கிழக்கில் 33% இருக்கும் முஸ்லிம் மக்களின் வீதம் 18 % வீதமாக குறைந்துவிடும். இணைந்த நிர்வாகத்தால் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது.

இணைந்த நிர்வாகத்தில் வடக்கில் 4.7% இருக்கும் முஸ்லிம்கள் வீதம் 18% வீதமாக உயருவதுபற்றியும், இலங் கைத்தீவில் கிழக்கு மாகாணத் தில் முஸ்லிம்களின் வீதம 2.1% ஆகும் இது இணைந்த நிர்வாகத்தில் 18% உயருவதை யும் யாரும் பேசுவதில்லை.

அம்பாறையில் இருக்கும் 1,01.754 முஸ்லிம் மக்கள் குறித்து பெரிதும் பேசும் முஸ்லிம் தலைமை கண்டியில் வாழும் 1.25.646 முஸ்லிம்கள் குறித்தும் கொழும்பில் வாழும் 1.68. 956 மக்கள் குறித்தும் எது வும் பேசுவது கிடையாது.

உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு தராமல் அதைக் குழப்பும் இவர்களது தன்மை இதனால் தெளிவாகும்.

முஸ்லிம் மக்களின் உரிமைக் காக தமிழர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளனர்.

1976 ம் ஆண்டு மாசி 2ம் நாள் புத்தளம் பெரிய பள்ளிவாசலில் சிறீலங்கா காவற் துறையால் 7 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது, யாருமே அது குறித்துப் பேசாத போது தமிழர்கள் தான் அது குறித்துப் பேசினார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழத்தில் உள்ள, தமிழ் மக்களுக்காக மட்டு மல்ல முஸ்லிம்களுக்காகவும் தான் போராடினார்கள்.

தமிழ் மக்களோடு. தமிழீழ விடுதலைப் புலிகளோடு சேராது முஸ்லிம் மக்கள் போராட்ட காலத்தில் பிரிந்து நின்றதன் மூலம் வரலாற்றுத் தவறையும்.

தமிழீழ விடுதலைப் புலிகளை யும். தமிழ் மக்களையும் அழிப் பதன் மூலம் வரலாற்றுத் துரோகத்தையும் செய்துள்ள னர்.

தாம் தமிழர் அல்ல, சிங்களவர் அல்ல என தனித்து நின்ற காலம் போய் இப்போது தம்மை அராபியர்கள் என இனம் காண முயல்கின்றனர்.

இவர்கள் அராபியர்களும் இல்லை. சிங்களவர்களும் இல்லை. இவர்கள் தமிழர்கள்.

இவர்கள் தமது தவறைத் திருத்தாது தமிழ்
மக்களுக்கு எதிராக, தமிழீழ போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டு சிங்கள தேசத்திடம் சலுகைகள் பெறும் எண்ணத்தை கைவிட வேண்டும்

சிங்கள தேசம் இவர்களைப் பயன்படுத்திய பின் இவர் களை அழிக்கத்தயங்காது.

இந்த நிலை தொடருமாக இருந்தால் இலங்கைத்தீவில், தங்களது தனித்துவங்களை இழந்த ஒரு உதிரிகள் கூட்ட மாகத்தான் முஸ்லிம்கள் வாழ வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படலாம்.

-விடுதலைப்புலிகள் இதழ் 
ஐப்பசி-கார்த்திகை 1990.

No comments:

Post a Comment