Wednesday, 26 March 2014

வீர வணக்கம் !

ஓயாத அலைகள் – 03 படை நடவடிக்கையின் போது 26.03.2000 அன்று யாழ். பளைப் பகுதியில் சிறிலங்காப் படைகளின் ஆட்லறித் தளத்தைக் கைப்பற்றி அழித்த கரும்புலித் தாக்குதலில் காவியமான கரும்புலிகள் மேஜர் தனுசன், மேஜர் சுதாஜினி ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் .

பளையில் 26.03.2000 நள்ளிரவு ஆட்டிலறித் தளப்பகுதி பெரும் வெடிச்சத்தங்களினால் அதிர்ந்து கொண்டிருந்தது. ஆட்டிலறிகளும் எறிகணைகளும் வெடித்துச் சிதறி எரிவது அந்த ஆட்லறித்தளம் நிர்மூலமாகி விட்ட சேதியை எடுத்துரைத்துக் கொண்டிருந்தது. வானளாவ பரவிக் கொண்டிருந்த தீச்சுவாலைகளின் பிரகாசம் கரும்புலிகளின் வீரத்தையும் தியாகத்தையும் வானத்தில் பிரதிபலிக்கும்படி செய்து கொண்டிருந்தன. அந்த வீரமிகு சாதனையை நிகழ்த்தி விட்டு காவியமாகினர் இரண்டு கருவேங்கைகள்.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் !

No comments:

Post a Comment