பூச்சியத்தைக் கண்டறிந்தது யார் ?
பூச்சியத்தைக் கண்டுபிடித்தவர் ஆரியப்பட்டர் என வரலாறாக எழுதப்பட்டுவிட்டது. ஆனால் அது முழுப்பொய். இது ஓர் இட்டுக்கட்டப்பட்ட கதை. ஆரியப்பட்டருக்கு முன்பே ஐந்திரம் எனும் தமிழிலக்கண நூலில் இன்று பூச்சியம் என அழைக்கப்படும் இலக்கம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அது "பாழ்" என்ற பெயரில் இருக்கிறது. ( பாழாய்ப்போச்சு, பாழாகிவிட்டது என்ற சொற்களின் வினையடியே பாழ் என்பதிலிருந்து வந்ததுதான்) .
“ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றி” என்று தொல்காப்பியம் எழுத்ததிகாரப் பாயிரத்தில் பனம்பாரனார் குறிப்பிட்டுள்ளதனை வைத்து சிலபல (???) வந்தேறி ‘அறிஞர்களும்’, அவர்தம் அடிவருடிக் கிடக்கும் நம்மினக் கோடரிக் காம்புகளும் என்னவோ ஐந்திரம் என்பது தொல்காப்பியத்திற்கு மிகமிக முற்காலத்திலேயே வடிக்கப்பட்ட ‘சமற்கிருத’ இலக்கண நூல் என்றும், அதில் கற்றுத் தேர்ந்தபின்னரே தொல்காப்பியரால் தமிழிலக்கணம் எழுத முடிந்தது என்றும் பிதற்றித் திரிகின்றனர். இது ஆரியரின் முழு உருட்டு.
உண்மையில் இந்த ஐந்திரம் என்பது யாது ?
தொல்காப்பியத்திற்கு முந்துநூலாக இருந்து, பின்னர் காலப்போக்கில் மறைந்துபோன ஒரு பண்டைத்தமிழ் இலக்கண நூல். உண்மையில் இந்திய மொழிகளுக்கு இலக்கணம் வகுக்க எடுத்துக்காட்டாக விளங்கியதும், பாணினி என்பவரால் எழுதப்பட்ட வடமொழியிலக்கணத்திற்குக் காலத்தால் மிகவும் தொன்மையானதுமாகிய முந்துதமிழ் இலக்கணப் பொது நூலே அதுவாகும். பாணினியைப் பின்பற்றி வந்தவரே ஆரியப்பட்டர்.
சரி, இந்த ‘ஐந்திரன்’ எனும் சொற்பிறப்பு பற்றி ஆராயுங்கால் என்ன தெரிகிறது?
‘ஐ’ என்பது மேன்மை, உயர்வு, அரசன் போன்றவற்றைக் குறிப்பதாகும். இந்த ஐ என்பதிலிருந்தே ஐயன், ஐந்தன், ஐந்திரன் எனும் சொற்களும் பிணைந்துள்ளன. ஐந்திரன் எனும் சொல்லிலிருந்தே ஐந்திரம் எனும் சொல்லும் பிறந்துள்ளது. இதனை, புலம் எனும் சொல் புலத்தன் என்றும், புலந்தன் என்றும், பின்னர் அஃதே புலந்திரன் என்றும் திரிந்தமையையும், மாந்தன் எனுஞ் சொல் மாந்தரன் என்று திரிந்துள்ளமையையும் ஒப்புநோக்கி அறியலாம்.
இப்படி ஐந்திரன் என்பானால் இயற்றப்பட்ட தமிழிலக்கண நூலே ஐந்திரம் எனப்பட்டது.
அதேபோல் பெண்பாற்பெயராக ஐந்தக்க, ஐந்தம்மா, ஐத்தை (இன்றைய அத்தை) என வழங்கிவருதளையும் ஒப்புநோக்கினால், அனைத்தும் விளங்கும். இந்த ஐந்தரம் எனுஞ் சொல், ஒருவகைப் பனைமரத்தைக் குறிக்கிறது. இச்சொல் யாழ்ப்பாண வழக்கில் உள்ளதாகும். தொல்காப்பியர் தமக்கு முன்பே படிக்கப்பட்ட ஐந்திரம் என்னும் தமிழிலக்கணத்தை நன்கு கற்றவராதலால், முந்துநூல் மரபினைப் பேணிக் காத்துள்ளார். தொன்நெடுங் களத்தில் முதுநாரை, முதுமுருகு, களரியாவிரை, இசைநுணுக்கம் போன்ற பல்வேறு இலக்கண நூல்களும், அகத்தியர் இயற்றியதாகக் கூறப்பட்ட அகத்தியம் எனும் இயற்றமிழ் இலக்கணமும் காலப்போக்கில் மறைந்துபோனது.
இந்நிலையில், வரலாற்றுக்கெட்டியவரை ஐந்திரமே மிகத் தொன்மையான தமிழ் நூலாக நாவலந்தீவு நெடுக, அதாவது இன்றைய இந்தியா முழுக்க அறியப்பட்டுள்ளது. ஆரியர் இங்கே நுழையும் முன்னர், இன்றைய இந்தியப் பெருநிலம் முழுக்கத் தமிழே நிலவி வந்தமைக்கான சான்றுகளைப் பல்வேறு அறிஞர் பெருமானார் நிறுவியுள்ளனர்.
புத்தர்கூடத் தமது இளமைக்காலத்தில் தமிழைக் கற்றுள்ளார் என்று லலிதவிசுத்தாரம் என்னும் நூல் கூறுகிறது. புத்தர் தமது பதினாறாம் அகவையில் ஐந்திரவிலக்கணம் கற்றுள்ளதாக புத்த சாதகக் கதைகள் கூறுகின்றன. இந்த ஐந்திரவிலக்கணத்தைக் கற்றுத்தேர்ந்த பல அறிஞர்கள் கி. மு. ஆறாம் நூற்றாண்டுவரை பரந்து இருந்துள்ளனர். அதேவேளை, பாணினியின் காலத்தில்கூட கங்கைச் சமவெளிப்பகுதியில் ஐந்திரம் கற்பிக்கப்பட்டுள்ளது என்பதும் தெளிபு.
தமிழர்கள் எண்கணிதத்தை பாழ், கால், அரை, ஒன்று என்றே ஆரம்பித்தார்கள். ஐந்திரம் என்ற நூலைக் கற்ற தொல்காப்பியர் அங்கிருந்தே பாழ் என்ற சொல்லை எடுத்து தொல்காப்பியத்தில் பயன்படுத்தியுள்ளார்.
"பாழென் கிளவி மெல் லெழுத் துறழ்வே" (தொல்.387)
உண்மையில் ஐந்திரம் என்ற தமிழிலக்கண நூலிலிருந்து எடுக்கப்பட்ட "பாழ்" என்ற சொல்லையே பாணினி என்ற ஆரியர் உபயோகிக்க, அவரைத்தொடர்ந்த ஆரியப்பட்டர் பாழ் என்ற சொல்லை பூச்சியம் என்ற சொல்லாக மாற்றினார்.
ஆதலால் பாழ் என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழரால் உபயோகிக்கப்பட்ட இலக்க மற்றும் இலக்கணச் சொல்.
நேற்று வந்த ஆரியப்பட்டரையும் பூச்சியத்தையும் இன்றுடன் கைவிடுக தமிழரே.
-தேவன்