"மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம், அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள். அவர்கள் எமது இனத்தின் தற்காப்புக் கவசங்கள் - எமது போராட்டப் பாதையின் தடை நீக்கிகள் - எதிரியின் படைபலத்தை மனப் பலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்.’
ஆம், இது கரும்புலிகள் தொடர்பாக தமிழீழ தேசியத் தலைவர் கூறிய சிந்தனைக் கருத்து. இந்தக் கருத்துக்கு ஈடு இணை எதுவுமே இல்லை. கரும்புலிகளை உருவாக்கியவர் என்ற வகையில், அவர்களை ஆழமாக நேசித்தவர் என்ற வகையில் அவர்களைப் பற்றிக் கருத்துக் கூறக்கூடிய ஒரே தகைமை தேசியத் தலைவருக்கு மட்டுமே உண்டு.
அவர் கூறியது போன்று கரும்புலிகள் சாதாரண பிறவிகள் அல்ல. அவர்கள் தெய்வீகப் பிறவிகள். அவர்கள் என்றென்றும் எங்கள் மனதில் வைத்துப் பூசிக்கப்படவேண்டியவர்கள். அந்த உத்தமர்களை ஒருங்கே நினைவு கூருகின்ற கரும்புலிகள் தினம் எதிர்வரும் ஐந்தாம் திகதியாகும்.
உலகின் பல நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. உலக மகா யுத்தம் உட்பட அதற்கு முன்னரும் பின்னரும் எத்தனையோ கடும் போர்கள் நடைபெற்றிருக்கின்றன. இப்போதும் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், இத்தனை போராட்டங்களுக்குள்ளும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வித்தியாசப்படுத்திக் காட்டியதில் முதன்மையான பங்கு வகித்தவர்கள் கரும்புலிகள். அந்தக் கரும்புலிகளின் உருவாக்கம் மட்டுமன்றி அவர்களின் ஒப்பற்ற தியாகமும் விடுதலைப் போராட்டத்தின் வீறுகொண்ட வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக அமைந்தது.
தமிழீழ விடுதலைப் போராட்டம் கெரில்லா வடிவிலேயே தோற்றம் பெற்றது. ஆனால், அதை தொடர்ந்தும் கெரில்லா வடிவில் வைத்திருப்பது சாத்தியமற்றது என்று தமிழீழ தேசியத் தலைவர் சிந்தித்தார். ஏனெனில் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு பயங்கரவாதப் போராட்டம் அன்று. எதிரிக்கு இழப்புக்களை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிச் சென்று மறைந்திருப்பதற்காக தலைவர் புலிகள் அமைப்பை உருவாக்கவில்லை. மாறாக, தமிழ் இனத்தின் விடுதலைக்கான போராட்டமாகவே தலைவர் புலிகள் அமைப்பை உருவாக்கினார். இந்த விடுதலை என்பது வெறுமனே போராடிக்கொண்டிருப்பதல்ல. போராடிப் பெறுகின்ற நிலத்தை தக்க வைப்பது, தமிழ் மக்களுக்கென தனியான கட்டமைப்புக்களை உருவாக்குவது, தனித்தனி துறைகளை ஏற்படுத்துவது என்பவற்றை உள்ளடக்கியதாக தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே ஆளக்கூடிய அலகொன்றை உருவாக்குதை மையமாகக் கொண்டே தேசியத் தலைவர் போராட்டத்தை தொடங்கினார்.
போராட்டம் தொடங்கப்பட்டபோது ஆட்பலம் இருக்கவில்லை. ஆயுத பலம் இருக்கவில்லை. இதனால் எதிரிகளைக் கொன்று ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்கும் நிலத்தை தக்க வைப்பதற்கும் ஆட்பலம் தேவைப்பட்டது. இதனால் எதிரியுடன் போராடுகின்ற போது இழப்புக்களைக் குறைக்க வேண்டிய தேவை புலிகளுக்கு ஏற்பட்டது. இது தொடர்பாக இயக்கத்தின் உயர் தலைமை கலந்துரையாடியபோதே கரும்புலிகள் என்ற வடிவம் தோற்றம் பெற்றது. குறைந்த உயிரிழப்புடன் எதிரிக்கு அதிக இழப்பை ஏற்படுத்துவது என்ற நோக்கத்துடனேயே கரும்புலிகள் படையணி உருவாக்கப்பட்டது.
சிலர் தொட்டதெல்லாம் பொன்னாகும் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதுபோலவே, தேசியத் தலைவர் அவர்கள் என்ன செயலைச் சிந்தித்து அதனைச் செயற்படுத்த முனைகின்றாரோ அது தோல்வியடைந்தாக வரலாறு இல்லை. அதுபோலவே, கரும்புலிகள் என்ற அமைப்பும் தோற்றதாக இல்லை. கரும்புலிகள் அணி உருவாக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டன. பயிற்சிகள் பெற்ற கரும்புலிகள் மிகவும் திறமையாகச் செயற்பட்டு எதிரிக்கு பெரும் இழப்புக்களை ஏற்படுத்தியவை இன்றும் வரலாறாக இருக்கின்றன. அந்த வகையில் முதலாவது கரும்புலித் தாக்குதல் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் சிங்களப் படைகள் அமைத்திருந்த முகாம் மீது நடைபெற்றது.
போராட்ட வரலாற்றில் வடமராட்சியில் இடம்பெற்ற நேரடி மோதல்கள், சமர்கள் என்பன வித்தியாசமானவை. தமிழீழ தேசியத் தலைவர் பிறந்த பிரதேசம் என்பதற்கு அப்பால் வடமராட்சிப் பிரதேசம் எதிரிக்கு அடிக்கடி அழிவைக் கொடுத்த பிரதேசமாகவே மாறியிருந்தது. பெரும் இழப்புக்களுடன் வடமராட்சியைக் கைப்பற்றி வைத்திருந்த சிங்களப் படைகள் அங்கிருந்து வல்லை வெளியூடாக வலிகாமம் நோக்கி முன்னேறுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டான். வல்லை வெளியால் முன்னேற முற்படுகின்ற எதிரிக்கு பல்வேறு தடவைகள் கடும் பதிலடி கொடுத்த சண்டைகள் நடந்ததை வரலாறு மறக்காது.
போராட்டம் தொடங்கிய ஆரம்ப காலங்களில், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் பலம்பெறுவதற்கு முன்னரேயே சிங்களப் படைகளுக்கு வடமராட்சியில் அடிக்கடி பெரும் இழப்புக்களை ஏற்படுத்தினர். தொண்டமானாறு வீதியை மேவி வல்லை வெளியால் சிங்களப் படைகள் முன்னேற முயல்வதும் புலிகள் கடும் பிரயத்தனம் மேற்கொண்டு தாக்குதல்களை நடத்தி அதனை முறியடிப்பதுமாக இருந்தனர். அப்போது நெல்லியடி இராணுவ முகாமே சிங்களப்ப படையின் பிரதான தளமாக இருந்தமையால் அதற்கு அடி கொடுப்பதன் மூலம் அவர்கள் அடிக்கடி முன்னேறி பூச்சாண்டி காட்டமாட்டார்கள் என்று கருதியதாலேயே முதலாவது கரும்புலித் தாக்குதல் மூலம் நெல்லியடி முகாமைத் தகர்க்க வேண்டும் என்று தலைவரும் தளபதிகளும் முடிவெடுத்தனர்.
ஆனால், யார் அந்த முதல் தாக்குதலை மேற்கொள்வது என்று சிந்தித்த நேரம்தான் மில்லர் தானாக முன்வந்து ‘நான் போறன் அண்ணை’ என்றான். போராட்டத்திற்கு வருபவர்களும் மனிதர்கள் தான். களத்தில் நிற்பவர்கள் இயன்ற வரை தங்களைத் தற்காத்துக்கொண்டே சண்டை பிடிப்பார்கள். இந்த நிலையில் நானே வெடித்து சாகிறன் என்று ஒருவன் முன்வருகின்றான் என்றால் அவனிடம் விடுதலை வெறி இருக்க வேண்டும். தேசத்தை மீட்க வேண்டுமென்ற ஓர்மம் இருக்க வேண்டும். எங்கள் நிலத்தில் வந்து குந்தி இருப்பவனைக் கூட்டத்தோடு அழிக்க வேண்டுமென்ற தீரம் இருக்க வேண்டும். அத்தனையும் மில்லரிடம் இருந்தது. அதனால்தான் தானாகவே முன்வந்தான்.
மில்லரின் முடிவு தளபதிகளுக்கு பிடிக்கவில்லை. ஏனென்றால், துடிப்பான, திறமையான, அர்ப்பணிப்பான ஒரு போராளியை இழப்பதற்கு அவர்கள் விரும்பவில்லை. மில்லர் இன்னும் இந்த தேசத்திற்கு எத்தனையோ சேவைகளைச் செய்யக்கூடிய அபரிமிதமான ஆற்றல்கள் உள்ளவன். திட்டமிடல்களிலும் வல்லவன். அதனால்தான் அவர்கள் அவ்வாறு சிந்தித்தனர். ஆனால், நெல்லியடியில் இருந்த சிங்களப் படைகளின் முகாம் தொடர்பாக அறிந்தவன் என்ற வகையில் தானே அந்த தாக்குதலை மேற்கொள்ள வேண்டும் என்று மில்லர் கூறியதால் அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
வெடி மருந்துகள் நிரப்பப்பட்ட ரக் வாகனத்தில் சென்று குறித்த முகாமைத் தகர்ப்பது என்பது சாதாரணமான விடயம் அல்ல. அது பகீரதப் பிரயத்தனமான செயல். நெல்லியடி பிரதான வீதியில் படையினர் அமைத்திருந்த பல வீதித் தடைகளைத் தாண்டியே குறித்த முகாமுக்குள் வாகனத்தைச் செலுத்த வேண்டும். இவை கடினமான பணி என்றாலும் இதனைச் செய்யவேண்டி இருந்தது. இதற்கான திட்டம் போடப்பட்டது. நெல்லியடி முகாம் மீது ஒரு அணி தாக்குதல் நடத்துவதென்றும் மற்றைய சிலர் அந்த முகாமுக்கு முன்னால் இருக்கின்ற தடைகளை அப்புறப்படுத்த மில்லர் வெடி மருந்த நிரப்பப்பட்ட வாகனத்தைக் முகாமுக்குள்ளே கொண்டு செல்வது என்றும் திட்டமிடப்பட்டது. குறித்த வீதித் தடைகளை அகற்றுவதற்கு சக போராளிகள் உதவி செய்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டு ஜீலை 5 ஆம் திகதி இரவு இந்த தாக்குதலை நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
மில்லர் இந்தத் திட்டத்தின் அடிப்படையில் சக போராளிகளின் உதவியோடு மிகவும் மதிநுட்பமாக வெடிமருந்து நிரப்பப்பட்ட வானத்தைச் செலுத்திச் சென்று எதிரியின் இதயத்தில் வெடிக்க வைத்தான். மில்லருடன் கமல் என்ற போராளியும் இந்த தாக்குதலில் களப்பலியானான்.
இந்த தாக்குதலில் சிறீலங்கா படைக்கு எதிர்பார்க்க முடியாத இழப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலால் சிங்கள அரசாங்கமும் படைகளும் மன ரீதியாகப் பாதிக்கப்பட்டனர். சண்டை என்ற பெய ரையே இனிமேல் உச்சரிக்க முடியாத அளவிற்கு எதிரி கதி கலங்கி நின்றான். இந்தத் தாக்குதலில் பல படையினர் பலியாகினர். அவனின் முன்னேற்ற முயற்சி அத்தோடு நின்று போனது. மில்லரின் செயலை உலகமே வியந்து பார்த்தது. சிறிய ஒரு விடுதலை அமைப்பு. ஆயுதங்கள் இல்லை. வெடி மருந்துகள் இல்லை. பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கான வழிகளும் இல்லை. ஆனால், இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்தும் வலிமை புலிகளுக்கு எப்படி வந்தது என்று பல வல்லரசுகளும் வியந்தனர். ஆனால், புலிகள் தொடர்ந்தும் அந்த தாக்குதல் முறையிலேயே தமிழீழ தாயகத்தின் நிலப்பரப்பையும் நீர்ப்பரப்பபையும் தமது ஆதிக்கத்திற்குள் வைத்திருந்தனர்.
மில்லர் ஏற்றி வைத்த கரும்புலித் தீபம் சுடர்விட்டு எரியத் தொடங்கியது. தங்கள் சாவுக்கு நாள் குறித்து, எதிரிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திவிட்டு வீரகாவியமாவது என்ற மயிர்கூச்செறியச் செய்கின்ற இந்தச் செயற்பாட்டில் ஆண்களுக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற நிலையில் பெண் கரும்புலிகளும் செயற்பட்டார்கள். ஆண்களுக்குள் மில்லர் தொடக்கி வைத்த தீயை பெண்களுக்குள் அங்கயற்கண்ணி தொடக்கி வைத்தார். ஆனால், இன்று சிறீலங்கா அரசாங்கத்தினதும் அரசுக்கு உறுதுணையாக இருக்கின்ற சில நாடுகளினதும் உதவியுடன் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் இன்று முடக்கப்பட்டிருக்கின்றது, எமது விடுதலைப் போராட்டத்தின் அளப்பரிய வெற்றிக்கு கரும்புலிகள் என்ற புனிதமான மனிதர்கள் செய்த தியாகமே காரணமாக இருந்தது. எதையுமே எதிர்பார்க்காமல் தமிழ் மக்களின் விடுதலை என்ற ஒரே நோக்கத்திற்காக அவர்கள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்தார்கள். அந்த அர்ப்பணிப்பு வீண் போகக்கூடாது. எமது இளைய சந்ததிக்கு இந்த வரலாறுகள் தெரியாமல் இருக்கக்கூடாது. அவர்கள் அறிய வேண்டும். அப்போதுதான் எமது கரும்புலிகள் கண்ட கனவு நனவாகும்.
தமிழீழ தேசியத் தலைவர் கூறியதைப் போன்று கரும்புலிகள் அற்புதமான பிறவிகள். பலம் மிக்க எதிரியை அழிப்பதற்கு தங்கள் உயிரையே ஆயுதமாக்கிய அந்த அற்புதப் பிறவிகளின் கனவுகள் நனவாக வேண்டும். உலகெங்கும் உள்ள ஒவ்வொறு தமிழனும் இதற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
புலிகளின் தாகம் ! தமிழீழத் தாயகம் !
நன்றி:
காந்தரூபன் ஈழமுரசு

No comments:
Post a Comment